#முறி என்பதற்குக் கொழுந்தாக உள்ள இலை என்று பொருள் உண்டு.
#தொல்காப்பியம் இதனை ''இலையே, முறியே, தளிரே, தோடே'' என (தொல். பொருள் 642) உணர்த்துகின்றது!
🔹நஞ்சைவிலை முறி
🔹குடிவிலை சாதனமுறி
🔹ஒத்தி முறி
🔹நில ஒத்திமுறி
🔹கடன்முறி
🔹காவல் ஒத்திமுறி
🔹பரைவிலைசாதன முறி
- என்று பலவாறு அழைக்கப்பட்டுள்ளன.
#பற்றுமுறி:
காளையார் கோயில் கல்வெட்டு ஒன்று (SII. VIII 174) பற்றுமுறி ஒன்றினைக் குறிக்கின்றது. அச்சொல் பின்வருமாறு;
அன்றைய தமிழகக் கோயில் மரபுகளுக்கு ஏற்ப இறைவன் பெயரிலில்லாது ஆதிசண்டேசுவரர் பெயருக்குப் #பற்றுமுறி எழுதப்பட்டது!
சிறுமுறி என்பது #கைச்சீட்டு என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டதாகத் தமிழ்ப் பேரகராதி பொருள் தருகிறது.
''பரமபதம் தங்கள் சிறுமுறிப்படி செல்லும்'' என்ற நம்பிள்ளையின் ஈர் முப்பத்தாறாயிரப்படி வரிகளால் அதற்கு விளக்கமும் தரப்பட்டுள்ளது.
இக்கல்வெட்டைப் பதிப்பித்தவர்கள், #சறுமுறி என்று பதிப்பித்து "சறுவமான்யமுறி"யாக இருக்க வேண்டுமென அடிக்குறிப்புத் தந்துள்ளனர்.
அக்கல்வெட்டு பின்வருமாறு:
இராஜராஜன்-III #மன்னார்குடி கல்வெட்டில் (SII.Vol.VI 50) #சிறுமுறி என்ற சொல்லாட்சி பின்வரும் இரண்டிடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது
கல்வெட்டுகளில் இதுவரை அறிந்தவரை, #முறி என்ற சொல் அடிமைக்குப் பயன்பட்டதாகத் தெரியவில்லை.
கல்வெட்டுகளில் ஆள் ஓலை, ஆள் விலைப்பிரமாணம் என்ற சொற்களே அடிமை தொடர்பான ஆவணங்களுக்குப் பயன்பட்டுள்ளன.
முறிகளாகிய ஆவணங்கள் வைக்கும் பெட்டிகள் #முறிப்பெட்டி என்று அழைக்கப்பட்டன.
🔹முறிப்பத்திரம்
🔹முறி சாதனம்
🔹முறிச்சீட்டு
🔹முறிப்பட்டையம்
என்றும் சென்ற நூற்றாண்டு வரை வழங்கப்பட்டிருக்கின்றது.
-நன்று-