சீமான், “இங்கே இலை மலர்ந்தால் அங்கே ஈழம் மலரும்” என்று ஏன் சொன்னார்?
அப்பொழுதிருந்த அரசியல் சூழலும் ஈழத்தின் சூழலும் நாம் யாவரும் அறிவோம். அங்கே ஈழத்தில் சிங்கள அரசால் எம் ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டு கொண்டிருந்தார்கள் 😢 👇
போர் நிறுத்தம் ஏற்பட்டே ஆகவேண்டும் முள்ளிவாயக்கால் கொடூரம் நிகழக்கூடாது, ஈழத்தமிழர்கள் உயிர்ப்பலி தடுக்கப்படவேண்டும் என்று உலகெங்கும் வாழும் தமிழர்கள் துடித்துக்கொண்டிருந்த நேரம்
தமிழகத்தில் திமுகவும் காங்கிரசும் கூட்டணி வீழ்த்தப்பட வேண்டும் என்ற குறி. தமிழீழப் பிரச்சனையை தேர்தல் பிரச்சனையாக மாற்றவேண்டும் என்பதே சீமான் நோக்கமாக அன்று இருந்தது
இந்த சூழலில் தான் திமுக காங்கிரசை எதிர்த்து #ஜெயலலிதா நிற்பேன் என்றார். அவர்கள் ஈழத்தின் கொடூரத்தைப் பட்டியலிட்டு இதற்கெல்லாம் தீர்வு தனி ஈழம் தான் தீர்வு என்ற வாக்குறதி அளித்தார்
நாற்பது தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பினை தனக்கு அளித்தால் தன் பேச்சைக் கேட்கும் மத்திய அரசு அமைந்தால் அது சாத்தியப்படும் என்றும் அதற்கு வழி செய்யுங்கள் என்று ஜெயலலிதா சொன்னார்
இன்னொரு பக்கம் பெற்று தருகிறாரோ இல்லையோ ஜெயலலிதாவின் வாக்குறுதியை மக்களிடம் கொண்டு சென்று ஈழப்பிரச்சனையும் பேசி அதை தேர்தல் பிரச்சனையாக மாற்றி,
இந்நிலையில் தான் #சீமான் இன உணர்வுள்ள இயக்குனர்களோடு தேர்தல் பரப்புரை சென்றார்
அப்பரப்புரையில் ஈழத்தில் நடக்கிற அவலம் சொல்லி அதற்க்குக் காரணம் காங்கிரஸ் அரசாங்கம் என்பதைச் சொல்லி அந்தக் கட்சி ஏன் தோற்க வேண்டும் என்றும்,
அதனால் இரட்டை இலைக்கு ஓட்டுப்போடுங்கள், “இங்கே இலை மலர்ந்தால் அங்கே ஈழம் மலரும்” என்று திரு.சீமான் சொன்னார் ! @karthickselvaa