இவரைப் பெரிதாகக் கடிந்து கொள்ள ஏதுமில்லை...
சாதாரண மனிதனின் மனம் எப்படி மாறிக் கொண்டே இருக்குமோ அப்படி மாறிக் கொண்டே இருக்கும் மனம் தான் இவருடையதும். இவர் இதற்குச் சரிப்பட்டு வருவார் என்று நம்பும் மக்களும் சாதாரண மக்கள் தான். அவர்கள் மீதும் குற்றமில்லை. எது தான் குற்றம்?👇
ரஜினியின் பிழை என்ன!? திரைப்படங்கள் வாயிலாக அவரை கண்மூடித்தனமாக நம்பும் ரசிகர்களின் மனங்களில் அரசியல் ஆசையை மூட்டியதும், அந்த ஆசை நிறைவேற இன்றுவரை காத்திருக்க வைப்பதும் தான்.
இதை யாரும் மறுக்க முடியாது தானே ரசிகர்களே👇
தற்போது கிருஷ்ணன் அர்ஜூனன் கதை சொல்கிறார், பெரும்பாலான தமிழக மக்களின் எண்ணத்துக்கு எதிராக. நேசிக்கப்பட்ட ரஜினி, வெறுக்கப்படக் கூடாது தானே!👇