இந்த தலைப்பில் ஆங்கிலத்தில் தான் எழுத ஆரம்பித்தேன். இதைப் பற்றிப் பல விஷயங்கள் பேசிய பெண்மனி, தமிழில் போடுங்கள் அக்கா.... அதுதான் மனதில் நிற்கும் எனச் சொன்னது பளிச்சென முகத்தில் அறந்தது போல் உணர்த்தியது.
அப்படி என்ன பேசினோம்?
அவளுக்கு இருக்கும் மனம், நமது நாட்டின் அரசியல் வியாதிகளுக்கு இல்லையே
”உச்சநீதி மன்றத்தில் அவசர அவசரமாக வழக்குப் போட்டு, அனுமதி வாங்கிட்டாங்க, எங்க தாலியறுக்க. இதில் தாலிக்கு தங்கம்னு வேஷம் எதுக்கு?
அப்பா காலத்திலெல்லாம், வேலை முடிஞ்சு பகல்ல மட்டும் புளிக்காத கள்ளோ பதநீரோ சாப்பிடுவாங்க. மதுங்கறது, பனம் இருப்பவன் மட்டும் சாப்பிட்டான்.
ஆசைப்பட்டாலும் எட்டாக் கனியாக இருந்ததால, மது இங்கே பரவல்லை. போதைக் கள்ளைக் கூட ஊர்க்கோடித் தோப்புல
அன்னிக்கே ராஜாஜி தெருவில் நின்று கெஞ்சினாராம் அந்த கருனாநிதியிடம்... அரசு மதுபானக் கடையைத் திறக்கக் கூடாதுன்னு. அப்பா, ஓமாந்தூரார் பத்திப் பேசும் போதெல்லாம் அழுவார்
மோடி குடும்பத்துக்கு ஆயிரம் குடுத்ததுக்கு, “இதை வச்சு என்ன குடும்பம் நடத்த முடியும்? 3000 வேணும், 5000 வேணும்”னு கூப்பாடு போட்டவங்கள்ல எத்தனை பேரு எங்களைப் போல அடித்தட்டு
கொஞ்சம் சந்தோஷப் பட்டோம், 40 நாளுக்கு மேல திறக்கலை. இப்படியே மூடினா நல்லதுன்னு...
பஞ்சாப்ல அங்க சட்டபூர்வ விற்பனை, அதுக்கே அனுமதி தந்தாங்க. இங்க அப்படி இல்லையே...
தாய்லாந்துல விபச்சாரம் கூட சட்டப்படி சரி. இங்கயும் சட்டப்படி உரிமை தருவாங்களா தமிழ்நாட்டுல? இப்படி எங்களப் பேச வச்ச கேவலத்தை விட
எலைட்ல ஆயிரம் ரூவாய்க்கு குறஞ்சு சரக்கு கிடைக்காதுங்கறாங்க. இதோ... இந்த ஆளு 250 ரூவாய்க்கு தினம் ஒரு பாட்டில் வாங்கறான். பத்தாவது படிக்கிற பொம்பளைப் புள்ளைங்க,
இந்தக் கேவலத்துக்கு, நேரடியா வருஷத்துக்கு இத்தனை குடும்பம்னு எங்களுக்கு அரசே விஷம் கொடுத்து கொல்லலாம். திருடனுக்கு பயந்து, ஒரு வீட்டுல புகுந்தா அவன் மகா திருடனா இருக்கான்.
நம்ம ஓமாந்தூரார், காம்ராஜர், ராஜாஜி போல நாட்டுக்கு உழைக்க நினக்கற, படிச்ச சின்னவங்களை பொறுப்புகள்ல வைக்கனும். அதுக்கு முன்னால நம்ம நீதித் துறையை மாத்தி
மதுக்கடை திறக்கக் கூடாதுன்னு கேஸ் போட்டவருக்கு ஒரு லட்ச ரூவா அபராதம், தமிழக அரசு விதிச்சிருக்காம்.
இந்த பாழாயிட்டிருக்கு ஊருல, இவங்களை ஆட்சியில உக்கார வச்சதுக்கு, எங்களுக்கு தண்டனை தரணுமா?
இல்லை... இப்பேர்ப்பட்ட எல்லா அரசியல்வாதிகளுக்கும், பொது மக்கள் சேந்து தண்டனை தரணுமா?
இதப்போய் நான் வெளியில பேசினா, யாரு சொல்லித் தந்தாங்கன்னு இதே ஆளுங்க கேப்பாங்க.
இல்லைன்னா, எங்களுக்கும் சாவு தான் பரிசு. ஏதாவது பொய் கேஸ் போட்டு, அதை தற்கொலை ஆக்கிடுவாங்க. இந்தக் கேவலமான வாழ்க்கைக்கு
தேசப் பற்றுங்கறது பொறப்புல வரணும் அக்கா. பெத்தவங்களும் ஊட்டி வளக்கணும். இந்தப் பணத்துக்கு இவங்க ஊத்திக் கொடுக்கறதுக்கு பதிலா,
இவங்க சம்பளத்தை 75% குறைச்சு, தேவை இல்லாத சலுகையையும் மத்திய அரசு நிறுத்தினா, ஒரு வேளை அரசியல் வேணாம்னு இவங்களே போகலாம்.
மோடி அதச்செஞ்சு, நம்ம வயித்துல பால வாக்கட்டும். கடவுள் தான் இந்த நாட்டைக் காப்பாத்தனும் அக்கா”.
மனம் வலிக்கிறது....
இப்படிப்பட்ட எண்ணத்தை அவர்கள் மனதில் விதைத்தது யார்?
இவர் கூட, தன் பெயரைக் கடைசி வரை சொல்லவில்லை. அத்தனை பயம்.... அவள் கேட்டது உண்மை.
இந்த அரசியல் வியாதிகளா??
இங்கு வாழும் நாமா??
பதிலை வரும் தேர்தலில் நாம் தான் காட்ட வேண்டும்.
🍁வாஸவி நாராயணன்🍁

