ஆதி காலந்தொட்டு ஆடுமாடுகள் தினவு அடங்க உராய்வதற்கென்று பலகைக் கற்களையும், குத்துக் கற்களையும் நட்டுள்ளனர்!
சேற்றை உடம்பில் பூசிக்கொண்டு கரை ஏறும் மாடுகளுக்கு சேறு காயும் போது தினவு ஏற்படுகிறது. உடன் குற்றியை நோக்கிச் செல்கின்றன!
#தொல்காப்பியர் காலத்திலும் இவ்வகை "ஆதீண்டு குற்றிகள்" வழக்கில் இருந்ததென்பதை உரையாசிரியர்களின் உரைக் குறிப்பால் அறிகிறோம்!
எனவே "ஆதீண்டு குற்றி" என்பது பல விலங்குகளும் உராய்வதற்காக நடப்பட்ட கல் என பொருள் கொள்ள வேண்டும்!
#இளம்பூரணர் ஆணொழி மிகுசொல், பெண்ணொழி மிகுசொல் அன்றிப் பொதுவாய் நிற்கும் சொல்லுக்கு ஆதீண்டு குற்றியைச் சான்று காட்டுகிறார்!
சேனாவரையரின் கருத்திற்கு அணி சேர்ப்பது போன்றே ஆதீண்டு குற்றியில் பிற விலங்குகளும் உரசிக் கொண்டன என்பதைச் சங்க இலக்கியக் குறிப்புக்களால் அறிகிறோம். மிருகங்கள் உரைவதற்காகக் குற்றவாளிகளின் வீட்டின் முற்றத்தில், விலங்குகள் தினவு தீர உராயும் #பொற்றைக்கல் இருந்தது!
மா என்பது விலங்கு; துறுகல் என்பது பொற்றைக் கல்.
இவ்வகை குத்துக் கற்களுக்குப் பொற்றைக் கற்களையே பயன்படுத்தினர். எனவே இது "ஆதீண்டு துறுகல்" எனப் பெற்றது!
கந்தினும் என்பதற்கு ஆதீண்டு குற்றியையுடைய இடத்தினும் என்பர் #நச்சினார்க்கினியர் யானைத்தறியிடத் தென பாரும் உளர்.
யானை உரசியதால் மாசு ஏறிய துறு கல்மழையால் தூய் ஐமயான செய்தியைக் #குறுந்தொகை (13) சுட்டுகிறது.
இக்கல்லின் குளிர்ந்த இடத்தே தலைவனும் தலைவியும் தங்கினர் என்பதை மேற்படி பாடல் காட்டும்!
பசுக்கள் உரிஞ்ச அமைக்கப்பட்ட இத்தம்பங்கள் (#சீவகசிந்தாமணி: 419 உரை) மரத்தாலும் செய்யப்பட்டு நடப்பட்டிருந்தன!
🔹#தருமபுரி மாவட்டத்தில் மலைப்பகுதிகளில் நீர் நிலைகளை ஒட்டி பல குத்துக்கற்கள் நடப்பட்டுள்ளன. இவற்றைப் பற்றி அப்பகுதி மக்களிடம் விசாரித்தபோது, மாடுகள் முள் புதர்களில் மேயும் போது 1/2
🔹#தஞ்சாவூர் மாவட்டத்தில் குளக்கரைகளில் பலகைக்கல் குற்றிகள் நடப்பட்டு இருப்பதைக் காணலாம். #கும்பகோணம் #நன்னிலம் வட்டங்களில் சில குற்றிக்கற்கள் (குத்துக்கற்கள்) கல்வெட்டுடன் காணப்படுகின்றன.2/2
மாடுகள் உராய்வதற்கே அன்றி அவற்றிற்கு நோய்கள் வந்தால் இக்கல்லை வழிபாடு செய்யும் வழக்கமும் நடைமுறையில் உள்ளது!
🔹#சேலம் மாவட்டத்தில் #மல்லியகரை என்ற ஊரில் இரண்டு ஆதீண்டு குற்றிகள் கல்வெட்டுடன் உள்ளன.
#ஆரியபாளையம் என்ற ஊரில் குளக்கரையில் நடப்பட்டுள்ள கல்லில் பின்வரும் :கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது!
🔹#கோவை மாவட்டத்தில் #மதுக்கரை ஆற்றுப் படுகையில் #வழுக்கப்பாறை என்ற இடத்தில் "ஆ நோஞ்சிக் கல்' ஒன்று காணப்படுகிறது!
🔹#சென்னை அடுத்துள்ள சேலையூரில் குளக்கரையில் #மந்தைக்கல் என்னும் பெயரில் ஒரு "ஆதீண்டு குற்றி" காணப்படுகிறது. அதில் சூலம், வில், அம்பு போன்ற குறியீடுகள் செதுக்கப்பட்டுள்ளன!
மாடுகள் உராய்வதற்கே அன்றி, நோய் தீர இக்கற்களுக்கு ஊரார் வழிபாடும் செய்கின்றனர்!
🔹விலங்குகள் உரைவதற்காக நடப்படும் கல்லே ஆதீண்டு குற்றி, மாதீண்டு துறுகல் என சங்க இலக்கியங்கள் அழைக்கின்றன
🔹கல்லாலும் மரத்தாலும் அமைந்த இவை மரபு மாறாமல் இன்றளவும் தொடர்ந்து வருகின்றன
🔹இவை மந்தைக்கல், உரைகல், உருஞ்சிக்கல், குற்றிக்கல் என பலபடப் பேசப்பட்டு வருகின்றன