இலங்கையிலிருந்து வந்த அகதிகளுக்கு இந்திய குடியுரிமை ஏன் வழங்கக்கூடாது என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது. நேற்றைக்கு மாநிலங்களவையில் நிறைவேறிய குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவின் பிண்ணனியில்தான் இது எழுந்துள்ளது. #SriLanka#refugees#CAB#Tamil 1/10
அம்மசோதா மக்களவையில் திங்களன்று நிறைவேறியது. குடியுரிமை வேண்டுமா வேண்டாமா என்பதை இலங்கையிலிருந்து வந்துள்ள அகதிகளிடமும் அவர்களது குழந்தைகளிடமும், அவர்களுடைய விருப்பத்தை, முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். குழந்தைகளில் பலர் இங்கேயே பிறந்தவர்கள். #SriLanka#refugees#CAB#Tamil 2/10
பெரியவர்களாகி இங்கேயே மணம் புரிந்து அவர்களுக்கு பிள்ளைகளும் இருக்கிறார்கள். அவர்களுக்கு எது நல்லது, எது நல்லதல்ல என்ற முடிவை நாமாக எடுக்கமுடியாது. எடுக்கக்கூடாது. சுய விருப்பத்தினால் திரும்பி செல்லுபவர்களுக்கு என்ன வசதிகளை செய்யமுடியுமோ #SriLanka#refugees#CAB#Tamil 3/10
அதை செய்ய இந்தியாவும் இலங்கையும் முன்வரவேண்டும். செய்யவேண்டும். ராமேஸ்வரம்-தலைமன்னார் படகு சேவையை மீண்டும் துவக்க உடனடியாக முயற்சிகளை எடுக்கவேண்டும்.
மலையகத் தமிழர்களை இந்தியாவிற்கு வலுக்கட்டயாமாக 1960-களிலும் 1970-களிலும் #SriLanka#refugees#CAB#Tamil 4/10
அனுப்பப்பட்டார்கள். அதைப் போன்ற தவறை மீண்டும் நாம் செய்யக்கூடாது. அவர்கள் இங்கு இருப்பதற்கு விருப்பமில்லை என்றால், அவர்கள் திரும்பி செல்வதற்கு
என்ன உதவிகளை செய்யமுடியுமோ அதை செய்யவேண்டும். #SriLanka#refugees#CAB#Tamil 5/10
இலங்கையின் குடியுரிமைச் சட்டத்தில் கடந்த 15 வருடங்களில் செய்யப்பட்ட திருத்தங்களினால், இலங்கையை பூர்விகமாகக் கொண்டவர்களுக்கு குடியுரிமை கிடைப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை இருக்கின்றதால், #SriLanka#refugees#CAB#Tamil 6/10
தமிழர்களின் மக்கட்தொகை அதிகமானால், தமிழ் பிரதிநிதிகள்தான் அதிகமாவார்கள். இதை புரிந்துகொள்ளவேண்டும். இனப்பிரச்சினை நீண்டகாலமாக இருக்கின்ற ஒரு நாட்டில், தற்பொழுது அங்கு வாழ்கின்ற மக்களுக்கு எதிராக இந்தியாவின் செயல்பாடுகள் இருக்கக்கூடாது. #SriLanka#refugees#CAB#Tamil 7/10
இலங்கையிலிருந்து வந்துள்ள அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்படுவதினால், அப்படிப்பட்ட சூழல் எக்காலத்திலும் உருவாகக்கூடாது என்றுதான் இந்தியா விரும்பும். இந்தியக் குடியுரிமை பெற வேண்டும் என விரும்புவர்களுக்கு அதற்கேற்ப சட்டத்தில் #SriLanka#refugees#CAB#Tamil 8/10
திருத்தங்களை கொண்டுவரலாம். இலங்கைக்கும் திரும்பமாட்டேன், இந்தியாவிலும் இருக்கமாட்டேன் எனக் கருத்தில் உள்பவர்களுக்கு நீண்ட விவாதங்களுக்குப் பிறகுதான் முடிவு எடுக்கவேண்டும். மேற்கூறியவற்றைப் பற்றி விவாதிக்க, இரண்டு நாட்டின் #SriLanka#refugees#CAB#Tamil 9/10
அரசு பிரதிநிதிகளைத்தவிர, தமிழ்நாடு அரசு, இலங்கையிலுள்ள தமிழர் தலைவர்கள் மற்றும் அகதிகளின் பிரதிநிதிகளையும் அழைக்கப்படவேண்டும். தமிழ்நாட்டிலுள்ள அகதிகளின் முகாம்கள் "தொல்பொருள் மையங்களாக" தொடர்வது எந்த நவீன சமுதாயத்திற்கும் அழகல்ல. #SriLanka#refugees#CAB#Tamil 10/10
@Ahmedshabbir20 : please go through the thread. You will get the answer.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
இன்றைக்கு அப்பாவின் 89வது பிறந்த நாள்.
அப்பாவைப் பற்றி நினைக்கும்போதெல்லாம், இரண்டு காரணங்களுக்குகாக எனக்கு குற்ற உணர்வு உண்டு.
இந்த குற்ற உணர்வு எனக்கு மட்டுமே பொருந்தும். என்னுடைய சகோதரர்களுக்கு அல்ல!
ஒன்று, அவர் ஆசைப்பட்டபடி அவருடைய இறுதிச்சடங்குகள் நடக்கவில்லை. 1/14
பாரம்பரியமுறைப்படி தனக்கு சடங்குகள் செய்யவேண்டாம் என குறைந்தபட்சம் இரண்டு முறையாவது - அவருடைய 60வது மற்றும் 80வது பிறந்த நாட்கள் சமயத்தில் - என்னிடம் கூறியிருந்தார். க.நா.சுவின் மறைவுக்குப் பிறகு, அவருடைய குடும்பத்தினர் நடந்துகொண்டவிதம் அப்பாவிற்கு மிகவும் பிடித்துவிட்டது.2/14
க.நா.சுவின் இறுதி ஊர்வலம் முடிந்தபிறகு, ஒரு நாள், சிலரை அழைத்து சாப்பாடு போட்டிருக்கிறார்கள். அவ்வளவுதான். இம்முறையை பின்பற்றவேண்டும் என்பதே அப்பாவின் விருப்பம்.
இரண்டாவது, 2014-இறுதியில், 2015-ஆரம்பத்தில் நான் எடுத்த முடிவு. அப்போது, என்னுடனுமும் என் மனைவியுடனும் 3/14
Recently, I came across observations of two individuals, both of whom hail from Sri Lanka, on the much-criticised Indo-Lankan Accord of 1987. The observations came from Mr Palitha T. B. Kohona, a veteran diplomat who has been appointed Ambassador to China, 1/22
and Mr Kuna Kaviyalahan, a Tamil writer, who, I understand, lives in Netherlands. Mr Kohona, responding to a question during a TV interview whether the 1987 Accord was still binding on SL, referred to India's “failure” to ensure surrender of arms by the LTTE 2/22
and wondered why SL alone should stick to the Accord. Mr Kaviyalahan’s take was essentially on the “Indian agenda” behind the Accord. He listed five reasons, including the presence of a station of Voice of America in SL and India's hold over Trincomalee oil tanks. 3/22
மூன்று இள உயிர்கள் "நீட்" தேர்வின் அழுத்தம் காரணமாக பறி போனது மிகவும் வேதனையாக உள்ளது. ஒரு தேர்வின் முடிவு ஒருவரின் வாழ்க்கை நிர்ணயிக்கின்ற அளவுகோல் அல்ல என்பதை பெற்றோர்களூம் இளைஞர்களும் புரிந்து கொள்ளவேண்டும். ஒரு முறை முடியாவிட்டால் மறுமுறை. இல்லையெனில், ...1/ 8
வாழ்க்கையில் முன்னேறுவதற்கு, ஆக்கபூர்வமான வழிகள் எவ்வளவோ உள்ளன. ஆகவே அதைப் பற்றியெல்ல்லாம் சிந்தித்து பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை சரியாக வழி நடத்தவேண்டும். தற்போதைய நிகழ்வுகளை பார்க்கும்போது, எனக்கு 1990-களின் இறுதிகளில் - 20 வருடங்களுக்கு மேலாக - கிடைத்த அனுபவம்தான் 2/8
நினைவுக்கு வருகிறது. எங்களது குடும்பத்திற்கு மிகவும் வேண்டப்பட்ட குடும்பம் அது. அக்குடும்பத்தில், ஒர் இளம்பெண். அவர்களது பெற்றோர்கள் இருவருமே மிகவும் "busy professionals," "chartered accountants." அத்தொழிலில் இருவருமே "top." அப்பெண்ணின் தந்தை இந்தியாவின் ஒரு மிகப்பெரிய 3/8
துரைமுருகன் அவர்கள் தி.மு.க. வின் பொதுச் செயலாளராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்-பட்டுள்ளார். அரை நூற்றாண்டுக்கு மேலாக அக்கட்சியில் பணி புரிந்தவர்க்கு கிடைத்துள்ள பெரிய அங்கீகாரம். என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்! அவர் பொதுப்பணித்துறை அமைச்சராக 1996-2001-ல் இருந்தபொழுதுதான் 1/7
எனக்கு அவரை தெரிய வந்தது. நீர் பற்றாக்குறைப் பற்றியும் நதிநீர் பிரச்சினைகளைப் பற்றி நான் எழுதிய கட்டுரைகளை தவறாமல் அவர் கவனித்து வந்துள்ளார். வரைவு தேசிய நீர் கொள்கை தமிழகத்தின் மீது என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பற்றி 2/7
நான் ஏப்ரல் 1998-ல் எழுதிய கட்டுரை "தி இந்து" பத்திரிகையின் முதல் பக்கத்தில் வந்திருந்தது. அதை படித்துவிட்டு, எனக்கு தெரிந்த ஒரு ஐ ஏ எஸ் அதிகாரியிடம் அக்கட்டுரை எவ்வளவு கச்சிதமாக எழுதப்பட்டுள்ளது என்பதை பாராட்டியிருக்கிறார். மே 2000 மற்றும் மே 2001-ல் நடைபெற்ற 3/7
தனக்கு ஹிந்தி அதிகம் தெரியாததினால், பிரதமாராக முடியவில்லை என நேற்று இறந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கருதியதாக இன்றைய செய்திதாள்களில் எழுதப்பட்டுள்ளது. அது மட்டுமே தகுதியல்ல என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும். ஜெயலலிதா பல மொழிகளில் நன்கு பேசக்கூடியவர். 1/8
தமிழைத்தவிர, ஆங்கிலமும் ஹிந்தியும் மிக சரளமாக பேசக்கூடியவர். உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜீ பிப்ரவரி 2012- ல் ஜெயலலிதாவை சந்தித்து விட்டு என்னுடன் பேசிய பொழுது ஜெயலலிதாவின் ஹிந்தி மொழி மீதான புலமையை கண்டு வியந்தேன் என கூறினார். 2/8
எனக்கு நன்றாக தெரிந்த முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் ஒரு முறை தன்னிடம் ஹீண்டாய் கம்பெனியின் தலைவர் “ஜெயலலிதா புது தில்லியில் இருக்கக்கூடியவர்” என்று கூறியதை ஜெயலலிதாவிடம் தெரிவித்திருக்கிறார். அதற்கு ஜெயலலிதா, “பக்கத்து மாநிலமான ஆந்திராவிடம் நாம் ஏதாவது கோறினால், முடியாது 3/8
கடந்த சில வாரங்களாக சென்று கொண்டிருக்கிற சர்ச்சை “நீட்” மற்றும் “ஜேஇஇ” பரீட்சைகள் செப்டமபர் மாதத்தில் நடத்தப்படலாமா அல்லது தள்ளிப்போட வேண்டுமா என்பதே.
மத்திய அரசு பரீட்சைகளை நடத்தவேண்டும் என்பதிலும் பல மாநில அரசுகள் - தமிழகம் உட்பட - வேண்டாம் என்பதிலும் தீவிரமாக உள்ளனர். 1/13
காங்கிரஸ் மற்றும் அதனுடைய தோழமைக் கட்சிகளும் கொரானோ நோயின் தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு பரீட்சைகள் நடத்தப்படக் கூடாது என வாதிடுகின்றனர். உச்ச நீதிமன்றம் பரீட்சைகளை தள்ளிப்போடவேண்டும் என்ற மனுவை நிராகரித்து விட்டது.
ஆகஸ்ட் 26-ஆம் தேதி, பரீட்சைக்கான அனுமதி சீட்டுகளை 2/13
“ஆன்லைனில்” வெளியிட்ட பரீட்சைகளை நடத்தும் நிறுவனமான “NTA” (என் டி ஏ), முதல் மூன்று மணிநேரங்களில் “நீட்” பரீட்சைக்கான நான்கு லட்ச அனுமதி சீட்டுகள் “download” செய்யப்பட்டு விட்டன என கூறியிருக்கிறது.
“நீட்” பரீட்சைக்கு சுமார் 16 லட்ச மாணாக்கர்களும் “ஜேஇஇ” பரீட்சைக்கு 3/13