My Authors
Read all threads
#இலக்கணம்_கற்போம்

முன்னுரை:

தமிழுக்கு பலரும் இலக்கணம் எழுதுயுள்ளார்கள்.
முதல் சங்க/இடை சங்க - காலத்திலும் இருந்தது.
கடை சங்க காலம் - இப்போதும் இருக்கிறது.
முதல்/இடை சங்க கால நூல்கள் நமக்கு கிடைக்கவில்லை. கடற்கோள்களால் அழித்து விட்டன.
கடைச்சங்க நூல்கள் சிலவை கிடைத்தாலும் பல நூல்கள் முழுவதுமாக கிடைக்கவில்லை.
அப்படி அழியாமல் காக்கப்பட்ட சில நூல்கள்: பின்வருமாறு...
தொல்காப்பியம்,
நன்னூல்,
நேமிநாதம்,
இறையனார் களவியல்,
நம்பியகப்பொருள்,
மாறன் அகப்பொருள்,
புறப்பொருள் வெண்பாமாலை,
புறப்பொருள் யாப்பெருங்கலம்,
யாப்பெருங்கலக் காரிகை,
தண்டியலங்காரம்,
மாறன் அலங்காரம்,
இவையாவும் பழம்பெரும் நூல்கள்

இதனை தொடர்ந்து 17'ம் நூற்றாண்டு நூல்கள் பின்வருமாறு...
வீரசோழியம்,
இலக்கண விளக்கம்,
தொண்ணூல் விளக்கம்,
சுவாமிநாதம்,
அறுவகை இலக்கணம்,
முத்து வீரியம்,
பன்னிரு பாட்டியல்,
வெண்பா பாட்டியல்,
இலக்கண விளக்க பாட்டியல்
என்று நம்மிடம் இலக்கண நூல்கள் உள்ளன.

இவை அனைத்தும் 17'ஆம் நூற்றாண்டில் இருந்து உருவாக்கப்பட்டது.
முத்தமிழ்

1. இயல்
(இயல்பாக பேசப்படுவதும், எழுதப்படுவதும்)

2. இசை
(கேட்டு மகிழ்வது)

3. நாடகம்
(பார்த்து மகிழ்வது)

இனிவரும் கீச்சுகளில் முத்தமிழ் இலக்கணங்களையும் முழுதும் பார்ப்போம்.

(சூத்திரங்கள் : தொல்காப்பியம் மற்றும் நன்னூலில் இருந்து விளக்கப்படும்)
ஐந்து வகை இயல் தமிழ் இலக்கணம்

1. எழுத்து இலக்கணம்
(எழுத்துகள் தன்மை/நிலை - Properties)

2. சொல் இலக்கணம்
(ஒரு சொல் எவ்வாறு அமைய வேண்டும்)

3. பொருள் இலக்கணம்
(மக்களின் வாழ்க்கை முறை போன்றவை)

4. யாப்பு இலக்கணம்
(இசை, கவிதை, செய்யுள்)

5. அணி இலக்கணம்
(செய்யுளை அழகு செய்ய)
#இலக்கணம்_கற்போம்

#எழுத்து_இலக்கணம்

எழுத்து என்பது அணு (atom) கூட்டத்தில் இருந்து ஓசையாக (உச்சரிப்பு) உருவாகி நமது வாய் மூலமாக வெளியேறுகிறது.
இவை நம் மூச்சு காற்றுடன்
வயிற்றில்/நெஞ்சில்/கழுத்தில்/மூக்கில்/ இருந்து எழும்பி எழுத்தாக பிறக்கின்றன.

இதற்கான சூத்திரம் கீழ்வருமாறு...
#சூத்திரம்
"மொழி முதற் காரணமாய் அணுத்திரளின் காரியமாய் வரும் ஒலியாவது எழுத்து
இலக்கணம்"

என்று கூறினார் பவணந்தியார்
எழுத்துக்கள் இரண்டு வகைப்படும் :

1. முதல் எழுத்து
2. சார்பு எழுத்து

#சூத்திரம்
"மொழிமுதற் காரணமாம்
அணுத்திரள் ஒலி எழுத்துஅது முதல் சார்பு எனவிரு வகைத்தே"

-(நன்னூல்)
"முதல் எழுத்து" இரு வகைப்படும்

1. உயிர் எழுத்து
2. மெய் எழுத்து

நாம் ஆங்கிலத்தில் படிக்கும் போது vowels என்று படித்திருப்போம். அவ்வாறே தமிழில் உயிரெழுத்துகள். உயிரெழுத்துகள் இல்லாமல் எந்த ஒரு மொழியையும் உருவாக்க முடியாது. இந்த எழுத்துக்கள் நாம் எளிதாக உச்சரிக்கும் ஒலிகள்.
1. உயிர் எழுத்து - 12
(அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ)

2. மெய் எழுத்து - 18
(க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்)

#சூத்திரம்
எழுத்தெனப் படுப
அகரமுதல் னகர இறுவாய்
முப்பஃதென்ப
சார்ந்துவரல் மரபின் மூன்றலங் கடையே என்கிறார் தொல்காப்பியர்.
"எழுத்தெனப் படுப
அகரமுதல் னகர இறுவாய்
முப்பஃதென்ப
சார்ந்துவரல் மரபின் மூன்றலங் கடையே"

(அகரம்-அ) முதல் (னகர-ன்) வரை 30 எழுத்துக்கள்.

இதனால் தான் திருவள்ளுவர்,
தனது முதல் குறளை "அ"கர என்று "அ" துவங்கி;
1330'வது கடைசி குறளை "பெறின்" என்று "ன்" என முடிக்கிறார்..

#இலக்கணம்_கற்போம்
12 உயிர் + 18 மெய்
என்று
30 முதல் எழுத்துகள்

மேலும்
1. குற்றியலுகரம்
2. குற்றியலிகரம்
3. ஆயுத எழுத்து (ஃ)
ஆனால் இவை குறைந்த மாத்திரையில் ஒலிப்பதால் இவற்றை "முதல் எழுத்தில்" சேர்ப்பதில்லை

#சூத்திரம்
அவைதாங்
குற்றிய லிகரங் குற்றிய லுகர
மாய்தமென்ற
முற்பாற் புள்ளியு மெழுத்தோ ரன்ன.
பன்னிரு உயிர் எழுத்துக்கள்
1. குறில் (1 மாத்திரை)
2. நெடில் (2 மாத்திரை)
என்று இரண்டாக பிரிகிறது

1 மாத்திரை அளவு (குறில்) என்பது ஒரு முறை கண் சிமிட்டும் நேரம்

2 மாத்திரை அளவு (நெடில்) என்பது இரண்டு முறை கண் சிமிட்டும் நேரம்

இதற்கான #சூத்திரம் கீழ்வருமாறு...
#சூத்திரம்:
கண்ணிமை நொடியென வவ்வே மாத்திரை
நுண்ணிதி னுணர்ந்தோர் கண்ட வாறே.

பொருள்:
இயல்பாக நாம் ஒருமுறை கண்ணை சிமிட்டும் பொழுது எடுக்கப்படும் ஒரு வினாடியே மாத்திரை எனப்படுவது.
அது ஒரு (1) மாத்திரைக்கு அளவாகும்...
#குறில் #சூத்திரம்
அவற்றுள், அ இ உ
எ ஒ என்னும் மப்பா லைந்து
மோரள பிசைக்குங் குற்றெழுத் தென்ப

#நெடில் #சூத்திரம்
ஆ ஈ ஊ ஏ ஐ
ஓ ஒள என்னு மப்பா லேழு
மீரள பிசைக்கு நெட்டெழுத் தென்ப.

5 குறில் + 7 நெடில் = 12 உயிர்
#சூத்திரம்
மூவள பிசைத்த லோரெழுத் தின்றே.

மூன்று மாத்திரை ஒலிக்க கூடிய ஓசை தமிழில் இல்லை.

இரண்டு அல்லது பல எழுத்துக்கள் சேர்த்து 3 மாத்திரையாக ஒலிக்குமே தவிர தனித்து ஒலிக்காது
#இலக்கணம்_கற்போம்

முதலில் எழுத்திலக்கணத்தின் 12-வகைகள் என்ன என்பதை பார்ப்போம்..

1. எண்

2. பெயர்

3. முறை

4. பிறப்பு

5. உருவம்

6. மாத்திரை

7. முதல் - மொழிக்கு முதலில் வருவது

8. இடைநிலை - மொழிக்கு இடையில் வருவது

9. ஈறு - மொழிக்கு கடையில்

10. போலி

11. பதம்

12. புணர்ச்சி
1⃣ எண்

எண்ணைப் பற்றி பார்க்கும் போது,
எழுத்துக்களின் எண்ணிக்கை & கணக்கீடுகள் பற்றி குறிக்க உதவுகிறது.
அதாவது,
ஒரு சொல்லில் எந்த எழுத்து எங்கு இடம்பெறும் என்பதை (மாத்திரை) எண்ணியல் கொண்டு கணக்கிடுவது.

நாம் யாப்பு இலக்கணம் கற்கும் போது இதனை முழுதுமாக புரிந்துகொள்ள முடியும்.
2⃣ பெயர்

உயிரெழுத்து,
மெய்யெழுத்து,
சார்பு எழுத்து,
சுட்டு எழுத்து,
என்று எழுத்துக்களை பெயர் சொல்லி அழைப்பது.

இது பெயரின் உடைய தன்மையைக் கொண்டிருக்கிறது.
3⃣ முறை

தனித்து இயங்க முடியாத மெய்யெழுத்துக்களின் முன்னால் உயிரெழுத்துக்கள் வருவது முறை.
அதேபோல் கட்டிலுக்கு நெடில் எழுத்திற்கு முன்னால் குறில் வருவது முறை.

இவற்றை நாம் அளபெடையில் பார்ப்போம்.
4⃣ பிறப்பு

ஒரு எழுத்து எவ்வாறு (எங்கு) பிறக்கிறது என்பதை காட்டுவதே பிறப்பு...

மெல்லின எழுத்துக்கள் - மூக்கில் அதிர்வுககளை ஏற்படுத்தும்.

வல்லின எழுத்துக்களை - வயிற்றுப் பகுதியில் அதிர்வுகளை ஏற்படுத்தும்.

இடையின எழுத்துக்கள் - வயிற்றிலோ / அதற்கு மேலோ அதிர்வுகளை ஏற்படுத்தும்.
5⃣ உருவம்

இது ஒரு எழுத்தின் உடைய உருவத்தை குறிப்பது...

மெய் எழுத்தான "க்"
மற்றும்
உயிர்மெய் எழுத்தான "க"
இரண்டுக்குமான
அடிப்படை வேறுபாடு
உருவம் எனப்படுகிறது.
6⃣ மாத்திரை

இதைப் பற்றி நான் முன்னரே கூறி இருக்கிறேன்...
👇
ஒரு எழுத்தினை சொல்வதற்கு தேவைப்படும் காலம் மாத்திரை எனப்படுகிறது.

கால் மாத்திரை,
அரை மாத்திரை,
ஒரு மாத்திரை
இரண்டு மாத்திரை
ஆகியவை மாத்திரையின் அளவுகள்.
7⃣ முதல்
(சொல்லுக்கு முதலில் வருவது)

உயிரெழுத்துக்கள் பன்னிரண்டும்
&
க ங ச ஞ த ந ப ம ய வ

ஆகியவையே சொல்லுக்கு முதலில் வரும்.

அதனால் தான் ரவி என்று எழுதாமல் "இரவி" என்று எழுதுகிறோம்.

அதேபோல் "லகு" என்று எழுதாமல் இலகு என்று எழுதுகிறோம்.
8⃣ இடைநிலை
(சொல்லுக்கு நடுவில் வருவது)

இதில் பலவகையான மயக்கங்கள் உள்ளதால் இதை பற்றி நான் விரிவாக கூறவில்லை.
பொதுவாக
"மெய்யெழுத்துக்களும்"
"உயிர்மெய் எழுத்துக்களும்"
நடுவில் வரும்.
9⃣ ஈறு
(சொல்லின் கடைசியில் வருவது)

12 உயிரெழுத்துக்களும் தனியாகவோ அல்லது உயிர் மெய்யாகவோ வரலாம்...

"ஞ ட த ம ய ர த வ ழ ள" குற்றியலுகரமும் வரலாம்...

எடுத்துக்காட்டு - மண், வேல், வாள்
1⃣0⃣ போலி

ஒரு எழுத்து மற்றொரு எழுத்தாக திரிவது போலி எனப்படும்..

எடுத்துக்காட்டு:-
அமச்சு என்பது அமைச்சு ஆனது,
அரயர் என்பது அரையர் ஆனது,
ஐந்நூறு - ஐஞ்ஞூறு,
கலம் - கலன்.
இதுவரை எழுத்திலக்கணத்தின் வகைகள் பற்றி பார்த்தோம்.
1⃣1⃣ பதம்
1⃣2⃣ புணர்ச்சி
இவ்விரு வகைகளை யாப்பிலக்கணத்தில் தான் விளக்குவேன்
அப்போது தான் புரிதல் புலப்படும்.

இதுவரை உயிர்-12 மற்றும் மெய்-18 (மொத்தம் 30) பற்றி பார்த்தோம்

இனிவரும் கீச்சுகளில் சார்பெழுத்துக்கள் பற்றி பார்ப்போம்.
#சூத்திரம்
அம்முதல் ஈரா றாவி கம்முதல்
மெய்ம்மூ வாறென விளம்பினர் புலவர் (-நன்னூல்)

அம்முதல் - முதல் எழுத்து
ஈரா - இரு ஆறு (6+6=12)
ஆவி - உயிர் எழுத்தை ஆவி எழுத்து என்கிறார் பவணந்தி முனிவர்

மெய்
மூவாறு - (6+6+6 = 18)
#சூத்திரம்
ஒளகார இறுவாய்ப்
பன்னீர்-எழுத்தும் உயிரென மொழிப

ஔகாரம் கடைசியாய் உள்ள 12 எழுத்துக்களும் உயிரெழுத்துக்கள் எனப்படுவது ஆகும்

முதற் சூத்திரத்தில் 'அகரம் முதல்' என்று தொடங்கியதால்,
இங்கு 'ஔகார இறுவாய்' என்று ஈற்றை மட்டும் குறிப்பிடுகிறார்,
இவை பன்னிரண்டும் உயிர் எழுத்துகள்
இப்போது மெய்யெழுத்துக்களின் வகைகளை பார்ப்போம்.

1. வல்லின எழுத்துகள் - (க் ச் ட் த் ப் ற்)

2. மெல்லின எழுத்துக்கள் - (ங் ஞ் ண் ந் ம் ன்)

3. இடையின எழுத்துக்கள் - (ய் ர் ல் வ் ழ் ள்)
#சார்பெழுத்து என்பது முதல் எழுத்துக்களான உயிர் எழுத்து மற்றும் மெய்யெழுத்தை சார்ந்து வருவது.
அதேபோல் உயிர் எழுத்து மற்றும் மெய் எழுத்தின் திரிபினால் வருவது

க் + அ = க
"க்" - மெய் எழுத்து
"அ" - உயிரெழுத்து
இந்த இரண்டும் சேர்ந்து உருவான "க" என்பது சார்பெழுத்து ஆன உயிர்மெய் எழுத்து
இந்த #சார்பெழுத்துக்கள் பத்து வகைப்படும். அவை :

1. உயிர்மெய்
2. ஆயுதம்
3. உயிரளபெடை
4. ஒற்றளபடை
5. குற்றியலுகரம்
6. குற்றியலிகரம்
7. ஐகாரக் குறுக்கம்
8. ஔகாரக் குறுக்கம்
9. மகரக்குறுக்கம்
10. ஆய்தக்குறுக்கம் ஆகும்.

இப்போது நாம் ஒவ்வொன்றாக படிப்போம்....
#உயிர்மெய்_எழுத்து

உயிரெழுத்து
(+)
மெய்யெழுத்து
= உயிர்மெய் எழுத்து

மேலேயே உதாரணம் பார்த்தோம்
க் + அ = க
க் + ஆ = கா
க் + இ = கி
இப்படி
உயிரெழுத்துடைய உச்சரிப்பைப் பெற்று;
மெய் எழுத்து உடைய உருவத்தைக் கொண்டு உயிர்மெய் எழுத்து பிறக்கும்.

இது மொத்தம் 216 எழுத்துக்கள்
(12×18=216)
#ஆயுத_எழுத்து
இது (ஃ) முக்கோணத்தை (Triangle) போன்று இருக்கும்.

ஆயுத எழுத்து
ஒரு சொல்லுக்கு
முதலிலும் கடைசியிலும் வராது,
நடுவில் மட்டுமே வர முடியும்.

அப்படி நடுவில் வர வேண்டுமானாலும் அதற்கும் சில விதிமுறைகள் உண்டு.

அவை:
கீழ்வருமாறு...
அவை :
ஆயுத எழுத்திற்கு முன்னால் ஒரு குறில் எழுத்து வரவேண்டும்.

ஆய்த எழுத்திற்கு பின்னால் ஒரு வல்லின உயிர்மெய் (கு,சு,டு,து,பு,று) எழுத்து வர வேண்டும்.

அப்படி வந்தால் மட்டுமே ஆயுத எழுத்து பயன்படும்.

இது ஒரு சொல்லின் அழகைக் கூட்டி காட்டுவதற்கு பயன்படுத்தப்பட்டது...
உதாரணமாக:

எஃகு, அஃது போன்றவை.
இதில்
அ எ - குறில்
கு து - வல்லின உயிர்மெய் எழுத்துக்கள்.
நடுவில் வருவது ஆயுதம்.

நாம் இப்போது ஆயுத எழுத்தை பயன்படுத்துவது இல்லை.

அஃது - அது
எஃகு - எக்கு
என்று மாற்றி விட்டோம்.

அதனால்தான் ஆயுத எழுத்தின் பயன்பாடு நமது மொழியில் இல்லாமல் போனது.
மெய்யெழுத்துக்களின்
வல்லின/மெல்லின/இடையின
வகைகளை எளிதாக நினைவில் கொள்ள

க் - வ
ங் - மெ
ச் - வ
ஞ் - மெ
ட் - வ
ண் - மெ
த் - வ
ந் - மெ
ப் - வ
ம் - மெ

இவ்வாறு முறையே
ஒரு-(வ)ல்லினம்
ஒரு-(மெ)ல்லினம்
என்று மாறி மாறி வரும்

(ய் ர் ல் வ் ழ் ள் - இடையினம்)

மீண்டும்...
ற் - வ
ன் - மெ
அப்படியே தமிழின் மொத்த எழுத்துக்களை எளிதாக நினைவில் கொள்வோம்...

உயிர் = 12
மெய் = 18
உயிர்மெய் (12×18) = 216
ஆயுத எழுத்து (ஃ) = 1
--------------------------
மொத்தம்: 247
--------------------------
#அளபெடை_இலக்கணம்
இப்போது இதை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்👇


ஒரு எழுத்து மூன்று மாத்திரை அளவு ஒலிக்க வேண்டுமானால் இரண்டு எழுத்துக்கள் சேர்ந்து ஒலிக்க வேண்டும்.
இவ்வாறே #அளபெடை என்பது இரண்டு எழுத்துக்கள் சேர்ந்து அதனுடைய மாத்திரை அளவைவிட அதிகமாக ஒலிப்பது.
#அளபெடை இரண்டு வகைப்படும்:-
1. உயிரளபடை.
2. ஒற்றளபடை.

#உயிரளபடை
உயிரெழுத்துக்கள் சேர்ந்து அளபெடுப்பது உயிரளபடை.
(உதாரணமாக: தொழாஅர்)

ஒரு செய்யுளுடைய ஓசையோ அல்லது தன்மையோ குறையும் போது அதை சரி செய்ய வருவதே அளபெடை.

(யாப்பு இலக்கணத்தில் இதனை விரிவாக படிப்போம்)
#ஒற்றளபெடை
ஒற்று எழுத்து என்றால் புள்ளி வைத்த எழுத்துக்கள் ஆன மெய்யெழுத்துக்கள் உதாரணமாக
(க் ங் ற்) போன்றவை ஒற்று எழுத்துக்கள்.

எளிதாக சொன்னால்...
• உயிரெழுத்துக்கள் அளபெடுத்தால் #உயிரளபெடை

• மெய்யெழுத்துக்கள் அளபெடுத்தால் #ஒற்றளபெடை
ஒற்றளபடை பற்றி பின்பு பார்ப்போம்.
இப்பொழுது
உயிரளபடை வகைகளை பார்ப்போம்.

#உயிரளபடை மூன்று வகைப்படும் அவை:
1. இன்னிசை அளபடை
2. சொல்லிசை அளபெடை
3. செய்யுளிசை அளபெடை

இனி ஒவ்வொன்றாக பார்ப்போம்...
#இன்னிசை_அளபடை

இன்னிசை = இனிமை + இசை. இனிமையான இசையை கொடுக்க அளவு எடுத்து வருவதால் இன்னிசை அளபெடை.
ஒரு செய்யுளில் (பாட்டில்) ஓசை குறையாத போதும் (அசை சரியாக இருந்தாலும்) அந்த செய்யுளின் அழகிற்காக சில குறில் எழுத்துக்கள் நெடில் எழுத்துக்கள் ஆக அளபெடுத்தால் அது இன்னிசை அளபெடை ஆகும்
#சொல்லிசை_அளபெடை
ஒரு பெயர் எச்சத்தை வினையெச்சமாக மாற்றி அளபெடுத்து வந்தால்‌ அது சொல்லிசை அளபெடை.

எச்சம் என்றால் "முடியாத (முற்றுப்பெறாத) ஒரு சொல்" என்று அர்த்தம்.
பெயரெச்சம் என்றால் அந்த சொல்லிற்கு பின்னால் ஒரு பெயர்ச்சொல் வந்தே ஆகவேண்டும்.

உதாரணமாக:
தழுவு__தழுவி__தழீஇ
#செய்யுளிசை_அளபெடை என்னும் #இசைநிறை_அளபெடை பற்றி பார்ப்போம்.
ஒரு செய்யுளில் சொற்குற்றம் ஏற்படும்பொழுது அதை சரி செய்வதற்காக வருவதே செய்யுளிசை அளபெடை.

எ.கா:
தொழாஅர் (தொழார் என்னும் போது இலக்கண பிழை உள்ளது அதனால் தொழாஅர்)

இதனை யாப்பிலக்கணத்தில் நன்றாக பார்ப்போம்
உதாரணம்:
கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும் (குறள்-166)

இதில் உடுப்பதுவும் உண்பதுவும் என்கின்ற வார்த்தைகள்.. உடுப்பதூஉம் உண்பதூஉம் என்று மாறியுள்ளன.
உடுப்பதூஉம் என்று கூறும்பொழுது குறில் ஆகிய "து" நெடில் ஆகிய "தூ" என்று மாறியிருக்கிறது.
உடுப்ப(தூஉ)ம்
அப்படி மாறும் பொழுது அதன் இனமான உ அதன் கூட சேர்ந்து கொள்ளும்.

உயிரெழுத்துக்களின் இனங்கள்:
அ-ஆ, இ-ஈ, உ-ஊ, எ-ஏ, ஐ-இ, ஒ-ஓ, ஔ-ஊ
இதில் ஐ என்று சொல்லும்பொழுது அது இ என்பதைப் போன்று ஒலிக்கும். அதேபோல் ஔ என்று சொல்லும் பொழுது ஊ என்று ஒலிக்கும். அதனால் தான் இவைகள் இனங்கள்.
கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும் (குறள்-166)

இந்தத் திருக்குறளில்
"தூ" என்பதன் உயிர் எழுத்தான "ஊ" என்பது வருவதால்,
அதன் இனமான "உ" என்பது கூடி வருகிறது.
இப்பொழுது ஊ விற்கு 2 மாத்திரைகள். உ விற்கு 1 மாத்திரை. இரண்டும் சேர்ந்தால் 3 மாத்திரைகள்.
இதுவரை உயிரளபெடை பற்றி பார்த்தோம். இப்போது #ஒற்றளபெடை பற்றி பார்ப்போம்.

நன்னூல் கூறும்
#சூத்திரம்
ங, ஞ, ண, ந, ம, ன, வ, ய, ல, ள, ஆய்தம்
அளபு ஆம், குறில் இணை, குறில் கீழ், இடை, கடை
மிகலே அவற்றின் குறி ஆம் வேறே.

இதன் விளக்கம் கீழ்வருமாறு...
#ஒற்றளபெடை என்பது ஒற்றெழுத்துக்கள் ஆகிய மெய் எழுத்துக்கள் அளபெடுத்து வருவது.

அனைத்து மெய்யெழுத்துக்களும் அளபெடுக்காது.
மெல்லின எழுத்துக்களான
"ங் ஞ் ண் ந் ம் ன்"
மற்றும்
இடையின எழுத்துக்களான
"ய் ல் வ் ள்"
மற்றும்
"ஆய்த எழுத்தான ஃ"
ஆகியவையே அளபெடுக்கும்.

மேலும்...
இது சொல்லின் நடுவிலோ அல்லது கடைசியிலோ அளபெடுக்கும்.
ஒரு குறில் எழுத்திற்கு பின்னாலோ அல்லது இரண்டு குறில் எழுத்திற்கு பின்னாலோ அளபெடுக்கும்.

இப்போது எடுத்துக்காட்டு பார்ப்போம்:

இலங்ங்கு வெண்பிறைகு டீசனடி யார்க்குக்
கலங்ங்கு நெஞ்சமிலை காண்.
இசைநிறை என்பதற்கான அர்த்தம் என்னவென்றால் இசை ஓசை குறையும் பொழுது அதை சரி செய்வதற்காக வருவது.
குறைந்த ஓசையை நிறைவு செய்வதற்காக வருவது அதனால் இதற்கு
#இசைநிறை_அளபெடை என்றும் பெயர்
#சொல்லிசை_அளபெடை

உதாரணம்:

(பெயரெச்சம்)
• படித்த __மாணவன்__
• எழுதிய __ஆசிரியர்__

(வினையெச்சம்)
• கூடி __நின்றனர்__
• தழுவி __நின்றான்__
• வாங்கி __வந்தான்__
• கொண்டு __சென்றான்__
#குற்றியலுகரம்
என்பது
குறுமை + இயல் + உகரம்.

ஒரு சொல்லின் உடைய கடைசியில் வரும் வல்லின உகரம் ஆனது குற்றியலுகரம்.

(எ.கா: காசு)
பசு என்ற சொல்லையும்,
காசு என்ற சொல்லையும், சொல்லிப்பாருங்கள்.
பசு - சு நீண்டு ஒலிக்கும்.
காசு - சு சுருங்கி ஒலிக்கும்.
இந்த சுருக்கம் தான் குற்றியலுகரம்.
#குற்றியலுகரம் பற்றி தொல்காப்பியம் கூறும்
#சூத்திரம்

ஈரெழுத்து ஒருமொழி உயிர்த்தொடர் இடைத்தொடர்
ஆய்தத் தொடர்மொழி வன்றொடர் மென்றொடர்
ஆயிரு மூன்றே உகரம் குறுகிடன்.

இங்கு "ஈரெழுத்து ஒருமொழி" என்பது நெடில் என்று பொருள்.

ஈரெழுத்து ஒருமொழி - இரண்டு மாத்திரை கொண்ட ஒரு எழுத்து - நெடில்
#குற்றியலுகரம் பற்றி எளிதாக சொல்ல வேண்டுமானால்...

குறில் எழுத்து / நெடில் எழுத்து / வல்லின எழுத்து / மெல்லின எழுத்து / இடையின எழுத்து / ஆயுத எழுத்து /
இவையாவற்றிக்கும் பின்னல்
"கு சு டு து பு று" போன்ற வல்லின உகரம் வந்தால்
அவையே
#குற்றியலுகரம்
இப்போது #குற்றியலுகரத்தின் ஆறு வகைகளை சுருக்கமாக பார்ப்போம்...

1. நெடில் தொடர் குற்றியலுகரம். (நெடில் உயிர் மெய் அல்லது உயிர் எழுத்துக்களை தொடர்ந்து வரும்) எடுத்துக்காட்டு: காசு

2. ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம் (ஆயுத எழுத்தை தொடர்ந்து வரும்) எடுத்துக்காட்டு: எஃகு

👇
3. உயிர் தொடர் குற்றியலுகரம். (குறில் உயிர் மெய் அல்லது உயிர் எழுத்துக்களை தொடர்ந்து வரும்) எடுத்துக்காட்டு: வரகு

4. வன்தொடர் குற்றியலுகரம். (வல்லின எழுத்துக்களை தொடர்ந்து வரும்)
எடுத்துக்காட்டு: பட்டு

👇
5. மென்தொடர்க் குற்றியலுகரம். (மெல்லின எழுத்துக்களை தொடர்ந்து வரும்)
எடுத்துக்காட்டு: நுங்கு

6. இடைத்தொடர்க் குற்றியலுகரம். (இடையின எழுத்துக்களை தொடர்ந்து வரும்)
எடுத்துக்காட்டு: சார்பு
இப்போது #குற்றியலிகரம் பார்ப்போம்.

குற்றியலிகரம் = குறுமை + இயல் + இகரம்.

நன்னூல் கூறும் #சூத்திரம்
"யகரம் வரக் குறள் உத் திரி இகரமும்
அசைச்சொல் மியாவின் இகரமும் குறிய"

இரண்டாவது சொல்லில் யகரம் வந்தால்; முதல் சொல்லில் இருக்கும் குற்றியலுகர 'உ' - 'இ' ஆக மாறும்.
ஒரு சொல்லில் மியா என்கிற அசைச்சொல் வந்தால் அந்த 'மி' என்கிற எழுத்தின் மாத்திரை குறைந்து ஒலிக்கும்.
(இப்போது இவை வழக்கில் இல்லை)

அதேபோல் இரண்டு சொற்களில் முதல் சொல் குற்றியலுகரம் ஆக வந்து அடுத்த சொல்லில் முதல் எழுத்து யகரமாக இருந்தால் குற்றியலுகரம் #குற்றியலிகரம் ஆக மாறும்.
#ஐகாரக்குறுக்கம் = ஐகாரம் + குறுக்கம்.

ஐ = நெடில் = 2 மாத்திரை.

ஐ இரண்டு மாத்திரையில் இருந்து குறுகி குறைத்த அளவு மாத்திரையாக ஒலித்தல் ஐகாரக்குறுக்கம் ஆகும்.
ஐகாரம் ஒரு சொல்லின்
முதலில்
இடையில்
கடையில் - வரும் என்பதை நாம் அறிவோம்.

உதாரணமாக:
(ஐ)வர்
(ஐ)நூறு
(ஐ)ந்து

து(டை)ப்பம்
இ(டை)யில்

நா(கை)
தலைப்பா(கை)
தொ(கை)
#ஐகாரக்குறுக்கம்
சொல்லின் முதலில் வரும்பொழுது ஒன்றரை - மாத்திரையாகவும்,

நடுவில் மற்றும் கடைசியில்
வரும் பொழுது
ஒரு - மாத்திரையாகவும் குறுகும்

உதாரணமாக:
(ஐ)ந்து இ(றை)ச் சி(லை)
(1+1/2).........(1).........(1)
மாத்திரை அளவு

'ஐ' அதனை சுட்டும் பொழுதும், அளபெடையிலும் குறுகாது.
#ஐகாரக்குறுக்கம் மற்றும் #ஔகாரக்குறுக்கம் பற்றி நன்னூல்
#சூத்திரம்
தற்சுட்டு அளபு ஒழி ஐம் மூவழியும் நையும் ஒளவும் முதல் அற்று ஆகும்

தற்சுட்டு - 'ஐ' குறிக்கும் பொழுது

அளபு ஒழி ஐம் மூவழியும் -முதல், இடை, கடை
நையும் - குறையும்

ஒள - முதலில் மட்டும் வரும் அதுவும் குறைந்தே ஒலிக்கும்
#ஔகாரக்குறுக்கம் = ஔகாரம் + குறுக்கம்.

ஔ = நெடில் = 2 மாத்திரை

ஒரு சொல்லில் ஔகாரம் குறைந்து ஒலித்தால் அது ஔகாரக் குறுக்கம் ஆகும்.
சொல்லின் முதலில் மட்டுமே ஔகாரம் வரும்.
அப்போது மட்டும் அது ஒன்றரை மாத்திரையாக குறுகி ஒலிக்கும்.

எ.கா:
ஔவையார்

ஔ - அதனை சுட்டும் பொழுது குறையாது.
#மகரக்குறுக்கம் = மகரம் + குறுக்கம்.

"ம்" என்கிற மெய்யெழுத்து தன்னுடைய அரை மாத்திரையிலிருந்து கால் மாத்திரையாக குறுகி ஒலிப்பது மகரக் குறுக்கம் ஆகும்.
"ம்" முன்னால் "ண்" அல்லது "ன்" வந்தால், அந்த "ம்" குறுகி ஒலிக்கும்

மருண்ம், போன்ம், உண்ம், சென்ம்

இது தனிமொழி மகரக்குறுக்கம்
புணர்மொழி #மகரக்குறுக்கம்

ஒரு சொல் ம் என்று முடிந்து
அடுத்த சொல் வ என்று தொடங்கினால்,
ம் குறுகி ஒலிக்கும்.

தரும் வயல், வாழும் வகை

#சூத்திரம் - நன்னூல்
ண ன முன் உம் வஃகான் மிசை உம் ம குறுகும்

#சூத்திரம் - தொல்காப்பியம்
செய்யுள் இறுதிப் போலி மொழிவயின்
னகார மகாரம் ஈர் ஒற்றாகும்
#ஆய்தக்குறுக்கம் = ஆயுதம் + குறுக்கம்.

ஆயுத எழுத்து தன்னுடைய அரை மாத்திரையிலிருந்து கால் மாத்திரையாகக் குறைந்து ஒலிப்பது ஆய்தக் குறுக்கம் ஆகும்.

#சூத்திரம் - நன்னூல்
"லளவீற் றியைபினா மாய்த மஃகும்"
(ல, ள ஈற்று இயைபின் ஆம் ஆய்தம் அஃகும்)

விளக்கம் கீழ் வருமாறு:
👇
#ஆய்தக்குறுக்கம்
ஒரு சொல்லின் கடைசியில் "ல்" அல்லது "ள்" வந்து அடுத்த சொல்லில் "த" வர்க்கமாகிய த தா தி தீ...தௌ ஆகிய எழுத்துக்களில் ஏதேனும் ஒன்று வந்தால் இந்த ல் அல்லது ள் "ஃ" ஆக மாறும். அது அரை மாத்திரையிலிருந்து கால் மாத்திரையாகக் குறைந்து ஒலிக்கும்

(எ.கா) கல் + தீது = கஃறீது
இதுவரை முதலெழுத்தின் இரண்டு-வகைகளான உயிர் எழுத்து மற்றும் மெய் எழுத்து பற்றியும்

சார்பெழுத்துக்களின் பத்து வகைகளான
(உயிர்மெய், ஆயுதம், உயிரளபெடை, ஒற்றளபடை, குற்றியலுகரம், குற்றியலிகரம், ஐகாரக் குறுக்கம், ஔகாரக் குறுக்கம், மகரக்குறுக்கம், ஆய்தக் குறுக்கம்)
பற்றியும் படித்தோம்.
இதுவரை நாம் படித்த ஒவ்வொரு எழுத்துக்களுக்குமான மாத்திரை அளவுகளை பற்றி பார்ப்போம்

குறில் - 1

நெடில் - 2

மெய் - 1/2

ஆயுதம் - 1/2

குற்றியலுகரம்/லிகரம் - 1/2

மகர/ஆய்த குறுக்கம் - 1/4

உயிரளபெடை - 3

ஐகார/ஔகார குறுக்கம் - 1

ஒற்றளபடை - 1

இதற்கான #சூத்திரம் கீழே பதிவிட்டுள்ளேன்
எழுத்துக்களின் மாத்திரை கணக்குகளை விளக்கும் #நன்னூல் #சூத்திரம்

மூன்று உயிரளபு;
இரண்டு ஆம் நெடில்;
ஒன்றே குறிலோடு, ஐ, ஒளக் குறுக்கம் ஒற்றளபு;
அரை ஒற்று, இ, உக் குறுக்கம், ஆய்தம்;
கால் குறள் மஃகான், ஆய்தம், மாத்திரை.
#சுட்டெழுத்துக்கள் - அ இ உ

அ - எழுத்து தூரத்தில் (சேய்மை) இருக்கும் ஒரு பொருளைக் குறிப்பது.

இ - கிட்டே (அண்மை) இருக்கும் ஒரு பொருளைக் குறிப்பது.

உ - தூர மற்றும் கிட்டே இரண்டிற்கும் நடுவே இருக்கும் ஒரு பொருளைக் குறிப்பது.

(எ.கா)
அவன் இவன் உவன்
அது இது உது
அவள் இவள் உவள்
சுட்டு எழுத்துக்கள் 2 வகைப்படும்
(i) அகச்சுட்டு
(ii) புறச்சுட்டு

#அகச்சுட்டு என்பது ஒரு சொல்லின் உள்ளே (அகம்) இருந்து பொருள் தருவது.
இதில் சுட்டு எழுத்தை அந்த சொல்லில் இருந்து பிரித்தால் அந்த சொல் பொருள் தராது.
எ.கா :
அவன் = அ + வன்.
இதில் வன் என்ற சொல் பொருள் தராது. அகச்சுட்டு.
#புறச்சுட்டு என்பது ஒரு சொல்லின் வெளியே (புறம்) இருந்து பொருள் தருவது.
இதில் சுட்டு எழுத்தை அந்த சொல்லில் இருந்து பிரித்தாலும் அந்த சொல் பொருள் தரும்.
எ.கா :
அப்பையன் = அ + பையன்.
இதில் பையன் என்ற சொல் தனியாக பொருள் தரும்.
அதனால் இது புறச்சுட்டு.
இப்போது சுட்டு எழுத்துக்களுக்கான சூத்திரங்கள் பார்ப்போம்.

#சூத்திரம் - #தொல்காப்பியம்
அ இ உ அம் மூன்றும் சுட்டு

#சூத்திரம் - #நன்னூல்
அ, இ, உம் முதல் தனிவரின் சுட்டே
#சுட்டுத்_திரிபு - சுட்டு எழுத்துக்களின் பயன்பாடு இப்பொழுது உள்ள தமிழில் மாறி உள்ளது.
இதுதான் சுட்டுத் திரிபு

அப்பையன் - அந்தப் பையன் என்று மாறியுள்ளது

இப்பக்கம் - இந்தப் பக்கம் என்று மாறியுள்ளது

இப்படி ஒரு எழுத்தாக இருந்த சுட்டு_எழுத்து ஒரு சொல்லாக மாறியதுதான் சுட்டுத் திரிபு
#வினா_எழுத்துக்கள் - எ யா ஆ ஓ ஏ

ஒரு கேள்வியை கேட்க பயன்படுத்தும் எழுத்துக்களே வினா எழுத்துக்கள் ஆகும்.
இந்த எழுத்துக்களை
ஒரு சொல்லின் முன்னும்
ஒரு சொல்லின் கடைசியில் போட்டு கேள்வி கேட்கலாம்.
(எ.கா)
ஏன், எதற்கு, அவனா

#வினா_எழுத்துக்கள் இரண்டு வகைப்படும்
(i) அகவினா
(ii) புறவினா
#அகவினா என்பது
வினா எழுத்தை அந்த சொல்லில் இருந்து பிரித்தால், அந்த சொல் பொருள் தராது.
எ.கா:
(ஏன் - ஏ + ன்)
மேலும் சில (எங்கே, யார்)

#புறவினா என்பது
ஒரு சொல்லில் வினா எழுத்தை பிரித்தாலும்,
அந்த சொல் பொருள் தரும்.
எ.கா :
(அவனோ - அவன் + ஓ)
(அப்படித்தானே - அப்படித்தான் + ஏ)
இப்போது #வினா_எழுத்துக்களுக்கான #சூத்திரங்களை பார்ப்போம்.

#சூத்திரம் #தொல்காப்பியம்
"ஆ ஏ ஓ அம் மூன்றும் வினா"

(தொல்காப்பியர் காலத்தில் 3-எழுத்துக்களை தான் வினா எழுத்துக்களாக சொல்லியிருக்கிறார்)

#சூத்திரம் #நன்னூல்
'எ' 'யா' முதலும்
'ஆ' 'ஓ' ஈற்றும்
'ஏ' இரு வழியும்
வினாவாகும்மே.
இப்போது நாம் #இன_எழுத்துக்கள் பற்றி பார்ப்போம்.

இன எழுத்துக்கள் என்பது
ஒரு எழுத்திருக்கு இன்னொரு எழுத்து இனமாக (நண்பனைப் போல்) வருவது இன எழுத்து ஆகும்.
இதில்
(i) உயிரெழுத்து இனங்கள் மற்றும்
(ii) மெய்யெழுத்து இனங்கள் உள்ளன.
#உயிரெழுத்து_இனங்கள் :
அ ஆ - இனம்
இ ஈ - இனம்
உ ஊ - இனம்
எ ஏ - இனம்
ஐ இ - இனம்
ஒ ஓ - இனம்
ஔ உ - இனம்

ஒவ்வொரு உயிரெழுத்து இனத்தை தனித்தனியாக கூட்டினால் மொத்தம் மூன்று மாத்திரை வரவேண்டும்.

உயிரெழுத்துக்கள் இனங்களோடு வருவது அளபெடையில் மட்டும் தான்.

எ.கா :-
தழீஇ
தொழாஅர்
#மெய்யெழுத்து_இனங்கள்

க் ங் - இனம் (பொங்கு சங்கு)

ச் ஞ் - இனம் (மஞ்சள் பஞ்சு)

ட் ண் - இனம் (பண்டைய சண்டை)

த் ந் - இனம் (அந்த சந்து பந்தி)

ப் ம் - இனம் (சோம்பல் பாம்பு)

ற் ன் - இனம் (மன்றம் வென்றான்)

இந்த இனங்களை தெளிவாகப் புரிந்து கொண்டால் "ற் ர் ண் ன்" குழப்பங்களே வராது
#முதனிலை_எழுத்துக்கள்
ஒரு சொல்லில் எந்தெந்த எழுத்துக்கள் முதலில் வரும் என்பதே முதனிலை எழுத்துக்கள்

உயிரெழுத்துக்கள் - 12
அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ

உயிர்மெய் எழுத்துக்கள் - 10
க ங ச ஞ த ந ப ம ய வ
(ஒரு சொல்லின் முதலில் வரலாம்)

இதன்மூலம் ஒரு சொல் தமிழா / பிறமொழியா என்பதை அறியலாம்
#முதனிலை_எழுத்துக்கள் குறித்து #நன்னூல் கூறும் #சூத்திரங்கள் கீழ்வருமாறு

• பன்னீ ருயிருங் "கசதந பமவய
ஞங"வீ ரைந்துயிர் மெய்யு மொழிமுதல்

• உஊ ஒஓ வலவொடு வம்முதல்

• அஆ உஊ ஓஒள யம்முதல்

• சுட்டியா வெகர வினாவழி யவ்வை
யொட்டி ஙவ்வு முதலா கும்மே.
#இறுதிநிலை_எழுத்துக்கள் என்பது
ஒரு சொல்லில் எந்தெந்த எழுத்துக்கள் இறுதியில் வரும் என்பதே இறுதிநிலை எழுத்துக்கள்

உயிரெழுத்துக்கள் - 11 (எ-தவிர)
அ ஆ இ ஈ உ ஊ ஏ ஐ ஒ ஓ ஔ

மெய் எழுத்துக்கள் - 11
ஞ் ண் ந் ம் ன் ய் ர் ல் வ் ழ் ள்

இவைகள் மட்டுமே தமிழ் சொற்களின் கடைசி எழுத்துக்களாக வரும்
#இறுதிநிலை_எழுத்துகள் குறித்து #நன்னூல் கூறும் #சூத்திரம்

ஆவி ஞணநமன யரலவ ழளமெய்
சாயு முகரநா லாறு மீறே

12 உயிர் - ஆவி (எ-அளபெடை)
11 மெய் - ஞணநமன யரலவ ழள
1 - குற்றியலுகரம்
––––––––––––––
மொத்தம் = 24 - (நா லாறு)
––––––––––––––

இவை மட்டுமே சொல்லின் கடைசியில் வரும் எழுத்துக்கள்.
#இறுதிநிலை_எழுத்துக்கள்
எ.கா :
சில, பலா, கிளி, தீ, கடு, பூ, சே, கை, நொ, போ, நௌ, அருஞ், மண், செந், மரம், பொன், காய், வேர், வேல், தெவ், யாழ், வாள் - இவையாவும் தமிழ்

கேரட், பீட்ரூட், ஆரிப், அஜித், கார்த்திக், ஸ்பிரிங், சர்ச்,.. இவ்வாறு இறுதிநிலை கொண்ட எழுத்துக்கள் - தமிழ் இல்லை
மேல் பதிவிட்ட
12 - உயிர் எழுத்துக்கள்
10 - உயிர்மெய் எழுத்துக்கள்
மட்டுமே முதல்நிலை உடைய தமிழ் சொற்கள்

இதன் காரணமாகவே நம்மில் பலரும் நம் பெயர்களை இலக்கணப்படி வழங்கி வருகிறோம்

ரவிக்குமார் - இரவிக்குமார்
ராமன் - இராமன்
ரகு - இரகு
லகு - இலகு
லக்குமணன் - இலக்குமணன்
யேசு - இயேசு
#ஓரெழுத்து_ஒரு_மொழி என்பது என்ன & என்னென்ன என்பதனை இப்போது பார்ப்போம்...

ஒரு எழுத்தானது ஒரு சொல்லாக பயன்படுவது
ஓரெழுத்து_ஒரு_மொழி
ஆகும்.
அவை நன்னூலின் படி மொத்தம் 42.
ஆனால் நாம் இன்று அதற்கு மேலும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
#ஓரெழுத்து_ஒருமொழி
#சூத்திரம் - #நன்னூல்

உயிர்மவி லாறுந் தபநவி லைந்துங்
கவசவி னாலும் யவ்வி லொன்றும்
ஆகு நெடினொது வாங்குறி லிரண்டோ
டோரெழுத் தியல்பத மாறேழ் சிறப்பின

உயிர் - 6
மகரம் - 6
தபந - 3×5 = 15
கவச - 3×4 = 12
யகரம் - 1
–––––––
இவை 40 நெடில்

நொ / து
–––––––
2 குறில்
#சொல்_இலக்கணம் என்பது ஒரு சொல்லுக்கு உரிய இலக்கணம் ஆகும்.

எப்படி எழுத்திற்கு 12 உறுப்புகள் இருந்ததோ


அதுபோல சொல்லுக்கும் சில உறுப்புகள் உண்டு.
அவை :
தனிமொழி,
தொடர்மொழி,
பொதுமொழி,
இரு திணைகளை,
ஐந்து பாலை,
மூன்று இடங்களை
வெளிப்படையாகவோ குறிப்பாகவோ காட்டும்
#சொல்_இலக்கணத்தின்
ஒருமொழி தொடர்மொழி பொதுமொழி சூத்திர விளக்கம் - #நன்னூல்
ஒருமொழி ஒருபொருள நவாம் தொடர்மொழி
பலபொரு ளனபொது இருமையும் ஏற்பன

ஒருமொழி - ஒரு பொருளை கொடுக்கும் சொல்

தொடர்மொழி - ஒன்றுக்கும் மேற்பட்ட பொருளை குறிக்கும்

பொதுமொழி - ஒருமொழி & தொடர்மொழி இரண்டையும் ஏற்கும்
உயிர் எழுத்துக்களில் - 6 நெடில் எழுத்துகளை #ஓரெழுத்து_ஒருமொழியாக பயன்படுத்தி இருக்கிறார்கள்.

அவை:

1. ஆ - பசு
2. ஈ - பறக்கும் ஈ / கொடு
3. ஊ - இறைச்சி
4. ஏ - அம்பு / கணை
5. ஐ - அழகு / தலைவன்
6. ஓ - வியப்பு / மதகு
"ம" (மகரம்) வர்க்கத்தில் - 6 நெடில் எழுத்துக்களை #ஓரெழுத்து_ஒருமொழியாக பயன்படுத்தி இருக்கிறார்கள்.

அவை:

1. மா - பெரிய
2. மீ - மேல்
3. மூ - மூப்பு
4. மே - மேன்மை
5. மை - இருள் / கருமை
6. மோ - மோதுதல்
"த" (தகர) வர்க்கத்தில் - 5 எழுத்துக்களை #ஓரெழுத்து_ஒருமொழியாக பயன்படுத்தி இருக்கிறார்கள்.

அவை:

1. தா - கொடு
2. தீ - நெருப்பு
3. தூ - தூய்மை
4. தே - தெய்வம்
5. தை - மாதம்
"ப" (பகர) வர்க்கத்தில் - 5 எழுத்துக்களை #ஓரெழுத்து_ஒருமொழியாக பயன்படுத்தி இருக்கிறார்கள்.

அவை:

1. பா - பாட்டு
2. பூ - மலர்
3. பே - நுரை
4. பை - பசுமை / கைப்பை
5. போ - செல்
"ந" (நகர) வர்க்கத்தில் - 5 எழுத்துக்களை #ஓரெழுத்து_ஒருமொழியாக பயன்படுத்தி இருக்கிறார்கள்.

அவை:

1. நா - நாக்கு
2. நீ - முன்னால் இருப்பவர்
3. நே - அருள் / நேயம்
4. நை - இகழ்ச்சியை குறிப்பது
5. நோ - வலி / நோவு
"க" வர்க்கத்தில் - 4 எழுத்துக்களை #ஓரெழுத்து_ஒருமொழியாக பயன்படுத்தி இருக்கிறார்கள்.

அவை:

1. கா - பாதுகாப்பு / தோட்டம்
2. கூ - கூர்மை / கூவுதல்
3. கை - உறுப்பு / ஒப்பணை
4. கோ - அரசன்
"வ" (வகர) வர்க்கத்தில் - 4 எழுத்துக்களை #ஓரெழுத்து_ஒருமொழியாக பயன்படுத்தி இருக்கிறார்கள்.

அவை:

1. வீ - மலர் / மணம் வீசும்
2. வை - வைக்கோல் / வைக்கவும்
3. வௌ - கைப்பற்றுதல் / வவ்வுதல்
4. வா - அழைத்தல்
"ச" (சகர) வர்க்கத்தில் - 4 எழுத்துக்களை #ஓரெழுத்து_ஒருமொழியாக பயன்படுத்தி இருக்கிறார்கள்.

அவை:

1. சா - சாதல்
2. சீ - இலக்குமி
3. சே - எருது
4. சோ - மதில்
"ய" (யகர) வர்க்கத்தில் - "யா" என்ற ஒரு எழுத்தை மட்டும் #ஓரெழுத்து_ஒருமொழியாக பயன்படுத்தி இருக்கிறார்கள்.

1. யா - கட்டுதல்

எ.கா :
"யாப்பு" - சொற்களை கட்டி ஒரு பாடலை உருவாக்குவது.

பல கட்டைகளை "யாத்து" ஒரு கட்டுமரம் செய்வது.
#நன்னூல் இலக்கணத்தில் இரண்டே இரண்டு "குறில்" எழுத்துக்கள் மட்டும் #ஓரெழுத்து_ஒருமொழியாக பயன்படுத்தி இருக்கிறார்கள்.

அவை : நொ / து

நொ - துன்பம் / நொந்து போதல்
து - சாப்பாடு / உணவு
நண்பர்களே இதுவரை,
நன்னூலில் குறிப்பிடப்பட்ட
42 - #ஓரெழுத்து_ஒரு_மொழி
எழுத்துக்களை மட்டுமே பார்த்தோம்...

ஆனால் நாம் அதற்க்கு மேலும் பல ஒரெழுத்துகளை ஒரு சொல்லாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

அவ்வாறான #ஓரெழுத்து_ஒரு_மொழி எழுத்துக்களை கீழே பதிவிட்டிருக்கிறேன்...
அ - சுட்டெழுத்து, எட்டு, சிவன், விஷ்ணு, பிரம்மா

ஆ - பசு(ஆவு), ஆன்மா, இரக்கம், நினைவு, ஆச்சாமரம்

இ - சுட்டெழுத்து, இரண்டில் ஒரு பங்கு அரை என்பதின் தமிழ் வடிவம்.

ஈ - பறக்கும் ஈ, தா, குகை, தேனீ, கொடு.

உ - சிவன், ஆச்சரியம், சுட்டெழுத்து, இரண்டு என்பதின் தமிழ் வடிவம்
ஊ - இறைச்சி, உணவு, ஊன், தசை

எ - வினா எழுத்து, ஏழு என்பதின் தமிழ் வடிவம்

ஏ - அம்பு, உயர்ச்சிமிகுதி

ஐ - அழகு, உயர்வு, உரிமை, தலைவன், இறைவன், தந்தை, ஐந்து, வியப்பு

ஓ - மதகு, (நீர் தாங்கும் பலகை), வினா.

ஔ - பூமி, ஆனந்தம்

க - வியங்கோள் விகுதி

கா - காத்தல், சோலை
கி - இரைச்சல் ஒலி

கு - குவளயம்

கூ - பூமி, கூவுதல், உலகம்

கை - உறுப்பு, கரம்

கோ - அரசன், தந்தை, இறைவன்

கௌ - கொள்ளு, தீங்கு

சா - இறத்தல், சாக்காடு, மரணம், பேய், சாதல்

சீ - லட்சுமி, இகழ்ச்சி, வெறுப்புச் சொல், திருமகள்

சு - விரட்டுதல், சுகம், மங்கலம்
சே - காலை, எருது, அழிஞ்சில் மரம்

சை - அறுவறுப்பு ஒலி, கைப்பொருள்

சோ - மதில், அரண்

ஞா - பொருத்து, கட்டு

தா - கொடு, கேட்பது

தீ - நெருப்பு , தீமை

து - உண் கெடு, பிரிவு, உணவு, பறவை இறகு

தூ - வெண்மை, தூய்மை

தே - கடவுள், நாயகன், தெய்வம்

தை - தமிழ்மாதம், தைத்தல், பொருத்து
நா - நான், நாக்கு

நி - இன்பம், அதிகம், விருப்பம்

நீ - முன்னிலை ஒருமை, நீக்குதல்

நூ - யானை, ஆபரணம், அணி

நே - அன்பு, அருள், நேயம்

நை - வருந்து, நைதல்

நோ - துன்பப்படுதல், நோவு, வருத்தம்

நௌ - மரக்கலம்

ப - நூறு

பா - பாட்டு, கவிதை, நிழல், அழகு

பூ - மலர்
பே - மேகம், நுரை, அழகு, அச்சம்

பை - கைப்பை, பாம்புப் படம், பசுமை, உறை

போ - செல், ஏவல்

ம - சந்திரன், எமன்

மா - பெரிய, சிறந்த, உயர்ந்த, மாமரம்

மீ - மேலே , உயர்ச்சி, உச்சி, ஆகாயம், உயரம்

மூ - மூப்பு, முதுமை, மூன்று

மே - மேல், மேன்மை

மை - கண்மை (கருமை), அஞ்சனம், இருள்
மோ - மோதல், முகர்தல்

ய - தமிழ் எழுத்து என்பதின் வடிவம்

யா - கட்டுதல்

வ - நாலில் ஒரு பங்கு "கால்" என்பதன் தமிழ் வடிவம்

வா - வருக, ஏவல், அழைத்தல்

வி - அறிவு, நிச்சயம், ஆகாயம்

வீ - மலர், அழிவு, பறவை

வே - வேம்பு, உளவு

வை - வைக்கவும், கூர்மை, வைக்கோல்
வௌ - வவ்வுதல், கௌவுதல், கொள்ளை அடித்தல்

நொ - நொண்டி, துன்பம்

ள - தமிழெழுத்து நூறு என்பதன் வடிவம்

ளு - நான்கில் மூன்று பகுதி, முக்கால் என்பதன் வடிவம்

று - எட்டில் ஒரு பகுதி அரைக்கால் என்பதன் வடிவம்
#சொல்_இலக்கணம்

#தனிமொழி என்பது ஓர் எழுத்து அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துக்களைக் கொண்ட சொல் ஆகும்.

எ.கா :
பூ, மலர், மாடு, காளை
வந்தான், பறித்தான்
#சொல்_இலக்கணம்

#தொடர்மொழி என்றாலும் #சொல்தொடர் என்றாலும் #சொற்றொடர் என்றாலும் ஒன்று தான்.

ஒன்றிற்கு மேற்பட்ட சொற்கள் ஒன்றாக சேர்த்து வந்தால் அந்த தொடர்,
தொடர்மொழி ஆகும்.

எ.கா :
பூப் பறித்தான்,
மலர் கொய்தாள்,
அவன் வந்தான்.
#சொல்_இலக்கணம்

#பொதுமொழி என்பது ஒரு சொல்லை அப்படியே பார்த்தால் ஒரு அர்த்தமும், அதை பிரித்துப் பார்த்தால் வேறு அர்த்தமும் கொடுக்கும்.

எ.கா :
"இராமன் தாமரையை கண்டான்"

இங்கு தாமரை என்பது ஒரு பூவை குறிக்கிறது.

அதே நேரம் தா + மரை என்பது தாவுகின்ற மானைக் குறிக்கிறது.
#சொல்_இலக்கணம்

#திணை 2 வகைப்படும்.
அவை
1. உயர்திணை
2. அஃறிணை

#உயர்திணை என்பது
(உயிர் உள்ளவை மட்டுமே)
ஆறறிவுள்ள மனிதனையோ, தேவனையோ, அரக்கனையோ குறிக்கும் சொல்.

எ.கா :
அவன், இவன், அவள், இவள், அவர், அவர்கள்.

அவன் வந்தான்- என்று செல்லும் பொழுது அது உயர்திணையை குறிக்கிறது.
#சொல்_இலக்கணம்

#அஃறிணை என்பது
(ஆறறிவு இல்லாத)
மிருகங்கள், பறவைகள், பூச்சிகள், ஊர்வன வகைகள் மற்றும் உயிர் இல்லாத பொருட்கள் போன்றவற்றை குறிக்கும் சொல்.

எ.கா :
அது, இது, அவை, இவை, அவைகள், இவைகள்.

அவை வந்தன,
பேருந்து வந்தது,
பசுக்கள் வந்தன - போன்றவை அஃறிணையை குறிக்கிறது.
#சொல்_இலக்கணம்

#பொதுமொழி
எ.கா :
"காட்டிலும் குளத்திலும் தாமரை இருக்கிறது."

இங்கு தாமரை என்பது ஒரு பூவை குறிக்கிறது.
அதே நேரம் தா + மரை என்பது தாவுகின்ற மானைக் குறிக்கிறது.

காட்டில் தாவுகின்ற மானும், குளத்தில் தாமரைப் பூவும் இருக்கிறது என்பதே இந்த சொற்றொடரின் விளக்கம்.
#சொல்_இலக்கணம்

#பொதுமொழிக்கு மற்றுமொரு உதாரணம் பார்ப்போம்

அரிவையம்பாகத்தான்

அரி+வை+அம்பாகத்தான்-
அரியாகிய திருமாலை அம்பாக வைத்திருத்தான்

அரிவை+அம்+பாகத்தான்-
அரிவை - பெண்ணை,
அம் - இடப்பக்கம்,
பாகத்தான் - பாகமாக வைத்திருந்தான்

பார்வதியை தன் இடதுபக்கத்தில் கொண்டவனாகிய சிவன்
#சொல்_இலக்கணம்

#திணை பற்றி எளிதாக விளக்கும் #நன்னூல் #சூத்திரம்

"மக்கள் தேவர் நரகர் உயர்திணை
மற்றுயிர் உள்ளவும் இல்லவும் அஃறிணை"
#சொல்_இலக்கணம்

இப்போது #பால் வகைகள் பற்றி பார்ப்போம்.
பால் ஐந்து வகைப்படும்.
அவை
1. #ஆண்பால்
2. #பெண்பால்
3. #பலர்பால்
4. #ஒன்றன்பால்
5. #பலவின்பால்

இதில் ஆண்பால், பெண்பால், பலர்பால் மூன்றும் உயர்திணையை சேர்ந்தது.

ஒன்றன்பால் மற்றும் பலவின்பால் அஃறிணையை சேர்ந்தது.
பால் / திணை
சூத்திர விளக்கம் - #நன்னூல்

"ஆண் பெண் பலர் என முப்பாற்று உயர்திணை"

"ஒன்றே பல என்று இருபாற்று அஃறிணை"
#சொல்_இலக்கணம்

#பால் - #எடுத்துக்காட்டுகள்

1. ஆண்பால் - அவன், இவன்.

2. பெண்பால் - அவள், இவள்.

3. பலர்பால் - அவர்கள், இவர்கள்.

4. ஒன்றன்பால் - அது, இது.

5. பலவின்பால் - அவை, அவைகள், இவைகள்.
#சொல்_இலக்கணம்

இப்போது இடத்திற்க்கான #சூத்திரம் பார்ப்போம் - #நன்னூல்

"தன்மை முன்னிலை படர்க்கை மூவிடனே"

3 இடங்கள் இருக்கு.. அவை
1. தன்மை
2. முன்னிலை
3. படர்க்கை
எந்த #இடங்கள்
எதை காட்டும்?
எதை காட்டாது?

#சூத்திரம் - #நன்னூல்
படர்க்கைவினைமுற்று நாமங்குறிப்பிற்
பெறப்படுந் திணைபா லனைத்து மேனை
இடத்தவற் றொருமைப் பன்மைப் பாலே.

அதாவது :

ஒருமையும் பன்மையும்
இடத்தை மட்டும் காட்டும்

படர்க்கை - வினைமுற்று
இடம், திணை, பால் அனைத்தையும் காட்டும்
#இடம் மூன்று வகைப்படும்.
அவை :
1. தன்மை
2. முன்னிலை
3. படர்க்கை.

தன்மை என்பது என்னை பற்றி நான் கூறுவது. (நான், எனது)

முன்னிலை என்பது எனக்கு முன்னால் இருப்பவரைப் பற்றி கூறுவது. (நீ, நீங்கள்)

படர்க்கை என்பது சிறிது தூரம் தள்ளி இருக்கும் ஒன்றைப் பற்றிக் கூறுவது. (அவன், அவள், அது)
#சொல்_இலக்கணம்

அடுத்ததாக நாம் #வழக்கு என்ற சொல் உருபை பார்ப்போம்.
வழக்கு என்ற சொல்லிற்கு பேசப்படுகின்ற சொல் என்று பொருள்.
நாம் இயல்பாக பேசும் சொற்களையே வழக்கு என்று கூறுவோம்.
இந்த வழக்கு இரண்டு வகைப்படும்.

அவை :
1. இயல்பு வழக்கு
2. தகுதி வழக்கு
#சொல்_இலக்கணம்

#இயல்பு_வழக்கு என்பது நாம் இயல்பாக கூறும் சொற்கள் ஆகும். இந்த இயல்பு வழக்கு மூன்று வகைப்படும்.
அவை
1. இலக்கணம் உடையது
2. இலக்கணப்போலி
3. மரூஉ அல்லது மரூஉ மொழி
#சொல்_இலக்கணம்
#வழக்கு

"இலக்கணம் உடையது" என்றால் ஒரு சொல் வழிவழியாக எந்த மாற்றமும் இல்லாமல் நம் பேச்சில் வருவது.
எ.கா :
தீ, நிலம், மழை போன்றவை.
#சொல்_இலக்கணம்
#வழக்கு

"இலக்கணப்போலி" என்பது ஒரு சொல் சிறிது மாறி அதே பொருளைத்தரும் மற்றொரு சொல்லாக மாறுவது.
எ.கா :
கால்வாய் என்பது வாய்க்கால் என மாறியது,
தசை என்பது சதை என மாறியது,
நகர்ப்புறம் என்பது புறநகர் என மாறியது.
#சொல்_இலக்கணம்
#வழக்கு

மரூஉ என்பது ஒரு சொல்லில் உள்ள சில எழுத்துக்கள் சிதைந்து அல்லது மறைந்து விடும் ஆனால் பொருள் மாறாது.
எ.கா :
தஞ்சாவூர் என்பது தஞ்சை எனவும்,
வாயில் என்பது வாசல் எனவும்,
எம் தந்தை என்பது எந்தை எனவும்,
நாகைப்பட்டினம் என்பது நாகை எனவும் மாறியது மரூஉ
#சொல்_இலக்கணம்
#வழக்கு
#தகுதி_வழக்கு என்பது நாம் இயல்பாக கூறும்போது சொல்லிற்கு வேறு ஒரு சொல்லை பயன்படுத்துவது.
இந்த தகுதி வழக்கு மூன்று வகைப்படும்.
அவை
1. இடக்கரடக்கல்
2. மங்கலம்
3. குழூஉக்குறி
#இடக்கரடக்கல் என்பது பல பெரியவர்கள் முன்னிலையில் ஒரு சொல்லையோ அல்லது ஒரு சொற்றொடரையோ நம்மால் கூற முடியாமல் (சொல்லத்தகாத சொல்லாக இருப்பதால்) அதற்கு வேறு சொல்லையோ அல்லது வேறு சொல் தொடரையோ பயன்படுத்துவது.
எ.கா :
இறந்தார் - இறைவனடி சேர்ந்தார்,
மலம் கழித்தேன் - கொள்ளைக்கு போய் வந்தேன்
#மங்கலம் என்பது அமங்கலமான ஒரு சொல்லிற்கு மங்கலமான ஒரு சொல்லை கூறுவது.
எ.கா :
கெட்ட பாம்பு என்பதை நல்ல பாம்பு என்று கூறுவது,
கருப்பு ஆடு என்பதை வெள்ளாடு என்று கூறுவது,
விளக்கை அணை என்பதை விளக்கை குளிர வை அல்லது விளக்கை சமாதானம் செய் எனக் கூறுவது.
#குழூஉக்குறி என்பது ஒரு குழுவிற்கு மட்டும் புரியக்கூடிய ஒரு சொல்.

எ.கா :

பறி என்ற சொல் பொற்கொல்லர்களுக்கு தங்கத்தைக் குறிக்கும்.

அதேபோல் சொல் விளம்பி என்கிற சொல் வேடர்களுக்கு கள்ளைக் குறிக்கும்.

வேலைக்காரன்கம்பு, பொலி, நடையன், வாரியன் போன்றவை விவசாய குழூஉக்குறிச் சொற்கள்
#வழக்கு சூத்திர விளக்கம் - #நன்னூல்

இலக்கண முடைய திலக்கணப் போலி
மரூஉவென் றாகு மூவகை யியல்பும்
இடக்க ரடக்கன் மங்கலங் குழூஉக்குறி
எனுமுத் தகுதியோ டாறாம் வழக்கியல்

இயல்பு வழக்கு - 3
இலக்கணம் உடையது
இலக்கணப்போலி
மரூஉ (அ ) மரூஉ மொழி

தகுதி வழக்கு - 3
இடக்கரடக்கல்
மங்கலம்
குழூஉக்குறி
#சொல்_இலக்கண உருபுகள்

தனிமொழி,
தொடர்மொழி,
பொதுமொழி,
இரு திணைகள்,
ஐந்து பால்,
மூன்று இடங்கள்,
வழக்கு,
வெளிப்படை சொல்,
குறிப்பு சொல்.
இப்போது #சொல்_இலக்கண உருபுகளில் இறுதி இரு உருபுகள் பற்றி பார்ப்போம்
அவை :
• வெளிப்படை சொல்
• குறிப்பு சொல்

#வெளிப்படை_சொல் என்பது நாம் ஒரு பொருளைப் பற்றி இயல்பாக கூறப்படும் சொல் ஆகும்.

எ.கா :
கண், தலை, வந்தான், போனான்.
#குறிப்புச்சொல் என்பது ஒரு சொல்லுக்கான பொருளை வெளிப்படையாக நம்மால் காண முடியாது. அதை குறிப்பால் உணர முடியும்.

எ.கா :
"தலைக்கு நூறு ரூபாய் கொடு"
என்ற இந்த தொடரில் தலை என்பது தலையை கொண்டுள்ள மனிதனைக் குறிக்கும்.
அதேபோல் "சிங்கம் கர்ஜித்தது" என சொல்லும் பொழுது அது ஆண் சிங்கத்தை குறிக்கும்.

பறவை முட்டையிட்டது என்று கூறும் பொழுது அது பெண் பறவையைக் குறிக்கும்.

இவர்களுக்கு மஞ்சள் குங்குமம் கொடு என்று கூறும்பொழுது அது பெண்களை குறிக்கும்.

இப்படி குறிப்பால் உணர்த்தும் சொற்களே #குறிப்புச்சொல்
வெளிப்படை மற்றும் குறிப்பு சொற்கள் #சூத்திரம் விளக்கம் - #நன்னூல்

ஒன்றொழி பொதுச்சொல் விகாரந் தகுதி
ஆகு பெயரன் மொழிவினைக் குறிப்பே
முதறொகை குறிப்போ டின்ன பிறவும்
குறிப்பிற் றருமொழி யல்லன வெளிப்படை

இதில் 6 வகை குறிப்பு சொற்கள் மற்றும் வெளிப்படை சொற்கள் பற்றி சொல்லப்பட்டுள்ளது.
சொற்களில் வகை இரண்டு
1. இலக்கண வகை
2. இலக்கிய வகை

இலக்கண சொற்கள் - 4 வகை
1. பெயர்ச்சொல்
2. வினைச்சொல்
3. இடைச்சொல்
4. உரிச்சொல்

இலக்கிய சொற்கள் - 4 வகை
1. இயற்சொல்
2. திரிசொல்
3. திசைச்சொல்
4. வடசொல்
(இதில் திசைச்சொல் மற்றும் வடசொல் இரண்டும் தமிழ் மொழி இல்லாத சொற்கள்)
(ஆகையால் திசைச்சொல் /வடசொல் தவிர்த்து)

இலக்கண சொற்களும்
இலக்கிய சொற்களும் சேர்ந்தேதான்
ஒரு சொல்லை உருவாக்கும்.
இவை எட்டாக பிரிகின்றன

அவை :
1. பெயர் இயற்சொல்
2. பெயர் திரிசொல்
3. வினை இயற்சொல்
4. வினைத் திரிசொல்
5. இடை இயற்சொல்
6. இடைத் திரிசொல்
7. உரி இயற்சொல்
8. உரி திரிசொல்.
முதலில் இலக்கண வகை சொற்களை பார்ப்போம்.
முதலாவதாக பெயர்ச்சொல்லை பார்ப்போம்.
#பெயர்ச்சொல் ஆறு வகைப்படும்.

அவை :
1. பொருட்பெயர்
2. இடப்பெயர்
3. காலப் பெயர்
4. சினைப்பெயர்
5. பண்புப்பெயர்
6. தொழிற்பெயர்

இனி ஒவ்வொன்றாக பார்ப்போம்...
1. #பொருட்பெயர் - ஒரு பொருளை குறிக்கக்கூடிய பெயரை பொருட்பெயர் என்போம்.
எ.கா :
மரம், கல், மண், மனிதன், ஆடு, புத்தகம் போன்றவை

2. #இடப்பெயர் - ஒரு இடத்தைப் பற்றி கூறும் பெயர் இடப்பெயர் ஆகும்.
எ.கா :
நாடு, மாநிலம், மாகாணம், சென்னை, மதுரை, திருச்சி போன்றவை
3. #காலப்பெயர் - ஒரு காலத்தை குறிக்கும் பெயர் காலப்பெயர் எனப்படும்.
எ.கா :
நாள், மாதம், வாரம், வருடம், கிழமை, மணி, வினாடி, நிமிடம், திங்கள் போன்றவை

4. #சினைப்பெயர் - ஒரு உறுப்பை பற்றி கூறும் பெயர் சினைப்பெயர் ஆகும்.
எ.கா :
கண், காது, மூக்கு, வால், இலை, கிளை போன்றவை
5. #பண்புப்பெயர் - ஒரு பண்பையோ அல்லது ஒரு குணத்தையோ கூறும் பெயர் பண்பு பெயராகும்
எ.கா :
கண்ணன், கரியன், குட்டன், குள்ளன், பொன்னி, நல்லவன் போன்றவை

6. #தொழிற்பெயர் - ஒரு தொழிலையோ அல்லது ஒரு வேலையை குறிக்கும் சொல் தொழிற்பெயர் எனப்படும்
எ.கா :
உழவன், மடையன், மீனவன், கொல்லன் போன்றவை
அடுத்ததாக வினைச்சொல் பற்றி பார்ப்போம்...

#வினைச்சொல் என்பது ஒரு செயலையோ ஒரு தொழிலையோ ஒரு வேளையோ குறிக்கும் சொல். உதாரணமாக நடந்தான் என்கிற சொல்லில் ஒரு தொழில்
(நடந்து வருதல்) இருப்பதால் அது வினைச்சொல் எனப்படும். இந்த வினைச்சொல் பால், காலம், திணை, இடம் போன்ற அனைத்தையும் காட்டும்.
எடுத்துக்காட்டாக "நடந்தான்' என்ற வார்த்தையில்
ஆண்பால்,
உயர்திணை,
இறந்த காலம்,
படர்க்கை
போன்ற அனைத்தையும் காட்டுகிறது.

வினைச்சொற்கள் இரண்டு வகைப்படும்
அவை :
1. வினைமுற்று (முற்றுவினை)
2. எச்சவினை
ஒரு வினைச்சொல் முற்று பெற்று விட்டால் அது #வினைமுற்று.
எ.கா : நடந்தான்.
இந்த சொல்லிற்கு தனித்து நிற்கக் கூடிய தகுதி உண்டு.

#எச்சவினை என்பது முற்று பெறாத வினைச்சொல்லை குறிப்பது.
எ.கா : நடந்த
இதில் நடந்த என்று சொல்லிற்க்கு பிறகு ஒரு பெயர்ச்சொல் கண்டிப்பாக வரவேண்டும்.
நடந்த_மாணவன்,
நடந்த_மாடு,
இப்படி வினைச் சொல்லுக்கு பின்னால் ஒரு பெயர்ச்சொல் வந்ததால் இதை #பெயரெச்சம் என்று கூறுவோம்

அதேபோல் நடந்து என்ற வார்த்தைக்குப் பின்னால் ஒரு வினைச் சொல்லே வர முடியும்
எ.கா :
வந்து_போனான்
இப்படி ஒரு வினைச்சொல் பின்னால் வினைச்சொல்லே வருவது #வினையெச்சம்
வினைமுற்று இரண்டு வகைப்படும். அவை
1. #தெரிநிலை_வினைமுற்று
2. #குறிப்பு_வினைமுற்று

#தெரிநிலை_வினைமுற்று
6 விடயங்களை வெளிப்படையாக காட்டும். அவை :
1. செய்பவன்
2. கருவி
3. நிலம்
4. செயல்
5. காலம்
6. செய்பொருள்

கீழே சில உதாரணங்களை பார்ப்போம்...
#தெரிநிலை_வினைமுற்று

உதாரணம்: "செதுக்கினான்"

1. செதுக்கியவன் (செய்பவன்) சிற்பி

2. செதுக்க உதவியது (கருவி) உளி

3. செதுக்கிய இடம் (நிலம்) கோவில் அல்லது சிற்பக்கூடம்

4. செதுக்குதல் (செயல்) செதுக்கியது

5. செதுக்கப்பட்டது (செய்பொருள்) சிலை

6. செதுக்கிய காலம் (காலம்) இறந்தகாலம்
#குறிப்பு_வினைமுற்று என்பது இந்த ஆறு உருபுகளையும் வெளிப்படையாக காட்டாது.
ஏதேனும் சிலவற்றை மறைமுகமாக காட்டும்.

எ.கா :
அவன் பொன்னன் - பொருட்பெயர்
(பொன் = பொருள், பொன்னை உடையவன்)

அவன் மதுரைக்காரன் -இடப்பெயர்
(மதுரை = இடம், மதுரை என்னும் ஊரைச் சேர்ந்தவன்)
#வியங்கோள்_வினைமுற்று
என்பது
"வாழ்த்துதல்"
"வைதல்"
"வேண்டல்"
ஆகிய மூன்றிருக்கும் பயன்படுத்தும் சொற்களை வியங்கோள் வினைமுற்று என்று கூறுவோம்.

எ.கா :
வாழ்க, வாழிய, வாழியர்,
ஒழிக, ஒழிய, ஒழியர்

இது "க, இய, இயர்" என்றே முடியும்
அடுத்ததாக #இடைச்சொற்கள் பற்றி பார்ப்போம்...

#இடைச்சொற்கள் என்பது சொற்களுக்கு இடையில் வரும்.

ஒரு பெயர்ச் சொல்லுக்கும்
ஒரு வினைச் சொல்லுக்கும்
நடுவில் வரும் எழுத்துக்களும் சொற்களும் இடைச்சொற்கள் எனப்படும்.

எ.கா :
"வீட்டைக் கட்டினான்".
(இதில் நடுவில் வரும் "ஐ" இடைச்சொல் ஆகும்)
#இடைச்சொற்கள்

சில எடுத்துக்காட்டுகள் :

"வீட்டைக் கட்டினான்"
இதில் வீடு என்பது பெயர்ச்சொல்
கட்டினான் என்பது வினைச்சொல்
நடுவில் வரும் "ஐ" இடைச்சொல்.

அதேபோல்
"தாமரை போன்ற முகம்" என்ற தொடரில் "போன்ற" என்பது இடைச்சொல்.

கேண்மியா என்ற சொல்லில் "மியா" என்ற அசைச்சொல் ஒரு இடைச்சொல்.
#இடைச்சொற்கள்

"அவனா செய்தான்"
அவன் + ஆ என்று பிரித்தால் வரும்
ஆ என்பது ஒரு இடைச்சொல்.

"மழை பெய்ததோ"
பெய்தது + ஓ என்று பிரித்து வரும்
ஓ என்பது ஓர் இடைச்சொல்.

இப்படிப் பார்க்கும் பொழுது
வேற்றுமை உருபு
உவம உருபு
வினா எழுத்து
சுட்டு எழுத்து
அசைச்சொல்
ஆகியவை #இடைச்சொற்கள் ஆக வரும்
இவற்றை தொடர்ந்து
"வேற்றுமை" பற்றி பார்ப்போம்...

#வேற்றுமை என்பது
ஒரு இடைச்சொல் / இடை எழுத்து ஆகும்.

வேற்றுமை உருபுகள் மொத்தம் எட்டு.

அவை :

1. பெயர்ச்சொல்
2.
3. ஆல்
4. கு
5. இன்
6. அது
7. கண்
8. விளிச்சொல்

இனி எளிய முறையில் ஒவ்வொன்றாக பார்ப்போம்.
#வேற்றுமை

#முதலாம்_வேற்றுமை_உருபு - #பெயர்ச்சொல்

#எட்டாம்_வேற்றுமை_உருபு - #விளிச்சொல்
விளி என்றால் ஒருவரை அழைப்பது என்று பொருள்.
எ.கா :
ஏய், ஏலேய், ஏ, கடவுளே, கண்ணா
போன்றவை விளிச்சொற்கள் ஆகும்.

மீதமுள்ள மற்ற (2,3,4,5,6,7) வேற்றுமை உருபுகளை தொடர்ச்சியாக பார்ப்போம்...
#இரண்டாம்_வேற்றுமை_உருபு என்பது #ஐ ஆகும்.
எ.கா :
"வீட்டைக் கட்டினான்".
இதில் வீட்டை என்பது
வீடு + ஐ.
இதுவே இரண்டாம் வேற்றுமை.

#மூன்றாம்_வேற்றுமை_உருபு என்பது #ஆல் ஆகும்.
கையால் கட்டினான்,
வாளால் வெட்டினான்.
இதில் கையால் என்பது
கை + ஆல்.
அதேபோல் வாளால் என்பது
வாள் + ஆல்.
#நான்காம்_வேற்றுமை_உருபு என்பது #கு ஆகும்.
எ.கா :
அவருக்கு பட்டம் கிடைத்தது,
இவருக்கு பிறந்தநாள்.
இதில் அவருக்கு என்பது
அவர் + கு.
அதே போல் இவருக்கு என்பது
இவர் + கு.
இதுவே நான்காம் வேற்றுமை.
#ஐந்தாம்_வேற்றுமை_உருபு என்பது #இன் ஆகும்.
எ.கா :
இராமனின் கண்ணாடி,
கந்தனின் ஆடை.
இதில் இராமனின் என்பது
இராமன் + இன்.
அதேபோல் கந்தனின் என்பது
கந்தன் + இன்.
இதுவே ஐந்தாம் வேற்றுமை ஆகும்.
#ஆறாம்_வேற்றுமை_உருபு என்பது #அது ஆகும்.
எ.கா :
முகிலனது கடிகாரம்,
ஊக்கமது கைவிடேல்.
இதில் முகிலனது என்பது
முகிலன் + அது.
அதேபோல் ஊக்கமது என்பது
ஊக்கம் + அது.
இதுவே ஆறாம் வேற்றுமை ஆகும்.
#ஏழாம்_வேற்றுமை_உருபு என்பது #கண் ஆகும்.
எ.கா :
இராமன்கண் மொழிவேன்,
முகிலன்கண் பாடுவேன்.
இதில் இராமன்கண் என்பது
இராமன் + கண்.
அதேபோல் முகிலன்கண் என்பது
முகிலன் + கண்.
இதுவே ஏழாம் வேற்றுமை ஆகும்.

(இந்த கண்ணிற்க்கு பதிலாக இடம் என்பதையும் பயம்படுத்தலாம்.
ராமனிடம், முகிலனிடம்).
இவைமட்டும் இல்லாமல் இன்னும் சில #வேறுமை_உருபுகள் உள்ளன...
ஆனால் அவைகளையும் இந்த 8 வேற்றுமை உருபுகளுக்கு உள்ளேயே வந்துவிடும்.

எ.கா :
ஆன், உடன், ஓடு, ஒடு, இல், ஐயோ, ஆகா..

நாம் எங்கெல்லாம்
2-வார்த்தைகளுக்கு இடையில்
ஒரு சொல்லையோ எழுத்தையோ பயன்படுத்துகிறோமே அவைகள் வேற்றுமை உருபுகள்.
#உவம_உருபு என்பது ஒரு இடைச்சொல்லாகும்.

ஒரு தெரியாத பொருளை
ஒரு தெரிந்த பொருளைக் கொண்டு வர்ணிப்பது உவமை.
அதற்கு பயன்படுத்தப்படும் சொற்கள் உவம உருபுகள்.

உவம உருபுகள்
மொத்தம் - 12

1. போல
2. புரைய
3. ஒப்ப
4. உறழ
5. மான
6. கடுப்ப
7. இயைய
8. ஏய்ப்ப
9. நேர்
10. நிகர்
11. அன்ன
12. இன்ன
#உரிச்சொல் என்பது
(மிகைப்படுத்தி சொல்லுதல்)
மிகுதியான என்கிற பொருளைக் கொடுக்கக்கூடிய பலவகையான சொற்களாகும்.
எ.கா :
மாமனிதன் என்பதிலுள்ள
"மா" என்பது பெரிய என்ற
பொருளைக் கொடுக்கும்.

நமது இலக்கியத்தில் 7 வகை உரிச்சொற்கள் உள்ளன.
அவை :
1. சால
2. உறு
3. தவ
4. நனி
5. கூர்
6. கழி
7. கடி
1. சால - பெரிய - ஆலயம் தொழுவது சாலவும் நன்று

2. உறு - மிகுந்த - உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு

3. தவ - முக்கியமான - தவப்புதல்வன்

4. நனி - நிறைய - நனி தின்றான்

5. கூர் - கூர்மையான - கூர்வேல்

6. கழி - அதிகமான - கழிநெடிலடி

7. கடி - உறுதியான - கடிநகர்
இப்போது
#இலக்கிய_வகை_சொற்களை பார்ப்போம்.

இலக்கிய வகை சொற்கள்
நான்கு வகைப்படும் என்று முன்பே பார்திருந்தோம்.
அவற்றை இப்போது நினைவுபடுத்தி கொள்ளுங்கள்


அவை :
1) இயற்சொல்
2) திரிசொல்
3) திசைச்சொல்
4) வடசொல்

கீழ்வரும் கீச்சுகளில் ஒவ்வொன்றாக பார்ப்போம்...
இலக்கிய வகைச் சொற்கள்

1) #இயற்சொல் - எல்லோராலும் இயல்பாக புரிந்துகொள்ளக்கூடிய சொற்கள்.
எ.கா :
கடல்,
கிளி,
சொன்னான்.

2) #திரிசொல் - படித்தவர்கள் மட்டுமே புரிந்துகொள்ளக்கூடிய சொற்கள்.
எ.கா :
ஆழி (கடல்),
தத்தை (கிளி),
செப்பினான் (சொன்னான்).
3) #திசைச்சொல் - வடமொழி அல்லாத எட்டு திசைகளிலும் இருந்து வந்த பல்வேறு மொழிச் சொற்கள் திசைச் சொற்கள் ஆகும்.
எ.கா :
கிஸ்தி,
ரோடு,
அலமாரி

4) #வடசொல் - வடமொழியிலிருந்து (சமஸ்கிருதம்) வந்த சொற்கள்.
எ.கா :
கமலம்,
விருக்ஷம்,
அக்னி

ஒவ்வொன்றையும் இன்னமும் விரிவாக விளக்க முயற்சிக்கிறேன்.
#இயற்சொற்கள்
"பொதுவாக நமக்கு நன்கு புரியக்கூடிய அத்தனை தமிழ் சொற்களும் இயற்சொற்கள் தான்."

நமக்கு எளிதில் புரியாத தமிழ் சொற்களும்;
மற்றும்,
தமிழ் அல்லாத சொற்களும்
ஒருபோதும் இயற்சொற்களாக இருக்காது.

#இயற்சொற்கள்
இரண்டு வகைப்படும்.
அவை :
1. பெயர் இயற்சொல்
2. வினை இயற்சொல்
#இயற்சொற்கள்

#பெயர்_இயற்சொல்
படித்தவர் படிக்காதவர் யாவராலும் புரிந்துகொள்ளக்கூடிய பெயர் சொற்கள்
பெயர்-இயற்சொல் எனப்படும்.
எ.கா :
மண், மரம், காடு..

#வினை_இயற்சொல்
படித்தவர் படிக்காதவர் யாவராலும் புரிந்துகொள்ளக்கூடிய வினைச்சொற்கள்
வினை-இயற்சொல் ஆகும்.
எ.கா :
நடந்தான், படித்தாள்..
அடுத்ததாக
#திரிசொற்கள் பற்றி விரிவாக பார்ப்போம்.

திரிசொல் இரண்டு வகைப்படும்.

அவை :

1. ஒரு பொருள் குறித்த பல திரிசொல்

2. பல பொருள் குறித்த ஒரு திரிசொல்
1) ஒரு பொருள் குறித்த பல திரிசொல் :

அதாவது :
பல சொற்கள் ஒரே பொருளைத் தரும்.

எ.கா :
"உலகம்" என்ற சொல்லிற்கு
ஞாலம், வையம், வையகம், உலகம், உலகு, நிலம், பார், புவி, அவனி, மண்ணுலகம், காசினி, கூ போன்ற பல சொற்கள் உள்ளது.
2) பல பொருள் குறித்த ஒரு திரிசொல் :

அதாவது :
ஒரே ஒரு சொல் பல விதமான பொருளை கொடுக்கும்.

எ.கா :
ஆவி என்ற சொல்லிற்கு
நீராவி, ஆன்மா, பேய், நுண்ணிய புகை போன்றவை பொருட்களாகும்.

அதேபோல்,
வீசு என்கிற சொல்லிற்கு
எறிந்து விடு, பரவுதல், ஒருவகையான எடை முறை போன்றவை பொருள்.
"ஒரு பொருள் குறித்த பல திரிசொல்"

அதாவது :
பல சொற்கள் ஒரே பொருளைத் தரும்.

எ.கா :
மலை என்று சொல்லிற்கு
குன்று, குன்றம், குறும்பு,
மிசை, அடுக்கம், வரை,
வெற்பு, பொருப்பு.
போன்ற பல சொற்கள் உள்ளன.
#திசைச்சொல் பற்றி படிக்கும் முன் அடிப்படைகள் சிலவற்றை அறிந்துகொள்ள வேண்டியுள்ளது

தமிழ்நாட்டில் என்னென்ன நாடுகள் இருந்தது,
தமிழ்நாடு எந்தெந்த நாடுகளுடன் வணிக & மொழிவழி தொடர்பு இருந்தது என்பதை அறிந்தால் தான் தமிழுக்கு எங்கிருந்தெல்லாம் சொற்கள் & எழுத்துக்கள் வந்தது என்பது தெரியும்
தமிழ்நாடு 12 நாடுகளாக (நிலங்களாக) இருந்தது

1) தென்பாண்டி நாடு
2) குட்ட நாடு
3) குட நாடு
4) கற்கா நாடு
5) வேணாடு
6) பூழி நாடு
7) பன்றி நாடு
8) அருவா நாடு
9) அருவா வடதலை நாடு
10) சீதநாடு
11) மலாடு
12) புனல் நாடு

இந்நிலங்களை மூவேந்தர்கள், சிற்றரசர்கள் மற்றும் கிழார்கள் ஆண்டார்கள்
தமிழ்நாடு தவிர்த்து,
ஏனைய 17 நாடுகளில் இருந்து தமிழை வந்தடைந்த மொழிகள்

1) சிங்களம்
2) சோனகம்
3) சாவகம்
4) சீனம்
5) துளு
6) குடகம்
7) கொங்கணம்
8) கன்னடம்
9) கொல்லம்
10) தெலுங்கம்
11) கலிங்கம்
12) வங்கம்
13) கங்கம்
14) மகதம்
15) கடாரம்
16) கௌடம்
17) குசலம்
#வடசொல்
சமஸ்கிருத மொழியிலிருந்து வந்த சொற்களாகும்.
இது 2 வகைப்படும்.
அவை
1. தற்சமம் - தமிழ் மற்றும் சமஸ்கிருத உச்சரிப்புகள் சமமாக இருக்கும்.
எ.கா :
கமலம், காரணம், மேரு.

2. தற்பவம் - தமிழ் மற்றும் சமஸ்கிருத உச்சரிப்புகள் சமமாக இருக்காது.
எ.கா :
பங்கஜம் - பங்கயம்,
வருஷம் - வருடம்
இப்போது சில #திசைசொற்களை காண்போம்...

கடல்போல் கலந்திருக்கும் பிறமொழி சொற்களிலில் சில துளிகளை மட்டும் பார்ப்போம்...

#இந்திச்சொல் - #தமிழ்ச்சொல்

ஆகாஷ்வாணி ☛ வானொலி
தூர்தர்சன் ☛ தொலைக்காட்சி
தோத்தி ☛ வேட்டி
அதிகார் ☛ அதிகாரி / அலுவலர்
மண்டல் ☛ மண்டலம்
படா ☛ பெரி
#இந்திச்சொல் - #தமிழ்ச்சொல்

சோட்டா ☛ சிறிய
சோர் ☛ திருடன்
அச்சா ☛ நன்று
பகுத் அச்சா ☛ மிக நன்று
ஜாவ் ☛ போ
ஜிந்தாபாத் ☛ வாழ்க, வெல்க
ஜெய்ஹிந்த் ☛ இந்தியா வெல்க
பாரத் ☛ பாரதம்
தர்ணா ☛ மறியல்
உதார் ☛ எடுத்துக்கொண்டு
அபராத் ☛ குற்றம்
#இந்திச்சொல் - #தமிழ்ச்சொல்

மஸ்தூர் ☛ தொழிலாளர்
கட்டுமஸ்து ☛ கட்டுடல்
வஸ்த் ☛ பொருள்
நமஸ்தே ☛ வணக்கம்
உத்தர் ☛ வடக்கு
சொஜ்ஜி ☛ சிற்றுண்டி வகை
சோக்ரா ☛ ஏவல் செய்பவன்
தட்டுவாணி ☛ நாட்டுக்குதிரை
தம்படி ☛ காசு / நாணயம்
#இந்திச்சொல் - #தமிழ்ச்சொல்

தம்புரு ☛ நரம்பு வாத்தியம்
துப்பட்டா ☛ துணிவகை
தூட்டி ☛ ஆடை
மிட்டாதார் ☛ பணக்காரர் / செல்வன்
பந்த் ☛ கடையடைப்பு
மந்திரி ☛ அமைச்சர்
சுந்தர் ☛ அழகு
தோஸ்த் ☛ நண்பன்
பச்சா ☛ மகன்
பகவான் ☛ பகவன் / கடவுள்
#இந்திச்சொல் - #தமிழ்ச்சொல்

சோடனை ☛ ஒப்பனை
சோதா ☛ சோம்பேறி
சோபதி ☛ தோழன்
டப்பா ☛ தகரப்பெட்டி / பெட்டி
டபாய் ☛ ஏமாற்று
டீக்கு ☛ சரி
டேரா ☛ தங்குதல்
டோபி ☛ சலவையாளர்
டோலி ☛ தூக்குப்படுக்கை
முண்டாசு ☛ தலைப்பாகை
#உருதுமொழிச்சொல் - #தமிழ்ச்சொல்

செலாவணி ☛ பொருள் மாற்று
சோராவரி ☛ கொள்ளை
சுர்மா ☛ கண்மை
ஜூத்தா ☛ செருப்பு
சேந்தி☛ கள்
சேர்பந்து ☛ சாட்டை
செண்டா☛ கொடி
சேடை☛ நீர்க்கட்டு
சேம்பா ☛சளி நோய்
சோக்கு ☛ பகட்டாரம்
சோல்னா☛ தொங்குபை
டக்கர்☛ குழப்பம்
டாணா☛ காவலிடம்
#உருதுமொழிச்சொல் - #தமிழ்ச்சொல்

தண்டோரா ☛ பறையறிவிப்பு
தமாம் ☛ முழுவதும்
தபால் ☛ அஞ்சல்
தமாஷ் ☛ வேடிக்கை
தமுக்கு ☛ வார்ப் பறை
தயார் ☛ அணியம்
தர்ணா☛ மறியல் போராட்டம்
தர்மா ☛ அற மன்றம்
தர்கா ☛ இறைநேசரின் அடக்கத்தலம்
தர்ஜுமா ☛ மொழிபெயர்ப்பு
#உருதுமொழிச்சொல் - #தமிழ்ச்சொல்

தர்முஜ்தாஜர் ☛ உட்குத்தகைதாரன்
தரத்தூது ☛ முயற்சி
தரப்தார் ☛ கீழ்ப்பணிஞன்
தரப்பு ☛ பக்கம்
தரா ☛ வகை
தராசு ☛ துலாக்கோல்
தரி ☛ நன்செய்நிலம்
தரீப்பு ☛ தீர்மானம்
தரோகா ☛ பொய்
தலாய்த்து ☛ ஏவலன்
தலால் ☛ தரகன்
தலாலி ☛ தரகு
#உருதுமொழிச்சொல் - #தமிழ்ச்சொல்

தஜ்வீஸ் ☛ தீர்ப்பு
தஸ்தகத் ☛ கையெழுத்து
தஸ்தாவேஜீ ☛ உரிமைச் சான்றாவணம்
தஸ்து ☛ தாண்டிய இருப்புத் தொகை
தஸ்தூர் ☛ வழக்கம்
தாக்கீது ☛ உத்தரவு
தாசில் ☛ வட்டாட்சி
தாசில்தார் ☛ வட்டாட்சியர்
தாத்து ☛ முறையீடு
தாதி ☛ முறையீட்டாளன்
#உருதுமொழிச்சொல் - #தமிழ்ச்சொல்

தாதுபிராது ☛ அறிகுறி
தாபிதா ☛ பட்டாடை
தபேதார் ☛ சாரியன், பின்னடையன்
தாலுக்கா ☛ வட்டம
தாவா ☛ வேண்டுகை
தாளா ☛ ஒப்பு
தாஜா ☛ புதியது
திண்டேல்☛ கப்பல் கண்காணி
திம்மாக்கு ☛ வீண் பெருமை
திவால் ☛ பணகொடி
திவான் ☛ அரசிறை அதிகாரி
#உருதுமொழிச்சொல் - #தமிழ்ச்சொல்

தினிசு ☛ பொருள்வகை
தீன் ☛ மதம்
தீன்தார் ☛ அழிவு
துனியா ☛ நாடு
துபாரா ☛ இருமுறை
துபாஷ் ☛ இருமொழி வல்லான்; மொழிபெயர்ப்பாளன்
தும்பால் ☛ கொடை
துராய்☛ முத்துத் தலையணி
துரஸ்து ☛ தூய்மை
தேக்‌ஷா ☛ குடக்கலம்
நபர் ☛ தனியர், ஆள், ஒற்றையர்
#உருதுமொழிச்சொல் - #தமிழ்ச்சொல்

நபர்ஜாமீன் ☛ ஆட்பிணை
நாசூக்கு ☛ அழகு, நயத்திறம்
நவாப் ☛ அரசப் பொறுப்பாண்மையன்
நிஜார் ☛ காற்சட்டை
பங்களா ☛ வளமனை
பட்டா☛ உரிமை ஆவணம்
பட்டுவாடா ☛ கணக்குத் தீர்ப்பு
படவா ☛ கூட்டுவன்
படா ☛ பெரிய, மிக
படுதா ☛ திரைச்சீலை
பதில் ☛ விடை, மாறு
#உருதுமொழிச்சொல் - #தமிழ்ச்சொல்

பதிலி ☛ மாற்று
பந்தோபஸ்து ☛ காப்புப்படுத்தும் காவல்
பயில்வான் ☛ மல்லன், பொருநன்
பர்த்தி ☛ இணை, ஒப்பு
பர்பி ☛ தெங்கினிமை
பரவா(இல்லை) ☛ தாழ்வு(இல்லை)
பராரி ☛ நொடித்துப் போனவன்
பலே ☛ நன்று
பஜாரி ☛ பரத்தை
பாட்சா ☛ வல்லமை, அரசன்
#உருதுமொழிச்சொல் - #தமிழ்ச்சொல்

பாணா ☛ சிலம்பக்கழி
பாதுஷா ☛ இனிகம், அரசன்
பாயா ☛ ஆட்டுக்கால் சுடுசாறு
பாரா ☛ காவல்
பிச்சுவா ☛ கை ஈட்டி
பிசாத்து ☛ நொய்து, நொய்யம்
பிர்க்கா ☛ வட்டாரம்
பில்லாக்கு ☛ மூக்கணி
பிராது ☛ முறையீடு
பீடி ☛ இலைச் சுருட்டு
#உருதுமொழிச்சொல் - #தமிழ்ச்சொல்

புகார்☛ பெருங்கூச்சல், முறையீடு
புதினா ☛ ஈயெச்சக்கீரை
பூந்தி ☛ பொடிக்கோளி
பூரி ☛ மரப்பூதி, பூதி
பேக்கு ☛ மடையன்
பேசரி ☛ மூக்கொட்டி
பேட்டா ☛ படிப்பயணம்
பேட்டி ☛ நேருரை
பேடி ☛ விலங்கு
பேமானி ☛ மானமிலி
பேஜார் ☛ சோர்வு
பேஷ்☛ மிக நன்று
#உருதுமொழிச்சொல் - #தமிழ்ச்சொல்

பைசல் ☛ தீர்வு
போணி ☛ முதன்மாறு
போதை ☛ வெறிமயக்கம்
மகால் ☛ அரண்மனை
மசூதி ☛ பள்ளிவாயில்
மண்டி ☛ பெருவிற்பகம்
மசோதா ☛ சட்ட முதல் முந்தாவணம்
மத்தாப்பு ☛ தீப்பூ
மாகாணம் ☛ மாநிலம்
மார்வாரி ☛ வட்டியீட்டு
மாஜி ☛ முந்தின
மிராசுதார் ☛ முகமையன்
#உருதுமொழிச்சொல் - #தமிழ்ச்சொல்

முண்டா ☛ தோள்
மௌசு ☛ கவர்ச்சி
ரகம் ☛ வகை
ருசு, ருஜூ ☛ மெய்ப்பிப்பு
ராத்தல் ☛ நாற்பது துலையம்
ரேக்ளா ☛ ஓரியனூர்தி
லத்தி ☛ குறுந்தடி
லாகு ☛ தாங்குதல்
லாடம் ☛ குளம்பணி
லோட்டா ☛ நீர்ச்செப்பு
லோலாக்கு ☛ தொங்கணி
#உருதுமொழிச்சொல் - #தமிழ்ச்சொல்

வசூல்☛ தொகுத்தல், தண்டல்
வாபஸ் ☛ திரும்பப் பெறல்
வாய்தா ☛ தவணை
வாரிசு ☛ மரபுரிமையர்
விலாவரி ☛ முழு விளக்கம்
ஜமீன்தார் ☛ நிலக்கிழார்
ஜரூர் ☛ விரைவு, கடிது
ஜல்தி ☛ விரைவு
ஜிகினா ☛ ஒண் தகடு
ஜீரா ☛ தீங்கூழ்
நமாஸ் ☛ தொழுகை
#சொற்கட்டு #தொடர்க்கட்டு பற்றி இப்போது பார்ப்போம்

அதாவது
ஒரு சொல்லை, ஒரு சொற்றொடரை
எவ்வாறு உருவாக்கலாம் என்பதை அறிவது

இதனை அறிந்தால்
சந்திப்பிழை மற்றும் மயங்கொலிப் பிழைகள் வராமல் இருக்கும்.
பின்னாளில் படிக்க இருக்கும்
பகுபதம், யாப்பிலக்கணம் போன்றவற்றுக்கு அடிப்படையாக இருக்கும்
ஒரு சொற்றொடருக்கு சில அடிப்படையான விடயங்கள் தேவை.

அவை :

☛ எழுவாய் - என்பது ஒரு பெயர்ச் சொல்லாக அமையும்.

☛ பயனிலை - என்பது ஒரு வினைச் சொல்லாக அமையும்.

☛ செயப்படுபொருள் - என்பது ஒரு பெயர்ச்சொல்லாக அமையும்.

எ.கா :
"கந்தன் மணந்தான் வள்ளியை".
"கந்தன் மணந்தான் வள்ளியை"
என்பதில்
கந்தன் என்ற சொல் எழுவாய்,
மணந்தான் என்ற சொல் பயனிலை,
வள்ளியை என்ற சொல் செயப்படுபொருள்.

இந்த மூன்றையும் மாற்றி போட்டாலும் பொருள் மாறாது.

எ.கா :
மணந்தான் கந்தன் வள்ளியை,
வள்ளியை கந்தன் மணந்தான்,
கந்தன் வள்ளியை மணந்தான்,
வள்ளியை மணந்தான் கந்தன்.
சில இடங்களில் எழுவாய் மற்றும் பயனிலை மட்டுமே வரும்.
எ.கா :
கந்தன் மணந்தான்,
அவன் நடந்தான்... போன்றவை

இந்த சொல் கட்டுமானங்களில் சில பிழைகள் வரக்கூடும்.
சில குறிப்புகள் மறைந்து வரும். இவைகளே தொகைகள்.

இனிவரும் கீச்சுகளில் #தொகைகள் பற்றி பார்ப்போம்.
#தொகை என்பது மறைவது அல்லது மறைதல் என்று பொருள்.
இந்தத் தொகைகள் ஆறு வகைப்படும்.

அவை :
1. வேற்றுமைத்தொகை
2. வினைத்தொகை
3. பண்புத்தொகை
4. உவமைத்தொகை
5. உம்மைத்தொகை
6. அன்மொழித்தொகை

இனி ஒவ்வொன்றாக பார்ப்போம்...
1. #வேற்றுமைத்தொகை - வேற்றுமை உருபும் அதன் பயனும் மறைந்து வருதல்.

(இதனை நினைவுபடுத்தி கொள்ளுங்கள்
)

☛ இரண்டாம் வேற்றுமை தொகை (ஐ)
எ.கா
பால் குடித்தான் - பாலைக் குடித்தான்.
பால்குடம் - பாலை உடைய குடம்

இது இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
1. #வேற்றுமைத்தொகை - வேற்றுமை உருபும் அதன் பயனும் மறைந்து வருதல்.

2. #வினைத்தொகை - காலங்களாகிய இறந்தகாலம் நிகழ்காலம் எதிர்காலம் மறைந்து வரும்.

3. #பண்புத்தொகை - குணம் அல்லது பண்பு மறைந்து வரும்.

4. #உவமைத்தொகை - உவம உருபுகள் மறைந்து வரும்.
5. #உம்மைத்தொகை - ஒரு சொல்லில் கடைசியில் வரும்
"உம்" என்ற விகுதி மறைந்து வருவது.

எ.கா :
"சேரன் சோழன் பாண்டியன் வந்தனர்."
இதை
"சேரனும் சோழனும் பாண்டியனும் வந்தனர்"
என்று கூற வேண்டும்.
ஆனால் 'உம்' மறைந்து வருவதால் இது #உம்மைத்தொகை
6. #அன்மொழித்தொகை - ஒரு பொருளை நேராக கூறாமல் வேறு ஒரு தொகையை வைத்து கூறுவது.
எ.கா :
"பூங்குழலி வந்தாள்"
இதில் பூவை உடைய குழலை கொண்ட மங்கை வந்தாள் என்பதையே இது காட்டுகிறது.
இதில் பூவை என்று கூறுவதால் இது இரண்டாம் வேற்றுமை தொகை கலந்து வருகிறது.
இதுவே #அண்மொழித்தொகை ஆகும்.
☛ மூன்றாம் வேற்றுமைத்தொகை (ஆல்)

எ.கா :
தலைவணங்கினான் - தலையால் வணங்கினான்.
பொற்குடம் - பொன்னாலான குடம்

மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை.
☛ நான்காம் வேற்றுமைத்தொகை (கு)

எ.கா :
அலுவலகம் போனான் - அலுவலகத்திற்கு போனான்

குழந்தை பால் - குழந்தைக்கான பால்

நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை.
☛ ஐந்தாம் வேற்றுமைத் தொகை (இன்)

எ.கா :
ஊர் நீங்கினான் - ஊரினின்று நீங்கினான்

மலையருவி - மலையினின்று விழும் அருவி

ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை.
☛ ஆறாம் வேற்றுமைத்தொகை (அது)
எ.கா :
அவன் வண்டி - அவனது வண்டி

☛ ஏழாம் வேற்றுமைத்தொகை (கண்)
எ.கா :
ராமன் சொல்வேன் - ராமன்கண் சொல்லுவேன்.
வயிற்றுத்தீ - வயிற்றின்கண் தோன்றிய தீ.
ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை.
#வேற்றுமைத்தொகை

நான் இதுவரை கவனித்தது என்னவென்றால்...

முதலில் ஒரு பெயர் சொல்லும் பின்னால் ஒரு பெயர் சொல்லும் வந்தால் உருபும் பயனும் உடன்தொக்க தொகை ஆகியிருக்கிறது.

முதலில் ஒரு பெயரும் பின்னால் ஒரு வினையும் வந்தால் அது வெறும் தொகையாக இருக்கிறது.
#வினைத்தொகை என்பது மூன்று காலங்களையும் மறைத்து வரும் சொல்லாகும்.
இது ஒரே சொல்லாக வரும். முன்னால் ஒரு வினைச் சொல்லும் பின்னால் ஒரு பெயர் செல்லும் சேர்ந்தே வரும்.

எ.கா :

ஊறுகாய் :-
ஊறிய காய்,
ஊறுகின்ற காய்,
ஊறும் காய்.

குடிநீர் :-
குடித்த நீர்,
குடிக்கின்ற நீர்,
குடிக்கும் நீர்
#பண்புத்தொகை
ஒரு சொற்றொடரில் பண்பு மறைந்து வந்தால் அது பண்புத்தொகை ஆகும்.

இதில் பெரும்பாலும்
(அனைத்திலும் அல்ல)
"மை" & "ம்" ஆகிய எழுத்துகள் மறைந்தே இருக்கும்

எ.கா :
செந்தாமரை - செம்மை + தாமரை.
இதில் செம்மை என்பது ஒரு நிறம். அந்த நிறத்தின் உடைய பண்பை இது குறிக்கிறது.
#உவமைத்தொகை
ஒரு சொல்லில் உவம உருபு மறைந்து வந்தால் அது உவமைத்தொகை.

எ.கா :
"தேன்மொழி" என்கிற இந்த சொல்லில் தேன் போன்ற மொழி என்று வந்திருக்க வேண்டும்.
ஆனால் போன்ற என்ற உவம உருபு மறைந்து வந்துள்ளது அதுவே உவமைத்தொகை ஆகும்.

மேலும் சில எ.கா:
மான்விழி
மயில்விழி
மலரடி
மதிமுகம் போன்றவை
#பண்புத்தொகை

மேலும் சில எ.கா:

குணம் (நன்மை, தீமை) :
நன்னெறி - நன்மை + நெறி,
தீஞ்சொல் - தீமை + சொல்.

உருவம் (வட்டம், சதுரம்) :
வட்ட நிலா - வட்டம் + நிலா,
சதுரப் பெட்டி - சதுரம் + பெட்டி.

நிறம் (நீலம், பசுமை) :
நீல வானம் - நீலம் + வானம்,
பைந்தமிழ் - பசுமை + தமிழ்.
#பண்புத்தொகை

மேலும் சில எ.கா:

எண்ணம் (மூன்று, நான்கு) :
முத்தமிழ் - மூன்று + தமிழ்,
நான்மறை - நான்கு + மறை.

சுவை (இனிப்பு, காரம்) :
இன்சொல் - இனிமை + சொல்,
காரப்பொடி - காரம் + பொடி.
இதுபோல #பண்புத்தொகையில் மற்றொரு வகையான #இருபெயரொட்டு_பண்புத்தொகை உள்ளது.

சிறப்புப்பெயர் முன்பும்
பொதுப்பெயர் பின்னும்
இருந்தால் அது
#இருபெயரொட்டுப்_பண்புத்தொகை.

எ.கா :
தென்னைமரம்,
பலாமரம்,
மாமரம்..
போன்ற சொற்களில் மரம் என்பது பொதுவான பெயர்.
தென்னை பலா மா என்பது சிறப்புப் பெயர்.
#உம்மைத்தொகை

ஒரு சொல்லில் உம் என்ற விகுதி (சொல்லின் கடைசி பகுதி) வெளிப்படையாக வராவிட்டால்,
அந்த இரண்டு சொற்களுக்கும் தொடர்பு இருந்தால் அது உம்மைத்தொகை ஆகும்.

எ.கா :

தாய் தந்தை - தாயும் தந்தையும்.

கொடுப்பது வாங்குவது - கொடுப்பதும் வாங்குவதும்,

வயல் வாழ்வு - வயலும் வாழ்வும்.
உம்மைத்தொகையுடன் சேர்த்தே #எண்ணும்மை என்ற மற்றுமொரு இலக்கண குறிப்பு பற்றி அறிந்துக் கொள்வோம்.

#எண்ணுமை
ஒரு சொல்லில் "உம்" என்கிற விகுதி வெளிப்படையாக வந்தால் அதற்கு பெயர் எண்ணும்மை.

எ.கா :
சேரனும் சோழனும் பாண்டியனும்

(எண்ணுப்பொருளில் வரும் உம்மை இடைச்சொல்)
#அன்மொழித்தொகை
அன்மொழி என்பது அல் + மொழி எனப் பிரியும்.

#அல் என்பதற்கு அல்லாத என்பது பொருள்.
#மொழி என்றால் சொல் என்று பொருள்.

சொல்லப்பட்ட செய்திகளில் இல்லாத ஒரு பொருளைக் கூறுவது
இதுவே அன்மொழித் தொகை.

இந்த அன்மொழித்தொகை இதுவரை நாம் பார்த்த அனைத்து தொகைகளின் மேலும் வரும்.
#அன்மொழித்தொகை

எ.கா :
"தேன்மொழி வந்தாள்"
என்று கூறும்பொழுது..

'தேன்மொழி' என்பது உவமைத்தொகை
ஆனால்,
இங்கே.. நாம் தேன் போன்ற மொழியை பற்றி பேசவில்லை,
தேன் போன்ற மொழியை உடையவள் வந்தாள் என்று ஒரு பெண்ணை பற்றி பேசுகிறோம்.
அதனால் இது
"உவமைத்தொகை புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை."
#அன்மொழித்தொகை

இதேபோல்

பூங்குழல் வந்தாள் - என்பது
பூவை உடைய குழல்
(பூவை வைத்திருந்த முடி)
கொண்டவள் வந்தாள்.

இதில் "ஐ" என்ற இரண்டாம் வேற்றுமை உருபு வருவதால்...
இது
"இரண்டாம் வேற்றுமை புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை."

"பூங்குழல்" இது உவமை அல்ல.
அதனால் குழப்பம் வேண்டாம்.
#அன்மொழித்தொகை

மேலும் சில...

தாழ்குழல் வந்தாள் -
வினைத்தொகை புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை

தேன்மொழி வந்தாள் -
உவமைத்தொகை புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை

கருங்குழல் வந்தாள் - பண்புத்தொகை புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை
#ஒற்றுப்பிழை அல்லது
#சந்திப்பிழை அல்லது
#இனம்_மிகும்_இடங்கள்
என்று நாம் கூறுவது அனைத்துமே புள்ளி வைத்த எழுத்துக்களான மெய்யெழுத்துக்கள்,
எந்த சொல்லின்
கடைசியில் வரவேண்டும் என்று நாம் இனிவரும் கீச்சுகளில் பார்க்கப் போகிறோம்.

இப்போது நாம் சில எடுத்துக்காட்டுகளோடு பார்ப்போம்...👇
#ஒற்றுப்பிழை #சந்திப்பிழை

☛ தந்த பாத்திரம்
(யாரோ கொடுத்த பாத்திரம்)
☛ தந்தப் பாத்திரம்
(யானை தந்தத்தால் செய்யப்பட்ட பாத்திரம்)

☛ மாடுகன்று
(மாடும் கன்றும் - உம்மைத்தொகை)
☛ மாட்டுக் கன்று
(மாட்டினுடைய கன்று)
#ஒற்றுப்பிழை #சந்திப்பிழை

☛ பட்டு சேலை உடுத்தினாள்
(பட்டு என்பவள் சேலையை உடுத்தினாள்)
☛ பட்டுச் சேலை உடுத்தினாள்
(பட்டால் செய்யப்பட்ட சேலையை உடுத்தினாள்)

☛ மீனை கொத்தி தின்றது
(மீனை, மீன்கொத்தி பறவை தின்றது)
☛ மீனைக் கொத்தித் தின்றது
(மீனை தன்னுடைய அலகால் கொத்தித் தின்றது)
#ஒற்றுப்பிழை #சந்திப்பிழை

☛ மதுரை கல்லூரி
(மதுரையிலுள்ள கல்லூரி)
☛ மதுரைக் கல்லூரி
(மதுரை என்ற பெயர் கொண்ட கல்லூரி)

இதுவரை நாம் புள்ளி வைத்து எழுத்தபடவேண்டிய சொற்களை பார்த்தோம்.
இனி எங்கெல்லாம் புள்ளி வைத்து எழுதக்கூடாது என்பதற்காக சில எடுத்துக்காட்டுகளை பார்ப்போம்...👇
#ஒற்றுப்பிழை #சந்திப்பிழை

☛ நடுகல்
(இழந்த வீரர்களுக்காக நடப்படும் கல்)
☛ நடுக்கல்
(குளிர் / நடுவில் உள்ள கல்)

☛ விலகல்
(நாம் விலகிக் கொள்வது)
☛ விலக்கல்
(அடுத்தவர் நம்மை விலக்குவது)

☛ பலகை
(மரத்தால் செய்யப்பட்ட அமரும் கருவி)
☛ பலக்கை - பற்கை (பல கைகள்)
#ஒற்றுப்பிழை #சந்திப்பிழை

பழந்தமிழில்,
நிறுத்தற் குறியீடுகள் எனப்படுகின்ற Comma, Semicolon; colon: Full Stop. போன்றவை கிடையாது.
அதனால் ஒரு சொல்லை சரியாக புரிந்துகொள்ள இந்த ஒற்று எழுத்துக்கள் தேவைப்பட்டன.
அதேபோல்
உச்சரிப்பு குழப்பங்கள் வராமல் இருப்பதற்காகவும் பயன்பட்டு வருகிறது.
#ஒற்றுப்பிழை
#இனம்_மிகும்_இடங்கள்

உயிர்மெய் எழுத்துக்களின் வகைகள் ஆகிய
வல்லின
மெல்லின
இடையின
எழுத்துக்களில் ஒரு சில எழுத்துக்களே ஒரு சொல்லிற்கு முதல் எழுத்தாக வரும்.
இதைப் பற்றி நாம் முன்பே படித்து இருக்கிறோம்

அந்த 10'ன் ஒற்று எழுத்துக்களே மிகுந்து வரும்
#ஒற்றுப்பிழை
#இனம்_மிகும்_இடங்கள்

வல்லின எழுத்துக்களில் "க ச த ப"
மெல்லின எழுத்துக்களில் "ங ஞ ந ம"
இடையின எழுத்துக்களில் "ய வ"
ஆகிய பத்து எழுத்துக்களே ஒரு சொல்லுக்கு முதலில் வரும் உயிர்மெய்.
இந்த பத்து எழுத்துக்களின் ஒற்று எழுத்துக்களே மிகுந்து வரும்.

எ.கா 👇 பார்ப்போம்
#ஒற்றுப்பிழை
#இனம்_மிகும்_இடங்கள்

எ.கா :
☛ "அந்தச் சட்டை"
இங்கு 'ச' என்கிற எழுத்திற்கு 'ச்' என்பது மிகுந்து வந்திருக்கிறது.

அதேபோல்,
☛ "அந்த டப்பா"
என்கிற இந்த சொல் தொடரில் 'ட' என்கிற எழுத்தில் ஒரு சொல் தொடங்கக்கூடாது ஆகையால் ட் மிகுந்து வராது.
(அதனால் இந்த சொல் தமிழ் இல்லை)
இப்போது #வல்லினம்_மிகும்_இடங்கள் பற்றி பார்ப்போம்.

சுட்டு எழுத்துக்கள் மற்றும் வினா எழுத்துக்கள் ஆகிய "அ இ உ எ"
அங்கு
இங்கு
எங்கு
அப்படி
இப்படி
எப்படி
அந்த
இந்த
எந்த
போன்ற சொற்களுக்குப் பிறகு
ஒரு வல்லின எழுத்து தொடங்கி வந்தால் அங்கு வல்லின ஒற்று மிகும்.

எ.கா 👇 பார்ப்போம்
#வல்லினம்_மிகும்_இடங்கள்

எ.கா :
• அ + பையன் = அப்பையன்
• இ + பெண் = இப்பெண்
• உ + பையன் = உப்பையன்

• அங்கு + சென்றான் = அங்குச் சென்றான்
• இங்கு + கண்டான் = இங்குக் கண்டான்
• எங்கு + போனான் = எங்குப் போனான்
#வல்லினம்_மிகும்_இடங்கள்

எ.கா :
• அப்படி + சென்றான் = அப்படிச் சென்றான்
• இப்படி + கொய்தாள் = இப்படிக் கொய்தாள்
• எப்படி + பாடினரோ = எப்படிப் பாடினரோ

• அந்த + புரம் = அந்தப்புரம்
• இந்த + பெண் = இந்தப் பெண்
• எந்த + பையன் = எந்தப் பையன்
#வல்லினம்_மிகும்_இடங்கள்

ஓரெழுத்து ஒரு மொழிக்கு
பின்னால் வல்லின எழுத்துக்கள் இருந்தால் ஒற்று மிகும்.
எ.கா :
பூ + பறித்தாள் = பூப்பறித்தாள்
தீ + பிடித்தது = தீப்பிடித்தது
கை + பேசி = கைப்பேசி
தை + பூசம் = தைப்பூசம்


இவற்றை நினைவுபடுத்தி
பயிற்சி செய்யவும்..
#வல்லினம்_மிகும்_இடங்கள்

குற்றியலுகரங்களில் எங்கெல்லாம் ஒற்று வரும் என்பதை இப்போது பார்ப்போம்.

குற்றியலுகரங்களில்...
வன்தொடர்,
மென்தொடர்,
உயிர் தொடர்
ஆகிய மூன்றிலும்
வல்லின எழுத்துக்கள் மிகுந்து வரும்.


இவற்றையும் நினைவுபடுத்தி கொள்ளுங்கள்.
#வல்லினம்_மிகும்_இடங்கள்
#வன்தொடர்_குற்றியலுகரம்

எளிதாக நினைவில் கொள்க:
கு சு டு து பு று - முன்னால்,
க் ச் ட் த் ப் ற் - வந்தால்,
அதை தொடர்ந்து அடுத்த சொல்லில்
"க ச த ப" என்ற உயிர்மெய் வந்தால்
ஒற்று மிகும்

இனி சில எடுத்துக்காட்டுகள் 👇 பார்ப்போம்...
#வல்லினம்_மிகும்_இடங்கள்
#வன்தொடர்_குற்றியலுகரம்

எ.கா :
பாக்கு + தோப்பு = பாக்குத்தோப்பு
அச்சு + புத்தகம் = அச்சுப்புத்தகம்
எட்டு + தொகை = எட்டுத்தொகை
பத்து + பாட்டு = பத்துப்பாட்டு
இனிப்பு+ சுவை = இனிப்புச்சுவை
கற்று + கொடுத்தான் = கற்றுக்கொடுத்தான்
#வல்லினம்_மிகும்_இடங்கள்
#மென்தொடர்_குற்றியலுகரம்

எ.கா :
குரங்கு + குட்டி = குரங்குக் குட்டி
பஞ்சு + பொதி = பஞ்சுப்பொதி
துண்டு + கடிதம் = துண்டுக்கடிதம்
மருந்து + சீட்டு = மருந்துச் சீட்டு
பாம்பு + தோல் = பாம்புத்தோல்
கன்று + குட்டி = கன்றுக்குட்டி
#வல்லினம்_மிகும்_இடங்கள்
#உயிர்தொடர்_குற்றியலுகரம்

எ.கா :
முதுகு + தண்டு = முதுகுத்தண்டு
விறகு + கடை = விறகுக்கடை
படகு + போட்டி = படகுப்போட்டி
பரிசு + புத்தகம் = பரிசுப்புத்தகம்
மரபு + கவிதை = மரபுக்கவிதை
#வல்லினம்_மிகும்_இடங்கள்

குற்றியலுகரத்தின் ஆறு வகைகளில்

1. வன்தொடர்,
2. மென்தொடர்,
3. உயிர்தொடர் என்ற மூன்று வகைகளுக்கு மட்டுமே ஒற்று வரும் என்று பார்த்தோம்.

மீதமுள்ள
4. நெடில் தொடர்,
5. ஆய்தத் தொடர்,
6. இடைத் தொடர்
ஆகிய மூன்றில் வல்லெழுத்துகள் மிகாது.
இதுவரை #குற்றியலுகரம் பற்றி விரிவாக பார்த்தோம்

அதனை தொடர்ந்தே
#முற்றியலுகரம் பற்றியும் பார்த்துவிடுவோம்

முழுமை+இயல்+உகரம்

குறுகி ஒலிக்காது முழுமையாக ஒலிக்கும் உகரம் #முற்றியலுகரம்

எ.கா :
பசு - சு நீண்டு ஒலிக்கும் #முற்றியலுகரம்

காசு - சு குறுகி ஒலிக்கும் #குற்றியலுகரம்
உதடுகள் குவிந்தால் அது #முற்றியலுகரம்
உதடுகள் குவியாமல் இருந்தால் அது #குற்றியலுகரம்.

குற்றியலுகரத்தை உதடு குவிக்காமல் உச்சரிக்க வேண்டும்.
முற்றியலுகரத்தை உதடு குவித்து உச்சரிக்க வேண்டும்.
இவ்வாறு உச்சரிக்கவில்லை என்றால் அது உங்கள் தவறு.
மொழியின் தவறு அல்ல.
#முற்றியலுகரம்

முற்றியலுகரத்தை கண்டுபிடிப்பது மிகவும் எளிது.

இடையின உகரங்கள்
- யு ரு லு வு ழு ளு

மெல்லின உகரங்கள்
- ஙு ஞு ணு நு மு னு

ஒரு சொல்லின் கடைசியில் வந்தால் அது முற்றியலுகரம்.

எ.கா :
பள்ளு.
#முற்றியலுகரம்

ஒரு வல்லின உகரத்தின்
(கு சு டு து பு று)
முன்னால் தனிக்குறில் வந்தால்
அது முற்றியலுகரம்.

எ.கா :
பசு.
#முற்றியலுகரம் இதற்கு ஒரு அருமையான சரித்திர நிகழ்வு எடுத்துக்காட்டாய் உள்ளது.

"மறைமலை அடிகளாரை"
சோதிக்க வேண்டி
"பரிதிமாற் கலைஞர்"
ஒரு கேள்வியை கேட்டார்.

அது
குற்றியலுகரத்திற்கும்
முற்றியலுகரத்திற்கும்
என்ன வித்தியாசம் என்பது ?
அதற்கு மறைமலை அடிகளார்,
"எனக்குத் தெரியாது"
என்று பதில் சொன்னார்.
அவரை பரிதிமாற்கலைஞர் வேலைக்கு எடுத்துக் கொண்டார்.

இதில் என்ன தெரிகிறது என்றால்...

☛ "எனக்கு" என்கிற வார்த்தை முற்றியலுகரம்.

☛ "தெரியாது" என்கிற வார்த்தை குற்றியலுகரம்.
முற்றியலுகரத்திலும்

வல்லெழுத்து மிகும்.

எ.கா :
சாவு + செய்தி = சாவுச்செய்தி
உணவு + பொருள் = உணவுப்பொருள்
உழவு + தொழில் = உழவுத்தொழில்
தேர்வு + கட்டணம் = தேர்வுக்கட்டணம்
கூட்டுறவு + சங்கம் = கூட்டுறவுச் சங்கம்
இரவு + காட்சி = இரவுக்காட்சி
#வல்லினம்_மிகும்_இடங்கள்
#முற்றியலுகரம்

மேலும் சில எ.கா :

நடு + கடல் = நடுக்கடல்
புது + புத்தகம் = புதுப்புத்தகம்
பொது + பணி = பொதுப்பணி
பசு + தோல் = பசுத்தோல்
திரு + கோயில் = திருக்கோயில்
தெரு + பக்கம் = தெருப்பக்கம்
முழு + பேச்சு = முழுப்பேச்சு
#வல்லினம்_மிகா_இடங்கள்
#குற்றியலுகரம்

☛ நெடில் தொடர்,
☛ ஆய்தத் தொடர்,
☛ இடைத் தொடர்க் குற்றியலுகரங்களில் வல்லெழுத்து மிகாது.

எடுத்துக்காட்டு :
மார்பு சதை,
மார்பு சளி,
பாகுபாடு,
பாடுபடும்,
காதுகுத்து,
ஆறு பார்,
செய்து பார்ப்போம்,
இயல்பு குணம்.
வல்லின,
மெல்லின
இடையின எழுத்துக்களில் எங்கு ஒற்று மிகும்.

சுட்டு எழுத்து / வினா எழுத்துக்களில் எங்கு ஒற்று மிகும்.

ஓரெழுத்து ஒருமொழி,
குற்றியலுகரம்
முற்றியலுகரம்
எங்கெல்லாம் ஒற்று மிகும் என்று பார்த்தோம்.

இவற்றை தொடர்ந்து
வேற்றுமை உருபுகளில் எங்ஙனம் ஒற்று மிகும் என பார்ப்போம்.
#வல்லினம்_மிகும்_இடங்கள்

வேற்றுமைகளில்
எங்கு வல்லெழுத்துக்கள் மிகும்
எங்கு மிகாது என்பதை பார்ப்போம்.

அதற்கு முன்
வேற்றுமை உருபுகளை
ஒருமுறை நினைவுபடுத்தி கொள்ளுங்கள்...
வேற்றுமைகளில் மூன்று விதம் இருக்கிறது என்று முன்பே படித்திருந்தோம்.

1. "வேற்றுமை உருபு"

2. உருபு மறைத்து வருவது
"வேற்றுமை தொகை"

3. உருபும் பயனும் மறைத்து வருவது
"வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை"

இவற்றையும் நினைவில் கொள்க.
இனிவரும் கீச்சுகளில் தெளிவுற தொடர்வோம்...
#வல்லினம்_மிகும்_இடங்கள்
#இரண்டாம்_வேற்றுமை

இரண்டாம் வேற்றுமை (ஐ) சொற்றொடர்களில் மிகும்.
எ.கா :
கனியைத் தின்றான்.

இரண்டாம் வேற்றுமைத் தொகையில் மிகாது.
எ.கா :
கனி தின்றான்

இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகையில் மிகும்.
எ.கா :
தயிர்க்குடம் (தயிரை உடைய குடம்)
#வல்லினம்_மிகும்_இடங்கள்
#மூன்றாம்_வேற்றுமை

மூன்றாம் (ஆல்) வேற்றுமையில்...
மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகையில் மட்டும்தான் வல்லினம் மிகும்.

எ.கா :
வெள்ளிக் குடம்
(வெள்ளியாலான குடம்)

இரும்புப் பெட்டி
(இரும்பினால் ஆன பெட்டி)
#வல்லினம்_மிகும்_இடங்கள்
#நான்காம்_வேற்றுமை

நான்காம் (கு) வேற்றுமையில்...
நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகையில் மட்டும்தான் வல்லினம் மிகும்.

எ.கா :
கோழித் தீவனம்
(கோழிக்கான தீவனம்)
#வல்லினம்_மிகும்_இடங்கள்
#ஐந்தாம்_வேற்றுமை

ஐந்தாம் (இன்) வேற்றுமையில்...
ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகையில் மட்டும்தான் வல்லினம் மிகும்.

எ.கா :
வாய் + பாட்டு = வாய்ப்பாட்டு
(வாயினின்று வரும் பாட்டு)
#வல்லினம்_மிகும்_இடங்கள்
#ஆறாம்_வேற்றுமை

ஆறாம் (அது) வேற்றுமையில்...
ஆறாம் வேற்றுமை தொகைக்கு மட்டுமே வல்லினம் மிகும்.

எ.கா :
கிளிக்கூண்டு (கிளியது கூண்டு)
#வல்லினம்_மிகும்_இடங்கள்
#ஏழாம்_வேற்றுமை

ஏழாம் (கண்) வேற்றுமையில்...
ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகையில் மட்டும்தான் வல்லினம் மிகும்.

எ.கா :
வயிற்றுத் தீ
(வயிற்றின்கண் தோன்றிய தீ)
#வல்லினம்_மிகும்_இடங்கள்
#பண்புத்தொகை

பண்புத்தொகையில் ஒற்று மிகும்.
ஆனால் "க ச த ப" இருக்க வேண்டும்

எ.கா :
சிவப்பு + துணி = சிவப்புத்துணி
புதுமை + பெண் = புதுமைப்பெண்
வெள்ளை + தாள் = வெள்ளைத்தாள்
மெய் + பொருள் = மெய்ப்பொருள்
புது + துணி = புதுத்துணி
பொது + பண்பு = பொதுப்பண்பு
#வல்லினம்_மிகும்_இடங்கள்
#இரு_பெயரொட்டுப்_பண்புத்தொகை யில் ஒற்று மிகும்.

எ.கா :
மார்கழி + திங்கள் = மார்கழித் திங்கள்
வெள்ளி + கிழமை = வெள்ளிக் கிழமை
மல்லிகை + பூ = மல்லிகைப்பூ
சாரை + பாம்பு = சாரைப்பாம்பு
உழவு + தொழில் = உழவுத்தொழில்

#வல்லினம்_மிகும்_இடங்கள்
#உவமைத்_தொகை

உவமைத் தொகையில் ஒற்று மிகும்.
(ஆனால் பின்னாடி "க ச த ப" வர வேண்டும்)

எ.கா :
மலர் + கண் = மலர்க்கண்
(மலர் போன்ற கண்)

தாமரை + கை = தாமரைக்கை
(தாமரை போன்ற கை)
#வல்லினம்_மிகும்_இடங்கள்
#வினையெச்சம்

வினை எச்சத்தில் ஒற்று மிகும்.


எ.கா :
வர + சொன்னான் = வரச் சொன்னான்
உண்ண + போனான் = உண்ணப் போனான்
உட்கார + பார்த்தான் = உட்காரப் பார்த்தான்.
ஓடி + போனான் = ஓடிப் போனான்
தேடி + பார்த்தான் = தேடிப் பார்த்தான்
#வல்லினம்_மிகும்_இடங்கள்
#வினையெச்சம்

மேலும் சில எ.கா பார்ப்போம் :

கூறி + சென்றான் = கூறிச் சென்றான்
கூடி + பேசினர் = கூடிப் பேசினர்
போய் + பார்த்தான் = போய்ப் பார்த்தான்
கற்று + கொடுத்தான் = கற்றுக் கொடுத்தான்
வாய்விட்டு + சிரித்தான் = வாய்விட்டுச் சிரித்தான்
#வல்லினம்_மிகும்_இடங்கள்
#வினையெச்சம்

மேலும் சில எ.கா :

படித்து + கொடுத்தான் = படித்துக் கொடுத்தான்
எடுத்து + தந்தான் = எடுத்துத் தந்தான்
கடித்து + குதறியது = கடித்துக் குதறியது
வைத்து + போனான் = வைத்துப் போனான்
தருவதாக + சொன்னான் = தருவதாகச் சொன்னான்
#வல்லினம்_மிகும்_இடங்கள்
#வினையெச்சம்

மேலும் சில எ.கா :

வருவதாய் + கூறினார் = வருவதாய்க் கூறினார்
வா என + கூறினார் = வா எனக் கூறினார்.
இனிக்க + பேசுவான் = இனிக்கப் பேசுவான்
விரைவாய் + பேசினார் = விரைவாய்ப் பேசினார்
மெல்லென + சிரித்தாள் = மெல்லெனச் சிரித்தாள்
#வல்லினம்_மிகும்_இடங்கள்

ஒரு சொல்லின் கடைசியில் இருக்கும் #ம் மறைந்து போனால் ஒற்று மிகும்.

எ.கா :

மரம் + கிளை > மர + க் + கிளை = மரக்கிளை

குளம் + கரை > குள + க் + கரை = குளக்கரை

ஆரம்பம் + பள்ளி > ஆரம்ப + ப் + பள்ளி = ஆரம்பப் பள்ளி
மேலும் சில எ.கா :

அறம் + பணி > அற + ப் + பணி = அறப்பணி

கட்டடம் + கலை > கட்டட + க் + கலை = கட்டடக்கலை

வீரம் + திலகம் > வீர + த் + திலகம் = வீரத்திலகம்

மரம் + பெட்டி > மர + ப் + பெட்டி = மரப்பெட்டி

பட்டம் + படிப்பு > பட்ட + ப் + படிப்பு = பட்டப்படிப்பு
#ஈறுகெட்ட_எதிர்மறைப்_பெயரெச்சம்

ஈறு = கடைசி
கெட்ட = இல்லாமல்

ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் என்பது எதிர்மறையான பொருளில் வரும் ஒரு வினைச்சொல்,
அதன் கடைசி எழுத்து இல்லாமல் வந்து, அடுத்து வரும் பெயர்ச்சொல்லுக்கு விளக்கம் தருவதாக அமையும் சொல்.
எ.கா :
செல்லாக் காசு = செல்லாத காசு
#வல்லினம்_மிகும்_இடங்கள்

#ஈறுகெட்ட_எதிர்மறைப்_பெயரெச்சத்தில் ஒற்று மிகும்



செல்லா + காசு = செல்லாக் காசு (செல்லாத காசு)
ஓடா + குதிரை = ஓடாக் குதிரை (ஓடாத குதிரை)
தீரா + சிக்கல் = தீராச் சிக்கல் (தீராத சிக்கல்)
காணா + பொருள் = காணாப் பொருள் (காணாத பொருள்)
இதுவரை
#சந்திப்பிழை
#ஒற்றுப்பிழை
#இனம்_மிகும்_இடங்கள்
பற்றிய இலக்கண குறிப்புகளை பார்த்தோம்.

இவற்றை இலகுவாக அறியக்கூடிய சில எளிய சூட்சுமங்களை பார்ப்போம்....👇
#சந்திப்பிழை
#ஒற்றுப்பிழை
#இனம்_மிகும்_இடங்கள்

அ (அந்த),
ஆ (மாறா),
இ (தள்ளி),
உ (பாக்கு),
ஐ (வீட்டை),
ய் (செய்),
ர் (தேர்),
ழ் (தமிழ்)
என்ற எழுத்துக்கள் ஒரு சொல்லின் கடைசியில் வந்தால் ஒற்று மிகும்.
☛ இதில் "அ, ஆ, ர்" பின்னால் பெயர்ச்சொல் வரவேண்டும்.

☛ "இ, ய்" பின்னால் வினைச்சொல் வரவேண்டும்.

☛ "ஐ" பின்னால் பெயர் அல்லது வினைச்சொல் வரவேண்டும்.

☛ "ழ், உ" பின்னால் பெயர்ச்சொல் அல்லது வினைச்சொல் "க ச த ப" போன்ற எழுத்துக்களில் ஆரம்பித்தால் ஒற்று மிகும்.

#சந்திப்பிழை
இதுவரை ஒற்று எழுத்துக்கள் மிகும்
இடங்களை பார்த்தோம்.
இனி ஒற்று எழுத்துக்கள் மிகா
இடங்களை பார்ப்போம்.
அவை
1. வினைத்தொகை
2. உம்மைத் தொகை
3. வியங்கோள் வினைமுற்று
4. விளி சொற்றொடர்
5. பெயரெச்சம்
6. அடுக்குத் தொடர்
7. இரட்டைக்கிளவி

கீழ்வரும் கீச்சுகளில் விரிவான விபரங்களை பார்ப்போம்
#ஒற்று_எழுத்துக்கள்_மிகா_இடங்கள்

1. வினைத்தொகையில் ஒற்று வரக்கூடாது.
எ.கா :
ஊறுகாய்,
ஏவுகணை,
அலைகடல்.

ஏன் வரக்கூடாது ?
அப்படி வந்தால்
அது இரு பெயரொட்டுப் பண்புத்தொகையாய் மாறும்
(ஊறுக்காய், ஏவுக்கணை)

#ஒற்று_எழுத்துக்கள்_மிகா_இடங்கள்

2. உம்மைத் தொகையில் ஒற்று வரக்கூடாது.
எ.கா :
அன்னை பிதா.

ஏன் இங்கு வரக்கூடாது ?
அப்படி வந்தால் அது ஒரு சொற்றொடராக இருக்குமே தவிர உம்மைத்தொகை ஆகாது.
(அன்னைப் பிதா)

#ஒற்று_எழுத்துக்கள்_மிகா_இடங்கள்

3. வியங்கோள் வினைமுற்றில் ஒற்று மிகாது.
எ.கா :
வாழ்க கோமான்.

ஏன் மிகாது ?
ஒற்றும் இருந்தால் அது வெறும் வினைமுற்றாக இருக்கும். வியங்கோள் வினை முற்றாக இருக்காது.
(வாழ்கக் கோமான்)

#ஒற்று_எழுத்துக்கள்_மிகா_இடங்கள்

4. விளி சொற்றொடரில் ஒற்று மிகாது.
எ.கா :
கண்ணா செல்.

ஏன் மிகக் கூடாது ?
மிகுந்தால் அது தமிழ் இலக்கண வரையறையில் வராது.

#ஒற்று_எழுத்துக்கள்_மிகா_இடங்கள்

5. பெயரெச்சத்தில் ஒற்று மிகாது.
எ.கா :
வந்த பையன்.

ஏன் ஒற்று வரக்கூடாது ?
இங்கு ஒற்று மிகுந்தால் அது தமிழ் இலக்கண வரையறையில் வராது.

#ஒற்று_எழுத்துக்கள்_மிகா_இடங்கள்

6. அடுக்குத் தொடரில் ஒற்று வராது.
எ.கா :
மீண்டும் மீண்டும்
வரும் வரும்

அடுக்குத்தொடர் என்பது :
ஒரே சொல்
மீண்டும் மீண்டும் வந்து
ஒரே பொருளைத் தந்தால் அது அடுக்குத்தொடர் ஆகும்.
அந்த சொல்லை தனியே கூறினால் பொருள் தரும்.
#ஒற்று_எழுத்துக்கள்_மிகா_இடங்கள்

7. இரட்டைக்கிளவியில் ஒற்று மிகாது.
எ.கா :
சல சல,
தக தக

இரட்டைக் கிளவி என்பது :
ஒரே சொல்
மீண்டும் மீண்டும் வந்து
சேர்த்துப் பார்த்தால் மட்டுமே பொருள் தருவது.
அதில் ஒரு சொல்லை தனியாக சொல்லிப் பார்த்தால் பொருள் வராது.
#மயங்கொலிப்_பிழை
(மயங்கு + ஒலி) என்பது நமது உச்சரிப்புப் பிழைகள் ஆகும்.
தமிழில் சில எழுத்துக்கள் உச்சரிப்புகளில் நுண்ணிய வேறுபாடுகள் மட்டுமே கொண்டிருப்பதால் இந்த பிழை ஏற்படுகிறது
எ.கா :
ந ன ண,
ர ற,
ல ள ழ
இவற்றை சரியாக எழுத வேண்டுமென்றால் நமது உச்சரிப்பு சரியாக இருக்க வேண்டும்.
பகுப்பை அடிப்படையாகக் கொண்டு சொற்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.
அவை
1) #பகுபதம்
2) #பகாப்பதம்
என்பவை ஆகும்.

பதம் என்னும் சொல்லும்
சொல்லைக் குறிக்கும் வேறு ஒரு சொல்லே.
#பகுபதம்
ஒரு சொல்லைப் பகுதி, விகுதி முதலிய உறுப்புகளாகப் பகுக்க (பிரிக்க) முடிந்தால் அது பகுபதம் எனப்படும்.
எ.கா :
அறிஞன், செய்தாள்

#பகாப்பதம்
ஒரு சொல்லைப் பகுதி, விகுதி முதலிய உறுப்புகளாகப் பகுக்க முடியவில்லை என்றால் அது பகாப்பதம் எனப்படும்.
எ.கா :
மரம், தேன், தலை, போல, சால
#பகுபத_உறுப்புகள்

பகு பதத்திற்கு ஆறு உறுப்புகள் உள்ளன.
அவை
(1) பகுதி
(2) சந்தி
(3) விகாரம்
(4) இடைநிலை
(5) சாரியை
(6) விகுதி

#பசவிஇசாவி என்பது பகுபதத்தின் உறுப்புகளை மறக்காமல் வைத்துக் கொள்ள உதவும் சுருக்குச் சொல்
#பகுபத_உறுப்புகள்
#பசவிஇசாவி

(1) பகுதி - ஒரு சொல்லின் உடைய மூலச் சொல் (வேர்ச்சொல்).
எ.கா :
"செல்கிறான்" என்ற சொல்லில்
"செல்" என்பது பகுதி.

(2) சந்தி - இரண்டு சொற்களைச் சேர்க்கும் பொழுது அவைகளை சேர்க்க பயன்படும் ஒற்று எழுத்து.
எ.கா :
செல்கிறான் -
செல் + க்(சந்தி) + இறான்
#பகுபத_உறுப்புகள்
#பசவிஇசாவி

(3) விகாரம் - ஒரு எழுத்து மற்றொரு எழுத்தாக மாறுவது விகாரம்.
எ.கா :
மஞ்சள்பை -
மஞ்ச ப்(விகாரம்) பை

(4) இடைநிலை - இடையில் வரும் எழுத்து.
எ.கா :
செல்கிறான் -
செல் + க் + இ(இடைநிலை) + றான்
#பகுபத_உறுப்புகள்
#பசவிஇசாவி

(5) சாரியை - கடைசி சொல்லை இரண்டாகப் பிரிப்பது.
எ.கா :
செல் + க் + இ + ற்(சாரியை) +ஆன்

பகுபதத்தில் இடைநிலைக்கும், விகுதிக்கும் இடையில் வருவது சாரியை எனப்படும்.
#பகுபத_உறுப்புகள்
#பசவிஇசாவி

(6) விகுதி - கடைசி சொல்.
இந்த சொல் தான்
உயர்திணையா,
அஃறிணையா,
ஆண்பாலா,
பெண்பாலா,
ஒன்றன்பாலா,
பலவின்பாலா,
பலர்பாலா போன்றவற்றை காட்டும்.

எ.கா :
செல்கிறான் -
செல் + க் + இ + ற் + ஆன் (விகுதி)
#பகாபதம் என்பது ஒரு சொல்லை பிரித்தால் அதிலுள்ள எந்த பகுதியும் பொருள் வராது.

பகாப்பதம் நான்கு வகைப்படும்.

1. பெயர்ப் பகாப்பதம்
(மண், மரம், கல்)

2. வினைப் பகாப்பதம்
(செல், உட்கார், சாப்பிடு)

3. இடைப் பகாப்பதம்
(போல, மியா, போன்ற)

4. உரிப் பகாப்பதம்
(சால, தவ, கூர்)
தமிழ் உச்சரிப்புக்கான உடல் பாகங்கள்.

ஒலி பிறக்கும் இடங்கள்

வல்லினம் - நெஞ்சில் இருந்து பிறக்கிறது
(க், ச், ட், த், ப், ற்)

மெல்லினம் - மூக்கில் இருந்து பிறக்கிறது
(ங், ஞ், ண், ந், ம், ன்)

இடையினம் - தொண்டையில் இருந்து பிறக்கிறது.
(ய், ர், ல், வ், ழ், ள்)
ஆங்கிலத்தில் எவ்வாறு VOWELS என்று சொல்லப்படும் உயிரெழுத்துக்கள்
(a, e, i, o, u )
ஐந்து உள்ளதோ.

தமிழிலும் அவ்வாறே அடிப்படை உயிரெழுத்துகள் ஐந்தே
அவை : உயிர் குறில் எழுத்துக்களான
"அ இ உ எ ஒ"

மற்றவை அதன் நெட்டெழுதுக்கள். மேலும்
அ+இ = ஐ
அ+உ = ஒள
#பகுபத_உறுப்புகள்
#பகுதி என்பது எப்போதுமே ஒரு கட்டளை வினைச் சொல்லாக மட்டுமே வரும்.

எ.கா :

ஓடினான் என்ற சொல்லின் பகுதி 'ஓடு'.

அதேபோல்
புக்கனன் என்ற சொல்லின் பகுதி 'புகு'.

கட்டளைச் சொற்களை நாம் நன்றாக புரிந்து கொண்டாலே பகுபதத்தின் பகுதியை சரியாக பிரிக்கலாம்.
#பகுபத_உறுப்புகள்
#சந்தி என்பது ஒரு ஒற்று எழுத்து ஆகும்.
இந்த "சந்தி" ஒரு பகுதிக்கும் விகுதிக்கும் நடுவே வரலாம்
அல்லது
ஒரு பகுதிக்கும் இடைநிலைக்கும் நடுவே வரலாம்.
இந்த சந்தியானது சில நேரங்களில் மாற்றம் அடையும்,
அப்படி மாற்றம் அடைந்தால் அதன் பெயர் விகாரம் ஆகும்.
#பகுபத_உறுப்புகள்
#சந்தி என்பது ஒற்று எழுத்துக்கள் என்று இதுவரை பார்ப்போம்.
ஆனால் சந்தி என்பது ஒற்று எழுத்துக்கள் மட்டுமன்று; சந்தி என்பது இரண்டு சொல்லை சேர்ப்பது (சந்திக்க செய்வது) என்று பொருள்.

எ.கா :
ஓடினான் -
ஓடு + இ (சந்தி) + ன் + ஆன்.
#பகுபத_உறுப்புகள்

இந்த சந்தியானது சில நேரங்களில் மாற்றம் அடையும்,
அப்படி மாற்றம் அடைந்தால் அதன் பெயர் #விகாரம் ஆகும்.

எ.கா :
நடந்தான் -
நட
+ த் (சந்தி) + த் ந் ஆனது விகாரம்
+ த்
+ ஆன்
#பகுபத_உறுப்புகள்

#இடைநிலை என்பது ஒரு சொல்லின் இடையில் வருவது.
பகுதி சந்திக்கு பின்வருவது இடைநிலை.
இடைநிலை காலம் காட்டும்.

கீழ்வரும் கீச்சுகளில் காலம் குறித்த எடுத்துக்காட்டுகள் பார்ப்போம்...
#பகுபத_உறுப்புகள்
#இடைநிலை

"இறந்த கால இடைநிலைகள்"

செய்தான் -
செய் + த் (இடைநிலை) + ஆன்.

உண்டான் -
உண் + ட் (இடைநிலை) + ஆன்.

விற்றான் -
விறு + ற் (இடைநிலை) + ஆன்.

பாடினான் -
பாடு + இன் (இடைநிலை) + ஆன்.

"த், ட், ற், இன்" - இவை யாவும் இறந்த காலத்தை காட்டும் இடைநிலைகள்.
#பகுபத_உறுப்புகள்
#இடைநிலை

"நிகழ்கால இடைநிலைகள்"

செய்கிறான் -
செய் + கிறு (இடைநிலை) + ஆன்.

செய்கின்றான் -
செய் + கின்று (இடைநிலை) + ஆன்.

செய்யாநின்றான் -
செய் + ஆநின்று (இடைநிலை) + ஆன்.

"கிறு, கின்று, ஆநின்று" - இவை மூன்றும் நிகழ்காலத்தை காட்டும் இடைநிலைகள்.
#பகுபத_உறுப்புகள்
#இடைநிலை

"எதிர்கால இடைநிலைகள்"

உண்பான் -
உண் + ப் (இடைநிலை) + ஆன்.

செய்வான் -
செய் + வ் (இடைநிலை) + ஆன்.

"ப், வ்" - இவை இரண்டும் எதிர்காலத்தை காட்டும் இடைநிலைகள்.
#பகுபத_உறுப்புகள்
#சாரியை

#சாரியை என்பது சந்தியை போல் தான். சந்தி என்பது பகுதிக்கும் இடைநிலைக்கும் நடுவில் வருவது.
சாரியை என்பது இடைநிலைக்கும் விகுதிக்கும் நடுவே வருவது.
இந்த சாரியைகள் மொத்தம் 17 உள்ளன...
#பகுபத_உறுப்புகள்
#சாரியை

சாரியைகள் மொத்தம் 17 உள்ளன...
அவை :
1. அன்
2. ஆன்
3. இன்
4. அல்
5. அற்று
6. இற்று
7. அத்து
8. அம்
9. தம்
10. நம்
11. நும்
12.
13.
14.
15.
16. கு
17.

எ.கா :
படித்ததில் -
+ படி - பகுதி
+ த் - இடைநிலை
+ அத்து - சாரியை
+ இல் - விகுதி
#பகுபத_உறுப்புகள்
#விகுதி

விகுதி என்பது ஒரு சொல்லின் கடைசியில் வருவது.
இது திணை, பால், இடம் மூன்றையும் காட்டும்.

எப்படி பகுதி ஒரு சொல்லுக்கு முக்கியமோ, அதேபோல் விகுதியும் முக்கியம்.
இந்த பகுதி & விகுதி மட்டுமே கொண்டு நம்மால் ஒரு சொல்லை உருவாக்க முடியும்.
(வீட்டை- வீடு+ஐ)
#பகுபத_உறுப்புகள்
#விகுதி

எ.கா :

நடந்தான் - ஆன் (உயர்திணை படர்க்கை ஆண்பால்)

நடந்தாள் - ஆள் (உயர்திணை படர்க்கை பெண்பால்)

நடந்தனர் - அர் (உயர்திணை படர்க்கை பலர்பால்)

நடந்தது - அது (அஃறிணை படர்க்கை ஒன்றன்பால்)

நடந்தன - அன (அஃறிணை படர்க்கை பலவின்பால்)
#விகுதி

நடந்தேன் - ஏன் (உயர்திணை தன்மை ஒருமை)

நடந்தோம் - ஓம் (உயர்திணை தன்மை பலர்பால்)

நடந்தாய் - ஆய் (உயர்திணை முன்னிலை ஒருமை)

நடந்தீர் - ஈர் (உயர்திணை முன்னிலை ஒருமை / பன்மை)

நடந்தார்கள் - அள் (உயர்திணை படர்க்கை பலர்பால்)

நடந்தீர்கள் - அள் (உயர்திணை முன்னிலை பலர்பால்)
நின்றனன் -
நில் + ற் + அன் + அன்
(ஆண்பால் உயர்திணை படர்க்கை) - இந்த சொல்லுக்கான பொருள் நின்றான் என்பதுதான்.
இதை ஏன் தனியாக எழுதினேன் என்றால் சாரியையும் இதேபோல் வரும்.
அதனால் குழம்பி விடக் கூடாது.
இதே போன்று சில வார்த்தைகள் உள்ளன. அவை
பறந்தனன், புக்கனன், உண்டனன், திறந்தனன் போன்றவை
இப்போது சில குறிப்பிட்ட சொற்களை எடுத்து பிரித்து அதற்கான #பகுபத_உறுப்புகள் எழுதுவோம்...

☛ நின்றனன்
நில் (பகுதி)
+ ற் (இறந்தகால இடைநிலை)
+ அன் (சாரியை)
+ அன் (படர்க்கை உயர்திணை ஆண்பால் வினைமுற்று விகுதி)
#தமிழறிவோம்

"எழுத்து அறியத் தீரும் இழிதகைமை"

எப்போது நாம் எழுத்தை அறிந்துக் கொள்கிறோமோ அப்போது தான் இழிதகைமை போகும்.

மொழி திறமை இல்லாவிட்டால்;
மொழியும் திறமை இல்லாமல் போய் விடும்.

ஆகையால்,
நம் தமிழை செம்மையாக கற்றுக்கொள்ள வேண்டும்.
#தமிழறிவோம்
#எழுத்து

எல்லா மொழிகளுக்கும் ஒலிகள் தான் அடிப்படை.
அந்த ஒலிக்கு உருவம் கொடுக்கும் போது எழுத்தாகிறது.

எழுத்து என்பது...
• உள்ளத்திலிருந்து எழுப்பப்படுபது - "ஒலி எழுத்து".
• எழுதப்படுவது - "உருவ எழுத்து".
அடிப்படையில் தமிழின் எழுத்துக்கள் முப்பது மட்டுமே.
அவை இரண்டு வகைகளாகும்

1️⃣ உயிர் எழுத்து - 12
(அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ)

2️⃣ மெய் எழுத்து - 18
(க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்)
#தமிழறிவோம்

ஆங்கிலத்தில் எவ்வாறு VOWELS என்று சொல்லப்படும் உயிரெழுத்துக்கள்
(a, e, i, o, u )
ஐந்து உள்ளதோ.

தமிழிலும் அவ்வாறே அடிப்படை உயிரெழுத்துகள் ஐந்தே
அவை : உயிர் குறில் எழுத்துக்களான
"அ இ உ எ ஒ"

மற்றவை அதன் நெட்டெழுதுக்கள். மேலும்
அ+இ = ஐ
அ+உ = ஒள
எழுத்துக்களை ஒலியின் அடிப்படையில் இரண்டாக பிரிக்கிறார்கள்.

1. குறில் - குறுகிய ஓசை உடையது

2. நெடில் - நீண்ட ஓசை உடையது

தமிழில் எழுத்துக்களின் ஒலிக்கு அளவு சொல்லப்பட்டு இருக்கிறது.
அதற்கு மாத்திரை என்று பெயர்.

குறில் - ஒரு மாத்திரை அளவுடையது
நெடில் - இரண்டு மாத்திரை அளவுடையது
#தமிழறிவோம்

தமிழில் 1-மாத்திரை அளவையும் மூன்று அலகுகளாக பிரித்திருக்கிறார்.

• எண்ணல் - கால்
• எடுத்தல் - அரை
• முறுக்கல் - முக்கால்
• விடுத்தல் - ஒன்று
உயிர் எழுத்திகள் இரண்டு வகை
1. குறில் - 1 மாத்திரை
2. நெடில் - 2 மாத்திரை

மெய் எழுத்துக்கள் மூன்று வகை
1. வல்லினம்
2. மெல்லினம்
3. இடையினம்
மாத்திரை அளவு - அரை
மெய் எழுத்துக்களை ஓசையின் அடிப்படையிலும், பிறப்பிடத்தின் அடிப்படையிலும் மூன்று வகையாக பிரிக்கிறோம்.

☛ க் ச் ட் த் ப் ற் - வலிய ஓசை உடையதால் இவை ஆறும் வல்லெழுத்துக்கள்
(மார்பில் இருந்து பிறக்கிறது)

இவற்றை எளிதாக நினைவில் கொள்வதற்காக புள்ளிகளை நீங்கி
"க ச ட த ப ற" என்கிறோம்
☛ ங், ஞ், ண், ந், ம், ன் - மெல்லிய ஓசை உடையதால் இவை ஆறும் மெல்லெழுத்துகள்.
(மூக்கில் இருந்து பிறப்பது)

☛ மார்புக்கும் மூக்கிற்கும் இடையில் கழுத்தில் பிறக்கும் எழுத்துக்கள் இடையின எழுத்துக்கள்.
" ய், ர், ல், வ், ழ், ள் "
#பகுபத_உறுப்புகள்

☛ படித்தான்
படி (பகுதி)
+ த் (சந்தி)
+ த் (இறந்தகால இடைநிலை)
+ ஆன் (உயர்திணை படர்க்கை ஆண்பால் வினைமுற்று விகுதி)

☛ ஓடுகின்றான்
ஓடு (பகுதி)
+ கின்று (நிகழ்கால இடைநிலை)
+ ஆன் (உயர்திணை படர்க்கை ஆண்பால் வினைமுற்று விகுதி)
#பகுபத_உறுப்புகள்

☛ தேடுவார்கள்
தேடு (பகுதி)
+ வ் (எதிர்கால இடைநிலை)
+ ஆர் (சாரியை)
+ அள் (படர்க்கை பலர்பால் வினைமுற்று விகுதி)

☛ தேடுவார்
தேடு (பகுதி)
+ வ் (எதிர்கால இடைநிலை)
+ ஆர் (பலர்பால் படர்க்கை வினைமுற்று விகுதி)
இந்த "தேடுவார்கள்" மற்றும் "தேடுவார்" இரண்டிலும் உள்ள வேற்றுமையை பார்த்தீர்களா.
அந்தக் 'கள்'லில் உள்ள 'க்' காணாமல் போய்விட்டது.
இப்படி குழப்பம் வரும் என்றுதான் "தேடுவார்" என்று தமிழில் பயன்படுத்தினர்.
"தேடுவார்கள்" என்பது இப்பொழுது நாம் தவறாக பயன்படுத்தும் ஒரு சொல் ஆகும்.
#பகுபத_உறுப்புகள்

நாம் அனைவரும் பேசும் சொற்கள் சரியான சொற்கள் தானா?
என்பதை
அந்த சொல்லின் பதத்தைப் பிரித்து பார்த்தாலே தெரியும்.
அந்தப் பதம் சரியாக புரியவில்லை என்றால் நாம் பேசும் சொல் தவறு.
இங்குள்ள சொற்களுக்கு பகுபத உறுப்புகளை பிரிக்க முயற்சியுங்கள். பிரிக்க முடியாத சொற்கள் தவறாக சொல் என்று நீங்களே புரிந்துகொள்ளலாம்.

1. கேட்டாள்
2. வந்தனள்
3. சொல்லும்
4. மனத்தில்
5. செய்யாநின்றான்
6. வருகின்றனர்
7. சொன்னது
8. செப்பினார்கள்
9. சொல்வார்கள்
10. மேய்ந்தன
அடுத்ததாக நாம் பார்க்கப் போவது #புணர்ச்சி_விதிகள்

புணர்ச்சி என்றால் சேர்தல் என்று பொருள்.
ஒரு சொல்லும் இன்னொரு சொல்லும் சேருவதே புணர்ச்சி எனப்படும்.

இந்த புணர்ச்சி விதிகளை நாம் புரிந்து கொள்வதற்கு முன்னால் சில சொற்களை நாம் நன்றாக புரிந்துகொள்ள வேண்டும்...👇
#புணர்ச்சி_விதிகள்

☛ நிலைமொழி - முதலில் இருக்கும் சொல்

☛ வருமொழி - அடுத்ததாக வரும் சொல்

☛ புணர்தல் - சேருதல்

☛ தோன்றல் - ஒரு புது எழுத்து உருவாகுதல்

☛ திரிதல்‌ - ஒரு எழுத்து இன்னொரு எழுத்தாக மாறுதல்

☛ மறைதல் (கெடுதல்) - ஒரு எழுத்து நீங்குதல்
#புணர்ச்சி_விதிகள்

புணர்ச்சி இரண்டு வகைப்படும்.

1. இயல்பு புணர்ச்சி.
2. விகாரப் புணர்ச்சி

1. #இயல்பு_புணர்ச்சி
இயல்பாக இரண்டு சொற்கள் சேர்வது இயல்பு புணர்ச்சி.
எ.கா :
பலா + மரம் = பலாமரம்.
2. #விகாரப்_புணர்ச்சி
இரண்டு சொல் சேரும் பொழுது அதிலுள்ள எழுத்துக்கள்
தோன்றியோ,
மறைந்தோ,
திரிந்தோ,
மாற்றம் ஏற்படுவது
விகாரப்புணர்ச்சி ஆகும்.

எ.கா :
பலா + பழம் - பலா 'ப்' பழம்
(தோன்றல்)

வெளி + ஊர் - வெளி 'யூ' ர்
(திரிதல்)

மரம் + மஞ்சள் - மரமஞ்சள்
(மறைதல்) - 'ம்' மறைந்து விட்டது
#புணர்ச்சி_விதிகள்
#விகாரப்_புணர்ச்சி
மேலும் சில எ.கா பார்ப்போம்.

ஊர்களில்...
• மாரி அம்மன் - மாரியம்மன்
(திரிதல்)

• கருப்பண்ணன் சாமி - கருபண்ணசாமி
(மறைத்தல்) - 'ன்' மறைந்து விட்டது.

• முத்து கருப்பு - முத்து 'க்' கருப்பு (தோன்றல்)

வீடுகளில்...
• சொல் அம்மா - சொல்லுமா
#புணர்ச்சி_விதிகளை நீங்கள் நன்றாக புரிந்துகொண்டால் நமது தமிழ் செய்யுள்களை எளிதாக படிக்க முடியும்
இப்போது புரியாமல் இருக்கும் செய்யுள்கள் எல்லாம் புரிய துவங்கம்.
சொற்களை ஒரே மாதிரியாக தான் இன்னும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம், புணர்ச்சியை அறிந்துகொண்டால் அவற்றை புரிந்துகொள்ளலாம்
#புணர்ச்சி_விதிகள்

"உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே"

முதல் சொல்லின் கடைசியில் ஒரு மெய்யெழுத்து வந்து அடுத்த சொல்லின் முதலில் ஒரு உயிர் எழுத்து வந்தால் அவை இரண்டும் புணரும்.
#புணர்ச்சி_விதிகள்

"உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே"

இதை புணர்ச்சி விதியில் சொல்ல வேண்டும் என்றால்
"நிலைமொழி ஈற்றில் மெய்யெழுத்து வந்து வருமொழி முதலில் உயிர் எழுத்து வந்தால் அவை புணரும்."

எடுத்துக்காட்டு -
தமிழ் + ஆசிரியர் - தமிழாசிரியர்
#புணர்ச்சி_விதியில் அடுத்ததாக பார்க்க போவது

#பூப்பெயர்_புணர்ச்சி

நிலைமொழியில் பூ என்ற ஒற்றை எழுத்து வந்து
வருமொழியில் வல்லினம் முதலில் வந்தால்,
அந்த வல்லினத்தின் இனமான எழுத்து நடுவில் தோன்றும்
(இனம் மிகும்)

வல்லின இனமான -
ங், ஞ், ண், ந், ம், ன்
என்ற
மெல்லினம் தோன்றும்.
#புணர்ச்சி_விதிகள்

#பூப்பெயர்_புணர்ச்சி
விதி : -
"பூப்பெயர் முன் இனமென்மையும் தோன்றும்"

எடுத்துக்காட்டுகள் :
பூ + காற்று - பூங்காற்று
பூ + கதவே - பூங்கதவே
பூ+ தென்றல் - பூந்தென்றல்
பூ + செடி - பூஞ்செடி
#புணர்ச்சி_விதியில் அடுத்ததாக பார்க்க போவது

#தேன்_புணர்ச்சி

நிலைமொழியில் தேன் என்ற சொல் வந்து
வருமொழியின் முதலெழுத்து மெல்லினம் (ங, ஞ, ண, ந, ம, ன)
வந்தால்
நிலைமொழியில் உள்ள கடைசி எழுத்து அழியும்.

எ.கா :
தேன்+மொழி - தேமொழி
#புணர்ச்சி_விதிகள்

#தேன்_புணர்ச்சி
விதி : -
"தேன்மொழி மென்மை மேவின் இறுதி அழியும்"

எடுத்துக்காட்டுகள் :
தேன் + மொழி - தேமொழி
தேன் + மலர் - தேமலர்
தேன் + நாடு - தேநாடு
#புணர்ச்சி_விதியில் அடுத்ததாக பார்க்க போவது

#திரிதல்_புணர்ச்சி
விதி : -
"தனிக்குறில்முன்ஒற்றுஉயிர்வரின் இரட்டும்"

நிலைமொழியில் ஒற்றெழுத்து வந்து,
வருமொழியில் குறில் எழுத்து வந்தால்,
அந்த ஒற்று எழுத்து இரட்டிப்பாகும்.

எடுத்துக்காட்டுகள் 👇 பார்ப்போம்
#புணர்ச்சி_விதிகள்
#திரிதல்_புணர்ச்சி

எ.கா : -

கண் + இமை - கண்ணிமை
பண் + இசை - பண்ணிசை
தன் + நிறைவு - தன்னிறைவு
நுண் + அறிவு - நுண்ணறிவு
தொல் + இயல் - தொல்லியல்

தனிக்குறில்முன்ஒற்று
உயிர்வரின் இரட்டும்
#புணர்ச்சி_விதியில் அடுத்ததாக பார்க்க போவது

#தேங்காய்_புணர்ச்சி
விதி : -
தெங்கு நீண்டு ஈற்று உயிர்மெய் கெடும் காய்வரின் என்பதாகும்.

தெங்கு + காய் - தேங்காய்
தெங்கு என்ற சொல்லிற்கு அடுத்து காய் என்ற சொல் வந்தால்,
முதல் சொல்லிலிருக்கும் முதலெழுத்து நீளும்
(தெங்கு - தேங்கு).
அடுத்ததாக முதல் சொல்லிலிருக்கும் கடைசி எழுத்து உயிர்மெய் எழுத்தாக இருந்தால் அதுவும் மறையும்
(தேங்கு - தேங்)
இந்த மாற்றங்கள் காய் என்ற அடுத்த சொல் வந்தால் மட்டுமே
ஆங்கிலத்தில்
ANIMAL - 'அ'னிமல்
ARMY - 'ஆ'ர்மி

ஆங்கிலத்தில் குறில் நெடில் எழுத்துக்களை எவ்வாறு பலுக்கவேண்டும் என்று பிறர் சொல்லி கொடுத்தால் தான் நாம் அதன் வேறுபாட்டை அறிய இயலுகிறது.

ஆனால் தமிழில் அந்த குழப்பம் ஏற்படுவதில்லை.

#தமிழறிவோம்
தமிழில் எழுத்துக்களை தெரிந்துகொண்டால் போதும்,
எழுத்துக்கூட்டி சொற்களை உச்சரித்து விடலாம்.

ஆனால் ஆங்கிலத்திற்கு உச்சரிப்பு என்று தனியாக சொல்லி கொடுக்க வேண்டும்.
#புணர்ச்சி_விதியில் அடுத்ததாக பார்க்க போவது

#திசைப்பெயர்ப்_புணர்ச்சி
திசைப் பெயர்கள் வந்தால் அந்த சொற்கள் எவ்வாறு மாற வேண்டும் என்பதை கூறுவதே திசைப் பெயர்ப் புணர்ச்சி.
#புணர்ச்சி_விதிகள்
#திசைப்பெயர்ப்_புணர்ச்சி

புணர்ச்சி விதி -

"திசையொடு திசையும் பிறவும் சேரின்
நிலைஈற்று உயிர்மெய் கவ்வொற்று நீங்கலும்,
றகரம் னலவாத் திரிதலு மாம்பிற"

(இவற்றை மனனம் செய்துக் கொள்ளுங்கள்)

விதியின் விளக்கம் கீழ்வருமாறு...
#புணர்ச்சி_விதிகள்
#திசைப்பெயர்ப்_புணர்ச்சி

ஒரு திசை சொல்லோடு இன்னொரு திசைச்சொல்லோ அல்லது வேறு ஏதேனும் சொல்லோ வந்தால்,
முதல் சொல்லில் இருக்கும் கடைசி உயிர்மெய் எழுத்து நீங்கிவிடும்.

எ.கா -

கிழக்
மேற்
வடக்
தென்

இவற்றுக்கு அடுத்துவரும் உயிர்மெய் எழுத்துகள் நீக்கப்பட்டுள்ளது.
#புணர்ச்சி_விதிகள்
#திசைப்பெயர்ப்_புணர்ச்சி

அதன்பிறகு :

1. அந்த நீங்கிய உயிர் மெய் எழுத்தின் பக்கத்தில் உள்ள 'க்' என்ற எழுத்து நீங்கும்.

எ.கா :
வடக் - வட,
கிழக் - கிழ.
2. அந்த நீங்கிய உயிர் மெய் எழுத்தின் பக்கத்தில் உள்ள
'ற்' - "ன்" ஆக மாறும்.
எ.கா :
தெற் - தென்

3. அந்த நீங்கிய உயிர் மெய் எழுத்தின் பக்கத்தில் உள்ள
'ற்' - "ல்" ஆக மாறும்.
எ.கா :
மேற் - மேல்

4. இன்னும் சில புணர்ச்சிகள் கூட நடக்கலாம்.
எ.கா :
கிழ - கிழ், கீழை.
மேல் - மேலை
#புணர்ச்சி_விதியில் அடுத்ததாக பார்க்க போவது

#பல_சில_புணர்ச்சி - பல மற்றும் சில என்கிற சொற்களில் ஏற்படும் புணர்ச்சியே பல சில புணர்ச்சி.
பல அல்லது சில என்ற சொல்லிற்கு பின்னால் அவையே திரும்ப வந்தால், மூன்று விதமான புணர்ச்சிகள் நடக்க வாய்ப்பு உண்டு :

அவை கீழ்வருமாறு...👇
#புணர்ச்சி_விதிகள்
#பல_சில_புணர்ச்சி

இதற்கான புணர்ச்சி விதி -

பல சில எனும் இவை தம்முன் தாம்வரின்
இயல்பும், மிகலும், அகரம் ஏக
லகரம் றகரம் ஆகலும், பிறவரின்
அகரம் விகற்பம் ஆகலும் உள பிற.

இவ்விதியின் மூவகை விளக்கம் கீழ்வருமாறு...👇
#புணர்ச்சி_விதிகள்
#பல_சில_புணர்ச்சி

1. இயல்பு புணர்ச்சி -
புதிதாக எந்த எழுத்தும் தோன்றாமல்,
இருக்கும் எந்த எழுத்தும் மாறாமல்,
எந்த எழுத்தும் மறையாமல் அப்படியே புணர்வது இயல்பு புணர்ச்சி.

எ.கா :
பல+பல - பலபல,
சில+சில - சிலசில,
பல+சில - பலசில,
சில+பல - சிலபல.

(அடுக்குத்தொடர்)
#புணர்ச்சி_விதிகள்
#பல_சில_புணர்ச்சி

2. மிகலும் புணர்ச்சி
ஒரு புது ஒற்றெழுத்து நடுவில் வரும்.

எ.கா :
பல + பல - பலப்பல,
சில + சில - சிலச்சில,
பல + சில - பலச்சில,
சில + பல - சிலப்பல.

(ஒற்று மிகும் இடங்களாக இவை அமையும்)
#புணர்ச்சி_விதிகள்
#பல_சில_புணர்ச்சி

3. அகரம் ஏக லகரம் றகரம் ஆகலும்

முதல் சொல்லில் இருக்கும்
கடைசி எழுத்தில் உள்ள
அகரம் மறைந்து
லகரம் றகரமாக மாறும்.

எ.கா :

பல+பல - பல்+பல - பற்பல

சில+சில - சில்+சில - சிற்சில

பல+சில - பல்+சில - பற்சில

சில+பல - சில்+பல - சிற்பல
#புணர்ச்சி_விதிகள்
#பல_சில_புணர்ச்சி

பிறவரின்
அகரம் விகற்பம்
ஆகலும் உள பிற.

எ.கா :

1. பல + கலை
பலகலை / பல்கலை
(பல்கலைக்கழகம்)

2. பல + யானை
பலயானை / பல்யானை
(சங்ககால சேர மன்னனுடைய சிறப்புப்பெயர்)

3. பல + துளி
பலதுளி / பல்துளி / பஃறுளி
(சங்ககால ஆற்றினுடைய பெயர்)
#குற்றியலுகர_முற்றியலுகரப்_புணர்ச்சி

1. ஒரு தொடரில் முதல் சொல் குற்றியலுகரமாகவோ முற்றியலுகரமாகவோ இருந்து அடுத்த சொல்லில் உயிரெழுத்து வந்தால்,
முதல் சொல்லின் கடைசி எழுத்தில் உள்ள "உ" மறைந்து விடும்.
பிறகு உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே என்ற விதிப்படி ஒன்றுசேர்ந்து விடும்.
#புணர்ச்சி_விதிகள்
#குற்றியலுகர_முற்றியலுகரப்_புணர்ச்சி

எ.கா :

சார்பு + எழுத்து - சார் + எழுத்து - சார்பெழுத்து

நாடு + எனும் - நாட் + எனும் - நாடெனும் (செந்தமிழ் நாடெனும் போதினிலே)

துறவு + ஒழுக்கம் - துறவொழுக்கம் (முற்றியலுகரம்)
#புணர்ச்சி_விதிகள்
#குற்றியலுகர_முற்றியலுகரப்_புணர்ச்சி

2. ஒரு தொடரில் முதல் சொல் குற்றியலுகரமாகவோ முற்றியலுகரமாகவோ இருந்து அடுத்த சொல்லின் முதலெழுத்து யகரத்தில் தொடங்கினால்,
முதல் சொல்லின்
கடைசி எழுத்தான
உ - இ'யாக மாறும்.

(குற்றியலுகரம் குற்றிய/முற்றிய/லிகரமாக மாறும்)
#புணர்ச்சி_விதிகள்
#குற்றியலுகர_முற்றியலுகரப்_புணர்ச்சி

எ.கா :

நாடு + யாது - நாடியாது
(குற்றியலுகரம் - குற்றியலிகரம்)

துறவு + யாது - துறவியாது
(முற்றியலுகரம் - முற்றியலிகரம்)
#புணர்ச்சி_விதிகள்
#குற்றியலுகர_முற்றியலுகரப்_புணர்ச்சி

இதற்கான புணர்ச்சி விதி:

"உயிர்வரின் உக்குறள் மெய்விட் டோடும்;
யவ்வரின் இய்யாம்
முற்றும்அற் றொரோவழி".

புணர்ச்சி சூத்திரங்கள்
யாவற்றையும்
மனனம் செய்துகொள்ளுங்கள்.
அப்போதுதான் குழப்பங்கள் நீங்கும்.
#புணர்ச்சி_விதிகள்

புணர்ச்சி விதிகளில் நாம் அடுத்ததாக பார்க்க போவது #ஈற்றுப்புணர்ச்சி.
ஈறு என்றால் ஒரு சொல்லின்னுடைய கடைசி என்று பொருள்.

முதலாவதாக நாம் பார்க்கப்போவது
#உயிரீற்றுப்_புணர்ச்சி

இதனுடைய விதி :-
"இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்"
#புணர்ச்சி_விதிகள்
#ஈற்றுப்புணர்ச்சி
#உயிரீற்றுப்_புணர்ச்சி

இரண்டு சொற்கள்
சேரும்போது...
இரண்டாவது சொல்லில் உயிர் எழுத்துக்களோ, உயிர்மெய்யெழுத்துக்களோ இருந்தால்,
அவை வல்லின எழுத்துக்கள் ஆக இருந்தால்
"க் ச் த் ப்" ஆகிய ஒற்றுகள் மிகுந்து வரும்.
இவை
இரண்டு வகையில்
வரலாம்...👇
#புணர்ச்சி_விதிகள்
#ஈற்றுப்புணர்ச்சி
#உயிரீற்றுப்_புணர்ச்சி

1. இயல்பாக புணரும் புணர்ச்சி.

இரண்டு சொற்கள்
இயல்பாகப் புணரும் பொழுது
ஒற்று வரக்கூடும்.

எடுத்துக்காட்டு :

திரு+குறள் = திருக்குறள்
பலா + சுளை = பலாச்சுளை
தத்து + பிள்ளை - தத்துப்பிள்ளை
#புணர்ச்சி_விதிகள்
#ஈற்றுப்புணர்ச்சி
#உயிரீற்றுப்_புணர்ச்சி

2. விதியினும் புணர்ந்து வரும்.

அதாவது...
வேறொரு புணர்ச்சி விதிகள் மூலமாக புணர்ந்து வருவது.

எடுத்துக்காட்டு :-

"மரம் + தச்சன்"
மர (மகர ஈற்றுப் புணர்ச்சி)
+
தச்சன்
=
"மரத்தச்சன்"
#புணர்ச்சி_விதிகள்
#உடம்படுமெய்

அடுத்ததாக நாம் பார்க்கப்போவது #உடம்படுமெய்.
இதை #உடன்படு_மெய் என்று கூற வேண்டும்.
ஒரு சொல்லின் கடைசியில் உயிர் எழுத்து / உயிர்மெய் எழுத்து இருந்து,
அடுத்த சொல்லின் துவக்கத்தில் உயிரெழுத்து இருந்தால் அவைகளை சேர்க்கும் பொழுது சரியாகப் புணராது...
#புணர்ச்சி_விதிகள்
#உடம்படுமெய்

ஒரு சொல்லின் கடைசியில்
உயிர் / உயிர்மெய் எழுத்து இருந்து,
அடுத்த சொல்லின் துவக்கத்தில் உயிரெழுத்து இருந்தாலும் அவைகளை சேர்க்கும் பொழுது சரியாகப் புணராது.
அதை சரி செய்வதற்காக
இந்த உடம்படுமெய் பயன்படுத்துகிறோம்.
#புணர்ச்சி_விதிகள்
#உடம்படுமெய்

உடம்படுமெய் புணர்ச்சிக்கான
விதி -

"இ, ஈ, ஐ வழி யவ்வும்;
ஏனை உயிர்வழி வவ்வும்;
ஏ முன் இவ்விருமையும்;
உயிர்வரின் உடம்படுமெய் யென்றாகும்."
#புணர்ச்சி_விதிகள்
#உடம்படுமெய்

உடம்படுமெய் புணர்ச்சி விதியை மூன்றாக பிரிந்து விளக்கம் கொள்வோம்.

1. "இ, ஈ, ஐ" வந்தால் - யகரம் வரும்

2. "மற்ற உயிரெழுத்து" வந்தால் - வகரம் வரும்

3. "ஏ" வந்தால் - 'யகரம்' (அ) 'வகரம்' வரும்.

கீழ்வரும் கீச்சுகளில் சற்று விளக்கமாக காண்போம்👇
#புணர்ச்சி_விதிகள்
#உடம்படுமெய்

1. நிலைமொழி ஈற்றில் உயிர் எழுத்து ஆகிய
"இ ஈ ஐ" வந்து
வருமொழியில் உயிர்எழுத்துக்கள் வந்தால் அவை புணரும் பொழுது நடுவில் "யகரம்" வர வேண்டும்.

அணி(ண் + இ) + இலக்கணம் - அணியி(யகரம்)லக்கணம்

ஈ + அடித்தான் - ஈய(யகரம்)டித்தான்

வாழை + இலை - வாழை'யி'லை
#புணர்ச்சி_விதிகள்
#உடம்படுமெய்

2. இவை (இ ஈ ஐ) தவிர
மற்ற உயிர் எழுத்துக்கள் நிலைமொழியின் ஈற்றில் வந்தால்
"வகர" எழுத்து நடுவில் வரும்.

வருமொழியின் முதலெழுத்து உயிரெழுத்தாக இருக்க வேண்டும்.

எ.கா :

நிலா(ல் + ஆ) + அழகு -
நிலா(வகரம்)வழகு
#புணர்ச்சி_விதிகள்
#உடம்படுமெய்

3. நிலைமொழியின்
ஈற்றில் "ஏ" வந்து
வருமொழி முதலில் உயிர் எழுத்து வந்தால்
"யகரமோ வகரமோ" வரலாம்.

எ.கா :

ஏ + எய்தான் -

ஏவெ(வகரம்)ய்தான்,

ஏயெ(யகரம்)ய்தான்.
#புணர்ச்சி_விதிகள்
#பண்புப்பெயர்_புணர்ச்சி

அடுத்ததாக நாம் பார்க்கப்போவது
பண்புப்பெயர் புணர்ச்சி.

இதற்கு #மையீற்று புணர்ச்சி என்றும் ஒரு பெயர் இருக்கிறது.

ஒரு சொல்லின் உடைய
கடைசி எழுத்தில்
"மை" என்பது வந்தால்..!
எப்படி புணர வேண்டும் என்பதே மையீற்று புணர்ச்சி.
#புணர்ச்சி_விதிகள்
#பண்புப்பெயர்_புணர்ச்சி
#மையீற்று_புணர்ச்சி

விதி :

"ஈறுபோதல்;
இடை உகரம் இய்யாதல்;
ஆதி நீடல்;
அடியகரம் ஐ ஆதல்;
தன்னொற்று இரட்டல்;
முன்னின்ற மெய் திரிதல் ;
இன மிகல் இணையவும்
பண்பிற்கு இயல்பே"

விதியின்படி மொத்தம் ஏழு வகைகள்.
அவற்றை ஒன்றொன்றாக இனி பார்ப்போம்...
#புணர்ச்சி_விதிகள்
#பண்புப்பெயர்_புணர்ச்சி
#மையீற்று_புணர்ச்சி

1️⃣ஈறு போதல் -

நிலைமொழியின்
ஈற்றில் "மை" விகுதி வந்தால்
அது அழிந்துவிடும்.

அதுவே ஈறு போதல் ஆகும்.

எ.கா :

வெண்மை + குடை - வெண்குடை

கருமை + மேகம் - கருமேகம்
#புணர்ச்சி_விதிகள்
#பண்புப்பெயர்_புணர்ச்சி
#மையீற்று_புணர்ச்சி

2️⃣ இடை உகரம் இய்யாதல் -

நிலைமொழியில் நடுவில் உள்ள எழுத்து உகரமாக இருந்தால் இகரமாக மாறும்.

பெருமை+அவன் - பெரியவன்

ஈறுபோதல்படி மை விகுதி அழிந்துவிட்டது.

பிறகு
ரு(ர்+உ)- ரி(ர்+இ) ஆக மாறியது

சிறுமை+அவன் - சிறியவன்
#புணர்ச்சி_விதிகள்
#பண்புப்பெயர்_புணர்ச்சி
#மையீற்று_புணர்ச்சி

3️⃣ ஆதி நீடல் -

நிலை மொழியின் முதல் எழுத்து நீண்டு ஒலிப்பது ஆதி நீடல் ஆகும்.
ஆதி என்றால் முதல் என்று பொருள்.

எ.கா :
பெருமை + ஊர் - பேரூர்.
பெருமை + ஊர் - பேரூர்

ஈறுபோதல்படி மை விகுதி அழிந்துவிட்டது
(பெருமை - பெரு).

பெ என்ற முதல் எழுத்து பே என்று நீண்டது (பெரு - பேரு).

முற்றியலுகர புணர்ச்சி படி
உ அழிந்தது (பேரு - பேர்).

உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே என்ற விதிப்படி பேரூர் ஆனது (பேர் + ஊர் - பேரூர்)
#புணர்ச்சி_விதிகள்
#பண்புப்பெயர்_புணர்ச்சி
#மையீற்று_புணர்ச்சி

4️⃣ அடி அகரம் ஐ ஆதல் -

நிலைமொழியில் உள்ள
முதல் எழுத்து
அகரமாக (அ) இருந்தால்
ஐகாரமாக (ஐ) மாறும்.

எ.கா :
பசுமை + தமிழ் - பைந்தமிழ்.
எ.கா :
பசுமை + தமிழ் - பைந்தமிழ்.

ஈறு போதல் என்ற விதிப்படி மை விகுதி அழியும் (பசுமை - பசு).

அடி அகரம் ஐ ஆதல் என்ற விதிப்படி பைசு ஆக மாறும்
(ப(ப்+அ)சு - பை(ப்+ஐ)சு)

குற்றியலுகரப் புணர்ச்சிபடி
உ மறையும் (பைசு - பைச்)

இனமிகல் என்று விதிப்படி வருமொழியின் இனம் மிகும்
(பைச் - பைந்)
#புணர்ச்சி_விதிகள்
#பண்புப்பெயர்_புணர்ச்சி
#மையீற்று_புணர்ச்சி

5️⃣ தன் ஒற்று இரட்டல் -

நிலைமொழியில் உள்ள
ஒற்று எழுத்து மீண்டும் வந்தால் அது தன்னொற்றிரட்டல் என்று கூறப்படும்.

எ.கா :
சிறுமை + ஊர் - சிற்றூர்
எ.கா :
சிறுமை + ஊர் - சிற்றூர்

ஈறு போதல் - மை விகுதி அழிந்துவிட்டது
(சிறுமை - சிறு)

முற்றியலுகரப் புணர்ச்சி
உ மறைந்துவிட்டது
(சிறு - சிற்)

தன்னொற்றிரட்டல் விதிப்படி
ஒற்று இரட்டியது
(சிற் - சிற்ற்)

உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே...
சிற்றூர் ஆனது
(சிற்ற் + ஊர் - சிற்றூர்)
#புணர்ச்சி_விதிகள்
#பண்புப்பெயர்_புணர்ச்சி
#மையீற்று_புணர்ச்சி

6️⃣ முன் நின்ற மெய் திரிதல் -

நிலைமொழியில் உள்ள
கடைசி மெய் எழுத்து
வேறு ஒரு மெய்யெழுத்தாக மாறுவது
முன்னின்ற மெய்திரிதல் ஆகும்.

எ.கா :
வெம்மை + நீர் - வெந்நீர்.
எ.கா :
வெம்மை + நீர் - வெந்நீர்.

ஈறுபோதல் என்ற விதிப்படி
"மை" விகுதி அழிந்தது
(வெம்மை - வெம்).

முன் நின்ற மெய் திரிதல் என்ற விதிப்படி
"ம்" - "ந்' ஆனது
(வெம் - வெந்).

வெந் + நீர் - வெந்நீர்.
#புணர்ச்சி_விதிகள்
#பண்புப்பெயர்_புணர்ச்சி
#மையீற்று_புணர்ச்சி

7️⃣ இனமிகல் -

நிலைமொழியில் உள்ள
கடைசி மெய் எழுத்து
ஒரு இன மெய்யெழுத்தாக
மாறுவது இனமிகல் ஆகும்.

எ.கா :
செம்மை + தமிழ் - செந்தமிழ்.
எ.கா :
செம்மை + தமிழ் - செந்தமிழ்.

ஈறு போதல் என்ற விதிப்படி
"மை" விகுதி அழிந்தது
(செம்மை - செம்).

இனமிகல் என்ற விதிப்படி
"ம்" - "ந்" ஆனது.

தமிழ் என்ற சொல்லில் உள்ள
"த" விற்கு "ந்" இன எழுத்து ஆகும்
(செம் - செந்).

செந் + தமிழ் - செந்தமிழ்
#பண்புப்பெயர்_புணர்ச்சி

பண்பு பெயருக்குரிய விதி : -

செம்மை சிறுமை சேய்மை தீமை
வெம்மை புதுமை மென்மை மேன்மை
திண்மை உண்மை நுண்மை இவற்றெதிர்
இன்னவும் பண்பின் பகாநிலைப் பதமே.

இவ்வாறெல்லாம் பதங்கள் வரலாம்,
இவற்றுடன் வேறு சிலவும் வரலாம்.
இவற்றை பகுக்க முடியாது.
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Keep Current with ༺ இரவி ༻

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!