My Authors
Read all threads
🌺Bharatha Varsham and Sanadhana Dharmam🌺

🌾3 : 2🌾

மூன்று தெய்வங்களின் செயல்களும் அதன் காரணங்களும்

🌿ப்ரும்மா🌿

முதலில் ஜீவராசிகள் பூமியில் பிறவி எடுக்க, முதலில் ஏதோ ஒரு வடிவில் பிறக்க வேண்டும். அந்த பிறப்பை நிர்ணயிக்க, அதற்கென உள்ள தெய்வம் தான் ப்ரும்மா.
எனவே, அவர் படைக்கும் தெய்வம் ஆகிறார். புராணங்கள் இவர் பிறந்தது விஷ்ணுவின் நாபிக் கமலத்தில் இருந்து எனக் கூறுகின்றன.

நாபிக் கொடியில் இருந்து 18 இதழ் கொண்ட தாமரையில் ப்ரும்மா இருக்கும் ரூபத்தைப் பல இடங்களில் நாம் பார்க்கலாம். இவர் அனைத்து ஜீவன்களையும்,
அதன் கர்ம வினைக்கு ஏற்றவாறு பூமியில் படைக்கிறார். ஒவ்வொரு ஜீவனும் பூமியில் பிறந்தது முதல் இறக்கும் வரையில் ஏதோ ஒரு காரியத்தைச் செய்து கொண்டே தான் இருக்கின்றது.

அந்த காரியங்களுக்கு தான் கர்மா என்று பெயர். அதாவது வினை (இங்கு வினை என்பது செயல் எனப் புரிந்து கொள்ள வேண்டும்).
அந்த ஜீவன்கள் செய்யும் கர்மாக்கள் தர்மத்தை ஒட்டியே நன்று – தீது என நிர்ணயிக்கப் படும். அவ்வாறு முடிவு செய்யப்பட்ட கர்மாக்களின் பலனுக்கு ஏற்ப, அது தனது கர்ம வினையை (செயலின் விளைவு) அநுபவித்தே ஆக வேண்டும்.

அவ்வாறு அநுபவிக்க, அந்த ஜீவனானது இந்த பிறப்பி்ல் எந்த இடத்தில், என்னவாக,
எப்படிப் பிறக்க வேண்டும் என்பதை, ப்ரும்மா தர்மத்தின் அடிப்படையில் முடிவு செய்கின்றார். அவ்வாறு பிறப்பின் மூலம் முடிவு செய்யப்பட்ட பின்னர் தான், அந்த ஆன்மாவானது, மீண்டும் இந்த பூமியில் ஜனிக்கின்றது.
A 12th century sculpture of Brahma and his consort Brahmani stolen from Gujarat in 2001 has been recovered by a company which specializes in recovering lost art and antique pieces.

இதில் நம் முன்னோர் வாக்குப்படி, முதலில் ஒரு ஆன்மா ஓரறிவு உயிரினமாகத் தோன்றும்.
பின்னர் ஈரறிவு, மூன்றறிவு எனப் படிப்படியாக முன்னேறி, இறுதியில் ஆறு அறிவு உடைய மனிதனாகப் பிறக்கும். முதல் ஐந்து (5) வகைப் பிறவிக்கும் கர்மா இல்லை.

ஏன் எனில், அப்போது இந்த ஜீவனிற்கு சுயமாக எதையும் தர்மத்தின் அடிப்படையில் யோசிக்கத் தெரியாது.
எனவே, ஒவ்வொரு நிலையிலும் ஏழு முறை பிறந்து, இறுதியாக மனிதப் பிறவியை எடுக்கின்றது இந்த ஆன்மா. இந்த மனிதப் பிறவியிலும் ஏழு முறை இந்த ஆன்மா பிறக்கும்.

ஆனால் இறுதி வரை தர்மத்தின் வழி நடந்து, மறு பிறவிக்கான கர்மாவைச் சேர்க்காத வரை, அந்த ஆன்மாவானது பரமாத்மாவைச் சென்று சேராது.
மீண்டும் மீண்டும் ஓரறிவு முதல் பிறந்து கொண்டேயிருக்கும். இதையே நம் சமயக்குறவர்கள் பலரும் பாடியுள்ளனர். மாணிக்கவாசகர் கூட தனது திருவாசகத்தில்,
(பாடல் - 30 ; 31)
*புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்

எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
மெய்யேயுன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்.
உய்யஎன் உள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனவோங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே*

எனப் பாடுகின்றார். இவ்வாறு ஒவ்வொரு ஜீவனும் ஒவ்வொரு விதமாய்ப் பிறப்பெடுக்க வைப்பதால் ப்ரும்மா படைக்கும் கடவுள் ஆகிறார்.
விஷ்ணு:

அடுத்ததாக, விஷ்ணு பகவான். ப்ரும்மாவின் தோற்றத்திற்கு பல புராணங்கள் உள்ளன. ஆனால் விஷ்ணு, சிவன் இவர்கள் இருவரில் யார் யாரைப் படைத்தனர் என்னும் பெரிய கேள்வி என்றும் எல்லோர் மனதிலும் போய்க் கொண்டே தான் இருக்கின்றது.

இதற் பதிலுக்கு வேதங்களைத் தொகுத்து வழங்கிய வியாஸர்
என்ன சொல்கின்றார் என்பதைப் பார்ப்போம். வேதங்களையும் அதன் கிளைகளாக உபநிஷத், புராணம் என பலவற்றை இயற்றியும் மனதில் அமைதி இல்லாமல் தவித்தார்.

நாரதர் அவரது குழப்பத்தைக் கண்டு, அதற்கான காரணத்தை வினவினார். அவரது குழப்பத்தைக் கேட்டு அறிந்தவர், ஸாத்விக வழியில்
நம் கலியுகத்தில் இருப்பவர்கள் இறைவனை எளிமையாகப் புரிந்து கொள்ளும் விதமாக, தர்மத்தை ஸ்ரீமத் பாகவத புராணம் என்னும் பெயரில் போதித்தார்.

நாமும் இக்குழப்பத்திற்கு விடையை அதிலேயே தேடுவோம். விஷ்ணு பகவானுக்கு ஆதியந்தம் அற்றவர் என்று பெயர். முதலில் அதை விஷ்ணு ஸஹஸ்ர நாமத்தில் பார்ப்போம்!
Very Ancient Sculpture of *Anantha Sayana Perumaal with Bruhma from Cord Lotus and Lakshmi near feet* found
at Peung Kom Nuo, Angkorwat, Cambodia
அநாதிர்பூ:ர்பு:வோ லக்ஷ்மீ: ஸுவீரோ ருசிராங்க:தா: |
ஜனனோ ஜனஜன்மாதிர் பீ:மோ பீ:மபராக்ரம: ||
ஆதி என்றால் முதல்/மூலம்; அ-நாதி என்றால் முதல்/மூலம் என்பதே இல்லாதவன்;
அவன் மூலமற்றவன்; ஆனால் ப்ரபஞ்ஜத்தில் அவனே அனைத்திற்கும் மூல முதலானவன்;

பூமியும் பூமி போன்ற ப்ரபஞ்ஜமும் கொண்ட, அனைத்து ஜீவராசிகளின் பாரத்தைத் தாங்குபவன் அவனே;
இப்ப்ரபஞ்ஜத்தின் அற்புத ஒளி பொருந்திய மகிமை அவனே;
வல்லமை பொருந்திய திருச்சக்கரத்தை உடையவன் அவனே;
மிக அழகிய நேர்த்தியான தோள் அணிகலன்களைத் தரித்தவன் அவனே;
எல்லா ஜீவன்களும் அவனே;

எல்லா ஜீவன்களையும் படைக்க மூல காரணமானவனும் அவனே;
எல்லா தீய சக்திகள் மற்றும் அஸுரர்கள் மனதில் பயத்தை ஏற்படுத்தி, தீமையை அழிக்கும் மூலகாரணம் நானே!
இரண்டாவதாக ஸ்ரீமத் பகவத் கீதையில், ஸ்ரீ க்ருஷ்ணர் தான் யார் என்பதை விஸ்வரூபத்தில் காட்டும் போது அர்ஜுனன் செல்வதும், க்ருஷ்னர் அர்ஜுனனிடம் விளக்குவதையும் பார்ப்போம்.

ஆஹுஸ்த்வா-ம்ருஷய: ஸர்வே தேவர்ஷிர்-நாரத-ஸ்ததா |
அஸிதோ தேவலோ வ்யாஸ: ஸ்வயம் சைவ ப்ரவீஷி மே ||
ரிஷிகளில் தேவ ரிஷியான நாரதரும், அவ்வாறே அஸிதரும், தேவலரும், வ்யாஸரும், உன்னை
*என்றுமுள்ள புருஷனாகவும், ப்ரகாஸிக்கும் முதல் தேவனாகவும், பிறப்பில்லா தெய்வமாகவும் கூறினர்;
நீயும் அவ்வாறே கூறுகிறாய்*

என்றான். அதற்கு பகவான்,
வேதானாம் ஸாமவேதோSஸ்மி தேவானா-மஸ்மி வாஸவ: |
இந்த்ரியாணாம் மன-ஷ்சாஸ்மி பூ:தானா-மஸ்மி சேதனா || (22 – 394)

வேதங்களுள் ஸாமவேதமாய் இருக்கிறேன்; தேவர்களுள் இந்திரனாய் இருக்கிறேன்; இந்த்ரியங்களுள் மனஸாய் இருக்கிறேன்; ப்ராணிகளிடம் உணர்வாய் இருக்கிறேன்;
ருத்ராணாம் ஷங்கர-ஷ்சாஸ்மி வித்தேஷோ யக்ஷ-ரக்ஷஸாம் |
வஸூனாம் பாவக-ஷ்சாஸ்மி மேரு:
ஷிகரிணா-மஹம் || (23 – 395)

ருத்ரர்களில் ஷங்கரனாய் இருக்கிறேன்; யக்ஷ-ரக்ஷர்களுள் குபேரனாக இருக்கிறேன்; வெளிச்சக் கதிரில் அக்னியாக இருக்கிறேன்; சிகரம் கொண்ட பர்வதத்தில் மேருவாக இருக்கிறேன்;
இதன்படி விஷ்ணு அவரே மூலமும் முதலும் ஆனவர் என்று கூறுகின்றார். அத்தகைய பகவான் நம்மை எப்படிக் காக்கிறார்?

பூமியில் நாம் பிறந்து விட்டால் போதுமா? வாழ வேண்டும் அல்லவா? அதற்கு நமக்கு என்ன வேண்டும்? பூமியில் ஜீவன் (நாம்) வாழ ஆதாரமாக, ஆன்ம பலம் பெற வேண்டும்.
அதற்கு நாம் முதலில் கற்க வேண்டும். கற்றுவிட்டால் போதுமா? இல்லை! பெரியோர் கற்பித்த தர்மத்தின் நெறிப்படி நடந்து, நமது கர்மாக்களைச் சரிவர செய்ய வேண்டும்.

நாம் பிறந்தது முதல் இறக்கும் வரை, நம் ஒவ்வொருவருக்குமான கர்மா என்ன என்பது விதிக்கப் பட்டுள்ளது. அதன்படி நாம் வழுவாமல் நடந்தால்
அது தர்ம வாழ்வு. அந்த வாழ்வியல் தர்மத்தை நாம் மீறி, தர்மத்துக்கு எதிரான காரியங்கள் செய்தால் அது அதர்ம வாழ்வு.

எனவே நம் வாழ்நாளில் நம் செய்யும் ஒவ்வொரு காரியமும், தர்ம – அதர்ம விதியில் ஏதே ஒன்றுக்கு உட்பட்டு விடும். அவ்வாறு ஒரு விதியின் கீழ் ஆட்படும் காரியங்களுக்கு,
அதற்கான எதிர்வினை கண்டிப்பாக இருக்கும். நம் தர்ம - அதர்மங்களுக்கான பலனை, நாம் வாழும் காலத்திலேயே பெற்றுக் கொண்டு வருவோம்.

அதில் இந்த ஜீவனின் வாழ்க்கை முடிந்து போகையில் மீதம் இருக்கும் பலன்களுக்கு ஏற்றவாறு மேலே சொன்னபடி, ப்ரும்மா அதற்கான மறு பிறவியைத் தருவார்.
அதில் முதல் ஜன்மத்துக்கான கர்மபலன் மீதம் இருப்பதையும் இந்த ஜீவன் சேர்த்து எடுத்துக் கொண்டு வரும். அதன்படி பூர்வ ஜன்ம நல்வினை தீவினை ஆகியவற்றை அநுபவிக்க வேண்டும்.

எனவே, ஒவ்வொரு பிறவியிலும் இந்த ஜீவன் அநுபவப்பட்டு, திருந்தி, அதர்மங்களை விட்டு, தர்மவழிப்படி வாழ ஆரம்பிக்கும்.
அதில் இந்த ஜீவன் எப்போது தனது பிறப்பிற்கான காரணம் உணர்ந்து, இறைவனை அடைவதற்காக முயற்சி செய்ய ஆரம்பிக்கிறதோ, அது முதல் தார்மீக வாழ்வில் முழுதும் ஈடுபட்டு, அதர்ம கர்ம பலன்கள் தொலைந்து, தர்ம வழியில் பெரியேர் வழிகாட்டுதலாலும், விடா முயற்சியாலும் ஞானம் பெறும்.
அவ்வாறு ஞானம் பெற்ற ஜீவன்கள் இறுதியில் பரமாத்மாவைச் சென்று அடையும்.

ஆதலால் இந்த ஜீவன் பிறவியின் போது அடைய வேண்டிய அத்தனை வினைகளையும் தர்மம் தவறாது கொடுத்து, அந்த ஜீவனை வழிநடத்திக் காப்பதற்கான தெய்வமே விஷ்ணு. எனவே அவரே காக்கும் தெய்வம் ஆகிறார்.
சிவன்

இறுதியாகச் சிவ பெருமான். அவரது தோற்றம் பற்றியும் பலவித புராணங்களில் கூறப்பட்டுள்ளது. மஹாபாரதத்தின் மோக்ஷ தர்மப் பகுதியில் முப்பெரும் தெய்வம் பற்றிக் கூறுகையில் அவர்களின் தோற்றம் பற்றிக் கூறும் ஸ்லோகத்தில்,

நாராயண: பரே தேவஸ்
தஸ்மாஜ் ஜாதஷ் சதுர்முக:
தஸ்மாத் ருத்ரோ (அ) ப:வத் தேவ:
ஸசஸர்வ - க்ஞாதாம் கத:

ஆதி முதல்வனான நாராயணன் என்னும் விஷ்ணுவிடம் இருந்து சதுர்முகம் கொண்ட தெய்வமாகிய ப்ரும்மா தோன்றினார். அப்படியே, ப்ரும்மாவிடம் இருந்து ருத்ரணாகிய சிவன் தோன்றினார் என்று உள்ளது. ஸ்ரீமத் பாகவதத்திலும் இது பற்றிய ஒரு கதை உள்ளது.
ப்ரும்மா ஸரஸ்வதி ஆகியோர் தோன்றியதும், அவர் பிறப்பினை இந்த ப்ரபஞ்ஜத்தில் துவங்க, அவரின் மனதில் இருந்து முதலில் தோன்றியவர்கள்....

ஜனகர்
ஸனந்தனர்
ஸனாதனர்
ஸனத் குமாரர்

ஆகிய நால்வரும். இவர்கள் பிறவியெடுத்ததும், அவர்களின் தர்மமான லௌகிக வாழ்வில் ஈடுபடாமல்,
நாராயணன் பாதம் தொழுதே மோக்ஷத்தை அடையப்போவதாக பிடிவாதம் பிடித்தனர். அவர்களுக்கான தர்மத்திலிருந்து அவர்கள் மீறுகிறார்கள் என்று ப்ரும்மா கோபம் கொண்டார்.

எனவே அவர்களை அழிக்க, தனது இருபுருவ மத்தியில் இருந்து சக்தியை வெளிப்படுத்தினார்.
அதன் நெருப்பில் இருந்து தோன்றியவர் தான் ருத்ரன் என்னும் சிவன்.

(அதாவது, ஸத்வ குணத்துடன் இருக்கும் விஷ்ணுவிடம் இருந்து ஜீவன்களில் ரஜோ குணத்தை அளிக்கும் ப்ரும்மாவும், அவற்றின் தாமஸ குணத்தை அழிக்கும் ருத்ரணாகிய சிவனும் பிறந்தனர்.)
*சிவபுராணம்* என்பது கி.பி. 9 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் வாழ்ந்த மாணிக்கவாசகரால் இயற்றப்பட்ட திருவாசகம் என்னும் சைவத் தமிழ் நூலின் ஒரு பகுதி ஆகும்.

*திருவாசகத்திற்கு உருகாதார் ஓர் வாசகத்திற்கும் உருகார்* என்று போற்றப்படும் சிறப்புப் பெற்ற இந்நூலில்
முதற் பகுதியாகச் சிவபுராணம் அமைந்துள்ளது. அதில் சிவபெருமான் அடி, முடி இல்லாத ஸ்வயம்புவாகத் தோன்றியவர் என்பதை

*கண்நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி
எண்ணுதற் கெட்டா எழில்ஆர் கழலிறைஞ்சி
விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய், விளங்கொளியாய்,
எண்ணிறந்து எல்லை இலாதானே நின்பெரும்சீர்
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றறியேன்*

(Source: சிவபுராணப் பாடல் - 25)

எனக்கூறி, அப்படிப்பட்ட இறைவனைப் புகழ்வது தவிர நான் வேறேதும் அறியேன் என்கிறார்.

ஆனால், இதே *தேவி மஹாத்மிய*த்தில், சிவன் மஹா ருத்ரனாகக் கூறப்படுகிறார்.
அவர் நிஷ்டையில் இருப்பதால், தேவி அவர் மூலம் ப்ரும்மா, விஷ்ணு, சிவன் மூவரையும் படைத்தாள். இதில் ஒவ்வொரு சக்தியின் காலம் முடியும் போதும், இவர்கள் மூவரும் வேலை முடிந்து அழிந்து போவர்.

ஆனால் அதில் விஷ்ணு மட்டும் அழிவற்றவராய் என்றும் நித்தியமானவராக இருந்து,
மீண்டும் ப்ரபஞ்சத்தின் அடுத்த பிறப்புக்காக செயலாற்றுவார் என்று அருளினார் என்று கூறப்பட்டுள்ளது.

Ancient sculpture of Shiva – Shakthi on Nandhi at SanFrancisco Museum.
இவ்வாறு ஈஸ்வரனின் பிறப்பு குறித்து பல தகவல்கள் உள்ளன. அத்தகைய ஈஸ்வரன் தான், ஒரு ஆன்மா இந்த உலகம் விட்டு எப்போது செல்ல வேண்டும் என்பதைக் கணக்கிட்டு அதைச் செய்பவர்.

(”கொல்வது எமதர்மன் இல்லையா?” எனக் கேள்வி வரும். சிவன் தரும் கணக்கின் படி, சரியான நேரத்தில் எமன் இட்டுச் செல்வான்.)
அந்தக் கணக்கை சிவன் எப்படிப் போடுகின்றார்??

நாம் ஏற்கனவே விஷ்ணு பகவான் நாம் நமது வாழ்வில் பண்ணுகின்ற கர்மாக்களுக்கான நல்வினை, தீவினை இரண்டையும் தான் நமக்குத் தருவார் என்பதைப் பார்த்தோம். அந்த கர்மவினைக்கான பலன்களை நாம் அநுபவித்துக் கொண்டு வருகையில் நம் பிறவிக்காலம் முடிந்ததும்,
மீண்டும் அடுத்த பிறவியில் அந்த கர்மபலன் தொடரும் என்பதும் பார்த்தோம். அவ்வாறு பிறவி முடிய வேண்டிய நேரத்தைக் கூட, நம் கர்மவினை கொண்டு மட்டும் தான் ஈசன் கணக்கிடுகின்றார்.

அதில் நம் கர்மாவுக்கு ஏற்ற முடிவின் காலம் வருகையில், கர்ம பலனுக்கு ஏற்ற நல் மோக்ஷத்தையோ, துண்பமான இறப்பையோ,
அல்லது இயல்பு மரணத்தையோ நம் கணக்கில் எழுதுகின்றார். அந்தக் காலக் கணக்கையும், நம் ஆயுள் முடியும் வழியையும், நமது கர்மாவின் அடிப்படையில் நிர்ணயிக்க இருக்கும் தெய்வமே பரமேஸ்வரன். அதனால் அவர் அழிக்கும் தெய்வம் ஆகிறார்.

இம்மூன்று செயல்களுக்கான தெய்வங்களைப் பார்த்தோம்.
அதில் ஒவ்வொன்றும் மற்றொன்றைச் சார்ந்தே உள்ளது தெரிகின்றது. அப்படியானால்,

வாழ்க்கையில் எப்படி கல்வி கற்க?
தர்ம நெறியுடன் வாழ?
உடலும் மனமும் எப்படி கட்டுப்படுத்தி வாழ?

என்பது கேள்வி ஆகிறது.

அதற்காகத்தான், அந்த தெய்வங்களுடன் இணைந்து இருக்கும்படியான தேவிகளாக
ஸரஸ்வதி
லக்ஷ்மி
பார்வதி

என மூன்று பெண் தெய்வங்களையும் காட்டினர்.

(பொதுவாக நம் முன்னோர் எல்லா விஷயங்களையும் கதை, உறவு, இப்படியே தந்ததன் காரணம், நாம் எளிதில் புரிந்து கொண்டு மறக்காது இருக்கவே. மற்றபடி இதில் விவாதங்களுக்கு இடமில்லை.
எனவே பெரியோர் கூறிய விதமே இங்கு எல்லாவற்றையும் பார்ப்போம்.)

☘️தொடரும்☘️

🍁வாஸவி நாராயணன்🍁
#BharathVruksh

Elders & genius whom know these all well pls forgive me. Bt this is mainly for persons whom are in confusion on our religion, today's anti-youth & kids, to understand easily with proof or reference. So till your known details come in post, pls accept & tolerate🙏
தவறுக்கு வாசகர்/பக்தர் மன்னிக்க🙏. இனி நடவாதிருக்க ப்ரார்த்திக்கிறேன். எடுத்துரைத்த kalabhairav அவர்களுக்கு நன்றி.

”சிவ புராணம் 25-ம் பாடல் விளக்கத்தில், *புகழுமாறு ஒன்றறியேன்* என்பது இறையைப் புகழக்கூடத் தெரியாதவன் என்று மாணிக்கவாசகர் தம்மை தாழ்த்திக் கூறியது.” என வாசிக்கவும்.🙏
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Enjoying this thread?

Keep Current with Vasavi Narayanan

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!