, 93 tweets, 38 min read Read on Twitter
#இடஒதுக்கீடு
என்றால் என்ன? அது ஏன் ஒரு பிரிவினருக்கு மட்டும் கொடுக்கப்பட்டு #சமூகநீதி னு அத சொல்லிட்டு இருக்காங்க - இட ஒதுக்கீட்டால பாதிக்கப்பட்டோம் நாடு முன்னேறல தகுதி இல்ல... இன்னும் என்னென்னவோ... ஆளாளுக்கு சொல்றாங்களே அதை பற்றி சின்னதா ஒரு தொடர்கீச்சு
🖐🏿இட ஒதுக்கீட்டுக்கு காரணமே... #இனஒதுக்கீடு தான்

👉🏿அதென்ன #இனஒதுக்கீடு ?
🖐🏿மதம் அதாவது ஹிந்து மதம் தோன்றிய காலத்தில் இருந்து நிலவி வந்தவையே இன ஒதுக்கீடுகள்

👉🏿யார் செய்தது அதை?
🖐🏿ஆதிக்க சக்திகளாகத் திகழ்ந்த ஆரியர்களின் மனுதர்மங்களும் வர்ணாசிரம கொள்கைகளும்
👉🏿ஆரியர்களின் மனுதர்மங்களும் வர்சாசிரம கொள்கைகளும் எப்படி இன ஒதுக்கீட்டைச் செய்தன?
🖐🏿மனிதனின் பிறப்பிலேயே அவனது தரத்தை ஒதுக்கீடு செய்தன
🖐🏿செய்யவேண்டிய தொழில்களை இனவாரியாக 🤪 தலையிலிருந்து 🤪 தோளிலிருந்து🤪 தொடையிலிருந்து 🤪காலிலிருந்து என பிறப்பில் #இனஒதுக்கீடு செய்தன
👉🏿இன ஒதுக்கீட்டின் படி என்னென்ன தொழில்கள் யாராருக்கு ஒதுக்கப்பட்டன?
🖐🏿தலையில் பிறந்தவன் என்று சொல்லப்பட்டவனுக்கு தரணி ஆளவும் காலில் பிறந்தவன் என்று சொல்லப்பட்டவனுக்கு கக்கூஸ்(இப்பவரை அந்த அளவீடு என்பதற்காக) அள்ளவும்தான் என்று கடவுளின் பெயரால் ஒதுக்கீடு செய்தனர்
👉🏿தொழிலில் என்ன பேதம் வந்துடப் போகிறது?
🖐🏿ஒரே கடவுளால் படைக்கப்பட்டதாகச் சொல்லப்படும் மனிதர்களுக்குள் ஆண்டான் அடிமை வர்க்கபேதம் தவறுதானே?

👉🏿வர்க்கபேத இன ஒதுக்கீட்டிலே என்ன தவறு?
🖐🏿கைபொத்தி, மெய்பொத்தி தலை ஆட்டி அடிமைகளாக வாழ்ந்து பார்த்தால் தானே உணர முடியும்?
#இனஒதுக்கீடு
👉🏿ஆரியர்களும் மனிதர்கள் தானே... அவர்களும் நல்லவர்கள் தானே... "ஈனப் பறையர்க ளேனும் அவர்: எம்முடன் வாழ்ந்திங் கிருப்பவர் அன்றோ?"என்று கேட்டவர்களாயிற்றே
இனஒதுக்கீட்டை ஒழிக்கவில்லையா?
🖐🏿இல்லை
அவர்களுக்கு இம்மண்ணின் மக்களை அவர்களுக்கு இணையாகப் பார்க்கும் குணமே இல்லை

#இடஒதுக்கீடு
👉🏿இந்தியாவிற்கு இட ஒதுக்கீட்டை அறிமுகம் செய்தது யார்?
🖐🏿ஆங்கிலேயர்கள் - ஆம் இந்தியாவை 200+ ஆண்டுகள் ஆண்ட (சுரண்டிய) ஆங்கிலேயர்களே காலம் காலமாக ஒடுக்கப்பட்டவர்களை கைதூக்கிவிட வேண்டும் என்ற அடிப்படையில் நமக்கு இட ஒதுக்கீட்டை அறிமுகம் செய்தனர்
#இடஒதுக்கீடு
மிகச் சுருக்கமாகச் சொல்வதென்றால்...
🖐🏿ஆண்டாண்டு காலமாக அடக்கப்பட்ட உரிமைகள் ஒடுக்கப்பட்ட மக்களையும், இதுவரை எல்லா உரிமைகளையும் சுகமாக அனுபவித்து வந்த மக்களையும் ஒரே நிகராக கருத முடியாது
🖐🏿இதுவரை மேடாக இருந்ததை வெட்டி பள்ளத்தில் போட்டாக வேண்டும் என்ற அடிப்படைதான் #இடஒதுக்கீடு 👌🏿
🖐🏿கூனிக்குறுகி நின்றவனை கை கொடுத்து தூக்கிவிட்டு ஏணியில் ஏற்றி விடுவதுதான் #இடஒதுக்கீடு

👉🏿உடனே கூக்குரல் எழுமே தரம் போய்விட்டது - விடுமென?
🖐🏿ஆம் இந்தியாவில் தரம் குறைந்து தான் இருக்கிறது அதற்கு காரணம் இன ஒதுக்கீடே தவிர இட ஒதுக்கீடு அல்ல
👉🏿சீனாவிற்கு அடுத்தபடியாக மனிதவளம் இருக்கும் இந்தியாவில் தரம் குறையக் காரணம் என்ன?
🖐🏿குறைந்தஅளவு உள்ள 1சமூகம் அதிகாரத்திற்கு அருகிலும் அதிகஅளவு இருந்த சமூகங்களை வேலையாட்களாகவே கல்விஅருகே நெருங்கவிடாமலும்(அறிவைப் பெருக்கவிடாமல்)வைத்திருந்ததன் விளைவே அது
#இனஒதுக்கீடு
#இடஒதுக்கீடு
👉🏿#இடஒதுக்கிடு இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது எப்போது யாரால்?
🖐🏿அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் 1921ல்(ஆங்கிலேய ஆட்சி காலத்தில்) சென்னை மாகாணத்தில் #நீதிக்கட்சி அரசு வகுப்புவாரி பிரதிநிதித்துவ ஆணையை கொண்டு வந்தது
🖐🏿இந்தியாவின் முன்னோடி தமிழகம்💪🏿
👉🏿#இடஒதுக்கீடு இந்தியாவில் கடந்துவந்த பாதைஎன்ன?
🖐🏿சென்னை மாகாண பார்ப்பனர் அல்லாதோர் இடஒதுக்கீடு ஆணையை மத்திய அரசு பிறப்பித்தது (1934)
🖐🏿அஞ்சல் நிலையங்கள், இம்பீரியல் வங்கி, தனியார் இயக்கிவந்த இரயில்வே 1944ல் அரசுடைமையான பின்னால் எல்லாவற்றிலும் #இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டது
🖐🏿ஆனால் அந்த இட ஒதுக்கீடு விடுதலை பெற்றதாகச் சொல்லப்பட்ட ஆகஸ்டு 15, 1947க்குப் பின் மத்திய அரசின் இட ஒதுக்கீட்டை, சென்னை மாகாணத்தில் மட்டும் கொடுக்கப்பட்டு வந்த இட ஒதுக்கீட்டை 1947 செப்டம்பர் 30 ஆம் நாள் ரத்து செய்துவிட்டார்கள்
(சுதந்திர இந்தியா)

#இடஒதுக்கீடு
🖐🏿விடுதலை பெற்ற ஒன்றரை மாதத்தில், நமக்குக் கொடுத்து வந்த இட ஒதுக்கீடுகளை மத்திய அரசில் கொடுத்து வந்த இட ஒதுக்கீடுகளை அவர்கள் ரத்து செய்தார்கள்
உள்துறை ரத்து செய்தது
இரயில்வே துறை ரத்து செய்தது
எல்லோரும் ரத்து செய்தார்கள்
ஒரே நாளில்
#இடஒதுக்கீடு
🖐🏿 இந்திய அரசியல் சட்டம் எழுதப்பட்டது
🖐🏿16 என்ற விதி வேலை வாய்ப்புகளுக்காக
🖐🏿16(4) என்ற விதி சொன்னது: எந்தச் சமுதாயப் பிரிவினருக்கு அரசுப்பணிகளில் போதிய பிரதிநிதித்துவம் இல்லை என்று அரசு கருதுகிறதோ அவர்களுக்கு சிறப்பு உதவி செய்யலாம்

#இடஒதுக்கீடு
🖐🏿16(4)ல் போடப்பட்ட சொற்கள் “பேக்வேர்ட் கிளாஸ்” என்பது. அந்த சொல் தான் தாழ்த்தப்பட்டோரை, பழங்குடியினரை எல்லோரையும் குறித்தது
🖐🏿அரசின் பார்வையில் எந்தெந்தச் சமுதாயத்திற்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை என்று கருதுகிறதோ அவர்களுக்கு
#இடஒதுக்கீடு செய்யலாம் என்றது அந்தச் சட்டப் பிரிவு
🖐🏿அரசியல் நிர்ணய சபையில் விவாதம் வந்த போது கூட கேட்டார்கள், யார் இந்த பேக்வேர்ட் கிளாஸ் என்று, அதற்கு அம்பேத்கார் சொன்னார், ‘in the opinion of the government’- அரசு யாரைக் கருதுகிறதோ என்று பதில் சொன்னார் – அது பதிவாகியிருக்கிறது

#இடஒதுக்கீடு
🖐🏿நம்முடைய அரசியல் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட போது; அறிமுகப்படுத்தப்பட்ட போது வேலை வாய்ப்பில் மட்டும் #இடஒதுக்கீடு அதற்கான பிரிவுகள் இருந்ததே தவிர கல்விக்கு எவ்வித ஒதுக்கீடும் இல்லாமல் இருந்தது
🖐🏿தமிழ்நாட்டில் இங்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டின் அடிப்படையில் மருத்துவக்கல்லூரி இடம் கிடைக்கவில்லை என்று சொல்லி ஒரு பார்ப்பன பெண்(செண்பகம் துரைராஜன்) 1950 ல் தொடர்ந்த வழக்கு நம் தமிழ்நாட்டு ‘கம்யூனல் ஜீ.ஓ’ என்ற வகுப்புவாரி ஆணையை ரத்து செய்தது
#இடஒதுக்கீடு
🖐🏿செண்பகம் துரைராஜன் போட்ட வழக்கு - தான் "ஒரு பார்ப்பனத்தி" என்பதால்தான் தமிழ்நாட்டில் பின்பற்றப்படுகிற இடஒதுக்கீட்டுக் கொள்கை தனது கல்வியைத் தடைசெய்துவிட்டது

#இடஒதுக்கீடு
🖐🏿விண்ணப்பிக்கிற தகுதியில்லாத(விண்ணப்பம் போடுகிற வயதையும் தாண்டியவர், 34 வயதானவர்) பெண் விண்ணப்பிக்காத(மருத்துவக் கல்லூரிக்கு விண்ணப்பமே போடவில்லை) இடத்திற்காகப் போடப்பட்ட வழக்கில் தான் #இடஒதுக்கீடு செல்லாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது(வாட்டே நீதி)
🖐🏿சென்னை மாகாணத்தில் நடந்த நிகழ்வுகள் (வேறயாரு திராவிடத்தால் வீழ்ந்தோம் ஒறவுகளே 🤣🤣) நாடாளுமன்றத்திலே சட்டதிருத்தத்தை கொண்டுவரச் செய்தன
🖐🏿 ‘ . . in madras province’ - சென்னையின் காரணமாகத்தான் திருத்தம் வருவதாக நேரு சொன்னார்
#இடஒதுக்கீடு
🖐🏿15(4) என்கிற ஒரு புதுப்பிரிவு சேர்க்கப்பட்டது, அந்தப்பிரிவு கல்விக்காக அதை சொல்கிறபோது சொற்களைப்போட்டார்கள் சமூக ரீதியிலும் கல்வி ரீதியிலும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று (socially and educationally backward)

#இடஒதுக்கீடு
🖐🏿அப்போதே ’சிலர்’ திருத்தம் கொண்டுவந்தார்கள் - எகனாமிகலி (economically) என்ற சொல்லையும் சேர்க்கவேண்டும் என
🖐🏿வாக்கெடுப்புக்கு விடப்பட்டது
🖐🏿பொருளாதார ரீதியாக என்ற சொல் சேர்க்கப்படக்கூடாது என்று 243 பேர் வாக்களித்தார்கள்; வேண்டும் என்று 5 பேர் வாக்களித்தார்கள்

#இடஒதுக்கீடு
🖐🏿243 க்கு 5 என்ற கணக்கில் மறுக்கப்பட்டது அந்த பொருளாதார கிருமி லேயர் (அது அப்போ)

🖐🏿அதற்குப் பின்னால் தான் சமூக ரீதியாக கல்வி ரீதியாக பின்தங்கிய என்கிறபோது தான் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்களுக்கு என்று மூன்றும் சொல்லப்பட்டது
#இடஒதுக்கீடு
🖐🏿1951ல் கல்வியில் #இடஒதுக்கீடு தரலாம் என்று சொல்லிவிட்டார்கள்
பிற்படுத்தப்பட்ட மக்களுக்குக் கொடுக்கலாம் என்று சொல்லிவிட்டார்கள்
திருத்தம் வந்துவிட்டது
ஆனால் அந்தச் சட்டத்திருத்தம் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கொடுக்க, அதை ஆய்வு செய்வதற்கு ஒரு குழுவை 1953 ஆம் ஆண்டு நியமித்தார்கள்
🖐🏿1953 ஆய்வுக் குழுத் தலைவர் #காகாகலேகர் (பார்ப்பனர்)ஆய்வு செய்து 1955ல் அறிக்கை கொடுத்தார்
தொழிற்கல்வியில் 70 விழுக்காடு, மூன்றில் இரண்டு பங்கு பிற்படுத்தப்பட்டமக்களுக்கு வழங்கவேண்டும் என்று அறிக்கையில் சொன்னவர் தனியாக ஒருகடிதம் அரசுக்கு சாதி அடிப்படையில் #இடஒதுக்கீடு வேண்டாமென
🖐🏿 1871 ல் சென்னை மாகாணத்திலிருந்த மக்கள்தொகை கணக்கெடுப்பினுடைய தலைமை அலுவலர் டபிள்யூ. கார்னீஷ் -அரசு மக்கள் நோயை பார்ப்பனக்கண்ணாடி கொண்டுதான் பார்க்கிறது ((spectacles of Brahmin). அதற்கு prescription நோய் தீர்ப்பதற்கும் பார்ப்பன மருத்துவத்தைத் தான் தருகிறது என்றதால்...
🖐🏿1881 ல் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆங்கிலேயரால் முதன்முறையாக நடைமுறைப் படுத்தப்பட்டது
🖐🏿ஒவ்வொருவரையும் சாதியைக் குறிப்பிட்டு 1931 வரை கணக்கெடுப்பு எடுத்தனர்
🖐🏿 1941 ல் இரண்டாம் உலகப்போர். சரிவர கணக்கெடுப்பு நடத்தமுடியவில்லை
#இடஒதுக்கீடு
🖐🏿1951 ல் #விடுதலை பெற்ற இந்தியா சாதிவாரியாகக் கணக்கெடுப்பு எடுக்க வேண்டாம் என்று #அறிவுரை சொல்லிவிட்டது
🖐🏿அந்த 1931 கணக்கெடுப்பின் விவரத்தை வைத்துதான் 70 சதவீத #இடஒதுக்கீடு தேவை என்று இரண்டு ஆண்டுகள் ஆய்ந்து கண்டுபிடித்தது ஆய்வுக்குழு
🖐🏿இதுவரை பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு, நலத்திட்டங்கள் தீட்டுகிறபோதெல்லாம் அந்த 1931 சாதிவாரி கணக்கெடுப்பை வைத்துகொண்டுதான் கணக்கிடுகிறார்கள்
#இடஒதுக்கீடு
🖐🏿1961-யில் எல்லா அரசுகளுக்கும் #இடஒதுக்கீடு பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு ‘பேக்வார்ட் கிளாஸ்’என்று சொல்கிற போது முடிந்தவரை பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்குக் கொடுங்கள். சாதி ரீதியாக கொடுப்பதை நான் விரும்பவில்லை என பிரதமரே(பார்ப்பனர்) ‘டெமி அபிசியல் லெட்டர்’எழுதினார்
🖐🏿1979 ல் உள்துறை அமைச்சராக இருந்த சரண்சிங் தான் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு என்ன உதவிகள் செய்யலாம் என்பதைப்பற்றி ஆய்வதற்கு பிந்தேஸ்வரி பிரசாத் மண்டல் தலைமையில் குழு நியமிக்கப்பட்டது
#இடஒதுக்கீடு
🖐🏿இந்தியாவில் அப்பொழுது 406 மாவட்டங்கள் இருந்தன. 405 மாவட்டங்களில் போய் அவர்கள் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தினார் (பெரும்மழை காரணமாக அஸ்ஸாமின் ஒரு மாவட்டத்திற்குப் போகமுடியவில்லை)
#மண்டல்கமிஷன் #இடஒதுக்கீடு
🖐🏿தகவல் மற்றும் சான்றுகளைப் பெற #மண்டல்கமிஷன் 11 அளவுகோல்களைக் கொண்டிருந்தது
#சமூகம்
🧐மற்றவர்களால் சமூக ரீதியாக பிற்படுத்தப்பட்டோராகக் கருதப்படும் சாதிகள்/வகுப்புகள்
🧐வாழ்வாதாரத்திற்காக உடல் உழைப்பை முக்கியமாக சார்ந்திருக்கும் சாதிகள்/வகுப்புகள்
🧐கிராமப்புறப் பகுதிகளில், மாநில சராசரிக்கும் மேலாக, குறைந்த பட்சம் 25 சதவீத பெண்களும், 10 சதவீத ஆண்களும் மற்றும் நகரப்புறப் பகுதிகளில் குறைந்த பட்சம் 10 சதவீத பெண்களும் 5 சதவீத ஆண்களும் 17 வயதுக்கு முன்பு திருமணம் செய்து கொள்ளும் சாதிகள்/வகுப்புகள்
#மண்டல்கமிஷன்
🧐பெண்களில் குறைந்த பட்சம் 25 சதவீதம் மாநில சராசரிக்கும் அதிகமாக பணியாற்றுபவர்கள் கொண்ட சாதிகள்/வகுப்புகள்
#கல்வி
🧐 5 முதல் 15 வயது வரையுள்ள சிறுவர்களில், மாநில சராசரியைவிட அதிகமாக, குறைந்த பட்சம் 25 சதவீதமான பள்ளிக்குச் செல்லாதவர்களைக் கொண்ட சாதிகள்/வகுப்புகள்
#மண்டல்கமிஷன்
🧐 5 - 15 வயது வரையுள்ள சிறுவர்களில், குறைந்த மாநில சராசரியைவிட அதிகமாக, குறைந்த பட்சம் 25% பள்ளியில் இருந்து பாதியில் நின்றுவிடும் வீதமுள்ள சாதிகள்/வகுப்புகள்
🧐 குறைந்த பட்சம் 25%குடும்பங்களின் குடும்பச் சொத்துக்களின் சராசரியானது மாநில சராசரியைவிடக் குறைவான சாதிகள்/வகுப்புகள்
🧐மாநில சராசரிக்கும் மேலாக, குறைந்த பட்சம் 25 சதவீதம் குடிசை வீடுகளில் வாழும் குடும்பங்கள் கொண்ட சாதிகள்/வகுப்புகள்
🧐50 சதவீதத்திற்கும் அதிகமான குடியிருப்பாளர்கள் குடிநீருக்காக அரை கிலோ மீட்டருக்கும் அப்பால் செல்லும் நிலையிலுள்ள சாதிகள்/வகுப்புகள்
#மண்டல்கமிஷன் #இடஒதுக்கீடு
🧐கடனைப் பெற்றுள்ள குடும்பங்களின் எண்ணிக்கையானது, மாநில சராசரிக்கும் மேலாக குறைந்த பட்சம் 25 சதவீதமாகவுள்ள சாதிகள்/வகுப்புகள்

#பொருளாதாரம் (கடைசி 4கும்) என்ற பிரிவுகளில் உட்குழு அமைத்தது #மண்டல்கமிஷன்
#இடஒதுக்கீடு
👌🏿சமூக புள்ளிகள் (5x3)கல்விப்புள்ளிகள்(2x2) பொருளாதாரப் புள்ளிகள்(4x1) என மொத்தம் 22ல் 11 புள்ளிகள் பெற்ற அனைத்து சாதிகளும் சமூகம் மற்றும் கல்வியின் பின் தங்கியவையாகப் பட்டியலிடப்பட்டன
👌🏿இதில் மீதமுள்ளவை 'மேம்பட்டவையாக' கருதப்பட்டன
#மண்டல்கமிஷன்
#இடஒதுக்கீடு
#மண்டல்கமிஷன் பரிந்துரை
📢நாட்டின் ஆளும் வர்க்கத்தினரால் கொடுக்கப்படும் குறைந்தளவு முக்கியத்துவம் ஒ.பி.சி.க்களின் சிக்கல்களை உணர்வதில் மாற்றங்களை ஏற்படுத்தாது
📢 சில ஆயிரம் நபர்களுக்கு வேலை வழங்குவதல்ல #இடஒதுக்கீடு 52% இந்திய மக்கள்தொகையை மேம்பட்டவர்களாக மாற்றவேண்டும் என்பதாகும்
📢ஆதி திராவிடர்கள் மற்றும் பழங்குடியினர் நாட்டின் மக்கள்தொகையில் 22.5% இருப்பதால்(1931 கணக்கெடுப்பின்படி) அனைத்து அரசுப் பணிகள் மற்றும் மத்திய அரசாங்கத்தின் கீழ் உள்ள பொதுத்துறைகளில் அவர்களுக்காக 22.5% #இடஒதுக்கீடு
#மண்டல்கமிஷன்
📢ஒ.பி.சி.க்களின் மக்கள்தொகை இந்து மற்றும் இந்து அல்லாதவர் இரு தரப்பிலும் இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 52% (50க்கு மேல் போகக்கூடாது என்பதால்)இருந்தாலும் 27% #இடஒதுக்கீடு
#மண்டல்கமிஷன்
📢ஒ.பி.சி.க்களுக்காக ஏற்கனவே 27% க்கும் அதிகமான ஒதுக்கீட்டை அமல்படுத்தியிருக்கும் மாநிலங்களில் இந்த பரிந்துரை எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது
#இடஒதுக்கீடு
#மண்டல்கமிஷன்
📢ஒ.பி.சி.க்களுக்கான பொதுவான #மண்டல்கமிஷன் பரிந்துரை
🤙🏿தகுதி அடிப்படையில் திறந்த நிலை போட்டியில் பணியமர்த்தப்படும் ஒ.பி.சி.க்கள் இந்த 27% இட ஒதுக்கீட்டில் இடம்பெறக்கூடாது
🤙🏿மேற்கண்ட ஒதுக்கீடு அனைத்து நிலைகளிலும் பதவி உயர்வுக்கும் பொருந்த வேண்டும்
#இடஒதுக்கீடு
🤙🏿நேரடிப் பணியமர்த்திலில் ஓய்வு பெறும் வயது வரம்பைத் தளர்த்துதல் எஸ்.சி.க்கள் மற்றும் எஸ்.டி.க்களின் செய்யப்படுவது போலவே நீட்டிக்கப்பட வேண்டும்
#இடஒதுக்கீடு
#மண்டல்கமிஷன்
🤙🏿பதவிகளின் ஒவ்வொரு பிரிவுக்குமான வேலை முறைப் பட்டியல் அமைப்பு அதன் தொடர்புடைய அதிகாரிகளால் எஸ்.சி. மற்றும் எஸ்.டி. ஐச் சேர்ந்த நபர்களுக்கு எவ்வாறு பின்பற்றப் படுகிறதோ அதன் படியே பின்பற்றப்பட வேண்டும்
#இடஒதுக்கீடு
#மண்டல்கமிஷன்
📢மேற்கண்ட ஒதுக்கீட்டுத் திட்டங்கள் ஒட்டு மொத்தமாக மத்திய மற்றும் மாநில அரசாங்கள் இரண்டின் கீழும் செயல்படும் பொதுத்துறை நிறுவனங்களின் அனைத்து பணியமர்த்தலுக்கும் பொருந்தக் கூடியதாக இருக்க வேண்டும்
#இடஒதுக்கீடு
#மண்டல்கமிஷன்
📢ஏதேனும் ஒரு வடிவத்தில் அரசாங்கத்திடம் இருந்து நிதியுதவி பெறும் அனைத்து தனியார் துறை நிறுவனங்களும் மேற்சொன்ன பணியமர்த்தல் முறை அடிப்படையிலேயே பணியாளரை நியமிக்க வேண்டும்
#இடஒதுக்கீடு
#மண்டல்கமிஷன்
📢அனைத்து பல்கலைக் கழகங்கள் மற்றும் இணைக்கப்பட்ட கல்லூரிகள் ஆகியவையும் மேற்சொன்ன ஒதுக்கீட்டுத் திட்டத்தின்படி செயல்பட வேண்டும்
#இடஒதுக்கீடு
#மண்டல்கமிஷன்
📢இந்த ஒதுக்கீட்டுக்கு சரியான தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு இயற்றப்பட்ட சட்டங்கள், விதிகள், கொள்கை மற்றும் பல போன்றவை இதற்கு ஒத்திசையாத போது அவற்றை விரிவாக்கி அவற்றில் மாற்றம் செய்வதற்கு அரசாங்கத்தால் போதுமான சட்டப்படி முறையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டியது தவிர்க்க இயலாததாகும்
📢ஆங்கிலேய ஆட்சி காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நமது கல்விமுறை பின்தங்கிய வகுப்பினரின் தேவைக்கு குறைவாகவே பொருந்துவதாக இருந்த போதும் அவர்களுக்கு வேறு விருப்பத்தேர்வும் இல்லாததால் அதிலேயே போட்டியிடுவதற்குக் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்(கல்வி சீரமைக்க பரிந்துரை)
#இடஒதுக்கீடு
📢கல்விக் கட்டணத்தில் விலக்கு, புத்தகங்கள் மற்றும் உடைகளை இலவசமாக வழங்குதல், மதிய உணவு, சிறப்புத் தங்குமிட வசதிகள், கல்வி உதவித் தொகை மற்றும் பல போன்ற பல கல்விசார் சலுகைகளை மற்ற பின்தங்கிய வகுப்பு மாணவர்களுக்குச் செய்ய கூடுதல்நிதி மாநிலங்களுக்குத் தேவை
#இடஒதுக்கீடு
#மண்டல்கமிஷன்
📢கலாச்சாரச் சூழலை மேம்படுத்துதல்
-வயது வந்தோர் கல்வி(சரியாக ஊக்கப்படுத்தப்பட்ட பெற்றோர் மட்டுமே அவர்களது குழந்தைகளைப் படிக்க வைப்பதற்கு தீவிர ஆர்வம் காட்டுவார்கள்)
-பின்தங்கிய வகுப்பு மாணவர்களுக்கான தங்குமிடப் பள்ளி(இலவச உணவு இடம்உள்ளிட்ட வசதிகள்)
#இடஒதுக்கீடு
#மண்டல்கமிஷன்
📢மேற்கண்ட அனைத்து வசதிகளும் ஒ.பி.சி. மாணவர்களுக்கு வழங்கப்பட்டாலும் கூட அவர்கள் தொழில்நுட்ப மற்றும் தொழில்சார் கல்வி நிறுவனங்களில் நுழைவதில் மற்றவர்களுடன் சமமாகப் போட்டியிட இயலாது என்பதால் அங்கேயும் 27% #இடஒதுக்கீடு

#மண்டல்கமிஷன்
📢ஒதுக்கீட்டுக்கான ஏற்பாடுகளை செயல்படுத்தும் போது ஒதுக்கீட்டில் நுழைந்த நபர்கள் உயர்கல்விக்கான அனைத்து நன்மைகளையும் அடைகிறார்களா என்பதையும் உறுதிபடுத்திக் கொள்வதும் அவசியம்
#இடஒதுக்கீடு
#மண்டல்கமிஷன்
📢கிராமப்புற தொழில்சார் சமூகங்களில் அவர்கள் சொந்தமாக தொழில் செய்ய விருப்பம் உள்ளவர்களுக்கு ஏற்ற நிறுவனம் சார்ந்த நிதி மற்றும் தொழில்நுட்ப உதவி அளிக்க வேண்டும்
அதே போன்ற உதவி சிறப்புத் தொழில்சார் பயிற்சி முடித்த ஒ.பி.சி. நபர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்
#இடஒதுக்கீடு
#மண்டல்கமிஷன்
📢பின்தங்கிய வகுப்பினருக்காக நிறுவப்பட்ட தனித்த நிதி நிறுவனங்களை நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்கு அமைப்பது மிகவும் அவசியம்
#இடஒதுக்கீடு
#மண்டல்கமிஷன்
📢அனைத்து மாநில அரசுகளும் ஒ.பி.சி. க்களுக்கு இடையில் ஊக்குவிப்புத் தொழில்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு நிதி மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களின் தனித்த நெட்வொர்க்கை அமைக்க ஊக்குவிக்க வேண்டும்
#இடஒதுக்கீடு
#மண்டல்கமிஷன்
📢அனைத்து மாநில அரசுகளும் முற்போக்கான நிலச் சட்டமியற்றலை இயற்றுவதற்கு மற்றும் அதனைச் செயல்படுத்துவதற்கு வலியுறுத்தப்பட வேண்டும் என ஆணைக்குழு வலிமையாகப் பரிந்துரைத்தது
#இடஒதுக்கீடு
#மண்டல்கமிஷன்
📢நில உச்சவரம்புச் சட்டங்கள் மற்றும் பலவற்றைச் செயல்படுத்துவதன் மூலமாக எதிர்காலத்தில் கிடைக்கும் மிகையாக உள்ள நிலங்களில் ஒரு பகுதி ஒ.பி.சி. வகுப்பைச் சேர்ந்த நிலமற்ற தொழிலாளர்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும்
#இடஒதுக்கீடு
#மண்டல்கமிஷன்
📢 ஆணைக்குழுவின் பரிந்துரையின் முழுமையான திட்டங்களின் செயல்படுத்தும் காலம் தொடர்பாக இருபது ஆண்டுகல் கழித்து திறனாய்வு செய்யப்படும்
#இடஒதுக்கீடு
#மண்டல்கமிஷன்
🖐🏿இதைக்கேட்டதும் கொந்தளித்த உயர் சாதியினரின் எதிர்ப்பால் முதுகெலும்பில்லாத அரசுகள் மண்டல் கமிஷன் தந்த அறிக்கை பரணிற்குப் போனது
#இடஒதுக்கீடு
#மண்டல்கமிஷன்
🖐🏿1989- ல் அதை தோண்டி எடுத்த வி.பி.சிங் அரசு, தேர்தலில் அளித்த வாக்குறுதியின்படி பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீட்டு சட்டத்தைக் தைரியமாக கொண்டுவந்தது
(கூட நின்றது யாரு🤣)
#இடஒதுக்கீடு
#மண்டல்கமிஷன்
🖐🏿பிற்படுத்தப்பட்டோர்களுக்கு #இடஒதுக்கீடு வழங்கப்பட்டால் அது பொதுப் பட்டியலை பாதிக்கும் எனக் கருதிய பொதுப்பட்டியலை சேர்ந்தோர், பாஜக என்கிற ஒரு பிற்போக்கு மதவாத உயர்சாதியினரின் சுட்டுவிரலுக்கு ஊழியம் செய்யும் தேசியக்கட்சியின் மறைமுக ஆதரவோடு கடுமையாக எதிர்த்தன

#மண்டல்கமிஷன்
🖐🏿மெண்டல்களால் கலவரம் வடக்கே வெடித்தது - வெடிக்க வைக்கப்பட்டது
🖐🏿 வி. பி. சிங் என்ற சிங்கம் பதவி இழந்தது
🖐🏿இட ஒதுக்கீடு நீதிமன்றத்தில் வழக்கானது
🖐🏿நடைமுறைக்கு வராமல் போனது #மண்டல்கமிஷன் பரிந்துரைகள்
#இடஒதுக்கீடு
🖐🏿பிறப்பிலே, குடிக்கும் தண்ணீரிலே, நடக்கும் தெருவிலே, அணியும் ஆடையிலே ,உணவருந்தும் விடுதிகளிலே, பயணிக்கும் பேருந்துகளிலே, படிக்கும் பள்ளிகளிலே, எல்லாம் பாகுபாடுகள் என்று காலம் காலமாக காட்டிவிட்டு திடீரென்று எல்லோரும் சமம் என்று அறிவித்தால் மந்திரத்தால் மாங்காய் பழுத்துவிடுமா?
தமிழகத்தில் சுதந்திரத்திற்குப் பிறகு #இடஒதுக்கீடு
🖐🏿ஓமந்தூர் ஓ.பி.இராமசாமி முதல் காமராசர் காலத்தில் மலைவாழ் மக்கள் 16 விழுக்காடு, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 25 விழுக்காடு என 41 விழுக்காடு இடஒதுக்கீடு
🖐🏿1967 இல் அண்ணா ஆட்சி அமைய, பிற்படுத்தப்பட்டோர் நலக் குழு பரிந்துரையை மு.கருணாநிதி அவர்கள் முதல்வராக இருந்த காலத்தில் அளித்தது
🖐🏿தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்கள் ஆகியோருக்கு இருந்த 16%இருந்தது 18% ஆனது
🖐🏿பிற்படுத்தப்பட்டோருக்கு 25 % இருந்தது 31%ஆனது
#இடஒதுக்கீடு மொத்தம் 49%
🖐🏿1979 இல் அ.தி.மு.க. சார்பில் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள் ஆண்டு வருமானம் 9,000 ரூபாய் இருந்தால் அவர்கள் பிற்படுத்தப் பட்டவர்களாக இருக்க முடியாது என்ற “வருமான வரம்பு ஆணை”யைப் போட்டார்
#இடஒதுக்கீடு
🖐🏿இது அரசமைப்புச் சட்டத்திற்கும், நியாயத்திற்கும் எதிரானது என்று திக, திமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ஜனதாவில் சில தலைவர்கள் குறிப்பாக ரமணிபாய், காங்கிரசில் டி.என்.அனந்தநாயகி, திண்டிவனம் இராமமூர்த்தி, மணிவர்மா போன்றோர் எதிர்த்தனர்
#இடஒதுக்கீடு
🖐🏿அதன் பிறகு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் எம்.ஜி.ஆரின் அ.தி.மு.க. படுதோல்வியை சந்தித்தது. 39 இடங்களில் 2 இடங்களில் தான் வெற்றி பெற்றது

இத்தோல்வி, திராவிடர் கழகத்தின் தலைமையில் நடந்த பிரச்சாரம், கிளர்ச்சி எல்லாம் எம்.ஜி.ஆர். அவர்களை மறுசிந்தனைக்கு உள்ளாக்கியது
#இடஒதுக்கீடு
🖐🏿தோல்வி தந்த பாடத்தால்... ரூ.9,000 வருமான வரம்பு ஆணையை ரத்து செய்ததோடு, பிற்படுத்தப் பட்டோருக்கு ஒதுக்கிய 31 சதவிகிதத்தை 50 சதவிகிதமாக உயர்த்தினார். அதன்படி, இட ஒதுக்கீடு 68 சதவிகிதமாக உயர்த்தப் பட்டது
#இடஒதுக்கீடு
🖐🏿மலைவாழ் மக்களுக்குத் தனி ஒதுக்கீடு, பிறகு வந்த உயர்நீதிமன்றத் தீர்ப்பால் #திமுக ஆட்சியில் ஒரு சதவிகிதம் ஒதுக்கப்பட்டது. 68 சதவிகிதம் 69 சதவிகிதமாக உயர்ந்தது
#இடஒதுக்கீடு69
#இடஒதுக்கீடு
🖐🏿உச்சநீதிமன்றத் தீர்ப்புக்களின்படி, 50 விழுக்காட்டிற்கு மேல் இடஒதுக்கீடு போகக்கூடாது என்பது போன்ற ஒரு நிலைப்பாடு(பாலாஜி வழக்கினைக் காட்டி) கூறப்பட்டது
#இடஒதுக்கீடு
🖐🏿#பாலாஜிவழக்கு
28 செப்டம்பர் 1962 எம்.ஆர். பாலாஜி Vs State Of Mysore
பாரிஸ்டர் பட்டம் பெற்ற மைசூர் அரசர் கிருஷ்ணராஜ உடையார் ஆட்சியில் இருந்த பொழுது ( 1894-1940 ) யார் பிற்படுத்தப்பட்ட மக்கள் என்று அறிய ஒரு பட்டியல் எடுக்க குழு அமைத்து பரிந்துரை பெற்றார்
#இடஒதுக்கீடு
🖐🏿#பாலாஜிவழக்கு
அந்தக் குழுவோ ஆய்வு செய்து அளித்த பரிந்துரையில் பார்ப்பனர் அல்லாதார் எல்லோரும் பிற்படுத்தப்பட்ட மக்கள் என்று கூறுகிறது
அதன்படி பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சிறுபான்மையினருக்கு 75 விழுக்காட்டு இடங்களை #இடஒதுக்கீடு செய்து மைசூர்அரசர் உத்தரவிடுகிறார்
🖐🏿#பாலாஜிவழக்கு
பின்பு அது படிப்படியாக 68% - 65% - 60% ஆக மாறி 1962 ஆம் ஆண்டில் 68 % ஆக இருந்த போது 1962 ஆம் ஆண்டு இதனை எதிர்த்து எம்.ஆர் பாலாஜி என்பவர் “இத்தனை % இடஒதுக்கீடு கொடுத்தால் தகுதி, திறமை எல்லாமே போய்விடும்” என உச்ச நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்
#இடஒதுக்கீடு
🖐🏿#பாலாஜிவழக்கு
இந்த வழக்கில் வழக்குரைஞர் எஸ்.கே.வேங்கடரண்யா அய்யங்கார் என்பவர் எம்.ஆர்.பாலாஜி சார்பாக வழக்குரைஞராக வழக்காடினார்
#இடஒதுக்கீடு
🖐🏿#பாலாஜிவழக்கு
மூத்த நீதிபதி பீ.பி.கஜேந்திர கட்கார் தலைமையிலான சின்ஹா - புவ்னேஷ்வர்.பி, வாஞ்சூ கே.என், கே.சி.தாஸ், குப்தா, ஷா ஆகியோர் அடங்கிய 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற பெஞ்ச் அதை விசாரித்தது
#இடஒதுக்கீடு
🖐🏿#பாலாஜிவழக்கு
5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற பெஞ்ச் சாதிவாரியான மக்கட்தொகை கணக்கெடுப்பு போன்ற அறிவியல் அடிப்படை என எதையும் கருத்தில் கொள்ளாமல் இட ஒதுக்கீடு 50 விழுக்காட்டிற்கு மேல் இருக்கக்கூடாது எனத் தீர்ப்பு வழங்கியது
#இடஒதுக்கீடு
🖐🏿#பாலாஜிவழக்கு
அதற்குப் பின் வந்த பல நீதிபதிகள் 50% என்பது தவறு என்று கூறிவிட்டார்கள். ஆனாலும் 5 பேர் கொண்ட அமர்வு சொன்னாத் தீர்ப்புத்தான் வழக்குகளின் பொதுவான எடுத்துக்காட்டாக இருக்கிறது
#இடஒதுக்கீடு
🖐🏿தமிழ்நாட்டில் இருந்த 69% ஆணையை அரசமைப்புச் சட்டத்தின் 9 ஆவது அட்டவணையில் (76ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தம்) சேர்த்தது ஜெயலலிதா( ‘‘சமூகநீதி காத்த வீராங்கனை" னு வீரமணி சொன்னது இதுக்கு தான்)

#இடஒதுக்கீடு
🖐🏿ஏற்கெனவே பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட 50%ல் மிகவும்பிற்படுத்தப்பட்டவர்க்கு 20% பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 30% என 1990ல் ஆண்டு திமுக ஆட்சியில் கலைஞர் செய்தார் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு உள்ள இடஒதுக்கீட்டில் முஸ்லீம்களுக்கு 3.5% உள்ஒதுக்கீடு செய்யப்பட்டது
#இடஒதுக்கீடு
🖐🏿பிறகு அதேபோல், தாழ்த்தப்பட்டவர்களுக்கு உள்ளபிரிவில், அருந்ததியினருக்கு 3% மாநில அரசில் ஒதுக்கீடு கலைஞர் செய்தார்
🖐🏿2005ல் மத்தியஅரசு கொண்டுவந்த 93வது அரசமைப்பு திருத்தசட்டத்தின்படி மத்திய கல்விநிறுவனங்களில்(தனியார்நிறுவனங்கள் உட்பட)ஒடுக்கப்பட்ட மக்களுக்கு #இடஒதுக்கீடு உறுதி
👆🏾இதுவரை கொடுக்கப்பட்ட #இடஒதுக்கீடு எல்லாமே குழு அமைத்து கள ஆய்வு செய்து அரசிடம் பரிந்துரை செய்து அதனடிப்படையில் வந்தவையே

👉🏿 ஜனவரி 9, 2019 மோடி அரசு கொண்டு வந்த முற்பட்ட சமூகத்தின் ஏழைகளுக்கான 10% எந்த குழு யாரை எப்போ ஆய்வு செய்து பரிந்துரைத்தது?
பொருளாதார #இடஒதுக்கீடு தேவை என்று 5பேர் வாக்களித்த அதே அவையில் பொருளாதார இடஒதுக்கீடு கூடாது என்று 3பேர் மட்டும் வாக்களித்திருப்பது இந்தியாவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பே காலாவதிஆகி வகுப்புபேதமே இல்லாதசூழலைக் காட்டுவதாக எடுப்பீர்களா / இன்னும் முற்பட்டோர் ஆதிக்கம்தொடர்கிறது என்பீரா
🖐🏿முற்பட்ட ஏழைகளுக்கே 10% என்றால் பிற்பட்டோருக்கு எத்தனை சதவீதம் இருக்க வேண்டும்?
🖐🏿பிற்பட்டோருக்கு கொடுக்கப்பட்ட #இடஒதுக்கீடு
#சமூகநீதி - முற்பட்ட ஏழைகளுக்கு கொடுக்கப்பட்ட இட ஒதுக்கீடு சமூக அநீதி
🖐🏿ஒடுக்கப்பட மக்களின் அவல நிலை கண்டு #இடஒதுக்கீடு கொண்டு வந்தது(திராவிட) தமிழ் மண்ணே (1920s)

🖐🏿10% முற்பட்ட ஏழைகளுக்கு நடைமுறைக்கு வந்தது ஜனவரி 14 (புரிகிறதா இந்த நாளின் குறியீடு)2019

🖐🏿10% சமூக அநீதியை எதிர்த்து இந்தியாவில் குரல் கொடுத்ததும் தமிழகமே (#திமுக)
🖐🏿நாங்களும் தான் கூவுனோம்னு சிலர் வரலாம்
வாய்லயே போடணும்👊🏾👊🏾 நடிச்சது போதும் கெளம்புங்கனு 👊🏾

🖐🏿இந்த மசோதாவை (சட்ட திருத்தத்தை)எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருப்பதும் தமிழகமே (#திமுக)

#இடஒதுக்கீடு
🖐🏿போராட்டம் தான் ஒடுக்கப்பட்டோரின் வாழ்க்கை

🖐🏿உரிமையையும் போராடித்தான் பெறுவோம்

🖐🏿உரிமையை பெற்றுத் தரும் #திமுக வெற்றுக் கட்சிகளின் நாடகக் காட்சிகள் போல் இல்லாமல் 💪🏾💪🏾

🖐🏿நமக்கானவர்கள் யார் நம்மைக் காப்பவர்கள் யார் நம் கழுத்தை அறுப்பவர்கள் யாரென வரலாறு ஆய்ந்து உணர்வோம் 💪🏾
அவசரவசரமா தட்னத தொகுத்து கூட கொஞ்சம் சேர்த்து ஒரே பதிவா 👇🏿
சும்மா வரவில்லை ஒடுக்கப்பட்டோருக்கான #இடஒதுக்கீடு
ஆனால் எளிதில் வந்துவிட்டது முற்பட்டோருக்கான பத்து சதவீத இடஒதுக்கீடு
விழித்திடுவோம் பிழைத்திடுவோம் இனியாவது 💪🏾
Missing some Tweet in this thread?
You can try to force a refresh.

Like this thread? Get email updates or save it to PDF!

Subscribe to கவி தா
Profile picture

Get real-time email alerts when new unrolls (>4 tweets) are available from this author!

This content may be removed anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just three indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!