தமிழர் திருமணம் - உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியீடு, 1985
இந்நூல் பத்துப் பிரிவுகளாகப் பகுக்கப்பட்டுள்ளது!
முதல் நிலையில் தமிழர் யார், வாழ்ந்த இடம், பழக்கவழக்கங்கள் ஆகியன குறித்து மிகச் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளது!
#பதிவிறக்கம்📥 bit.ly/2LRHMAb


சங்ககாலத்தில் நடைபெற்ற திருமணம் பிறர் கலப்பற்ற தூய தமிழர் திருமணம் என்பதும் விளக்கப்பட்டுள்ளது!
தமிழர் திருமணம் என்ற அடிப்படையில் நோக்குகையில் சிலப்பதிகார காலத்தில் நாகரிகம் பெற்ற சமூகத்தில் நடைப்பெற்ற மணங்கள் எல்லாம் வேதமுறையை ஒட்டிய வைதிக மணங்களாகவே நடைபெற்றிருத்தல் வேண்டும்
இரட்டைக் காப்பியங்களுள் ஒன்றான மணிமேகலையில் உறவுமுறைத் திருமணம் பற்றிய குறிப்பே காணப்படுகின்றன!
உறவு முறையில் கொள்வதும், கொடுப்பதும் இன்றும் தமிழரிடையே வழக்கிலிருப்பதைக் காணலாம்!
சங்க காலத்தில் பல்வேறு வகைப்பட்ட திருமணங்கள் காணப்பட்டதைப் போலவே இடைக்காலத்திலும் பலவகையான திருமண முறைகள் காணப்படுகின்றன...! 2/2
மேலும் மேற்கூறிய ஒவ்வொரு இலக்கியத்திலும் ஒவ்வொரு புதுப்புது சடங்குகள் இடம் பெறுவதை அறிய முடிகிறது!