My Authors
Read all threads
🌺Bharatha Varsham and Sanadhana Dharmam🌺

#BharathVruksh

ஸமஸ்க்ருத எழுத்தின் ஆதி வடிவம் *க்ரந்த எழுத்து வடிவம்* என்று சொல்லப் படுகின்றது. காய்ந்த பனை ஓலைகளில் எழுதப்பட்டதை ”பத்ரம்” என்று ஸமஸ்க்ருதத்தில் கூறுவர்.

பழம் ஸமஸ்க்ருத எழுத்துக்களையும் இங்கே பார்ப்போம்.
பழம் ஸமஸ்க்ருத எழுத்துரு ஓலையில்
பழம் ஸம்ஸ்க்ருத எழுத்துரு முழு ஓலை நூல்
பழம் ஸம்ஸ்க்ருத எழுத்துரு தங்கம் கலந்த கல்வெட்டில்
ஸமஸ்க்ருத எழுத்துக்களும் காலப் போக்கில் மாறி இருக்கின்றன. அவற்றின் எழுத்துருவில் மாற்றம் பெரிதாக இல்லை.

அவையும் வளர்ச்சி கண்ட, சற்றே எளிமையாக்கப்பட்ட வடிவங்களே. தமிழுக்குக் கிடைத்த அளவிற்கு, ஸமஸ்க்ருதத்தில் தொல்லியல் எழுத்துக்கள் கண்டெடுக்கப் படவில்லை ஆகினும், லட்சக் கணக்கான
ஸமஸ்க்ருத ஓலைச்சுவடிகள் வெளிநாட்டின் பல்கழைக்கழகங்களிலும், அருங்காட்சியகங்களிலும் வைக்கப் பட்டுள்ளன.

Source: Dr. Sheshashyan Deshmukh story of Indologist of City.

இதில்,”Germany, London, Australia, USA, Austria”ஆகிய நாடுகளால் நம் பாரத் வர்ஷத்தின்
(பாரதம் மற்றும் மத்திய ஆசியத்தின்) ஒப்புயர்வற்ற ஓலைச் சுவடிகள் பிடுங்கிச் செல்லப்பட்டு, நம் அறிவு எவ்வாறு மழுங்கடிக்கப் பட்டது என்பதை விளக்கி இருக்கின்றார்.

மேலும், ஸமஸ்க்ருதத்தில் இருந்த பல்லாயிரக் கணக்கான ஸ்ருதி, ஸ்ம்ருதி போன்றவற்றை நம் நாட்டில் இருந்து
கொள்ளை அடித்துச் செல்லப்பட்டுவிட்டன.

எழுத்துக்களின் தோற்றம் குறித்து ஒவ்வொரு ஆய்வாளரும் ஒவ்வொரு கருத்தைத் தெரிவிக்கின்றனர். அவற்றுக்கான ஆதாரமாக ஒவ்வொரு காரணத்தைக் கூறுகின்றனர். இதில் ஆய்வாளர்களுக்கு உள்ளேயே சிலபல கருத்து வேறுபாடுகளும் இருக்கத்தான் செய்கின்றன.
*திரு. ஐராவதம் மஹாதேவன்* தனது ஆய்வுகளின் அடிப்படையில்,

“தமிழின் பழமை கண்டிப்பாக கி.மு. 10 ஆயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்டதாகத்தான் இருக்க வேண்டும். அன்று முதல் தமிழ் வளர்ச்சி பெற்றிருக்கின்றதே தவிர, ஒரு போதும் மாற்றம் பெறவில்லை”

என்கின்றார்.
இவ்வாறு பற்பல முரண்பாடுகள் இருப்பினும்,

”தமிழும் ஸமஸ்க்ருதமும் எழுத்துருவில் கி.மு. 3000 க்கு உட்பட்டுத்தான் வந்தன. அதற்கு முன்னர் இல்லை”

எனக்கூறும் வல்லுநர்களுக்கு,தொல்லியல் துறையின் ஆராய்ச்சி முடிவிற்கும், நிலவியல் ஆராய்ச்சியில் காணக் கிடைக்கும்
மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்ட, வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள குறிப்புகளின் கண்டுபிடிப்பிற்கும் உள்ள வித்தியாசம் பற்றியும்....

அவற்றை அன்றே எழுதியவர்கள் பற்றிய குறிப்பு உள்ளது பற்றியும் கேட்டால், கண்டிப்பாக பதிலளிக்க இயலவில்லை.
அவர்களைப் பொறுத்தவரை ”கிடைக்கும் ஆதாரங்கள் கொண்டு மட்டும் தான் நாங்கள் கூற முடியும்” என்று இறுதியாக ஒரு வார்த்தையைப் போட்டு முடித்துவிட முடியும். அவ்வாறு தான் செய்கின்றார்கள்.

ஆனால் நாம், நம் வேத கால முன்னோர் கூற்றுக்கு எதிரான வலுவான நிரூபணம் இல்லாத பட்சத்தில்
முன்னோர்கள் கூற்றையே உண்மை என ஏற்பதில் தயக்கம் ஏன்??

எனவே இரண்டாவது ஆதாரமாக, எழுத்துரு மாற்றங்கள், வளர்ச்சிகள் என்ற பெயரில், கால மாற்றத்தினால் நிகழ்ந்துள்ளன என்பதையும், ஆதி காண ஆதாரம் இல்லை என்பதையும் ஒப்புக் கொண்டு...

எது முதலில் வந்தது, எது பின்னே வந்தது என்ற வாதத்தை
ஒழித்து விட்டு, இரண்டையும் ஏற்கும் மன நிலைக்கு வருவது நன்று!!

🌿1 : 2🌿

மொழிகளின் வார்த்தைத் தோற்றங்கள்:

ஸமஸ்க்ருதம்:

1) ஸமஸ்க்ருதத்தில் மொத்த எழுத்துக்களே 52 தான்.
2) குறைந்த எழுத்துக்கள் கொண்டதால், அம்மொழியில் முக்கால்வாசி வார்த்தைகளும் சிறியதே.
3) மேலும் ஒரே வார்த்தைக்கு எண்ணற்ற அர்த்தங்களும் உள்ளன.
4) ஒரே அர்த்தத்திற்கு எண்ணற்ற வார்த்தைகளும் உள்ளன.
5) அதில் ஓர் எழுத்து மட்டுமே ஒரு வார்த்தையாகப் பல இடங்களில் விளங்குகின்றது.
6) பெரும்பாலான வாக்கியங்களில், அந்த ஒற்றை எழுத்து வார்த்தைகள் அதன் முன்னால்
அல்லது பின்னால் உள்ள வார்த்தையோடு இணைந்து விடுகின்றது. இதனால், வார்த்தையின் அளவு இன்னும் குறைகின்றது.

உதாரணமாக:

தூங்கு - *ஸோ* , பருகு - *பீ* , அழு - *ரோ* இல்லை - *ந* , அம்மா - *மா* , அப்பா - *பா*

இது போன்ற எண்ணற்ற வார்த்தைகள் உள்ளன. இவ்வார்த்தைகள் தரும் பொருள்களுக்கு
வேறுபல வார்த்தைகளும் உள்ளன. ஆனால் அவை எல்லாம் இடத்திற்கேற்றார் போல் பயண்படுத்தப் படுகின்றன.

7) ஸமஸ்க்ருத எழுத்துக்கள் ஒலியின் அடிப்படையில் அமைந்துள்ளன.
8) அவ்வொலிகளை எழுத்துக்களுடன் சிறு வளைவு, புள்ளி, கீழ்க்கோடு, பக்கக்கோடு என சிறு சிறு வித்தியாசத்தின் மூலம் இணைத்து விடலாம்.
9) சிறு இணைப்புகள் மூலம் ஒரே எழுத்தில் பல அர்த்தங்களைக் கொண்டு வந்து விடலாம்.

இப்படிப்பட்ட வசதிகள் ஸமஸ்க்ருதத்தைத் தமிழோடு ஒப்பு நோக்கும் போது மட்டும் அல்ல, மற்ற மொழிகளுடன் ஒப்பு நோக்கும் போதும் இருக்கிறது என்பதைக் கண்டறிந்தனர்.

இதைக் கொண்டு ஆய்வாளர்கள் சிலர்,
ஸமஸ்க்ருதத்தை தங்கள் மொழிகளுடன் ஒப்பு நோக்கியது போக, அடுத்ததாக மென்பொருள் மொழியுடனும் தொடர்புப் படுத்திப் பார்க்க ஆரம்பித்தனர்.

இது பற்றிய ஆராய்ச்சிகள் மேற்கொண்ட ஒர் மென்பொருள் ஆய்வாளர், அவ்வெழுத்துக்கள் பற்றிய உண்மையைப் பற்றிய ஆய்வுக் கட்டுரை வெளியிட்டுள்ளார்.
Source:

1)
Tom Goldenberg
medium.com/@tomgoldenberg…

2)
LinkedIn Top Voice in technology யில் Data Engineer @quantumblack.
Former CTO & co-founder @commandiv.

ஆகியோர் இது பற்றிய தனது ஆதாரத்தைக் கொடுத்துள்ளனர்.

3)
USA, NASA’s Computation Research Centre, California
இதில் பணி புரியும் Dr. Rick Briggs என்பவர்

”இப்புவியில் நேரடிப் பொருள் தரும் ஒரு தனித்துவமான மொழி ஸமஸ்க்ருதம் மட்டுமே.

இம்மொழி பேசும் வார்த்தைகளுக்கு விளக்கம் என்பதே தேவையில்லை.

கணினி மூலமும் கூட, மிகமிகக் குறைந்த வார்த்தைகளால் செய்தியை தரக்கூடிய ஒரே புவியியல் மொழி இது தான்.
இது தாண்டிய ஒரு நிலையான, அத்தியாவசியம் கொண்ட உண்மை என்ன என்றால்,

ஸமஸ்க்ருத மொழி ஒரு சிறந்த பேச்சுப் பயிற்சி மொழி.

இம்மொழி வாய் உச்சரிப்பு, தொண்டை வலிமை, குரல் வலிமை, ஸ்ருதி, நாக்குப் பிறழ்வு மற்றும் மற்றும் தீர்க்கமான ஒலி ஆகியவற்றை மிக மிகச் சரியான முறையில் கொடுப்பதால்,
பேச்சு, குரல், நாக்குப் பிறழ்வு போன்றவற்றில் பிரச்சனைக்காக மருத்துவர்களை அனுகும் மொழிப் பயிற்சிக்கு, இவ்வுலகில் மிகச் சிறந்த தேர்வு மொழி ஸமஸ்க்ருதம் மட்டுமே”

என்று, மேற்கண்ட கருத்துக்களைத் தீர்மாணமாகத் தெரிவித்துள்ளார்.

Source ; scientificmystery.com/scientific-lan…
தமிழ்:

1) தமிழில் 247 எழுத்துக்கள் உள்ளன.
2) ஸமஸ்க்ருதத்திலும் இல்லாத சிறப்பெழுத்து “ழ” தமிழில் உள்ளது.
3) ”ஹ்” எனும் ஆய்த எழுத்து மட்டும், ”ஃ” என்னும் வடிவில் உள்ளது.
4) இதிலும், ஒற்றை எழுத்துக்களில் பொருள் கொண்ட எண்ணற்ற வார்த்தைகள் உள்ளன.

உதாரணமாக:
பூ, வா, போ, நீ, கை, ஆ போல்
பல எழுத்துக்கள் பொருள்தரு எழுத்துக்களாக உள்ளன.

5) பழந்தமிழ் வழக்கில் இருந்த இது போன்ற பல எழுத்துக்கள் தற்போதைய தமிழ் வடிவில் இருந்து மறைந்து விட்டன.
6) இதிலும், இரு வார்த்தைகள் ஒன்றிணைந்து ஒரே வார்த்தையாக ஆகின்றன.
7) ஆனால், இவற்றின் வார்த்தைப் புணர்தலில்,
இரு வார்த்தைகளும் ஆளுமை மாறாது, எழுத்துக்கள் குறையாது தான் பெரும்பாலும் இருக்கின்றன.

8) மேலும் சந்தப் புணர்ச்சி என்று, அவற்றை ஒன்றினைக்க புதிய எழுத்து ஒன்றும் உருவாகி விடுகின்றது.

தமிழில் வார்த்தைச் சுருக்கம் என்பது பெரிதும் இல்லாத காரணத்தால், ஒரு விஷயத்தைக் கூற முற்படுகையில்,
இதில் அதிகமான வார்த்தைகள் உபயோகப் படுத்தப்பட வேண்டி உள்ளது.

சில பழைய நூல்களில், லவ–குசன் இருவரும் ராமரின் அரண்மனைக்கு மாலையில் வந்து, இரண்டு மணி நேரத்தில் முழு ராமாயணத்தையும் பாடலாகப் பாடி விடுவதாகக் குறிப்புள்ளது. அதற்கு இம்மொழியின் தன்மையே காரணம் என்பதை நாம் ஏற்றாக வேண்டும்.
தமிழில் நாம் பெரிதாக நினைவில் கொள்ள வேண்டிய ஒரு பாடத்தை, ஸமஸ்க்ருதத்தில் மிகமிகக் குறைந்த அளவிலான வரிகளில் நாம் மனதில் பதிய வைத்து விடலாம்.

எனவே, அன்று பெரிய விஷயத்தையும் சிறியதாகக் கூற ஸமஸ்க்ருதம் உதவியாக இருந்ததால், அம்மொழியை முக்கிய நூல்களுக்காகத் தேர்வு செய்தனரே ஒழிய,
இதில் உயர்வு – தாழ்வோ பேதமோ பார்ப்பதற்கு ஒன்றும் இல்லை.

தற்போது, இவ்விரண்டையும் ஒப்பு நோக்கிடின், எழுத்துருவின்படி, ஸமஸ்க்ருதம் பிற மொழிகளை விடவும் மிக மிகக் குறைவான வரிகளில் எதையும் விளக்கி விட இயலும், அப்படித்தான் உள்ளது என்பது தெரியும்.
மேலும் முக்கியமாக, பாணினி இலக்கண நூலில் எழுதியபடி,

”*மஹேஸ்வர ஸூத்ரம்* எனப்படும் வெறும் 14 ஒலிகளைக் கொண்டே ஸமஸ்க்ருதம் தோன்றியது”

எனக் கூறியதை நாம் புரிந்து கொண்டால், இப்போது நமது கேள்விக்கான விடை கிடைக்கும்.

இப்போது இந்தக் குழப்பமும் தீர்ந்திருக்கும்.
🌿1 : 3🌿

சிலருக்கு இன்னும் மனதில் சிறு சந்தேகம் ஒட்டிக் கொண்டிருக்கும். அதாவது,

கே : 3

“தமிழில் அகத்தியரும், திருமூலரும், இன்னும் பல சித்தர்களும் எத்தனையோ நூல்களை அளித்திருக்கின்றார்கள்!

அவற்றில் வைத்தியம், மாந்த்ரீகம், ரஸவாதம், யோகாஸனம், ஆன்மீகம், ஞானம் என எத்தனையோ
விஷயங்கள் பற்றி அளித்திருக்கின்றனர். ஆனால், ஸமஸ்க்ருதத்தில் அப்படி பெரிய விஞ்ஞான பூர்வமான நூல்கள் இருப்பது போல் தெரியவில்லையே....

அப்படி இருக்க, இவ்விடத்தில் அது தமிழை விட இறக்கம் கொள்கின்றது தானே?”

என்பது தான்.
இக்கேள்விக்கு பதில் உரைக்க, நாம் சில நூற்றாண்டுகள் பின் நேக்கிச் செல்லத்தான் வேண்டும். அதாவது, கிட்டத்தட்ட 1000 ஆண்டுகள் என வைத்துக் கொள்வோமே.

நமது பாரதத்தின் மகிமையை, “பாரத வர்ஷம், பரத கண்டம்” என்னும் தலைப்புகளில் ஏற்கனவே பார்த்தோம். இவ்வுலகில் உள்ள பல நாடுகள்
நம்முடன் இருந்தன பாரத வர்ஷத்தில். எனவே பாரத வர்ஷம் முழுதும், நமது கல்வி மற்றும் அறிவார்ந்த விஷயங்கள் அதிகம் இருந்தன.

அப்படி இருக்கையில், அக்காலத்து அரசர்களின் வாழ்க்கை முறைப்படி ஒன்று, வேற்று நாடுகளில் பெண் எடுத்து அந்நாட்டை தங்களுடன் நட்புறவாக்கிக் கொண்டனர்.
அல்லது, அந்நாடுகளுடன் போர் தொடுத்து, அவற்றை அடிமை ஆக்கி, அவற்றின் வளங்களைப் பறித்து, தம் நாட்டிற்கு எடுத்துச் சென்று, அவர்களை ஆண்டனர்.

இந்த வேளையில், பாரத வர்ஷம் தாண்டிய பிற நாடுகளின் மக்களும் அரசர்களும் கூட, இவர்களின் வாழ்க்கையைப் பார்த்து,
இவர்களைத் தன் பிடியில் வைக்க முயன்றார்கள்.

போர்ச்சுக்கீஸ் படையெடுப்பு, சுல்தான்கள் வரவும் ஆதிக்கமும், முகலாயர்கள் படையெடுப்பு, ஃப்ரெஞ்ச் நாட்டினரின் படையெடுப்பு, ப்ரிட்டிஷ் நாட்டினரின் படையெடுப்பு என வரிசையாக நமது பாரதம் தொடர்ந்த தாக்குதலுக்கு உள்ளானது.
அதிலும் குறிப்பாக முகலாயர்களின் காலத்தில், உயிர் வாழ்ந்தால் போதும் என்ற நிலை ஏற்பட்டது பாரத மக்களுக்கு. அவர்கள் முக்கியமாக நமது செல்வத்தைத் தான் கொள்ளை அடித்தனர். நம்மை அநேகமாக ஏழையாக்கினர்.

இவ்வேளையில் ப்ரிட்டிஷர், நம் வேத நூல்களும் குருகுலக் கல்வியும், கோவில்களும் தான்
நமது சிறந்த கல்வி அறிவிற்குக் காரணம் என்பதை உணர்ந்தனர். இக்கல்வியை நம்மிடம் இருந்து ஒழித்தால், நம்மை எளிதில் அடிமை ஆக்கலாம் என்பதை உணர்ந்து, முதலில் நம் கோவில்களை முகலாயருக்கு அடுத்து த்வம்ஸம் செய்தனர்.

குருகுலக் கல்வி முறையை ஒழித்தனர். நமது ஸ்ம்ருதி, ஸ்ருதி, ஸம்ஹிதை, இன்னும் பல
லட்சக்கணக்கான ஸமஸ்க்ருத நூல்களை கொள்ளையடித்துச் சென்றனர்.

கிட்டத்தட்ட 9000 ஆண்டுகளின் தொடர் படையெடுப்பினால், கல்வி முறையில் மாற்றத்தை ஏற்படுத்தி, பாரம்பரியக் கல்வியை முழுவதுமாக குலைத்ததனால், நமது குருகுலக் கல்வி அடிபடத் துவங்கியது.
அதைத் தவிர, புரட்சி என்ற பெயரில் வந்த கம்யூனிஸக் கொள்கையும், மேற்கத்திய கல்வி, கலாச்சார முறைகளும், சுயலாபம் பெற வளர்ந்த நாத்திகவாத, பகுத்தறிவு இயக்கங்களும், கிட்டத்தட்ட நமக்கு,

*நம் முன்னோர்கள் மடையர்கள், ஒன்றும் அறியாதவர்கள், முட்டாள்கள், மூட நம்பிக்கையை மட்டும் வளர்த்தவர்கள்*
போன்ற மாயத் தோற்றத்தை ஆழ் மனதில் ஒரு எண்ணமாக விதைத்து விட்டன. சில இன்றும் தொடர்கின்றன.

ஆனால் இன்றும், கேள்வி ஞானம் என்பதை நம் முன்னோர்கள் விட்டுச் சென்றதால் மட்டுமே நாம் பல விஷயங்களை நம்மகத்தே கொண்டுள்ளோம். நமக்கு அவர்கள் புராணக் கதைகளிலும், இதிஹாஸங்களிலும் கூறியவை எல்லாம்
அறிவியல் சார்ந்தவை தான் என்பதை இப்போது தான் மக்கள் உணரத் துவங்கி உள்ளனர்.

உதாரணமாக :

1) ராமாயணத்தில் இலங்கையில் இருந்து ராமர் திரும்பி வந்த *புஷ்பக விமானம்* பற்றி வால்மீகியின் ராமாயணத்தில் உள்ளது.

Source : வால்மீகி ராமாயணம்-யுத்த காண்டம்: ஸர்க்கம் : 20
விபீஷணன் அளித்த புஷ்பக விமானம் எண்ண அலைகளின் கட்டுப்பாட்டில் இயங்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

இதன் இயக்கத்தை Minnesota University–ல் தற்போது கண்டுபிடித்து, இவ்விதத்தில் ஒரு சிறு மாதிரி Helicopter தயார் செய்துள்ளனர்.

அதன் பெயர் Quadrocopter.
இதற்கு அவர்கள் உபயோகப் படுத்தியது *பாரத்வாஜ முனிவரின் வைமானிக ஸாஸ்த்ரம்* என்ற நூல் என்பது பல இடங்களில் செய்தியாக வெளிவந்துள்ளது.

Reference ;
cse.umn.edu/college/news/u…


☘️தொடரும்☘️

🍁வாஸவி நாராயணன்🍁
மன்னிக்கவும்.🙏 தட்டச்சின் போது பிழையானது. 9000 அல்ல.
”கிட்டத்தட்ட 900 ஆண்டுகளின் தொடர் படையெடுப்பினால், கல்வி முறையில் மாற்றத்தை ஏற்படுத்தி, பாரம்பரியக் கல்வியை முழுவதுமாக குலைத்ததனால், நமது குருகுலக் கல்வி அடிபடத் துவங்கியது”
எனப் படிக்கவும்.
நன்றி @Bharatfirst10 🙏
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Enjoying this thread?

Keep Current with Vasavi Narayanan

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!