My Authors
Read all threads
🌺Bharatha Varsham and Sanadhana Dharmam🌺

#BharathVruksh

🌿3 : 3 : 2🌿

🌾பரிணாம வளர்ச்சி 🌾

ஸ்ரீமந் நாராயணனால் படைக்கப்பட்ட இந்த ப்ரபஞ்சத்தில், எத்தனை லோகங்கள் என்பது பார்த்தோம்.

1) அவற்றில் எத்தனை ஆயிரக்கணக்கான கோள்கள் உள்ளன?
2) ஒவ்வொரு லோகத்திலும் நமது பூமி போல கோள்கள் உள்ளனவா?

3) அக்கோள்களிலும் நம் போல மனிதர்கள் வாழ்கின்றார்களா?

4) அங்கெல்லாமும் இதே போல, நிலம், நீர், தாவரங்கள், உயிரினங்கள் உள்ளனவா?

5) அப்படியானால் பரிணாம வளர்ச்சி அங்கெல்லாம் எப்படி இருக்கும்?

என எண்ணற்ற கேள்விகள்
நமது மனதில் தோன்றும். பல புராணங்களில் சொல்லப்படும் கதைகளில்;

“இவர் இந்த லோகத்திலிருந்து வந்தார், இந்த இரு லோகத்தில் இருப்பவர்களுக்குள் சண்டை நடந்தது”

என பல விஷயங்கள் வரும். அவற்றை எல்லாம் நாம் கதை என்றோ கற்பனை என்றோ எடுத்துக் கொள்வது தனி மனித சிந்தனையைப் பொறுத்தது.
ஆனால், முன்னோர் பலவற்றை நமக்கு பூடகமாகச் சொல்லிச் சென்றிருக்கின்றனர்; மேலும் நாம் அறியாத பல அறிவியல் நுணுக்கங்களும் அவர்கள் அறிந்துள்ளனர் என்பதை ஏற்பவர்கள், பூமியைத் தாண்டி பிற கோள்களிலும் ஜீவன்கள் உண்டு என்றே கூறுவர்.

கருவூர் சித்தர் பற்றிய வரலாற்றில் கூட,
*தஞ்சாவூர் ப்ருஹதீஸ்வரர் கோவி*லைக் கட்டும் முன்னர், அவர் *ராஜராஜ*னைப் பிற கோள்களுக்கு அழைத்துச் சென்று, அங்கிருக்கும் விமானம் மற்றும் கட்டிட வகைகளையும் சிறப்புக்களையும் காண்பித்தார் என உள்ளது.

ஆனால், இவ்வாறான செய்திகள் மறைக்கப்பட்டு, பிறகு பொய் எனக் கூறப்பட்டு விட்டன என்றும்
ஒரு சார்பு ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலை மனோதத்துவ ஆய்வாளர் ஒருவர் *மனோ ரீதியாகவும், யோகா மூலமும் இதற்கு கண்டிப்பாக வாய்ப்பு உள்ளது* என்றும் கூறுகின்றார்.

பிற கோள்களிலும் உயிரினங்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்பது வரை, இன்றைய விஞ்ஞானம் ஒப்புக் கொள்கின்றது.
எனவே, வாதங்களை விலக்கிவிட்டு, நாம் வாழும் இந்த பூமியைப் பற்றி மட்டும் தற்போது பார்ப்போம்.

🌿3 : 3 : 2 : 1🌿

நமது வேதங்களில், இந்த மாற்றத்தையே பகவானின் தஸாவதாரமாகக் (10 அவதாரம்) கூறியுள்ளனர். அவர்கள் கூற்றின்படி, பூமியில் முதலில் இருந்து தோன்றிய பரிணாம வளர்ச்சியைப் பார்ப்போம்.
1) மஸ்ச அவதாரம் (மீன்) – நீர் வாழ் உயிரினம்

2) கூர்ம அவதாரம் (ஆமை) – நீர்/நில வாழ் உயிரினம்

3) வராஹ அவதாரம் (காட்டுப் பன்றி) – நில வாழ் உயிரினம்

4) ந்ருஸிம்மர் அவதாரம் – சிங்கத்தலை மனிதன் – பாதி மிருகம் பாதி மனிதன்

5) வாமனன் அவதாரம் – குள்ள மனிதன் – முழு மனிதன் ஆரம்பம்
6) பரசுராமர் அவதாரம் – கோடாலியுடன் உள்ள மனிதன் – முழுமை பெற்ற மனிதன்

7) ராமர் அவதாரம் – அரசனாக வாழ்ந்த மனிதன் – நவீன மனிதன் ஆரம்பம்

8) பலராமர் அவதாரம் – கலப்பையுடன் உள்ள மனிதன் – நவீன மனிதன் வளர்ச்சி

9) க்ருஷ்ணர் அவதாரம் – சக்கரம் ஏந்திய அரசனாக வாழ்ந்த மனிதன் –
நவீன யுகத்தின் முழு வளர்ச்சி

10) கல்கி அவதாரம் – பெரும் ஒளியுடன் குதிரையில் வரும் மனிதன் – நவீன யுகத்தில் அறிவியல் முற்றி அழிவது.

இதில் காட்டப்பட்டுள்ள அவதாரங்களில், ஒவ்வொரு பரிணாம வளர்சியின் இறுதியும் ஒவ்வொரு அவதாரமாகக் காட்டப் பட்டிருக்கின்றது. இன்னும் விளக்கமாகச் சொன்னால்,
1) நுண்ணுயிர் முதல் மீன் வரை வளர்ச்சி அடைந்தது குறிக்க, முதலில் மஸ்ச அவதாரமாகக் காட்டப்பட்டுள்ளது.

2) இரண்டாம் கட்ட வளர்ச்சி, நீரிலும் நிலத்திலும் வாழக்கூடியதாக ஆனதைக் குறிக்க, கூர்ம அவதாரமாகக் காட்டப்பட்டுள்ளது.

3) மூன்றாம் கட்ட வளர்ச்சியில், நிலத்திலும் ஜீவராசிகள்
வாழ ஆரம்பித்ததைக் குறிக்க, வராஹ அவதாரமாகக் காட்டப்பட்டுள்ளது.

4) நான்காம் கட்ட வளர்ச்சியில், மனிதன் உயிரினம் சற்று அதிகமாக மிருக குணத்துடன் வாழ்ந்ததையும், இறைவன் இருப்பதையும் குறிக்க, ந்ருஸிம்ஹ அவதாரமாகக் காட்டப்பட்டுள்ளது.

5) ஐந்தாம் கட்ட வளர்ச்சியாக, ஆறறிவு உடைய முழு மனிதன்,
முழு மிருக குணம் இன்றி பக்தி வளரஆரம்பித்ததைக் குறிக்க, சிறிய உருவத்தில், வாமனன் அவதாரமாகக் காட்டப்பட்டுள்ளது.

6) ஆறாம் கட்ட வளர்ச்சியாக, காடுகள் அழிந்து, கல்வியுடனான நகர வாழ்க்கை முன்னேற்றம் கொண்டதைக் குறிக்க, கோடாலியுடன் பரசுராமர் அவதாரமாகக் காட்டப்பட்டுள்ளது.
7) ஏழாம் கட்ட வளர்ச்சியாக, நகர வாழ்க்கை மேம்பட்டு, தர்ம நீதிகள் உயர்ந்து, மனிதன் நாகரிகம் அடைந்து வாழ ஆரம்பித்ததும், கால் பகுதி அதர்மமும் சேர்ந்தே தோன்றியது. அது தவறு என்பதைக் குறிக்க ராமர் அவதாரமாகக் காட்டப்பட்டுள்ளது.

8) எட்டாம் கட்ட வளர்ச்சியாக, வாழ்க்கை மேம்பட்ட மனிதன்
விவசாயத்தின் தொழில் நுட்பத்தில் நவீன முன்னேற்றம் கண்டு, வாழ்வைக் கட்டமைத்துக் கொண்டு, போர் முறைகளை வகுத்து நாட்டைக் காக்க ஆரம்பித்ததைக் குறிக்க, பலராமர் அவதாரமாகக் காட்டப்பட்டுள்ளது.

9) மனிதன் அரசியல் நுணுக்கம் மற்றும் அறிவியலின் உச்சத்தைத் தொட்டவுடன்,
அதர்மமும் சேர்ந்தே வளர்ந்து வாழ்வில் அரை பகுதி ஆனது.

அதர்மம் அழிவுக்கு வழியாகும் என்பதை நாம் அறியவும், அதர்மங்கள் அதிகரிக்கையில், பக்திக்கு செவி சாய்க்கும் அதே பகவான், என்றும் தர்மத்தின் பக்கம் தான் இருப்பான் என்பதை உணரவும், நம் ஒவ்வொரு கர்மாவும் நம் வாழ்வின் கர்ம வினைகளே;
அதனால் *சரணாகதி* என அவனிடம் அடைக்கலம் புகுவதே, நம்மை நல்ல மனிதனாக வாழ வைக்கும் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதைக் குறிக்கவே, க்ருஷ்ணர் அவதாரம் காட்டப்பட்டுள்ளது.

10) இறுதியாக, தற்போது முக்கால் பகுதி அதர்மமும், கால் பகுதி தர்மமுமே உலகில் மனிதர்களிடையே உள்ளது.
சென்ற அவதாரத்திலேயே தர்ம – அதர்ம பலன்கள் ஸ்ரீ க்ருஷ்ண பரமாத்மாவால் முழுவதுமாக விளக்கப்பட்டு உள்ளது.

அதைத் தாண்டி, அதை உதாசீனம் செய்தும், அந்த பகவானையே அசிங்கப் படுத்தியும், அதர்ம காரியங்கள் மேலோங்குகின்றன. தர்மம் பேசுபவன் வாழ்க்கை அழிவதும், அதர்மம் அங்கே தலைதூக்கி ஆடுவதும்,
நாம் நேரில் காண்கின்றோம். ந்ருஸிம்ஹம் முதல் க்ருஷ்ணர் வரையான அனைத்து அவதாரங்களிலும் எடுத்துரைத்தும், மனிதன் அதர்ம வழியில் போவது, கலியின் தொடக்கத்தைக் குறிக்கின்றது.

இதில் முன்பே கூறிய படி, தற்போது தான் 5121 ஆண்டுகள் ஆகியுள்ளன கலி ஆரம்பித்து.
இதையே தர்மம் ஏற்று வாழ்வோர் தாங்க முடியாமல் இறைவனை இறைஞ்சுகின்றோம். இன்னும் 4,14,879 ஆண்டுகள் ஆக வேண்டும் கலி முடிய… அதர்மம் முற்றிப் போய் உலக அழிவுக்கு வழி வகுக்கும்.

அப்போது கல்கி அவதாரம் கொண்டு இறைவன் உலகத்தை அழிப்பார் என்று கூறியுள்ளனர் முன்னோர்.
மிகுந்த ஒளியுடன், வாளேந்தி குதிரையில் வருவார் என்றும் சொல்லப் பட்டிருக்கின்றது. இது எதைக் குறிக்கின்றது?

ஏனெனில் அவர்கள் பல விஷயத்தை மறை பொருளாகவே காட்டியுள்ளனர். அதனால், தற்போது வாழும் நமக்கு இதன் விடை கண்டிப்பாகத் தெரியாது.
கலியின் முடிவில் தான் அதன் உள்ளர்த்தம் என்னவென்று தெரியும்.

🌿3 : 3 : 2 : 2🌿

இன்றைய நமது விஞ்ஞான உலகில், இந்த வாழ்வின் வளர்ச்சி மாற்றத்தைப் பரிணாம வளர்ச்சி என்று கூறியுள்ளனர். மேலும், அவர்களில் CHARLES DARWIN என்னும் ஆய்வாளர் “On the Origin of Species” என்ற ஆய்வு நூலை
1859-ல் வெளியிட்டார். அவரது ஆய்வுக்கூற்று பொதுவானதாக, உலகில் பலரால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று. அவர் கூற்றின்படி, பூமியில் முதலில் இருந்து வந்த பரிணாம வளர்ச்சியைப் பார்ப்போம்.

இந்த பூமி முழுதும் நீரால் சூழப்பட்டிருந்த போது, படைப்பில் முதலில் உயிர் நுண் அனுக்கள் தோன்றின.
இவை ஓரறிவு உயிரினம். இரண்டாவதாக, நீரில் இருக்கும் சிறு தாவரங்கள் தோன்றின. அவை ஈரறிவு உயிரினங்கள். அதன் பின் தோன்றிய உயிரினம் மீன் வகைகளான நீர் வாழ், நகரும் உயிரினங்கள்.

இவை மூன்றறிவு கொண்டவை. அடுத்ததாக நீரிலேயே ஆமை, முதலை போன்ற நீர் நில வாழ் உயிரினங்களும் தோன்ற ஆரம்பித்தன.
இவை நான்கறிவு கொண்டவை. அதன்பின் நிலத்தில் தாவர உயிர்கள் தோன்ற ஆரம்பித்தன. அதன் பின்னர் ஒவ்வொரு ஜீவனாகத் தோன்ற ஆரம்பித்தது. புல், செடி கொடிகள், மரம், போன்றவை தோன்றின.

அதற்குப் பிறகு, நிலத்தில் நகரும் உயிர்களாக, பாலூட்டி வகை உயிரினங்கள் தோன்றின. பறவை, மிருகம் என நிலத்தில் வாழும்
ஐந்தறிவு உயிரினங்கள் தோன்றிய பின்னர், இதில் நிலவாழ் உயிரினமாக ஆறறிவு கொண்ட மனிதன் தோன்றுகின்றான்.

இதில் பரிணாம வளர்ச்சி என்பது என்ன? நேரிடையாக ஒரு நுண்ணுயிரி நீர்த் தாவரம் ஆனதா? அல்லது நீர், நில, நீர்-நில உயிரினங்கள் எல்லாம் தானாகத் தோன்றினவா?
இல்லை எனில் அவை எதில் இருந்து தோன்றின? என்ற கேள்விகள் வருகின்றன அல்லவா?

நீரில் தோன்றிய நுண்ணுயிர்கள், அங்கே தோன்றிய நீர்த் தாவரங்களைச் சார்ந்து தான் வாழ்ந்திருக்கும். பின் அவை, கால மாற்றம், இயற்கை மாற்றத்திற்கேற்ப உடலிலும் பண்பு மாறுதல் பெற ஆரம்பித்திருக்கும்.
அந்த மாறுதலே பின்னர் முதல் நீர் வாழ் உயிரினமாகத் தோன்றியிருக்கும்.

இதே போலத் தான், மீனில் இருந்து சிறிது சிறிதாக, கால மாற்றத்தால் பல உயிர்கள் மேலும் வளர்ச்சி அடைந்து ஒவ்வொரு விதமான உயிரினங்களாக உரு மாற்றம் பெற்றிருக்க வேண்டும். இத்தகைய மாற்றங்கள் பல்லாயிரம் வருஷங்களாகச்
சிறிது சிறிதாக நடந்திருக்கும். இதற்கு நுண்கூர்ப்பு / நுண்பரிணாமம் (Micro Evolution) என்று பெயர்.

இவ்வாறு தொடங்கியது தொடர்ந்து நடந்து, நுண்ணுயிர் மூலக்கூறு முதல் பண்புகள் வரை முழுதாக மாற்றி அமைத்திருக்கும். இதற்கு பெருங்கூர்ப்பு / பெரும் பரிணாமம் (Macro Evolution) என்று பெயர்.
இந்த மாதிரி உயிரினங்களின் உடலில் உள்ள மரபணு மற்றும் மூலக்கூறுப் பண்புகள் இயற்கையால் வளர்ச்சியுடன் கூடிய மாற்றம் பெருவதையே பரிணாமப் பிறழ்வு (Mutation) என்கின்றனர் ஆய்வாளர்கள்.

இதற்கு அடிப்படையானது DeoxyriboNuclecic Acid – DNA – மூலக்கூறு பண்புகளைத் தாங்கும் அமிலம்.
அப்படி வந்த உரு மாற்றத்தைத் தான் நாம் அறிவியல் ரீதியான பரிணாம வளர்ச்சி என்று கூறுகின்றோம்.

அவ்வாறே, மீன் வகையிலிருந்து மேலே சொன்னபடி, ஆமை, முதலை போன்ற நீர்-நில வாழ் உயிரினங்கள் தோன்றியிருக்க வேண்டும். பின்னர், நிலத்திலும் புல், தாவரம் போன்றவை இருக்கையில்,
அவ்வுயிரினங்களில் சில நிலத்தில் வாழ ஆரம்பித்திருக்க வேண்டும். அவையும் மேற்சொன்ன பரிணாம வளர்ச்சிக்கு உட்பட்டுத் தான், மிருகம், பறவை போன்றவை வந்திருக்க வேண்டும்.

பரிணாம வளர்ச்சி என்பது நான்கு (4) முக்கியமான அறிவியல் வழிமுறைகளுக்கு உட்பட்டது.

1)தொல்லுயிரியல்(Paleontology)
2)புவியியல்/நிலவியல் (Geology)
3)மரபணுவியல் (Genetics)
4)வளர்ச்சி உயிரியல் (Developmental Biology)

Source : Mr. Brian Richmond - Curator of Human Origins – American Museum of National History – New York City.

மேலே குறிப்பிட்டுள்ள இந்த வளர்ச்சித் தத்துவத்தில் இரண்டு
முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள் உள்ளன.

1) உலகில் உள்ள எல்லா உயிரினமும் ஒன்றோடொன்று தொடர்புடையவை.

2) பண்முகப் பரிணாம வளர்ச்சி என்பது, உயிரின தோற்ற விகிதத்திற்கு ஏற்ப இயற்கையின் மாற்றம், அவ்வுயிரினங்களின் தனிப்பட்ட பண்பு, மற்றும் சுற்றுச்சூழலாலும் ஏற்படும்.
நவீன அறிவியல் வளர்ச்சித் தத்துவத்தில் DARWIN, இது வரை வந்த வளர்ச்சி பற்றி எழுதி இருக்கிறாரே தவிர, அது நமது வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது போல், முழுமையாக இல்லை என்பதை அனைத்து விஞ்ஞானிகளும் ஒப்புக் கொண்டுள்ளனர்.

மேலும் அவர் தனது அனுமானத்தின் அடிப்படையில், வட அமெரிக்காவில் உள்ள
கருப்புக் கரடிகள் நீரில் செல்லும் விதத்தை வைத்து, கரடியில் இருந்து திமிங்கிலம் பரிணாம வளர்ச்சியில் தோன்றும் என்று ஒரு புது தத்துவத்தையும் முன் வைத்தார்.

ஆனால், அவை சரியான உடலியல் கூற்றுக் கோட்பாடுகளின் கீழ் பொருந்தவில்லை. எனவே அந்தக் கருத்தைப் பற்றிய பதிவுகள்,
பின் வரும் நாட்களில் அவரது புத்தகத்தில் இருந்து நீக்கப்பட்டன.

ஆனால் தற்போதைய விஞ்ஞானி British Biologist Alfred Russel Wallace,

"கரடிக்கு பதிலாக ஒரு பசுவையோ அல்லது நீர்யானையையோ கொண்டு இதை ஆராய்ந்திருக்கலாம்"

என்று கூறுகின்றார். மேலும் அவர்கள் ஒரு புதிய கவர்ச்சியான கதையை
திமிங்கிலத்தின் தோற்றம் குறித்து அனுமானத்தின் அடிப்படையில், இயற்கைப் பரிணாம வளர்ச்சியின் சிறந்த உதாரணம் என்ற பெயரில் தருகின்றனர்.

அதாவது, ஓநாய் போன்று இருக்கும் *Syonyx* என்ற உயிரினம்தான் (கழுதைப்புலி போன்ற ஒரு பாலூட்டி) திமிங்கிலத்தின் தோற்றத்திற்கு மூலமான உயிரினம் என்கின்றனர்.
அதை வைத்து, அதன் இயற்கை சார்ந்த பரிணாம வளர்ச்சியை அவர்கள் அளித்துள்ள விதத்தையும் பார்ப்போம்.

1 – Synonyx – கழுதைப் புலி போன்ற பாலூட்டி
2 – Indohyus – எலிமான் போன்ற பாலூட்டி
3 – Ambulocetus – திமிங்கிலம் போன்ற நடக்கும் பாலூட்டி
4 – Rodhocetus – ரோடோசீட்டஸ்
5 – Basilosaurus – Zeuglodon – ராஜ பல்லி
6 – Dorudon - டோருடோன்
7 – Hump back Whale – முதுகுநாணித் திமிங்கிலம்

Picture of the ancestors of Whale....

Source Image credit: NOAA

The last shore-dwelling ancestor of modern whales was Sinonyx, top left, a hyena-like animal.
Over 60 million years, several transitional forms evolved: from top to bottom, Indohyus, Ambulocetus, Rodhocetus, Basilosaurus, Dorudon, and finally, the modern humpback whale.
இவையே அவர்கள் தந்துள்ள திமிங்கிலத்தின் மூதாதையர் பட்டியல். என்னதான் இவர் இப்பட்டிப்பட்ட ஒரு இயற்கைப் பரிணாம வளர்ச்சிக்கான உதாரணத்தைத் தந்தாலும், இவை முறையான முடிவுகளாய் நிரூபிக்கப் படவில்லை என்பதைச் சுட்டிக் காட்டுகின்றனர்.

மேலும், இது போன்ற ஒரு சில அறிவியல் கவர்ச்சிக் கதைகள்
இந்தியாவில் தரப்பட்டுள்ள தஸாவதாரத் தத்துவத்தின் முன் நிற்க முடியாது. ஏனெனில் நமது ஸநாதன தர்மம் கூறும் தஸாவதாரத்தில் வளர்ச்சியின் அடிப்படைத் தத்துவம் ஏற்கும்படியும், இதுவரை வந்த வளர்ச்சியையும், இனி அடுத்து என்ன விதமாக மாறும் என்ற விஷயத்தையும் கூடக் கூறியுள்ளது.
ஆனால், நவீன ஆய்வின் முடிவுகளான இவற்றில் வெறும் யூகம் தான் உள்ளது என்று ஆய்வாளர்கள் அறுதியிட்டுக் கூறுகின்றனர்.

இவர்கள் கூறும் இந்த பரிணாம வளர்ச்சிக்கு ஏற்றவாறு தான் இதற்கு முன் இருந்த யுகங்களின் கணக்கையும், நம் முன்னோர் கூறியுள்ளனர். அவை மானிட ஆண்டுகளில்
க்ருத யுகம் - 17,28,000 ஆண்டுகள்
த்ரேதா யுகம் - 12,96,000 ஆண்டுகள்
துவாபர யுகம் - 08,64,000 ஆண்டுகள்
கலி யுகம் - 04,32,000 ஆண்டுகள்
என பிரித்துள்ளார்கள்.

கலியுகம் x 2 = துவாபர யுகம்
கலியுகம் x 3 = திரேதா யுகம்
கலியுகம் x 4 = கிருத யுகம்
43,20,000 வருடங்கள் = 1 சதுர் யுகம்
எனவே முடிவாக, காலக் கணக்கு முதல் அனைத்தையும், மிகத் துல்லியமாக நமது ஸநாதன தர்மத்தில் ஞானிகள் கூறிச்சென்ற பின், பரிணாம வளர்ச்சியில் நமது முன்னோர்களின் அவதாரத் தத்துவத்தை ஏற்பது தவிர வேறு வழி இல்லை.

”ஸநாதன தர்மத்தில் ஞானிகள் கூறினார்களா? ஹிந்து மதத்தில் என்றல்லவா நினைத்தோம்?”
என்று யோசிக்கிறீர்களா? அதற்கும் வரும் தொடரில் விடை காண்போம்.

☘️தொடரும்☘️

🍁வாஸவி நாராயணன்🍁
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Enjoying this thread?

Keep Current with Vasavi Narayanan

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!