My Authors
Read all threads
🌺Bharatha Varsham and Sanadhana Dharmam🌺

#BharathVruksh

3 : 3

🌿ப்ரபஞ்ஜத்தின் தோற்றமும் பரிணாம வளர்ச்சியும்.🌿

3 : 3 : 1

🌾ப்ரபஞ்ஜத்தின் தோற்றம் 🌾

பரப்ரும்மானது, படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய செயல்களுக்காக மூன்று தெய்வங்களான ப்ரும்மா, விஷ்ணு, சிவன் ஆகிய சக்திகளைப்
படைக்கும் போது, இந்த ப்ரபஞ்ஜத்தையும் சேர்த்தே ஸ்ரீமந் நாராயணன் படைத்து விட்டார் என்கிறது ஸ்ரீமத் பாகவதம்.

இந்த ப்ரபஞ்ஜமானது, நமது பூமியைப் போல் பல்லாயிரக் கணக்கானக் கோள்களைக் கொண்டது. அவற்றைப் படைக்கும் போது, ஆரம்பத்தில் ப்ரபஞ்சத்தை *அண்ட-கோஷமாக* (ஒரு நீள் முட்டை வடிவத்தில்)
படைத்தார் என *ஸ்ரீமத் பாகவதம், வாயு புராணம் மற்றும் ப்ரம்மாண்ட புராணம்* ஆகியவற்றில் கூறப்பட்டுள்ளது.

Bruhmaandam picture - Scientist's Speculation.
மேலும் இந்த அண்ட- கோஷத்தை 14 கோள்களின் குடும்பம் போல, *மேலே ஏழு கோள் குடும்பம், கீழெ ஏழு கோள் குடும்பம்* எனப் படைக்கிறார்.

அதன் ஒவ்வொரு கோள் குடும்பமும் எண்ணில் அடங்காத கோள்களைக் கொண்டவை. நாம் தற்போது வாழும் இந்த ஸூர்யக் குடும்பத்தில் தற்போது தான்
ஒன்பது கோள்களைத் திட்டவட்டமாகக் கண்டறிந்துள்ளனர். மேலும் தற்போது 4 புதிய கோள்களை Kepler என்னும் பெண் ஆய்வாளர் கண்டுபிடித்துள்ளார்.

இந்தக் கோள்களின் குடும்பத்தைத் தான் *லோகம்* என்று சொல்கின்றனர். ”ஈரேழு பதினான்கு லோகங்கள்” என்று முன்னோர் கூறுகின்றனர் அல்லவா?
அவை இந்த பதினான்கு லோகங்களே… அவையும், எப்படி இருக்கும் என்பதை ஆய்வாளர்கள் தற்போது வெளியிட்டுள்ளனர்.

“ப்ரும்மம் + அண்டம் = ப்ரும்மாண்டம்”. இந்த ப்ரும்மாண்டத்தில் மேலிருந்து வருகையில், ஏழாவது லோகமாக நமது ”பூலோகம்” உள்ளது. இவற்றில் ஒன்று தான் நாம் பல கதைகளில் படிக்கும்
“ஸ்வர்க்க லோகம்” மற்றும் ”நரக லோகம்” ஆகியவை. இதில் அவை எப்படி உள்ளன என்பதை வேதத்தில் கூறியதும், விஞ்ஞானிகள் கூறுவதும் படங்களாகப் பார்ப்போம்.

வேதத்தில் கூறப்பட்டுள்ளபடி, பூலோகம் மேலிருந்து ஏழாவது லோகம்.

*மேல் லோகங்களின் பெயர்கள் தூரத்துடன்...*

1 – பூலோகம்
2 – புவர் லோகம்
3 – ஸ்வர்க்க லோகம்
4 – மஹர லோகம் (ஸ்வர்க்க லோகத்திலிருந்து 10,000,000 யோஜனை தூரம்)
5 – ஜன லோகம் ( மஹர லோகத்திலிருந்து 20,000,000 யோஜனை தூரம்)
6 – தபோ லோகம் (ஜனக லோகத்திலிருந்து 80,000,000 யோஜனை தூரம்)
7 – ஸத்ய லோகம் / ப்ரும்ம லோகம் ( தபோ லோகத்திலிருந்து 120,000,000 யோஜனை தூரம்)

14 Logas picture from the source of Brahmaanda Puraanam
கீழ் லோகங்களின் பெயர்கள் தூரத்துடன்…..
1 – அதள லோகம் (பூலோகத்திலிருந்து 10,000 யோஜனை தூரம்)
2 – விதள லோகம் (அதள லோகத்திலிருந்து 10,000 யோஜனை தூரம்)
3 – ஸுதள லோகம் (விதள லோகத்திலிருந்து 10,000 யோஜனை தூரம்)
4 – தலதள லோகம் (ஸுதள லோகத்திலிருந்து 10,000 யோஜனை தூரம்)
5 – மஹாதள லோகம் (தலதள லோகத்திலிருந்து 10,000 யோஜனை தூரம்)
6 – ரஸதள லோகம் (மஹாதள லோகத்திலிருந்து 10,000 யோஜனை தூரம்)
7 – பாதாள லோகம் (ரஸதள லோகத்திலிருந்து 10,000 யோஜனை தூரம்)

Source : Vedic Cosmology from BhrammAnda PurAnam

இன்றைய ஆய்வாளர்களின் யூகத்தின் படி, 14 லோகங்கள்
பூமண்டலம் இருக்கும் லோகத்தில் அதன் வட்டப்பாதையின் ஆரமானது (Radius) மத்தியில் இருந்து 4 பில்லியன் மைல்கள் கடக்க வேண்டும் அம்மண்டலத்தின் முடிவை அடைய.

விட்டமானது (Diameter) 8 பில்லியன் மைல்கள். இதில் ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள கோள்கள் ஆகாயத்தில்,
அந்தரத்திலே மிதந்து கொண்டிருக்கின்றன. ஸ்ரீமத் பாகவதத்தின் 5-ஆம் காண்டமானது, உபதேவதைகளின் உயர் பரிமாணக் கோணத்திலிருந்து (Higher Dimensional Angle of Demigods) தரப்பட்டுள்ளது.

ஸூர்ய ஸித்தாந்தம் நமது ஸூர்யக் குடும்பத்தை, நவீன விஞ்ஞானத்திற்கு ஏற்றவாறு விவரித்துள்ளது.
மேலும் விண்மீன்கள், ஒளி-ஆண்டு என்று நாம் கூறும் தத்துவங்கள் எல்லாம் வெறும் யூகமே.

இத்தனைத் துல்லியமாக அண்டத்தின் லோகங்கள், அதன் தூரம் முதற்கொண்டு விவரித்த வேதம், புராணம் போன்ற எதிலுமே இவ்வாறான வார்த்தைகளோ அதன் விளக்கங்களோ இல்லவே இல்லை.
ப்ரபஞ்ஜ தோற்றம் பற்றி *ரிக் வேத*த்தில், *ஹிரண்ய கர்ப்ப ஸூக்தம்* என்னும் பெயரில் எழுதப்பட்டுள்ளது. அவற்றிலிருந்து சில ஸ்லோகங்களைப் பார்ப்போம்.

வேதத்தில் கூறப்படும் *கர்ப்:போ:தக ஸமுத்ரம்* – பாற்கடல்
Recent Picture released by *NASA* on the base of *HIRANYA GARBHA SUKTHAM*
ஹிரண்யகர்ப: சமவர்ததாக்ரே பூ:தஸ்ய ஜாத: பதிரேகாஸீத் |
ஸ தாதா:ர ப்ருத்வீ ம் த்:யாமுதேமாம் கஸ்மை தேவாயஹவிஷா விதே:ம ||

(பகவானால் ஹிரண்யகர்பத்தின் அற்புதமான வெளிப்பாடாக நிலம், ஆகாயம், நீர், விண்வெளி, பூமி, ஸ்வர்க்கங்கள் ஆகியவை துவக்கத்தில் தோற்றுவிக்கப் பட்டன)
யஸ்யேமே ஹிமவந்தோ மஹித்வா யஸ்ய ஸமுத்ரம் ரஸயா ஸஹாஹுஹு |
யஸ்யேமா: பரதிஷோ யஸ்ய பாஹூ கஸ்மை தேவாயஹவிஷா விதே:ம ||

(யாரது மகிமையால், பனி-மூடிய மலை எழுந்ததோ, பரந்த நதிகள் இணைந்து கடல் ஆனதோ, பரவெளி யாருடைய ஒரு தோளின் காற்பகுதியாக விளங்குகிறதோ அவரை வழிபடு)
யேன தயௌருக்:ரா பர்த்திவீ ச தர்ஹாயேன ஸவ ஸத்பி:தம் யேநநாக: |
யோ அந்தரிக்ஷே ரஜஸோ விமான: கஸ்மை தேவாயஹவிஷா விதே:ம ||

(யாரால் ஸ்திரமான ஸ்வ்ர்க்கம் உண்டானதோ, யாரால் உறுதியான பூமி உண்டானதோ, யார் வெளிச்சத்தையும், கூரை போல் கவிழ்ந்த வானத்தையும் நிலையாக்கினாரோ,
மேகத்தை எல்லாம் கோள்மாக இடையில் அளவிடப்படுவது போல் வைத்தாரோ, அவரை வணங்கு)

பரஜாபதே ந தவதேதான்யன்யோ விஷ்வா ஜாதானி பரி தாபபூ:வ |
யத்காமாஸ்தே ஜுஹுமஸ்தன் நோ அஸ்து வயம் ஸயாம் பதயோரயீணாம் ||

(படைப்பின் கடவுள் அவரே! அவர் தவிர யாரும் உன்னுள்ளும் என்னுள்ளும், இவ்வுலக உயிர்கள் உள்ளும்
பரவி இருக்கவில்லை. அத்தகைய, *எல்லாமும் அவரே* என ஆனவரை வணங்கு)

Source : Rig Veda 10.121 HIRANYA GARBHA SUKTHAM

வாணியல் விஞ்ஞானிகள் *Big Bang* என்னும் ஒரு வெடிச் சிதறலில் இருந்து தான் நாம் இருக்கும் உலகங்கள் உண்டாயின என்று கூறினர்.
பின்னர் சமீபத்தில் வந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த யூகம் தவறென்றும், மாறாக, ப்ரபஞ்ஜமானது, நுண்ணிய அணுக்கள் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாறும் *String theory* –ஆகத்தான் இருக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர்.

இன்றைய அறிவியலானது யூகத்தைக் காட்டிக் கொண்டிருக்கும் போது,
நமது *ரிக் வேதமும் ஸ்ரீமத் பாகவதமும்* அண்ட சராசரங்களின் படைப்பை எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சொல்லிவிட்டுப் போயிருக்கின்றன.

இன்றைய அறிவியலை அதனுடன் ஒப்பிடுகையில், நாம் இன்னும் குப்புறக் கவிழ முயற்சிக்கும் குழந்தையின் வயதில்தான் உள்ளோம் அறிவியலில் என்பது நிதர்ஸனம்.
வேதம் கூறியுள்ள ப்ரபஞ்ஜ அறிவியலில் இருந்து இதோ சில துகள்கள்….

1) நாம் உயிர்வாழும் இந்த பூமியில் இருந்து தெரியும் அண்டவெளி மட்டுமல்லாது, கோடானு கோடி அண்டவெளிகள் இதே போல பல்லாயிரக் கணக்கான உலகங்களைத் தாங்கிக் கொண்டு இருக்கின்றன.

2) இப்ரபஞ்ஜமானது, இந்தப் பூமியின் மேலும், கீழும்,
நம்மில் இருந்து தொலை தூரங்களிலும் கோள்களக் கொண்டு இருக்கின்றன.

3) இந்த உலகங்கள் என்று தோன்றியது என்றே கண்டுபிடிக்க இயலாத நிலையில், அண்ட வெளிகளும் அவற்றிலுள்ள கோள்களும் படைத்த ஆதி அந்தமற்ற ஸ்ரீமந் நாராயணன், இவை எல்லாவற்றிலும் படைத்தல், காத்தல், அழித்தல் என்னும்
செயல்களை மட்டும் இடைவிடாமல் செய்கின்றார்

நமது வேத நூல்களின் சாரத்தைக் கொண்டு, இன்றைய விஞ்ஞாணம் ஏன் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும் என்றால், இப்போது இவர்கள் கண்டறியும் ஒவ்வொன்றும் சிறு குறிப்புகள் போல ஏற்கனவே வேதத்திலும், புராணங்களிலும் பெரியவர்கள் எழுதி வைத்ததே காரணம்.
அதை வைத்து NASA ஆய்ந்து வெளியிட்ட சில ஆதாரப் படங்களைப் பார்ப்போம்…

ஈசாவஸ்ய உபநிஷத்தில் பிரபஞ்ஜ ரஹஸ்யம் – 1 . 1 . 5

ததேஜதி தந்நைஜதி: தத்தூரே தத்வந்திகே |
ததந்தரஸ்ய ஸர்வஸ்ய தது ஸர்வஸ்யாஸ்ய பாஹ்யத: ||
Picture of a little portion of Universe through *Infra Red X-Ray* - By NASA.
அந்த பரப்ரும்மமானது இயங்குவதை உணர்ந்தோர் ஞானிகள். அஞ்ஞானிகள் அதை உணர்வதில்லை. பரப்ரும்மம் இயக்கமின்றி உள்ளதெனக் கூறுவார்கள்.

அனைத்தின் உள்ளும் அந்தராத்மாவாக விளங்கும் ஸ்ரீமந் நாராயணன், தன்னுள்ளும் இருப்பது உணராமல், தூரத்தில் எங்கோ இருப்பதாக எண்ணுவார்கள்.
அதைத்தான் “உள்ளும் வெளியிலும் ஸூஷ்மமான ஜீவனுக்கும் உள்ளே இருக்கும் ப்ரும்மமானது அசைவுள்ளது (எனினும்) அசைவதில்லை, அது தூரத்தில் உள்ளது (எனினும்) ஸமீபத்தில் உள்ளது, அது அனைத்திற்கும் உள்ளே இருப்பது, (எனினும்) அனைத்திற்கும் அப்பால் உள்ளது.”
“Nothing in Brahmmand is immovable” - Saama Vedham.
இவ்வாறு உண்டாக்கப்பட்ட ப்ரபஞ்ஜத்தில் பரிணாம வளர்ச்சி என்பது எப்படி வந்தது?

☘️தொடரும்☘️

🍁வாஸவி நாராயணன்🍁
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Enjoying this thread?

Keep Current with Vasavi Narayanan

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!