My Authors
Read all threads
🌺Bharatha Varsham and Sanadhana Dharmam🌺

#BharathVruksh

🌿3 : 4🌿

🌾ஸநாதன தர்மம் என்பதன் அர்த்தமும் பாரதவாசிகள் வாழ்க்கையும்🌾

(குறிப்பு: முன்பே நாம் மொழிகள் பற்றிய பகுதியில், இரு மொழிகளும் என்ன என்பதையும், தமிழில் பல ஸமஸ்க்ருத எழுத்துக்களும் வார்த்தைகளும் உள்ளன என்பதையும்
ஆதாரத்துடன் பார்த்து விட்டோம். எனவே மீண்டும் இங்கே அதைக் குழப்பிக் கொள்ளாமல், படிப்பவற்றை, அவவற்றின் முறையில் ஏற்பதே தர்மம்.

இங்கே ஸநாதன தர்மத்திற்கு Reference; Link; Source என எதுவும் நவீன விஞ்ஞான யுகத்தின் முடிவுகளைத் தர முடியாது. ஏனெனில் எந்தத் தெளிவு வேண்டுமானாலும்,
நீங்கள் தேட வேண்டிய ஒரே இடம் நமது மாபெரும் இரு இதிஹாஸங்கள் **ராமாயணம், மஹாபாரதம்**; **ஸ்ரீமத் பகவத் கீதை** மற்றும் **ஸ்ரீமத் பாகவதம்** ஆகியவை மட்டுமே.

இவை மட்டும் தான் ஸநாதன தர்மத்தைத் தெளிவாக எடுத்துரைக்கும் நூல்கள். இவை மட்டுமே ஸநாதான தர்மத்தை நமக்கு விளங்க வைக்கும் ஆணிவேர்.
இதைப் பற்றி மேலும் சிலர், ஞானிகள், நூல்களில் எழுதியிருக்கலாம். அவை எல்லாம் மரத்தின் கிளைகள் போலத்தான். அவற்றில் அவர்கள் ஸநாதன தர்மத்தைக் கூறியிருப்பார்கள்.

அதனால், அவர்கள் தான் ஸநாதன தர்மத்தைக் கூறியவர்கள் என்று ஆகி விடாது. இதைப் பற்றிய விளக்கங்கள்
சுருக்கமாகவே கொடுக்கப்பட்டுள்ளன. ஆனாலும், சற்று பொறுமையாகப் படிக்க வேண்டுகிறேன். பாரதவாசிகள் தலைப்பில் இருந்து மீண்டும் ஸ்வாரஸ்யமாகும்.

”உண்மை தேடுவோர்க்குப் பிறரைக் கவனிக்க நேரம் இருக்காது; உண்மையை உணர்ந்தோர்க்கு இதன் பெயரில் பிறரிடம் சண்டையிட மனம் இருக்காது.”
எனவே, நாம் ஸநாதன தர்மத்தின் உண்மை தேடி உணரும் மனிதர்களாக மட்டுமே வாழ்வோம்.

இறுதியாக, ஸநாதன தர்மம் என்பது மஹா ஸமுத்ரம். எனவே, அதில் நான் அறிந்தவற்றை, சற்று எளிய நடையில் தர விழைவதால், ஆழ்ந்த விளக்கங்களைத் தற்போது தர இயலவில்லை. அவை கற்கக் கற்கவே புரியக் கூடிய விஷயம்.
இதில் அடிப்படையாக, ஸநாதன தர்மம் பற்றிய எளிய விளக்கங்கள் தருவதன் மூலம், இன்று இருக்கும் பல குழப்பங்களுக்கு விடையாகவும், இது மதம் இல்லை என்பதைப் புரிய வைக்கவுமே இந்த முயற்சி.

எனவே பெரியோர்கள் கற்றறிந்தோர் பொறுத்தருள வேண்டும்…🙏)
🌿3 : 4 : 1🌿

🌾ஸநாதன தர்மம் என்பதன் அர்த்தம்🌾

ஸநாதன தர்மம் என்பது ஒரு ஸமஸ்க்ருத வாக்யம். இதனை ஞானிகள் “அ-பௌருஷேயம்” என்று கூறியுள்ளனர். இதில் ஸநாதன என்னும் ஒரு வார்த்தையில் என்னென்ன விளக்கங்கள் இருக்கிறது என்பதை முதலில் பார்ப்போம்.

ஸநாதன என்பது…
ஸநாதன = ஸ: அநாதி (அ) ஸ: அனந்த: என இரு பொருள் தருவது.
அநாதி ( அன: + ஆதி ) என்றால் ஆரம்பமற்றது என்று பொருள்.
அனந்த: ( அன: + அந்த: ) என்றால் முடிவற்றது என்று பொருள்.

அதாவது, ஸநாதன என்பதற்கு, *ஆதியந்தமற்றது* என்று பொருளாகிறது.
ஆதியந்தமற்றது என்ற வார்த்தை, இந்த அண்ட சராசரமும்
ஆதியந்தமற்றது என்பதையும், அதைப் படைத்தவனும் ஆதியந்தமற்றவன் என்பதையும் குறிக்கும்.

இன்றைய உலகில் புரியும்படி கூறுவதென்றால், ஸநாதன என்னும் வார்த்தைக்கு

1) ஆதியற்ற
2) அந்தமற்ற
3) ஒன்று படுத்தப்பட்ட
4) என்றும் நிலையான
5) மறைக்க முடியாத
6) இயற்கையான
7) நீடித்த
8) நல்லினக்கமுள்ள
9) வற்றாத
10) நித்தியமான
11) நேர்மையான
12) இரக்கமான
13) தனித்துவமான
14) தத்துவமான
15) உத்தரவான
16) உலகளாவியதான
17) நில்லாததான
18) ஞானமான
19) தெய்வீகமான
20) அண்ட நெறிமுறையான
21) உள்ளார்ந்த
22) கடமையான
23) உரிமையான
24) ஸாஸ்வதமான
25) நிலைத்திருப்பதான

என இத்துனை அர்த்தங்கள்
சமஸ்கிருதத்தில் குறைந்த பக்ஷமாக இருக்கிறது, இன்னும் கூட அதிகம் இருக்கும். நாம் இப்போது இங்கே கூறியுள்ளவற்றை மட்டும் மனதில் கொண்டு படிப்போம்.

தர்மம்

த:ர்ம என்னும் வார்த்தைக்கு வேறு மொழிபெயர்ப்பு வார்த்தை இதுவரை இல்லை.

*த:ர்ம* என்னும் வார்த்தை *த்ரி* என்னும்
வார்த்தையிலிருந்து வந்தது. இதற்குப் பல அர்த்தங்கள் உண்டு.

விழாதிருக்கப் பற்றிக் கொள்ளுதல்,
ப்ரபஞ்ஜத்தில் எது ஸத்யமானதோ அது,
கர்மாவிற்கான சரியான வினை எதுவோ அது,
ஸாஸ்வதமான வாழும் வழிக்கான முறை,
அஸத்யம் அனைத்திற்கும் நேர் எதிரானது,
மனஸாட்சியின் குரல் கூறுவது,
வாழ்க்கையின் சரியான வழிமுறை,

இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். மொத்தத்தில் கூறுவதென்றால், ஸநாதன தர்மம் என்பது,

”நல்வாழ்விற்குத் தேவையான, ஸாஸ்வதமான ஸத்ய வழி என்பதே.”

இந்த ஸநாதன தர்மமானது, இயற்கையுடன் இணைந்த, தொன்மையான, ஆதியந்தமற்ற த:ர்ம வழி ஆகும். அதாவது, இந்தக் கலிகாலத்தோடு
ஒரு சதுர் யுகம் முடிகின்றது. அடுத்த சதுர் யுகத்திற்கு, வேறு மாதிரியான ஸநாதன தர்மம் இருப்பதில்லை. இது போல எத்தனை எத்தனை சதுர் யுகங்கள் வந்தாலும், மாறாத நிலையான த:ர்ம வழியே ஸநாதன தர்மம் ஆகும்.

இதனை மதம் என்று எவ்வாறு கூற முடியும்? உதாரணமாக, நம் பெற்றோர் நம்மை உண்மையைத் தவிர வேறு
எதுவும் பேசக் கூடாது என்று கூறி வளர்த்தால், அவ்வழியில் நடப்பவர் ஏதாவது மதம் என்ற வட்டத்துக்குள் வர முடியுமா? அவர், தனது பெற்றோரை மட்டுமே கடவுளாக வணங்குபவராக இருந்தால், அவருக்கு எந்த மதத்தவர் என்ற பெயரைத் தர முடியும்?

எனவே, மதம் என்பதே நமது பாரத வர்ஷத்தில் இல்லை.
இங்கே நாம் பின்பற்றி வாழ்ந்தது/வாழ்வது, ஸநாதன தர்மம் என்னும் நிலையான ஸத்ய வாழ்க்கையை மட்டுமே ஆகும். பாகுபாடு அற்ற, ஆன்மீக சுதந்திரம் கொண்ட எதையும் ஸநாதன தர்மத்தின் ஒரு பாகம் எனலாம்.

ஆதலால், ஸநாதன தர்மம் என்பதை நம் முன்னோர், ”அ-பௌருஷேயம்” = மனிதனால் உருவாக்கப்படாத ஒன்று
என்று கூறியது மிகவும் சரியே.

முன்னோர்களின் அண்டவெளித் தேடல், ஆன்மீக வழிமுறைக்கு வழிவகுத்தது. இயற்கைத் தேடல், அறிவியல் வழிமுறைக்கு வழிவகுத்தது. ஆன்மீக வழிமுறையின் தொன்மைப் பதிவு வேதம் ஆகும்.

வேதம் என்பது, ”அகிலத்தில் வாழும் மனிதனுக்கும், ப்ரபஞ்சத்திற்குமான தொடர்பினை”
அறிய முற்பட்டு, இறை கண்ட ஆதி முனிவர்களால் *பதியப்பட்டது*. அவர்கள் இயற்கையை (உயிருள்ளவை மற்றும் உயிரற்றவை இரண்டயும்) அண்டவியல் சமன்பாட்டின் அங்கமாகவும், அகிலத்தில் ஊடுருவியுள்ள சக்தியாகவும், உணர்வு நிலையாகவுமே பார்த்தார்கள்.

ப்ரபஞ்ஜ ஒலியின் சக்தியில், தாம் கண்டு உணர்ந்த ஒலிகளை,
ஒவ்வொரு விதத்திலும் இணைக்கும் போது கிடைக்கும் ஸுக்ஷ்மபலனை, வெறும் 14 ஒலிகளால் ஆன மொழியில் (ஷ்ரவ்யா – ஸமஸ்க்ருதம்) நமக்கு வேத மந்த்ரங்களாக, ஸ்லோகங்களாகக் கொடுத்திருக்கின்றார்கள்.

கண்டுணர்ந்ததைக் கொடுக்கிறார்கள் என்றால், அவை ஏற்கனவே இருந்துள்ளது என்று தானே அர்த்தம்?
மந்த்ரங்களை ரிஷிகள் இயற்றியிருந்தால் அவர்களுக்கு “மந்த்ரகர்த்தா” (மந்த்ர + கர்த்தா = மந்த்ரம் உருவாக்கியவர்) என்றே பெயர் இருக்கும்.

ஆனால் வாஸ்தவத்தில் அவர்களுக்கு “மந்த்ரத்ருஷ்டா” என்று தான் பெயர் இருக்கிறது. இதற்கு (மந்த்ர + த்ருஷ்ட) “மந்திரங்களைக் கண்டவர்கள்”;
அதாவது மந்த்ரத்தை உள்ளத்தால், புத்தியால் கண்டுணர்ந்தவர்கள் என்றே அர்த்தம்; செய்தவர்கள் என்று அர்த்தமில்லை. இதைப் பல முனிவர்கள் கற்று, பின்வந்த காலங்களில் கற்பித்தும் வந்துள்ளனர்.

இதில் தான், ஆறறிவு மனிதனின் வாழ்க்கை முறைக்கான ரிக், யஜூர், ஸாம, அதர்வன வேதங்களும் இவ்வாறே தோன்றின.
இவர்களுடைய இந்த ஆய்வின் வரலாற்றுக்கு மூலமோ, தனிப்பட்ட வரலாற்று ஆய்வாளரோ இல்லை. இதன் மூலம், வேத கால வாழ்க்கை முறை, இலக்கிய வேலைப்பாடு அற்றது என சொல்வதற்கு இல்லை.

ஏனெனில், நாம் முன்பே பார்த்தது போல், க்ருத யுகத்தில் எழுத்துக்களை பரமசிவன் அளிக்கும் வரை, அதற்கு ஞானிகள் மூலம் இலக்கண
வரைவுகள் இயற்ற வைக்கும் வரை, அனைத்தும் *ஷ்ரவ்யா* என்னும் கேட்டறியும் மொழியாகவே இருந்து வந்ததால், இங்கே இலக்கிய ஆவணங்கள் பற்றிப் பேசுவது உசிதம் ஆகாது.

அதனால், வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட காலத்தையோ அல்லது மனிதரையோ சுட்டிக்காட்டி, “இவர் சொல்வதற்கு முன்னர் வேத காலம் என்ற ஒன்றில்
இது இல்லை” என நம்மால் எதுவும் கூற இயலாது. ப்ரும்மாவே வேத மந்த்ரங்களைச் சொல்லித்தான் ஜீவன்களைப் படைக்கிறார். அதனால், ப்ரும்மாவிற்கும் முன்பிருந்தே வேதங்கள் உள்ளன என்பது தெரிகிறது.

அப்படியானால், வேதங்கள் ஸநாதன தர்மத்தை அடிப்படையாகக் கொண்டு அனைத்தையும் போதிக்கும் பக்ஷத்தில்,
ஸநாதன தர்மம் என்பது (ஆதியந்தம் அற்றதாக) அநாதி என்றாகிறது.

இதை உணர்ந்து கொண்டு, வாழ்க்கையின் தர்ம நெறியால் நம் வாழ்க்கை முறை மேம்பட்டு, மனம் அமைதியாக, நல்விதமாய் வாழ்க்கையோடு ஒன்றிப்போய் வாழ,ஸநாதன தர்மத்தைப் புரிந்து பின்பற்றுவதே,
வாழ்வின் இலட்சியத்தை அடைய இட்டுச்செல்லும் மிகச்சிறந்த வழியாகும்.

🌿3 : 4 : 1 : 1🌿

🌾ஸநாதன தர்மத்தின் இயல்பு🌾

1) மனிதனை முன்னிறுத்தியது அல்ல. பகவான்/இறைவன் என்று கூறப்படும் தர்ம சக்தியை முன்னிறுத்தியது.
2) நம்பிக்கை அடிப்படையைக் காட்டிலும் அனுபவ அடிப்படயில் ஆனது.
3) எவ்வித வரலாற்றுக் காலக் குறிப்பையும் தாண்டியது.
4) ஒவ்வொரு செயலின் வளர்ச்சிக்கும் ஒரு விதை உடையது.
5) அனைத்திலும் உள்ளார்ந்த தனித்துவம் கொண்டது.
6) இவ்வுலகத்திலும், மேலுலகத்திலும், கீழுலகத்திலும், அண்ட சராசரத்திலும் ஆனது.
7) உள்ளார்ந்தும், அதே சமயம் மேம்பட்டும் உள்ளது.
8) முழுமையும், அதன் பகுதிகளும், அதுவே ஆனது.
9) தவிர்த்தல் அற்ற அன்பைக் கொண்டது.
10) அகிலத்தில் அனைத்திற்கும் ஆணிவேரானது.

3 : 4 : 1 : 2

ஸநாதன தர்மத்தின் அடிப்படை நியமங்கள் (கொள்கைகள்)

ப்ரபஞ்ஜ ஸத்யமாக பகவானால் அருளப்பட்ட ஸநாதன தர்மமானது, தற்போதைய மனிதனின் மத ஆர்வத்தின்
பெரும்பகுதியானது; ஸாமான்யமான மனிதர்களால் எப்பொழுதும் அறியப்படாதது; குருவழியின்றி வேறு யாராலும் விவரிக்கப்படாதது; மேலும் நிர்வாக நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டது; இறைவன் எனபவனை நாடிடும் ஸத்ய வழி என்ன என்பதைக் கண்டுணர்ந்தது.

இப்பிரபஞ்சத்தின் தர்ம ஓட்டம் என்பது,
அதை நாம் தர்மம் அல்லது வேறு எந்த பெயர் சொல்லி அழைத்தாலும், என்றும் நிலைத்திருப்பது.

உலகின் எப்பெயர் பெற்ற மிகப்பெரிய ஆசிரியரின் பிறப்பிற்கும் முற்பட்டது. ”இதற்கு மாற்றானது (அ) இதனினும் உயர்ந்தது” என்று எதையும் கூற முடியாதபடி, அனைத்தையும் தன்னுள் அடக்கியது.
தர்மம் என்பது, இந்த பிரபஞ்சமும் அகிலமும் தோன்றுவதற்கு முன்பிருந்து இருப்பது. தர்மம் என்பது முக்காலமும் ஆனது.

நேர்மறை எண்ணங்களையும், நேர்மறைச் சக்திகளையும் அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப் பட்டது. மனிதன் உருவாக்கிய நீதி என்பது த:ர்மத்தை ஒட்டியே அமைந்திருந்தாலும்,
தர்மம் அதனின்றும் வேறுபட்டு, ஆழமான ஸத்யத்தைத் தன்னுள் கொண்டு இருப்பது.

எம்மதத்தைச் சார்ந்த தனிமனித ஆன்மீக மதக்கோட்பாடுகளுக்கும் ஸநாதன தர்மம் மதிப்பளிக்கிறது. மதம், கல்வி, ஆன்மீகம், தனிமனித (அ) சமூக வாழ்க்கை, எதுவாக இருப்பினும், ப்ரபஞ்ஜ உண்மையின் ஸத்யம் வெளிப்படையாக உள்ள இடத்தில்
ஸநாதன தர்மம் இருக்கும். எங்கெல்லாம் ப்ரபஞ்ஜ உண்மை கண்டுகொள்ளப் படவில்லையோ, சரியாக மதிக்கப் படவில்லையோ,

அது எங்கெல்லாம் ஒரு குறிப்பிட்ட இனம், மனிதன், புத்தகம், அல்லது கடவுளின் பெயரிலேயே கூட (அது எந்தப் பெயரிலும் இருக்கலாம்.) குறைத்து மதிக்கப்பட்டு, மேன்மை குறைக்கப் படுகிறதோ,
அங்கெல்லாம் ஸநாதன தர்மம் அமைதி அடைந்து விடுகிறது.

மனித வாழ்க்கையை வழிநடத்தும் ஆன்மீக விதிமுறைகளை, ஸநாதன தர்மம் தன்னுள் அடக்கியுள்ளது. ஸநாதன தர்மம் மனித வாழ்வின், மனித உடல் தோற்றத்திற்கான இயற்கை விதிமுறைகளுக்கானது. எப்படி புவியீர்ப்புவிசை என்பது, கண்டறியப்படுவதற்கு
முன்பும் அகிலத்தில் இருந்ததோ, அது போலவே தற்போதைய மனித வாழ்க்கைக்கான ஆன்மீக நியதிகள் எனப்படும் ஸாஸ்வத விதிகள், வேத காலத்து ரிஷிகள் அவற்றைக் கண்டறிந்து வகுத்துக் கொடுக்கும் முன்பிருந்தே உள்ளன.

அத்தகைய ஸநாதன தர்மம் அறிவிப்பது என்னவென்றால், சூன்யத்தில் இருந்து ஏதும்
வர முடியாது என்பதே. எனவே, இப்ரபஞ்ஜமே தெய்வம் என்னும் ஒன்றில் இருந்து தான் வந்தது என்பது புரிகிறது.

ஸநாதன தர்மம் என்பது, ஒன்றுபட்ட, முழுமையான, மூதுரைந்த ஒன்று; அது எக்காலத்திலும் மாற்றத்திற்கு உட்பட்டது அல்ல. எவ்வாறு நேர்மை, ஈர்ப்புவிசை, கணிதம் போன்றவை உட்பிரிவு வாதத்திற்கோ
அல்லது அவை சம்பந்தப்பட்ட மாற்றுக் கருத்துக்களுக்கோ (எ.கா: இயற்கயின் இயல்பு நியதியில் ஒன்றான ஈர்ப்பு விசை, ஒருவர் நம்புவார், நம்பவில்லை என்பதற்காக மாறாதது போல்) உட்பட்டு மாறாதோ, அது போல் தான் இதுவும் மாறாதது.

அதைப் போல், கடவுள் பற்றிய உள்ளார்ந்த நியதிகளும், பகுத்தறிவுக்கு எட்டாத
இருநிலை (ஆஸ்திகம் – நாஸ்திகம்) சார்ந்த தொடர்புடயவற்றையும் உள்ளடக்கியது.

ஸநாதன தர்மமானது, யோகம் மற்றும் தியானம் என்பவற்றை, மனிதன் தன்னையும், ப்ரபஞ்ஜ சக்தியையும் அறிய உதவும் ஒரு முக்கிய துருப்பாக உபயோகப் படுத்துகின்றது. யோகம் மற்றும் தியானம் என்பவை பொதுவாக
ஒருங்கிணைப்பு என்பதையே குறிக்கின்றன. ஆனால் அது மிகவும் சிறிய கருத்து. இதில் யோகம் என்பது உடல் உணர்வுகளின் ஒருங்கிணைப்பையும், தியானம் என்பது மனதின் எண்ணவோட்ட ஒருங்கிணைப்பையும் முக்கியமாகக் கொண்டது.

எனவே மனதின் எண்ணத்தைக் கட்டுப்படுத்த, உடலினைக் கட்டுக்குள் வைத்து, பின் அதன் மூலம்
பிரபஞ்ஜத்தில் நாம் நுழைய தியானம் உதவுகின்றது. ஆமை போல் ஐம்புலன்களையும் உள்ளடக்கிக் கொண்டால், அதன் பின் நம் மனம் நம் கட்டுக்குள் இருக்கும்.

ஸநாதன தர்மமானது, லௌகீக வாழ்க்கையில் நாம் ஆரோக்கிய வாழ்வை வாழத் தேவையான பல விஷயங்களை, அறிவியல் பூர்வமாக தந்துள்ளது.
அவை அனைத்தையும், சம்பிரதாயம் என்ற பெயரில், நடைமுறைப் பழக்கங்களாக, நித்ய கர்மா அனுஷ்டானம் (தினமும் கடைப்பிடிக்க வேண்டிய காரியங்கள்) என்ற பெயரில் நமக்கு வழங்கியுள்ளது.

பல ஞானிகளின் இப்ரபஞ்ஜத்தைக் கண்டுணர்ந்துள்ளனர். நாமும் அதைப் புரிந்து கொண்டு வாழவும், ஞானம் பெறவும்
தேவையான விஷயங்களை ஒவ்வொருவரும் எடுத்துரைத்தனர். அவ்வாறு அவர்கள் கூறியவை வாழ்வியல், இறைமை, அறிவியல், ஞானம், மோக்ஷம் என அனைத்தையும் உள்ளடக்கியது.

ஆதலால் முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டியது, ஸநாதன தர்மம் என்பது,

அ-பௌருஷேயம் எனப்படுவது.
மொழி, நாடு, மனிதன் இவைகளால் உண்டானது அல்ல.
மதம் என்ற ஒரு கட்டமைப்புக்குள் அடக்கிவிட முடியாதது.
நிலையான ஸத்யம் என்பது தவிர வேறு எதற்கும் உட்படாதது.

அப்பேர்ப்பட்ட தர்மத்தைப் பின்பற்றி வாழ்ந்த நம் முன்னோர்கள் எவ்வளவு சிறந்த ஞானவான்களாக, புத்திமான்களாக இருந்திருக்க வேண்டும்?
அவர்கள் வழித்தோன்ற, நாம் எத்துனை பாக்யம் செய்திருக்க வேண்டும்?? எனவே, அவர்கள் பின்பற்றிய அதே தர்மத்தை நாமும் பின்பற்றி வாழ ஆரம்பித்தல் நல்லது.

☘️தொடரும்☘️

🍁வாஸவி நாராயணன்🍁
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Enjoying this thread?

Keep Current with Vasavi Narayanan

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!