எதையெடுத்தாலும் சமணம்,பெளத்தம்,ஆஜீவகம் என்று அடித்துவிடும் கும்பலுக்கு எந்த ஆய்வு முறையை பற்றியும் கவலையில்லை.கண்ணை மூடிக் கொண்டு இந்து மத வெறுப்பை கொடுவதற்கு அந்த வார்த்தைகள் பயன்படும் கருவி அவ்வளவுதான்.(1)
அத்திவரதர் புத்தர் சிலையாம் ஏனென்றால் படுத்திருக்கிறாராம் இப்படியெல்லாம் மல்லாந்து படுத்துக் கொண்டு சிந்திக்க நம்மவர்களால்தான் முடியும்.(2)
திரு அமர் மார்பன் என்றால் ஸ்ரீநிவாஸன் என்பதன் தமிழ் வடிவம்.அவர் படுத்திருக்கும் திருவரங்கத்தையும்,அவர் நின்று அருள்புரியும் திருப்பதியையும் காண வந்தேன்(4)👇
"ஏந்தல் சான்ற இடனுடை வேள்வி
ஆக்கிய பொழுதின் அறத்துறை போகி
மாய வண்ணனை மனன் உறப்பெற்று" - #பதிற்றுப்பத்து(5)
நீல் நிற உருவின் நேமியோனும் என்று இருபெருந்தெய்வம்" - #புறம்58
வெள்ளை நிறத்தவனும் பனைக்கொடியை உடைய பலராமனும்,நீல நிறத்தையும் சக்கரத்தையும் உடைய திருமாலும் இரண்டு பெரும் தெய்வம் என்று காரிக்கண்ணனார் புகழ்கிறார் சோழனையும்,பாண்டியனையும்.(7)
விண்ணுயர் புட்கொடி விறல் வெய்யோனும்" - #புறம்56
மாசற்ற அழகிய நீலநிற உடல் அழகும்,வானுயற பறக்கும் கருடக் கொடியை உடையவனும் என்று நக்கீரர் பாண்டியனை திருமாலோடு ஒப்பிட்டு புகழ்கிறார்.(8)
புகழ்தல் உற்றோர்க்கு மாயோன் அன்ன" - #புறம்57
அறிவற்றோர் ஆயினும்,அறிவில் வல்லவராயினும் போற்றிப் புகழ்பவர்களை காத்தருள்வதில் திருமாலை ஒத்தவன் என்று பாண்டியன் நன்மாறனை புகழ்கிறார் காரிக்கண்ணனார்.(9)
மன்மருற் கறுத்த மழுவாள் நெடியோன்
முன்முயன் றரிதினின் முடித்த வேள்வி
கயிறரை யாத்த காண்டகு வனப்பின்
அருங்கடி நெடுந்தூண் போல ” - #அகம்220 (10)👇
இதழ்த் தாமரைப் பொகுட்டின்” - பெரும்பாணாற்றுப்படை (402-405)
பத்மநாபன் என்ற பதத்திற்கான விளக்கத்தை பெரும்பாணாற்றுபடையே கொடுத்துவிட்டது திருமாலின் தொப்புளில் இருந்து பிரம்மா வந்த புராணத்தை குறிப்பதன் மூலம்(12)
வார்மணல் அகன்றுறை அண்டர்மகளிர்
மரஞ்செல மிதித்த மாஅல் போல ” - #அகம்59
பலராமனை கண்ட கிருஷ்ணன் ஆயர் மகளிர் ஆடையில்லாமல் இருப்பதை மறைக்க குருந்த மலை கிளையை அழுத்திய தொன்மத்தை சொல்கிறது.(13)
காந்தள் அம்சிலம்பில் களிறு படிந்தாங்கு
பாம்பணைப் பள்ளி அமர்ந்தோன்" பெரும்பாணாற்றுப்படை 371- 373)
அதாவது மலையில் அமர்ந்த யானைபோல் பாம்பனைமீது பள்ளி கொள்பவன் என்று புகழ்கின்றது! இதன்மூலம் திருவெஃகா(காஞ்சிபுரத்தின்) பழமை புரியும் (14)
ஆரியன் அமைதியும் அமைவுறக் கேட்டு" - மணிமேகலை
மணிமேகலை நூல் ஆரியன் அதாவது மேம்பட்ட குரு என்ற பொருளில் புத்தரை சொல்கிறது.இதை என்றாவது படித்துப் பார்த்துள்ளார்களா நமது போலி ஆய்வாளர்கள் என்று தெரியவில்லை.(17)