My Authors
Read all threads
🌺Bharatha Varsham and Sanadhana Dharmam🌺

#BharathVruksh

1)ஸரஸ்வதி தேவி

ப்ரும்மா படைக்கும் செயலைச் செய்வதற்கு முதலில் அவருக்கு ஆன்ம ஞானம் வேண்டும் என்பதால், விஷ்ணு பகவான் அவருக்கு அந்த சக்தியையும் சேர்த்துப் படைத்தார். அதனால் ப்ரும்மா தோன்றியதும், ஜீவன்களைப் படைப்பதற்கு,
தன் உடலில் உள்ள சக்தியைச் சரிபாதியாக ஆக்கி, புருஷ: - ப்ரக்ருதி: (Spirit – Matter) என இரு கூறுகளின் உருவமாக ஆக்கி, முதலில் ஜீவன்களைப் படைத்தார்.

அதற்கான சக்தியாக ப்ரும்மாவினுள் இருந்த ஸரஸ்வதியானவள், அவரோடே தோன்றியவள் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
ஞானம் என்பதை அறிய நாம் கல்வியைக் கற்க வேண்டும். அதற்கு, வாக்கில் இருந்து தான் கற்றலைத் துவங்க வேண்டும்.

எனவே அவர் தன்வசம் இருந்த ஞான சக்தியைத் தனியாக, ஸரஸ்வதியின் ரூபமாகத் தந்தார் என்பதையே, ஸரஸ்வதி தேவியானவள் ப்ரும்மாவின் நாவில் இருந்து தோன்றினாள் என்று தேவி பாகவதம் கூறுகின்றது.
எனவே முன்னோர்கள் வாக்கில் உள்ள உள் அர்த்தத்தையும் சரியான விதத்தில் பார்க்கத் துவங்கினால், நாம் அதன் பொருளைச் சரிவர புரிந்து கொள்ள முடியும்.

அடுத்தது, ஜீவன்களாகிய நம்மைப் படைத்ததும், நாம் முதலில் செய்வது என்ன? கற்றல்….. பிறந்ததும் கற்கிறோமா?? எப்படி என்கிறீர்களா?? எங்கே…..
சிந்தித்துப் பார்ப்போம்….

பிறந்ததும், தாயின் வாசத்தை அறியக் கற்கிறோம்;
சிறு சப்தங்களை கவணிக்கக் கற்கிறோம்; கண்களால் பார்ப்பதை மனதில் பதிய வைக்கக் கற்கிறோம்;
இருந்த நிலையில் இருந்து உடலை மாற்றி எழுந்து நடக்கக் கற்கிறோம்;
வார்த்தைகள் கற்கிறோம்;
உண்ணக் கற்கிறோம்;
பேசக் கற்கிறோம்;
படிக்க, எழுதக் கற்கிறோம்;
உலகைக் கற்கிறோம்…..

இப்படியாக, பிறந்தது முதல் நாம் விடாது செய்யும் காரியம் கற்பது. ஆதலால், ஜீவ ஸ்ருஷ்டிக்கு ப்ரும்மனுக்கு தேவைப்பட்ட ஞானமே, வாழ்விலும் நமக்குத் தேவை. அந்த ஞானம் என்பது தூய்மையான மனதுடன்,
நேர்மறைச் சிந்தனைகளுடன் இருந்தால் மட்டுமே நாம் அடையக் கூடிய ஒன்று.

Naatya Saraswathi, at Hoysaleswarar Temple, Halebidu, Karnataka – Indicating she is the goddess for all arts - 12 th Century (ஆய கலைகள் 64-ற்கும் தெய்வமாக விளங்குவதைக் குறிக்கும் நாட்டியக் கலைமகள்)
ஆனால் நம் முன்னோர்கள், கல்வி என்பதை ஏட்டுக் கல்வி என்று மட்டும் கூறாமல், வாழ்க்கையில் நாம் தர்மத்தின் அடிப்படையில் உள்ள எல்லாவற்றையும் கற்க வேண்டும் என்பதாலேயே செவிக் கல்வி என்பதையும் தந்தனர்.

புத்தகத்தில் படிப்பது போக, பெரியவர்கள் கூறுவதைக் கேட்டு அறிவது.
இது மூலம் தர்மத்தின் நெறியில் நாம் நடக்கலாம் என்றனர். ஏட்டில் கற்கும் கல்விச் செல்வத்தை விட, கேட்டுக் கற்கும் செவிச் செல்வத்தால் வாழ்க்கையே மேம்படும். இதையே நம் தெய்வப் புலவர் *திருவள்ளுவ*ரும்,

*செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை*
என்று கூறிச் சென்றதை நாம் அறிவோம். எனவே தான், அந்த ஞானத்தை அடையத் தேவைப்படும் கல்விக்கான தேவியாக, ப்ரும்மாவின் மனைவி என ஸரஸ்வதி தேவியைக் கொடுத்தார்கள்.

Lord Brahma with Goddess Saraswati 10th -11th Century AD, Kota Museum. A rare sculpture.
2)லக்ஷ்மீ தேவி

பகவான் விஷ்ணுவானவர் காக்கும் செயலை மேற்கொண்ட போது, ப்ரும்மாவுடன் சேர்த்து ஞான சக்தியை அவரில் படைத்தது போல், ப்ரபஞ்ஜத்தில் ஜீவன்கள் வாழ அவர் படைத்த மற்றொரு சக்தி தான் ஸ்ரீ லக்ஷ்மீ எனப் போற்றப்படும் தேவி. இந்த லக்ஷ்மீ தேவியைத் தான், யோக சக்தி என்றும்
சில நூல்கள் கூறுகின்றன. ஜீவன்கள் வாழ்க்கையில் நன்கு வாழத் தேவையான யோகங்களைத் தனது அருளால், *நேர்மறை ஆற்றல், செழிப்பு, செல்வம்* போன்றவற்றால் தருபவள்.

லக்ஷ்மீ என்பதற்கு *ஸௌந்தர்யம், அழகு, உயர்ந்த நாயகனின் மனைவி* என்று பல அர்த்தங்கள் உள்ளன. எனவே *ஸ்ரீ லக்ஷ்மீ* என்பது
*உயர் நாயகனின் ஸௌந்தர்ய மனைவி* என்ற அர்த்தத்தைச் சொல்வது. நாம் உலகில் வாழத் தேவையான அடிப்படைக் கல்வியைக் கற்றதும், வாழத் தேவையான செல்வத்தைத் தேடிச் செல்கின்றோம் அல்லவா?

கால மாற்றத்தால் செல்வம் என்பது உருமாற்றம் கொள்கின்றதே ஒழிய அதன் தன்மை என்பது மாறவோ அழியவோ இல்லை.
ஆதி முதல் நாம் ஒன்றைப் பெற மற்றொன்றை ஏதோ ஒரு விதத்தில் கொடுத்துத் தான் வாழ்கிறோம். அது தானியமோ, உணவுப் பொருள்களோ, உடல் உழைப்போ, வேறு பொருட்களோ, அல்லது நாணயம் / பணம் போன்றவையோ, ஏதோ ஒன்றைத் தந்தே தீர வேண்டும்.

ஆனால், கொடுப்பதற்கு முதலில் நம்மிடம் இருக்க வேண்டும் அல்லவா?
அதனால் அதைப் பாதுகாப்பாகச் சேமித்துச் சேர்த்து வைப்போம். எனவே, நமது வாழ்க்கைக்காக நாம் சேர்க்கும் செல்வத்தை, விஷ்ணுவின் மனைவியாக லக்ஷ்மீ தேவி என்று தந்தனர்.

Mahalakshmi Coin, found out at Kandahar (காந்தார தேசம்)
பகவான் லக்ஷ்மி தேவியைப் படைக்கையில், பூதேவி என்றும், நீளா தேவி என்றும் அந்த சக்தியை மேலும் இரு சக்திகளாகப் பிரித்தார். அதாவது, நிலங்களைத் தாங்கும் சக்தியாக, பூமாதேவி தோன்றினார். இங்கே பூமாதேவி தோன்றினார் என்று சொல்கையில் நமக்குள்...

“அதான் ப்ரபஞ்சத்தை இறைவன் படைத்து விட்டாரே!!
அதிலேயே பூமி வந்து விடுகின்றதே? பின் ஏன் மீண்டும் படைக்க வேண்டும்??”

என்ற குழப்பம் வரும். அதாவது, ப்ரபஞ்ஜம் படைக்கப் பட்டாலும், ஆதியில் பூமியானது முழுவதுமாக நீரால் சூழப்பட்டு இருந்தது. பின்னரே, கடல் மட்டம் இறங்கி, *Plate Tectonics* எனப்படும் *கண்டத்தட்டு இயக்கவியல்* மூலம்
நிலப்பரப்பு கடலுக்கு வெளியில், மேலே வந்து ஜம்புத்வீபமாகத் தோன்றியது. (இதன் விஞ்ஞான விளக்கம், பின் வரும் தசாவதாரப் பகுதிகளில் வரும்). இதைத்தான், பூமாதேவி படைக்கப்பட்டதாக நம் புராணங்கள் சொல்கின்றன.

பூமியில் நிலம் மட்டும் இல்லை. நீரும் இருக்கின்றது. *நீர் நிலைக*ளையே *நீளா தேவி*
என்ற சக்தி என்றும் புராணங்கள் சொல்கின்றன. நாம் வாழ்வது நிலப்பிரதேசத்தில் தான் என்பதால், நிலம் தான் நமக்கு முக்கியமாகப் படுகின்றது.

நீர் நிலைகளைப் பெரிதாகச் சொல்வது இல்லை. ஆதலால் தான், பகவான் ஸ்ரீதேவியை தன் மனைவியாக இதயத்தில் வைத்துக் கொண்டதாகச் சொல்வதோடு, அதன் இன்னொரு சக்தியாகிய
பூதேவியை அருகில் வைத்துக் கொள்வது போல் சொல்கின்றார்கள். மேலும், நீளா தேவியை நிழல் போல் விஷ்ணுவில் மறைந்திருக்கும் சக்தியாகக் கூறுகின்றார்கள்.

ஒருவருக்கு மூன்று பேர் துணைவியர் என்றால் அது களங்கம் ஆகாதா என்றால், ஆகாது! என்று மறை பொருள் அறிந்த நம்மாழ்வார்,
தனது பாடலில் சுட்டிக் காட்டுகின்றார்.

Sculptures of Bhoo Devi and Neela Devi in Udhayagiri Caves at Kedharnath. The women structure near the mouth of the Boar (Varaaha) is Bhoo Devi and the sculpture sitting behind Adhiseshan is Neela Devi.
“குழற்கோவலர் மடப்பாவையும் மண்மகளும் திருவும் நிழல் போல்வனர்” (திருவிருத்தம்–3)

என்கிறார். இங்கு கோவலர் மடப்பாவை என்று நப்பின்னையை மற்ற இருவரோடு (திருமகள், நிலமகள்) காட்டுவதால், அவள் நீளா தேவி (நீர்மகள்) என்பதும் புலனாகிறது. இம்மூவரும், திருமாலின் நிழல் போல்வனர் என்பதால்
இம்மூவருமே ஒருவர் தான் என்றும் காட்டுகிறது. நிழல் ஒன்று தான் இருக்க முடியும். அந்த நிழலை மூன்று பெயர்களில், மூன்று குணங்களில் மூன்று தேவியராகப் பார்க்கிறோம் என்றும் நமக்குப் புரிகிறது.

இதன் காரணமாகத்தான் ஸ்ரீ தேவி, பூதேவியைப் பார்த்து வணங்கும் நாம்,
நீளா தேவியைப் பார்க்க முடிவதில்லை. இவ்வாறு இதில் முக்கியமான சக்தியான ஸ்ரீ லக்ஷ்மீ விஷ்ணுவின் மனைவியாகத் தந்தனர்.

Very Ancient Lakshmi Statue found by Archeological Department.
3)பார்வதி தேவி

ப்ரும்மாவின் இரு புருவங்களின் மத்தியில் இருந்து ருத்ரன் என்னும் சிவ பெருமான் தோன்றியது பார்த்தோம். ஜீவன்களின் தாமஸ குணத்தை அழித்து, கர்ம வினைக்கேற்ப ஜீவன்களின் வாழ்வு பூமியில் முடிக்கும் செயலைச் செய்ய முக்கிய ஆதாரமாக இருப்பது ப்ராண சக்தி தான்.
எனவே பகவான், ப்ராணன் மூலமாகக் கிடைக்கும் அனைத்து சக்தியையும் ஒன்று திரட்டி, ஒரு மாபெரும் சக்தியாக்கினார்.

அந்த சக்தியானது வீர்யத்தின் முழு வடிவமாக இருக்கும். அந்த சக்தியானது, ப்ரபஞ்ஜங்களின் அனைத்துச் சக்திகளையும் தன்னில் அடக்கச் செய்யும் சக்தியாக இருக்கும்.
அப்படிப்பட்ட ஒரு சக்தியை உருவாக்கினார். சிவன் தனது செயலை ஆற்ற முழு உந்துதலாக அவர் உள்ளிருந்து வாழும் ஆன்ம சக்தியாக, ஜீவ சக்தியாக, ப்ராண சக்தியாக இந்த சக்தியை மாற்றி ருத்ரனுடன் சேர்த்தார்.

தன்னிடமிருந்து தோன்றிய சக்தியை சிவனுக்கு அளித்துச் சேர்த்ததைத் தான்,
திருமாலாகிய விஷ்ணு தனது தங்கையான பார்வதி தேவியை சிவனுக்கு மணம் முடித்துக் கொடுத்தார் என்று கூறினர். அதற்கான கோவில் இன்னும் ருத்ரப்ரயாகில் உள்ளது.

Very Ancient Sculpture of Shiva – Paarvathi Marriage at Elephanta Caves – Elephanta Island
அது மட்டும் இன்றி, இந்த சக்தியானது எந்த ஜீவனின் வாழ்விலும் பிரிக்க முடியாதது. ப்ராண சக்தி ஒரு ஜீவன் உடலில் இருந்து சென்று விட்டால், அது உயிர் இருந்தும் பிணம் என்பதைக் குறிக்கவே,

*சக்தியில்லையேல் சிவமும் சவமே* என்று மறைமுகமாக முன்னோர் கூறினர். இது சிவ பெருமானைத் தாழ்த்துவது அல்ல.
அவனிலும் சக்தியாய் விளங்குவது இந்த சக்தியே என்பதை எடுத்துக் கூறவே இந்தப் பழமொழி. இதை பொதுவில் நாம் மறந்து விடுவோம் என்று தான், ”சிவன் உயர்ந்ததா அல்லது சக்தி உயர்ந்ததா” என்று இருவரும் சண்டையிடும் கதை சொல்லி, தனியாக சக்தி உலகில் இயங்க முடியாது, அதற்கும் ஒரு ஊடுபொருள் (சிவம்) தேவை;
அதே போல், சிவம் இந்த சக்தி இல்லையேல் இயக்கமின்றி தான் இருக்கும் என்பதைத் தான் உணர்த்தினார்கள்.

எல்லா ஜீவராசிகளும், உடலின் வலப்புறம் ஆண்மைத் தன்மையோடும், இடப்புறம் பெண்மத் தன்மையோடும் இருக்கும். சரி பாதியாக இருந்தாலும், வலது கையில் இருக்கும் சக்தி இடது கையில் இருப்பதில்லை அல்லவா?
மேலும் இரண்டும் சமம் என்பது நம் உடலிலேயே உள்ளது என்பதை மறவாது இருக்கத் தான், *அர்த்த நாரீஸ்வரர்* (அர்த்த - பாதி ; நாரி – பெண் ; ஈஸ்வரன் – சிவன்) என்ற சிவன் வடிவையும் தந்தார்கள்.

Artha Naari Eashwarar at our heritage Gangai Kona Chozhapuram by Rajendra Chozhan
இந்த வாழ்வில் கல்வி, செல்வம் ஆகிய இரண்டும் மட்டும் போதாது நமக்கு. இப்பிறப்பில் இந்த ஜீவன் பிறந்ததே, தான் ஏன் பிறந்தோம் என்பதை அறிந்து, ஜீவன் இறுதியில் சென்று அடைய வேண்டிய பரமாத்மாவை அடைவதற்கான ஞானம் பெறத்தான்.

அதற்கு, நாம் நம்மை முதலில் உணர்ந்து வாழ வேண்டும். அவ்வாறு நம்மை உணர,
முதலில் நம் தேகத்தின் சக்தி ஓட்டத்தைக் கவனித்து, மனதை ஒருநிலையில் வைத்து, நாவைக் கட்டுப்படுத்தி, பஞ்சேந்த்ரியங்களை அடக்கி, மனம் முழுதும் எல்லாம் வல்லானாகிய இறைவனிடம் ஸமர்ப்பணம் செய்து தியானித்தால், சிறிது சிறிதாக நம்மிடம் உள்ள அஞ்ஞானம் விலகும்.
அது விலகிட, தெய்வத்தை அறிந்து அடைய,
சிவம் என்னும் இந்தச் சவத்தில் இருக்கும் சக்தியைத் தூண்டி, மேலெழுப்பி, நம் மனதைக் கட்டுக்குள் வைத்து வாழ வேண்டும். அப்படி வாழ்ந்தோரே ஞானிகளாகி சித்தர்கள் ஆயினர்.

Ancient carving of (That – Sath) Parvathi with Shiva in Bellur.
”உயிரகத்தில் நின்றிடும் உடம்பெடுத்த தற்குமுன்
உயிரகாரம் ஆகிடும் உடலுகாரம் ஆகிடும்
உயிரையும் உடலையும் ஒன்றுவிப்ப தச்சிவம்
உயிரினால் உடம்புதா னெடுப்பவா றுரைக்கினே!!”

(Reference : சித்தர் பாடல்கள் – சிவவாக்கிய சித்தர்)

இவ்வாறே, விஷ்ணுவின் தமக்கையென சக்தியாகிய பார்வதியை
சிவனுக்குத் தந்து, பார்வதியை சிவனின் மனைவியாகத் தந்தனர்.

(மேலே முப்பெரும் தெய்வங்களையும், அவற்றின் தேவியர் பற்றியும் கொடுக்கப் பட்டிருப்பது எல்லாம் அறிமுகமே. அறிய வேண்டியவர்களுக்காகவும், குழந்தைகளுக்காகவும் தான். பெரியோர் இவற்றை எல்லாம் கடந்து,
தங்களுக்குத் தேவையான பதிவில் இருந்து தொடர்ச்சியை எடுத்துக் கொள்ளுங்கள். தவறாக எண்ண வேண்டாம். சிரமத்திற்கு அடியேனை க்ஷமிக்கவும்🙏)

☘️தொடரும்☘️

🍁வாஸவி நாராயணன்🍁
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Enjoying this thread?

Keep Current with Vasavi Narayanan

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!