#Thread
கொரோனா தொற்றுக்கு நிதி சேமிப்பதற்காக 'PM Cares' என்ற புதிய அமைப்பை மார்ச் 28ம் தேதி தொடங்கினார் மோடி.
2019, மார்ச் 31 தணிக்கை கணக்கின்படி, இந்த அமைப்பில் சுமார் 3800 கோடி கையிருப்பு இருக்கிறது. கொரோனாவுக்காக தமிழ்நாடு அரசு ஒதுக்கிய மொத்தத்தொகையைவிட சில கோடிகள் அதிகம்.
கையிருப்பில் சில ஆயிரம் கோடி நிதியோடு, 73 ஆண்டுகால பாரம்பரியத்துடன் இப்படி ஒரு அமைப்பு இருக்கும்போது, அவசர அவசரமாக திடீரென PM Cares என்ற திட்டத்தை அறிவித்தார் மோடி.
ஏன்?
கார்ப்பரேட் நிறுவனங்கள், தங்கள் நிறுவனத்தின் கடந்த 3 ஆண்டு நிகர லாபத்தின் கூட்டுசராசரியாக, குறைந்தபட்சம் 2% தொகையை சமூக நலப்பணிகளுக்காக ஒவ்வொரு ஆண்டும் செலவிட வேண்டும்.
இந்த CSR திட்டத்தின் கீழ் 16,000 கம்பெனிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சிறப்பு என்ன தெரியுமா?
PM Care-க்கு அளித்தால் 'மட்டும் தான்' CSR நிதியாக கணக்கு காட்ட முடியும். மாநில முதலமைச்சர் நிதிக்கு வழங்கினால், அதை கணக்குக்காட்ட முடியாது.
'மாநில பேரிடர் மேலாண்மை ஆணையருக்கு நிதி வழங்குங்கள்' என்கிறது மத்திய அரசு.
கேட்டால், காங்கிரஸ் கொண்டு வந்த 2013 கம்பெனிகள் சட்டம் தான் காரணம் என்கிறார்கள் பாஜகவின் ஊடக வாய்மூலங்கள்.
மாநில முதலமைச்சர் நிதிக்கு கொடுத்தால், அந்தத்தொகை CSR-ன் கீழ் வராது. மாறாக 2% செலவுக்கு மேல் கூடுதல் நிதியை, CSR நிதியாக ஒதுக்கினால், அதை மாநில முதலமைச்சர் நிதிக்கு வழங்கலாம். அந்த நிதியை CSR கணக்கில் காட்டலாம்.
ஸ்வட்ச் பாரத், கங்கை தூய்மைத்திட்டம் போன்றவற்றுக்கு நிதி வழங்கினாலும், அதை 2% தொகைக்கு உட்பட்டே CSR நிதியாக ஏற்றுக்கொள்ளலாம் என கார்ப்பரேட் விவகாரத்துறை அமைச்சகம் சாதாரண அறிவிப்பாணை மூலம் எளிமையாக அறிவித்தது.
மத்திய அரசிடம் பதில் இல்லை.
மாறாக, ஒட்டுமொத்த CSR- சட்டத்தையும் மாற்றப்போவதாக அறிவித்து மக்களிடம் கருத்து கேட்க தொடங்கியுள்ளது மோடி அரசு.
ஆனால், பிரிவு 80G - ன் படி, 'பணமாக' கொடுத்தால் மட்டும் தான் வரிவிலக்கு. பொருளாக கொடுத்தால் விலக்கு கிடையாது. அதனால்
தான், பல கார்ப்பரேட்கள் பணமாக கொடுக்கின்றன.
இப்போது, PM Cares-க்கு கீழே வழங்கப்படும் நிதிகளின் தன்மை இன்னமும் சந்தேகங்களை எழுப்புகிறது.
நிறுவனங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யலாம்; எனில், எவ்வளவு வேண்டுமானாலும் கணக்கு காட்டலாம். அதற்கு உதாரணம் தான், 2%க்கு மேல் செலவு செய்தால், மாநில முதலமைச்சர் நிதியும் CSR-ல் சேர்க்கப்படும் என்கிற சரத்து.
தவறு.
சரி. Health Emergency-க்கான சிறப்பு நிதி என்றே வைத்துக்கொள்வோம். அந்த Healthக்கு ஆதாரம் என்ன? மருத்துவமனைகள்.
ஆனால், மோடியின் Health emergency'-க்கான 'Special' PM Cares-ல் எதாவது மருத்துவமனை இணைக்கப்பட்டுள்ளதா?
கிடையாது.
தெரியாது.
ஒரு மருத்துவ பேரழிவு நேரத்தில், மருத்துமனைகளைப் பற்றி சிந்திக்கும் இந்த அடிப்படை அம்சத்தைக்கூட செய்யாமல் பிறகு என்ன தனித்துவமான சுகாதார நிதி திரட்டல்?
- விவேக் கணநாதன்