அரசியல் பேசுபவர்கள் பேசாதவர்கள், அரசியல் அறிந்தவர்கள் அறியாதவர்கள், என்று அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் இவை.
#தயவுசெய்து
#முழுமையாக_படிக்கவும்
தமிழை ஒதுக்குவது அல்ல திராவிடம், மாறாக, தமிழ் மொழியை, தமிழ் மொழியின் அடையாளத்தை, தமிழர்களை வலிமைப்படுத்த👇
திராவிடம் என்றால் என்ன?
#ஆரியத்தின்_எதிர்ப்பதம்
ஆரியத்தால் பிரித்தாளப்பட்ட அனைவரையும் ஒன்றிணைக்கும் சொல்
திராவிடத்தின் அவசியம் என்ன?
சமூகத்தில் படர்ந்திருக்கும் இருளை நீக்கி ஒளியேற்றும் தீப்பொறி தான் திராவிடம்
திராவிடத்தின் நோக்கம்?
சமத்துவம்👇
பிரிவினைக்குக் காரணமான அனைத்தையும் விரட்டியடிக்க, சுயமரியாதை ஓங்க, என்னென்னவெல்லாம் தேவையோ அவையெல்லாம் தான்.
இப்படி ஒற்றை வரிகளிலும் பதில் தரலாம், நூறு புத்தகங்களாகக் கூட வெளியிடலாம். இருப்பினும், இங்கே புரியத்தக்க எளிய விளக்கங்கள் மட்டும்👇
ஆரியத்தின்(பிராமியத்தின்) எதிர்ப்பதம். சூத்திரனல்ல என்பதைச் சொல்லும் சுயமரியாதைச் சொல். அப்படியெனில், ஆரியம் பரவி நிற்கும் அனைத்துப் பகுதிகளிலும் திராவிடமும் விரிந்து பயன்பாட்டில் இருந்திருக்க வேண்டுமே என்ற கேள்வி எழலாம். அது தான் திராவிடத்தின் நோக்கமும்👇
தமிழ் மொழியின் பெருமையை நம்மைத் தவிர பிற மொழியினர் அறிவரா!? ஏற்பரா!? தமிழ் தான் ஆதி மொழியெனவும், அனைத்து மொழிகளுக்கும் வேர் என்பதை நாம் அறிவோம். #சமசுகிருதம் அழிந்த மொழி, ஆகையால் அதை வேராக ஏற்பதில் பிற மொழியினர்க்கு எந்தத் தயக்கமும் இல்லை.
தமிழ் அப்படியா👇
ஆதி மனிதன் பேசிய மொழியை அடிப்படையாகக் கொண்டு, செம்மைப் படுத்தப்பட்டு, பயன்படுத்தப்படும் மொழி தமிழ். இத்தகைத்த பெருமை வேறு மொழிகளுக்கு இல்லை👇
உடனே, திராவிடம் எனும் சொல் தமிழே கிடையாது என்று ஓடி வரும் பேதைகள் அறியாது, தமிழ் மொழியின் தத்துவத்தை👇
சரி, திராவிடம் அனைத்து தென்னிந்திய மொழிகளுக்கும் பொதுவான சொல் என்றால், தமிழ் தவிர்த்த பிற மொழியினர் ஏன் தாங்கிப் பிடிக்கவில்லை என்பது இவர்களின் மற்றொரு (பிடி)வாதம். 👇
ஏற்றத்தாழ்வுகளைக் களைந்து, அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்ற இடதுசாரிக் கொள்கை தான் எனினும், இந்த சமத்துவம் சற்றே மாறுபட்ட கருத்துக்களை தன்னகத்தே கொண்டுள்ளது.
எப்படி!?
இங்கே நமது விரல்களை வைத்தே நமது கண்களைக் குத்தும் பிரித்தாளும் சூழ்ச்சியைக்👇
இதன் நோக்கம் எளிமைப்படுத்தப்பட்ட ஒன்று, பிரிவினைவாதத்திற்குக் காரணமான பார்ப்பனியத்தையும், ஊற்றுக்கண்ணான கடவுளையும் ஒழித்துக் கட்டினாலே👇
பகுத்தறியும் ஆற்றல் இல்லாது ஆயிரம் நூல் படித்தும் பயனில்லை.
திராவிடத்தால் எழுவோம்
தமிழால் வெல்வோம்
ஒன்றுபடுவோம்
ம.சோமசுந்தர பிரபு.