My Authors
Read all threads
🌺Bharatha Varsham and Sanadhana Dharmam🌺

#BharathVruksh

2) ராவணன் ஸீதையை தூக்கிச் சென்றதை, *எல்லோரா*வில் சிற்பமாகச் செதுக்கி இருக்கிறார்கள்.

அது ராமாயணம் இல்லை என்றே வைத்துக் கொள்வோம். ஆனால், அந்த சிற்பத்தில் இருப்பது, நவீன காலத்தில் ஒரு மனிதன் பறப்பதற்கு உதவும் JET PACK
என்பது ஆதாரப் பூர்வமாக வீடியோவோடு வெளியிடப் பட்டுள்ளது.

Reference :

3) அடுத்ததாக, மஹாபாரதத்தில் வியாஸ முனிவர், திருதிராஷ்ட்ரனின் தேரோட்டி ஸஞ்ஜயனுக்கு **ஞானக் கண்** அளித்தார்.

அதன் மூலமாக, அரசனின் அருகில் அமர்ந்தவாறே,
குருக்ஷேத்ரத்தில் நடக்கும் யுத்தத்தை அரசனுக்கு விளக்குகின்றார் ஸஞ்ஜயன். கீதையில் வரும் ஆரம்ப ஸ்லோகம் அரசன் அதைக் கேட்பதைக் கூறும்.

”தர்ம க்ஷேத்ரே குரு: க்ஷேத்ரே
ஸமவேதா யுயுத்ஸுவ:
மாமகா: பாண்டவா ஸ்சைவ
கிம குர்வத ஸஞ்ஜயா”

இவ்வாறு தர்மக்ஷேத்ரமாகிய குருக்ஷேத்ரத்தில் என்ன நடக்கிறது
என்பதை திருதிராஷ்ட்ரன் கேட்பதில் தொடரும்.
”மஹாபாரதத்தில் வரும் ஞானக் கண் என்பது கொண்டு, எங்கோ நடப்பதைப் பார்க்க முடியுமா” ?

என்று அறிஞர்கள் முதற்கொண்டு பலர் கேலி செய்தனர். ஆனால் துரதிருஷ்ட வஸமாக, SAMSUNG நிறுவணமானது *AR Lens* எனும் Advanced Contact Lens ஒன்றைக் கண்டுபிடித்தது.
அதன் மூலம் ஃபோட்டோ, வீடியோக்கள் எடுக்கலாம். மேலும் மொபைலில் பார்ப்பதை அதில் பார்க்கலாம்.

Reference: itproportal.com/features/samsu…

இது முதல் படி. இதுவே முன்னேற்றம் கண்டால், எந்த இடத்தில் நடக்கும் நிகழ்வுகளையும், நாம் உட்கார்ந்த இடத்திலிருந்து பார்க்கலாம்.
அப்படியானால் ஞானக் கண் என்பது, இந்த AR Lens ன் மிக முன்னேறிய கண்டுபிடிப்பாக அந்தக் காலத்தில் ஏன் உபயோகப் படுத்தப் பட்டிருக்கக் கூடாது?

அது எல்லாரிடமும் எல்லா நேரமும் இல்லை என்கையில், அதுவும் அதிநவீன அறிவியலாய் ஏன் இருந்திருக்கக் கூடாது? நாம் விளங்கிக் கொள்ள இயலாததால் இப்பெயரில்
முனிவர் அருளால் கிடைத்தது எனக் கூறியிருக்கலாம். ஏனெனில், நம் முன்னோர் பல விஷயங்களை மறை பொருளாகத்தான் கதைகளில் தந்துள்ளனர்.

4) தமிழில் அகஸ்திய முனிவர், தனது ரஸவாத நூல் ஒன்றில், ஒரு உலோகத்தைத் தங்கம் ஆக்குவதற்கான செய்யுளைத் தந்துள்ளார். தற்போது அதைப் பார்ப்போம்...
அகஸ்தியர் ரஸவாதம்

”கேட்கவே மதியில் அப்பா
கிருபையாய்ப் பத்துக்கு ஒன்று
மீட்கவே உருக்கிப் பார்க்க
மிக்கது ஓர் மாற்றாகும்
வீட்கமாய்த் தகடு அடித்து
விருப்புடன் காவி தன்னில்
ஆட்கவே புடமும் இட்டால்
அப்பனே தங்கம் ஆமே”

இந்த ஸ்லோகத்தின் சரியான விளக்கம் இன்னும் கண்டுபிடிக்கப் படவில்லை.
அவர் கூற்றுப்படி, ஒரு உலோகத்தை உருக்குகையில், அதில் பத்தில் ஒரு பங்களவு கிடைக்கும் உலோகத்தை, தகடாக்கி, ஏதோ ஒரு ரஸவாதக் கலவை நீர் (காவி நிறத்தில் கூறுகின்றார்) அதில் அமிழ்த்தி, புடம் இட்டால் தங்கம் கிடைக்கும் என்கிறார்.

நாம் தான் இன்னும் விளங்கிக் கொள்ளவில்லை அதன் மறை பொருளை.
இந்த ரஸவாத நூல் போலவே ஸமஸ்க்ருதத்திலும் அறிவியல் நூல்கள் உள்ளன.

உதாரணத்திற்கு *வைமானிக ஸாஸ்த்ரம்* என்னும் Aeronautical Engineering (வானூர்தி பொறியியல்) பற்றிய நூல் ஸமஸ்க்ருதத்தில், பாரத்வாஜ முனிவரால் எழுதப்பட்டுள்ளது.
Source: வைமனிக ஸாஸ்த்ரத்தின் பழைய ஓலைக் குறிப்பின் பிரதி.
Source: திருச்செந்துறை கோவிலில், வைமானிக ஸாஸ்த்ரம் பற்றிக் கூறும் கல்வெட்டு.
நாம் விமானத்தைக் கண்டு பிடித்தவர்கள் Wright Brothers (ரைட் ப்ரதர்ஸ்) என்கின்றோம்.

ஆனால் அதற்கு எட்டு (8) ஆண்டுகள் முன்பே, MarutSakha என்று அழைக்கப்படும் மராத்திய ப்ரபு வம்ஸத்தில், *Shivkar Bhapuji Thalpade* (ஷிவ்கர் பாபுஜி தல்பாதே) என்பவர்,
Auto Pilot Flight (தானியக்கி விமானம் / விமானி இல்லாத விமானம்) ஒன்றை, 20 நிமிஷங்கள் வானில் பறக்க வைத்திருக்கிறார்.
இதற்கான ஆதாரங்கள் உள்ளன. டெக்கன் ஹெரால்ட் (Deccan Herald) மற்றும் டைம்ஸ் ஆஃப் இந்தியா (TOI) ஆகிய இரு பத்திரிக்கைகளும், அவ்விமானம் 1500 அடி உயரம் பறந்ததைக் குறித்தும் எழுதி இருக்கின்றன.

Source: millenniumpost.in/did-our-ancest…

Reference : vedicknowledgeoflife.blogspot.com/2012/11/vaiman…
இதைக் கொண்டு ஒரு திரைப்படமும் தயாரானது பற்றி, டைம்ஸ் ஆஃப் இந்தியா எழுதிய தொகுப்பும் உள்ளது.

Reference :

timesofindia.indiatimes.com/entertainment/…

இதற்கும் மேல் ஒரு சிறு ஆதாரத்திற்கு, வைமானிக ஸாஸ்த்ரத்தில் உள்ள, ஸுந்தர விமானம் தயாரிக்கும் பகுதியிலிருந்து, அதன் பறக்கும் வேகம் பற்றிய ஒரு ஸ்லோகம்!
இதற்கும் மேல், ஒரு சிறு ஆதாரத்திற்கு, வைமானிக ஸாஸ்த்ரத்தில் உள்ள, ஸுந்தர விமானம் தயாரிக்கும் பகுதியில் இருந்து, அதன் பறக்கும் வேகம் பற்றிய ஒரு ஸ்லோகம்!

”ஷுண்டாலைஷ்வ ததா கீல்காதிபி, ப்ரேரித்கமாத்|
க:டிகாவச்சிந்நகாலே யோஜனானா சதுஷ்ஷதம்||”
400 யோஜனை தூரம் = ஒரு க:டிகை.
ஒரு க:டிகை = 24 நிமிஷங்கள்.
ஓரு யோஜனை என்பது 8 - 10 மைல்கள். (சில ஆய்வாளர்கள் இன்னும் அதிக தூரம் என்று விளக்கம் தந்துள்ளனர்).

இந்த சிறு கணக்கின் படி பார்த்தாலும், இந்த ஸுந்தர விமானம் ஒரு மணி நேரத்தில் 8000 mph (Miles Per Hour)
அதாவது 8000 மைல்களைக் கடக்கும் – அதி அற்புதமான கால வேகம். இதில் நாம் யோசிக்க வேண்டிய மற்றும் ஒப்புக் கொள்ள வேண்டிய ஒன்று, இது வரை நமது அறிவியல் மூலம் இந்த அளவு வேகத்தில் தூரத்தைக் கடக்கும் விமானம் கண்டறியப் படவில்லை என்பது தான்.

ஒருவேளை இது பொய்யாக இருந்தால்? என்று கேட்பவர்க்கு,
தற்போது அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான *Pentagon* அதிகாரப் பூர்வமாக ஒரு பதிவை வீடியோவோடு வெளியிட்டுள்ளது.

அதாவது, *UFO* (Unidentified Flying Object) என்று நாம் தற்போது கூறும் ஒன்று வானில் பறப்பதை, ஒரு ராணுவ விமானி வீடியோ எடுத்திருக்கிறார். அதைத் தற்போது வெளியிட்டுள்ளது.
அந்த விமானியின் கூற்றுப்படி,

”தற்போது நம்மிடம் இருக்கும் அதிநவீன தொழில்நுட்பத்தின் மூலம் கூட இந்த வேகத்தில் பறக்கக் கூடிய விமானத்தைத் தயாரிக்க முடியாது”

என்பது தெளிவு படுத்தப் பட்டுள்ளது. மேலும் வைமானிக ஸாஸ்த்ரத்தில் இந்த UFO வடிவத்திலான
விமானங்களின் தயரிப்பு மற்றும் செயல் முறையும் கூட விளக்கப் பட்டுள்ளது.

Reference : google.com/amp/s/www.nbcw…

இது தவிர, கட்டிடவியல் (Civil Engineering), பூகோளம் (Geography), ஸரித்ரம் (History), அரசியல் தந்த்ரம் (Politics), போர் முறை (Types of War) மற்றும்
போர்க்கருவிகள் தொழில்நுட்பம் (Defence Weapons Mechanism) பொறியியல் (Mechanical Engineering), வான ஸாஸ்த்ரம் (Astronomy),

ஜோதிஷம் (Astrology), வேதியியல் நுட்பம் (Chemistry), மருத்துவம் (Medicine), உடலியல் (Anatomy) யோக ஆசனம் (Yogasana),
எனப் பல்வேறு வகையான நூல்கள் ஸமஸ்க்ருதத்தில்உள்ளன.

ஆனால் என்ன ப்ரச்சனை?? நாம் கூறியது போல, தற்போது அவை பல அயல் நாடுகளின் ஆய்வுக் கூடங்களிலும், பல்கலைக் கழகங்களிலும் உள்ளன. எஞ்சிய பல, மன்னர் வழி வம்சத்தினர் பலரிடம், குலப் பெருமை காக்க முடங்கிக் கிடக்கின்றது.
இவ்வாறு பரவிப் பிரிந்த காரணத்தால், நம்மால் தற்போது நூல்களாக நிரூபிக்க முடியவில்லையே தவிர, அவர்கள் கேள்வி ஞானத்தில் மேற்கூறியபடி, விட்டுச் சென்றவற்றைப் பார்த்தாலே, அதில் எத்தனை விஞ்ஞானம் உள்ளது என்பது புரியும்.

இது போக, முக்கியமான நான்கு வேதங்களான ரிக், யஜுர், ஸாமம், அதர்வணம்
இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விஷயம் பற்றியது. இறைமை மற்றும் யக்ஞம், வாழ்க்கை முறை, கலைகள், மந்த்ர-தந்த்ரங்கள் என பகுத்துக் கூறுகின்றன.

இவற்றினின்று, ஸமஸ்க்ருத நூல்களில் அறிவியல் மற்றும் வாழ்க்கைக் கல்வி உள்ளதையும், அவை ஏன் அதிகம் கையில் இல்லை என்பதையுக் கூடப் பார்த்து விட்டோம்.
நம் கையில் தற்போது உள்ள நூல்களில், நம் ஆதி மொழிகள் பற்றிய தெளிவான விவரங்கள் மொத்தமாக கிடைக்கப் பெறவில்லை. எனவே கிடைத்ததை வைத்துத்தான் நாம் இவற்றில் எந்த விஷயத்தையும் பற்றிய ஒரு முடிவுக்கு வருகின்றோம்.

அப்படி இருக்கையில், நமக்குக் கிடைக்கும் ஆதாரங்கள் கொண்டு, நாம் கணக்கு செய்யும்
ஒரு காலத்தையே அம்*மொழிகளின் காலம்* எனக் கூறிக் கொண்டிருக்கின்றோம். இது உண்மையில் பார்த்தால், சிறு குழந்தை ஒன்று, தான் பார்த்த எகிப்தின் ப்ரமிடைப் பற்றி இன்னொரு குழந்தையிடம் கூறும் போது,

“நான் ப்ரமிடை முழுதும் பார்த்து விட்டேன். அது பெரியது. உன்னையும் என்னையும் போல பத்து பேர்
ஒருவர் மேல் ஒருவர் ஏறி நின்றால் தான் உச்சியைப் பார்க்கலாம்….. அவ்வளவு பெரியது”

என்று சொல்லும். ஆனால், பத்து குழந்தைகளின் உயர அளவா அது?

நாமும் அப்படித்தான். நாம் அறிந்த அறிவியல் தான் பெரியது என நினைத்து, Advance Technology என எது நம்மிடம் உள்ளதோ, அதுவே துல்லியம் என நினைத்து,
ஒவ்வொன்றுக்கும் ஒரு கால அளவைத் தருகின்றோம். இது தவறு என்பது என் வாதம் அல்ல.

ஆனால், இதற்கு பதிலாக, நம் வேத காலத்தில் கூறப்பட்டுள்ள கணக்கினை, பெரியவர்கள் எழுதி வைத்ததை ஏற்றுக் கொண்டு, வரும் காலத்திற்கு தற்போதைய தகவல்களை மட்டும் அழியாதவாறு கொடுத்துச் செல்லுதல் நன்று.
இது வரை கொடுத்த தகவல்களில் இருந்து,

“தமிழ் – ஸமஸ்க்ருதம் இரண்டும் வாழ்க்கையின் மிகப் பெரிய அரிய பொக்கிஷமே. இவற்றினின்று, தமிழில் உள்ள அளவு ஸமஸ்க்ருத நூல்களில் அறிவியல் உள்ளதையும், அவை ஏன் கையில் இல்லை என்பதையுக் கூடப் பார்த்து விட்டோம்.”
நல்ல பண்புடை மனிதன் என்பவன், மொழி பேதம் இன்றி, *கல்வி கரையில* என்பதை உணர்ந்து, தான் கற்க நினைப்பது எதில் இருந்தாலும், அதனைப் படித்துப் பயன்பெறுபவனே.

எனவே, இனி நாம் நமக்குள் மொழி பேதம்,
உயர்வு – தாழ்வு இவற்றைத் தூக்கி எறிந்து, இது வரை சிக்கியிருந்த தமிழன் – ஆரியன் என்ற
பொய் வட்டத்தை உடைத்து வெளிவந்து, உண்மை உணர்ந்து, மென்மேலும் பண்பட்டு வாழ்வோம்.

அடுத்ததாக, மீதம் இருக்கும் ஒரே ஒரு பாகம் ஆன்மீகம் பற்றியது. இதில் இங்கே பாரதத்தைப் பற்றிப் பேசுவதால், ஸநாதன தர்மம் காட்டிய வழியில் வந்த இறைமை பற்றி மட்டும் காண்போம்.
இதிலும் முடிந்த வரை ஆதாரங்கள் தர விழைகின்றேன்..... இனியும் உங்கள் ஒத்துழைப்புடன்🙏

☘️தொடரும்☘️

🍁வாஸவி நாராயணன்🍁
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Enjoying this thread?

Keep Current with Vasavi Narayanan

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!