அக்டோபர்"மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதம்", மார்பக புற்றுநோயின் தாக்கம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான பிரச்சாரங்கள் நடந்து வருகின்றன.அதே போல மார்பக புற்றுநோய் குறித்த கட்டுக்கதைகளையும் தெரிந்து கொள்வது அவசியம், அது தேவையில்லாத பயத்தை போக்க உதவும் #Thread
(1/n)
கட்டுக்கதை no.1 :- உங்கள் மார்பில் ஒரு கட்டி இருப்பதை கண்டுபிடித்தால், அது உங்களுக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பதைக் குறிக்கிறது !?
உண்மை :- மார்பகக் கட்டிகளில் ஒரு சிறிய சதவீதம் மட்டுமே புற்றுநோயாக மாறும்.
(2/n)
ஆனால் உங்கள் மார்பகத்தில் தொடர்ந்து புதியதாக மார்பக திசுக்களில் ஏதேனும் மாற்றங்களைக் கண்டால், அதை ஒருபோதும் புறக்கணிக்கக்கூடாது. மார்பக பரிசோதனைக்காக மருத்துவரை அணுகுவது மிகவும் முக்கியம்.
(3/n)
வழக்கமான மார்பக சுய பரிசோதனைகளை மேற்கொள்வதன் மூலமும், வருடாந்திர மருத்துவ மார்பகப் பரிசோதனையைப் பெறுவதன் மூலமும், உங்கள் வழக்கமான மமோகிராம் (Mammogram) ஸ்கிரீனிங் திட்டமிடுவதன் மூலமும் ஆரோக்கியத்தைக் உறுதிசெய்து கொள்ளுங்கள்.
(4/n)
கட்டுக்கதை no.2 :- ஆண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வராது; இது பெண்களை மட்டுமே பாதிக்கிறது !?
உண்மை :- ஒவ்வொரு ஆண்டும் தோராயமாக 2,190 ஆண்கள் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 410 பேர் இறக்கிறார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
(5/n)
ஆண்களில் மார்பக புற்றுநோய் முலைக்காம்பு மற்றும் அதன் சுற்று வட்டத்தின் கீழ் ஒரு கடினமான கட்டியாக கண்டறியப்படுகிறது. பெண்களை விட ஆண்களின் இறப்பு விகிதம் அதிகம், காரணம் ஆண்களிடையே விழிப்புணர்வு குறைவாக இருப்பதாலும், மார்பக புற்றுநோய் என்று கருதுவது குறைவாக இருப்பதாலும் தான்.
(6/n)
கட்டுக்கதை no.3 :- மமோகிராம் (Mammogram) மார்பக புற்றுநோய் பரவுவதற்கு காரணமாகலாம் !?
உண்மை :- மமோகிராம் அல்லது எக்ஸ்ரே, தற்போது மார்பக புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதற்கான தரமான வசதியாக உள்ளது. மமோகிராம் எடுக்கும்போது மார்பக சுருக்கமானது புற்றுநோய் பரவுவதை ஏற்படுத்தாது.
(7/n)
தேசிய புற்றுநோய் நிறுவனத்தின் கூற்றுப்படி, "மமோகிராஃபியின் நன்மைகள் எப்போதுமே கதிர்வீச்சு வெளிப்பாட்டால் ஏற்படக்கூடிய தீங்கை விட அதிகமாக இருக்கும். மமோகிராம்களுக்கு மிகக் குறைந்த அளவு கதிர்வீச்சு தேவைப்படுகிறது. இந்த கதிர்வீச்சு வெளிப்பாட்டால் ஏற்படும் ஆபத்து மிகக் குறைவு."
(8/n)
கட்டுக்கதை no.4 :- உங்கள் குடும்பத்தில் இரத்த உறவுகளுக்கு மார்பகப் புற்றுநோய் இருந்தால், உங்களுக்கும் மார்பகப் புற்றுநோயும் ஏற்பட வாய்ப்புள்ளது!?
உண்மை :- மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களில் புள்ளிவிவரப்படி, 10% நபர்களுக்கு மட்டுமே இந்த குடும்ப பின்னனி உள்ளது.
(9/n)
நெருங்கிய ரத்த உறவு, உங்கள் தாய் அல்லது சகோதரிக்கு 50 வயதிற்குள் மார்பகப் புற்றுநோய் ஏற்பட்டிருந்தால், அவர்களுக்கு மார்பகப் புற்றுநோய் கண்டறியப்பட்ட வயதை கணக்கில் கொண்டு, நீங்கள் அந்த வயதை எட்டுவதற்கு 10 வருடம் முன்பே உங்களின் வருடாந்திர மருத்துவ பரிசோதனையை தொடங்கவேண்டும்.
(10/n)
உங்களுக்கு மார்பகப் புற்றுநோயுடன் இரண்டாம் நிலை உறவினர் இருந்தால்: உங்களுக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்ட பாட்டி அல்லது அத்தை இருந்தால், உங்கள் ஆபத்து சற்று அதிகரிக்கிறது, ஆனால் அது நெருங்கிய இரத்த உறவுகளின் அதே ஆபத்து பிரிவில் இல்லை.
(11/n)
குடும்பத்தின் ஒரே பக்கத்தில் பல தலைமுறையினருக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டிருந்தால் அல்லது ஒருவருக்கொருவர் நெருங்கிய உறவினர்கள் அல்லது 50 வயதிற்குட்பட்ட பல குடும்ப உறுப்பினர்களுக்கு இருக்குமானால், மார்பக புற்றுநோய் இருப்பதற்கான நிகழ்தகவு அதிகரிக்கிறது.
(12/n)
கட்டுக்கதை no.5:- மார்பகப் புற்றுநோய் ஒரு தொற்றுநோய் !?
உண்மை :- நீங்கள் மார்பகப் புற்றுநோயை வேறொருவருக்கு பரப்ப முடியாது. மார்பக புற்றுநோய் என்பது பிறழ்ந்த உயிரணுக்களின் கட்டுப்பாடற்ற உயிரணு வளர்ச்சியின் விளைவாக மார்பகத்திற்குள் மற்ற திசுக்களுக்கு பரவத் தொடங்குகிறது.
(13/n)
இருப்பினும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைப்பிடிப்பதன் மூலமும், ஆபத்து காரணிகளைப் பற்றி அறிந்து கொள்வதன் மூலமும், முன்கூட்டியே கண்டறிதல் திட்டத்தை பின்பற்றுவதன் மூலமும் உங்கள் ஆபத்தை குறைக்கலாம், இதனால் மார்பக புற்றுநோய் ஏற்பட்டால் ஆரம்பத்திலேயே கண்டறிய முடியும்.
(14/n)
கட்டுக்கதை no.6 :- மரபணு மாற்றம் BRCA1 அல்லது BRCA2 உங்கள் டிஎன்ஏவில் கண்டறியப்பட்டால், அது உங்களுக்கு நிச்சயமாக மார்பக புற்றுநோயை உருவாக்கும் !?
உண்மை :- தேசிய புற்றுநோய் நிறுவனத்தின்படி, BRCA1 அல்லது BRCA2 ஐ கடத்தும் குடும்பங்களைப் பற்றி, சொள்ளியிருள்ளதென்பது,
(15/n)
"அத்தகைய குடும்பங்களில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் தீங்கு விளைவிக்கும் BRCA1 அல்லது BRCA2 பிறழ்வு மரபணுவை கொண்டிருக்கவில்லை, மேலும் இதுபோன்ற குடும்பங்களில் ஏற்படும் ஒவ்வொரு புற்றுநோயும் இவற்றில் ஒன்றில் தீங்கு விளைவிக்கும் பிறழ்வுடன் உள்ள மரபணுக்களின் தொடர்புடையது அல்ல.
(16/n)
தீங்கு விளைவிக்கும் BRCA1 அல்லது BRCA2 பிறழ்வு கொண்ட ஒவ்வொரு பெண்ணுக்கும் மார்பக மற்றும்/அல்லது கருப்பை புற்றுநோயை உருவாக்காது.ஆனால், BRCA1 அல்லது BRCA2 இல் பிறழ்வைப் பெற்ற பெண்ணுக்கு, அத்தகைய பிறழ்வு இல்லாத ஒரு பெண்ணை விட மார்பக புற்றுநோய் உருவாக வாய்ப்பு 5 மடங்கு அதிகம்.
(17/n)
#awareness
#BreastCancerAwarenessMonth
#breastcancer
♥️♥️♥️End of the thread♥️♥️♥️
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.