#தொல்காப்பியம் புறத்திணையியலில் "குடையும் வாளும் நாள் கோள் அன்றி" எனத் தொடங்குகிற சூத்திரத்தில் "வென்றவாளின் மண்ணு" என்று ஒரு துறை கூறப்படுகிறது.
இதற்கு உரை எழுதிய #நச்சினார்க்கினியர்,
"இருபெரு வேந்தருள் ஒருவன் ஒருவனை வென்றுழி அங்ஙனம் வென்ற... 1/2
வாள் மண்ணுதலுக்கு வாண் மங்கலம் என்றும் பெயர் கூறுவர்.
வாள் மண்ணுதலாகிய வாண் மங்கலத்துக்குச் சாசனச் சான்று கிடைத்திருக்கிறது... 2/2
பூதுகன், இப்போரின் வெற்றிக்குக் காரணமாயிருந்த தன்னுடைய வீரனாகிய மணலேரனுக்கு #ஆதுகூர் பன்னிரண்டையும் பெள்வொள நாட்டில் காதியூரையும் தானமாகக் கொடுத்தான்!
சேர நாட்டில் இரவி வேந்தன் (வீரரவி கேரளவர்மன் திருவடி) என்னும் அரசன் காலத்தில் பின்வரும் இச்சாசனம் எழுதப்பட்டது.
#வாள்விச்சகோட்டம் என்று தவறாக வழங்கப்படுகிற இப்பெயரின் சரியான பெயர் "வாள் வைத்த கோட்டம்" என்பது.
இந்தச் சாசனம் செய்யுளாக பின்வருமாறு எழுதப் பட்டிருக்கிறது!