#Vivek_Gananathan_Thread
இந்தியாவில் இருக்கும் மதச்சிறுபான்மையினர், மொழிச்சிறுபான்மையினர் நடத்தும் மருத்துவக்கல்லூரிகளுக்கும் நீட் தேர்வு பொருந்தும் என 29.04.2020 அன்று தீர்ப்பளித்துள்ளது உச்சநீதிமன்றம்.
நீட் - ஐ முன்னிறுத்துவதில் முஸ்தீபு காட்டும் இந்தியாவின் அடிப்படை சுகாதாரச் சிக்கல் என்ன?
2017 மார்ச்சில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை, 2020 மார்ச்சிலிருந்து கண்கூடாக நம் கண்முன் நடந்துவருகிறது.
அவருக்குப் பின்னால் அவருடைய கணவர் பீகார் மாநிலத்தின் மருத்துவ வசதிகளைத் திட்டிக்கொண்டே ஓடுகிறார்.
காரணம் என்ன தெரியுமா?
மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.
இறந்தபிறகும் ஆம்புலன்ஸ் கிடைக்கவில்லை.
இருதயத்தை குலைநடுங்கச் செய்யும் இந்தக்காட்சி நடக்கும் 2020, இந்தியா வல்லரசாகிவிடும் என ஒரு தலைமுறையே நம்பிக்கொண்டிருந்த ஆண்டு என்பது வரலாற்று முரண்நகை.
2018ல் வெளியிடப்பட்ட, சாமானியனுக்கு மருத்துவ வசதியை எளிமையாக அணுகுவதற்கான சாத்தியக்கூறுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 145வது இடத்தில் இருக்கிறது. இந்தியாவைவிட வங்கதேசமும், இலங்கையும் மேலே உள்ளன.
2019 ஜனவரி திட்டத்திற்கான வழிகாட்டல்கள் வழங்கப்பட்டன.
இந்தியாவில் உள்ள அரசு மருத்துவமனைகளை தனியாருடன் இணைக்கும் நாசகார அறிவிப்பே அது.
இந்த அறிவிப்புக்கு மிகக்கடுமையான எதிர்ப்புகள் எழுந்தது. இந்திய மருத்துவ பணியாளர்களின் உயர்ந்த அமைப்பான இந்திய மருத்துவ கூட்டமைப்பு ,
தொற்றுநோய் காலத்தில் ஒரு தேசத்தின் ஆரோக்யத்தைக் காப்பாற்றக் கூடியது, அந்நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பு தான்.
அந்த சுகாதார கட்டமைப்பின் அடிப்படைகள் மூன்று.
2. போதுமான மருத்துவர்கள்
3. எந்நேரமும் உறுதிசெய்யப்பட்ட மருத்துவ வசதிகள்,
உட்கட்டமைப்பு
இந்த மூன்றிலும் இந்தியாவிலேயே தேர்ந்த மாநிலம் தமிழ்நாடு. இந்த மூன்றுக்கும் எதிரான சமூகச் சூழலை உருவாக்கக்கூடியது நீட் தேர்வு.
2010வரை தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட மருத்துவர்கள் 86 ஆயிரம். 2019ல் 1.34 லட்சம். இந்தியாவிலேயே மிக அதிகமான வளர்ச்சி விகிதம் இது.
தனியாருக்குத் தாரைவார்க்கத் துடிக்கின்றது.
இரண்டு கேடுகளுக்கும் ஒரே சூத்திரம், நீட் தேர்வு.
கணிசமாக குறைந்துள்ளது. இந்தியா அளவில் உள்ள மொத்த மருத்துவர்களின் எண்ணிக்கையில், 10% பேர் அரசு மருத்துவர்கள். தமிழகத்தின் இவ்விகிதம் 5.6% ஆக குறைந்துள்ளது.
சமூக நீதி !
அப்படியான சேவை செய்யும் ஜெயமோகன்கள் உருவாகவேக்கூடாது என்கிற நீட் தேர்வு.
அன்றைக்கு அனிதா சாட்சியாக நாங்கள்
கேட்டது. இன்றைக்கு அகில உலக சாட்சியாக கொரோனா வைரஸ் கேட்கிறது.
ஏய், ஏழை இந்திய தேசமே... உனக்கு எதற்கு நீட் தேர்வு ?
- விவேக் கணநாதன்.