ஈழமும் கலைஞரும்.....
#எம்ஜிஆர் மறைந்து, #அதிமுக உட்கட்சி சண்டையால் ஜனாதிபதி ஆட்சி நிகழ்ந்த காலம்.
தமிழகத்தில் அகதிகளாக வாழ்ந்த ஈழத்தமிழர்களுக்கு கல்வி கற்கும் உரிமையை மறுக்கும் அரசாணை 1988 ஜூலை மாதம் வெளியிடப்பட்டு பின்னர் எதிர்ப்புகளால் அமல்படுத்தப்படவில்லை.
1/6
1989- தேர்தலில் வென்று ஆட்சிக்கு வந்த #கலைஞர் ஈழத்தமிழருக்கு கல்வி கற்கும் உரிமையை உறுதிசெய்யும் அரசாணையை வெளியிட்டு, அவர்களுக்கு இடஒதுக்கீடும் கொடுத்தார். (பொறியியல் 40 இடங்கள், மருத்துவக் கல்வி 20 இடங்கள், விவசாய கல்வி 10 இடங்கள், தொழில்நுட்ப பட்டயகல்வி 40 இடங்கள்)
2/6
ராஜிவ் படுகொலைக்கு பின்னர் ஆட்சிக்கு வந்த #ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு செப்.1991யில் ஈழ அகதிகளுக்கான கல்வி உரிமையையும் இடஒதுக்கீட்டையும் தடை செய்தது
பல கோரிக்கைகளுக்கு பின்னர் 1993யில் ஈழத்தமிழர்கள் 12ஆம் வகுப்பு வரை பயிலலாம், ஆனால் கல்லூரியில் சேர முடியாது என அறிவித்தது
3/6
1996ல் மீண்டும் ஆட்சிக்கு வந்த கலைஞர் தடைகளை நீக்கி ஈழத்தமிழர் குழந்தைகள் கல்வி கற்க அரசாணை பிறப்பித்தார். அவர்கள் வயது வரம்பையும் தளர்த்தினார். 1997யில் அகதிகளாக இருந்த 90 ஈழத்தமிழர் குழந்தைகள் உயர்கல்வி கற்க கல்லூரியில் சேர்ந்தனர் (அதில் 3பேர் மருத்துவம், 7பேர் பொறியியல்)
4/6
1998ல் கலைஞர் ஈழத்தமிழருக்கு கல்வியில் இடஒதுக்கீட்டை மீண்டும் கொண்டு வந்தார். (பொறியியல் 20 இடங்கள், மருத்துவம் 20 இடங்கள், விவசாயம் 10 இடங்கள், தொழில்நுட்ப பட்டயகல்வி 20 இடங்கள்)
தமிழகத்தில் அகதிகளாய் வாழ்ந்த ஈழத்தமிழ் உறவுகளின் குழந்தைகளுக்கு கல்வி உரிமை வழங்கி,
5/6
இடஒதுக்கீடு கொடுத்து அவர்களுக்கு அறிவொளி ஏற்றிய கலைஞர் ஈழ துரோகி, அவர்களை வஞ்சித்த ஜெயலலிதா ஈழத்தாய். இதுதான் தமிழ்த்தேசியம் பேசுவோரின் ஈழப் பாசமும், திராவிட ஒவ்வாமையும்.
#MKStalin #MKStalinGovt #kalaignar
@IlovemyNOAH2019
6/6
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.