My Authors
Read all threads
🌺Bharatha Varsham and Sanadhana Dharmam🌺

#BharathVruksh

🌿3 : 4 : 2🌿

🌾பாரதவாசிகளின் வாழ்க்கை🌾

பாரதவாசிகள் என்று இங்கே குறிப்பிடுவது பாரத வர்ஷத்தில் வாழ்ந்தவர்களைத்தான். இங்கே ஆரம்பத்திலேயே பாரத வர்ஷம் என்பது எந்தெந்த நாடுகளை உள்ளடக்கியது என்பதைப் பார்த்து விட்டோம்.
இவை அனைத்தும், துவாபர யுகம் வரை, மன்னர்கள் பலர் இருந்தாலும் சக்ரவர்த்தி என்னும் ஒருவரின் குடையின் கீழ் தான் மொத்த ஆட்சியும் இருந்தது என்பதையும் பார்த்தோம்.

அப்படி இருந்தது தான், கலியுகத்தில் மாற்றம் கண்டு, நமது பரத: கண்டம் மட்டுமே பாரதம் என்று ஆகிவிட்டதையும் பார்த்தோம்.
கால மாற்றத்தால், பாரத வர்ஷம் முழுதும் இருந்த இந்த தர்ம வாழ்வானது, கலியுகத்தில், பாரத வர்ஷத்தின் ஹ்ருதயம் என்று கூறப்பட்ட, புண்ணிய பூமியான நமது பரத; கண்டத்தில் மட்டுமே நிலைத்து இருந்து விட்டது.

பிற இடங்கள் எல்லாம், காலப் போக்கில் இந்த தர்மத்தை இழந்ததால், வெவ்வேறு விதமான
வாழ்க்கை முறைகள், நம்பிக்கைகள், ஆன்மீகத் தேடல்கள் என மாறிப் போய்விட்டன. எனவே தற்போது படிக்கும் போது, இதனை நமது பரத: கண்டத்தின் முன்னோர் வாழ்க்கையாகவே படிக்க வேண்டும்.

ஸநாதன தர்மத்தையே ஞானிகள் வேதம் என்னும் பெயரில், நான்கு விதமாகப் பிரித்து அளித்தனர்.
ஸநாதன தர்மம் எப்படி அபௌருஷேயமோ, அவ்வாறே அதை எடுத்துச் சொல்லும் *வேதங்களும் அபௌருஷேயம்* ஆகின்றன அல்லவா?

ரிஷிகள், ஞானிகள் கண்டுணர்ந்து கூறியவற்றிற்கு, உண்டாக்கியது எனும் வார்த்தை பொருந்தாது. வேதத்தில் ஒரு பகுதியான
”ப்ருஹதாரண்யக உபநிஷத் - II.4.10ல்”
“ரிக் -யஜுஸ்-ஸாம-அதர்வ வேதங்கள் ஈஸ்வரனின் சுவாஸமாகும்”

என்று சொல்லியிருக்கிறது. “நிச்வஸிதம்” – மூச்சுக்காற்று – என்ற வார்த்தையை இந்த இடத்தில் போட்டிருக்கிறது. இதிலிருந்து, வேதங்கள் எத்தனை முக்கியமானவை என்பதை நாம் உணர முடிகின்றது அல்லவா?
அடுத்து, வேதங்கள் வாழ்க்கை முறையை எப்படிப் பிரித்து, எடுத்துச் சொல்லின என்பதைப் பார்ப்போம்....

வேதங்கள் என்பது, ஸநாதன தர்மத்தைப் பல ரிஷிகள் கண்டு சொன்னதன் தொகுப்பு எனப் பார்த்தோம். அவர்கள் அதனை நான்கு பிரிவாகப் பிரித்தனர். அந்த நான்கு பிரிவிலும், ஒவ்வொரு விதமான
வாழ்க்கை சம்மந்தப்பட்ட விஷயங்கள் தரப்பட்டுள்ளன. ஸ்ரீமத் பகவத் கீதையில், பகவான் தன்னைப் பற்றிச் சொல்கிறபோது,

வேதைஸ்ச ஸர்வை: அஹம் ஏவ வேத்ய: |
“நானே எல்லா வேதங்களாலும் அறியப்படுகிறவன்”

“வேதாந்த க்ருத்” (வேத + அந்த + க்ருத்) = ”வேதங்களுக்கு முடிவான தத்வத்தை உண்டு பண்ணினவன்”
என்று தன்னைக் கூறுகிறார். “வேத க்ருத்” – ”வேதத்தை பண்ணினவன்” என்று சொல்லவில்லை. ஸ்ருஷ்டியின் போது, ப்ரும்மா வேத மந்த்ரத்தைக் கொண்டுதான், ஸ்ருஷ்டிகளைச் செய்கிறார் என்று பார்த்தோம்.

ப்ரும்மாவிற்கு, பரப்ரும்மமான பரமாத்மா ஸ்ரீமந் நாராயணன், தனது ஹ்ருதயத்தினால் வேதங்களைக் கொடுத்தார்.
அதனால் பரமாத்மாவின் ஹ்ருதயத்தில் எப்போதுமே வேதம் இருந்து கொண்டிருக்கிறது எனப் புரிகிறது. இது ஸ்ரீமத் பாகவதத்தின் முதல் ஸ்லோகத்தில் உள்ளது.

தேனே ப்ரஹ்ம ஹ்ருதாய ஆதி கவ்யே |

”ப்ரும்மாவுக்கு இதயத்திலிருந்து வேதபாண்டித்யத்தை அளித்தேன்”
(இதை நாம் சொல்லுவது போல் இதயபூர்வமாக என எடுத்துக்கொள்ள இயலாது. ஏனெனில், பரமாத்மாவுக்கும் நமக்கும் வேறுபாடு உள்ளது.)

🌿3 : 4 : 2 : 1🌿

🌾ஆதி யுகத்தில் ஆரம்பம்…. (ஸத்ய யுகம் / க்ருத யுகம்)🌾

(குறிப்பு : இங்கே தஸ அவதாரங்கள் பற்றிய குறிப்பு தான் தரப்படுகின்றது.
அதைப் பற்றிய விளக்கங்கள், தத்துவார்த்த, அறிவியல் விளக்கங்கள் பின்னால் வரும் பகுதிகளில் வரும்.)

🐟மத்ஸ்ய அவதாரம்🐟

புராணங்களில் கூறப்பட்டுள்ளது போல், ப்ரும்மா தனது இரவில் சற்றே கண்ணயர்ந்த போது, ஹயக்ரீவன் என்னும் அசுரன், அவரிடமிருந்து வேதங்களைத் திருடி, அதைக் கடலின் அடியில்
ஒளித்து வைத்து விட்டான். *ஸத்யவிரதன்* என்னும் மன்னன் தனது நித்ய கர்மாவான ஸந்த்யா வந்தனம் செய்ய ஒரு கமண்டல நீருடன் வந்தான்.

அவன் நீர் இறைத்து அர்க்யம் கொடுக்கையில் அவனது கையில், கமண்டலத்திலிருந்து ஒரு சின்ன மீன் வந்து விழுந்தது. அதை அவன் ஸமுத்ரத்தில் சேர்க்கப் போகையில் அந்த மீன்,
தன்னை அங்கே சேர்த்தால் திமிங்கிலங்கள் விழுங்கிவிடும் என பயமாக உள்ளதாகச் சொன்னது. அதன் அழகைப் பார்த்தவன், மனம் இரங்கி அதை தன் மாளிகையில் ஒரு பாத்திரத்தில் வைத்தான்.

அது வேகமாக வளர்ந்து, தனக்கு இடம் பற்றவில்லை என்றது. பின் சிறு தடாகத்தில் விட்டான். மறுநாளே அது தடாகத்தை நிறைத்து
வளர்ந்து விட்டது. இவ்வாறே குட்டை, குளம், ஏரி என்று எங்கே விட்டாலும், மறு நாளே அதை நிறைத்து வளர்ந்து நின்றது அம்மீன்.

அதனால், அதனை மீண்டும் ஸமுத்ரத்திலேயே சேர்க்கச் சென்ற போது, தன்னை ஸமுத்ரத்தில் விட்டால் திமிங்கிலம் விழுங்கி விடும், ஆதலால் விட வேண்டாம் என மீன் கெஞ்சியது.
ஆனால் ஸத்யவிரதனோ,

“பகவானே… வந்திருப்பது தாங்களே என்பதை நான் அறிவேன். நீங்கள் வளர ஆரம்பித்ததுமே அதை உணர்ந்தேன். அதனால், இந்த மத்ஸ்ய அவதாரம் கொண்டு தாங்கள் நிறைவேற்ற வந்தது யாதென நான் அறியலாமா?” என வேண்டினான்.

பகவான் ராஜனிடம், ஸமுத்ரத்தில் ஹயக்ரீவன் வேதங்களை ஒளித்து
வைத்திருப்பதைக் கூறி, நீங்களும் சப்த ரிஷிகளும் ஒரு படகில் வந்து, நான் வேதங்களைக் காத்து எடுத்ததும், மீண்டும் அவற்றை பூலோகத்தில் நீங்கள் தழைக்க வைக்க வேண்டும் எனக் கூறினார்.

அதன்படி, ஹயக்ரீவனுடன் 1000 ஆண்டுகள் போரிட்டு, அவன் வயிற்றைக் கிழித்து வேதங்கள் அனைத்தையும் எடுத்தார்.
ஆனாலும் அவற்றில் சில காணாமல் போனதால், அவற்றை மீண்டும் ப்ரும்மாவுடன் சேர்ந்து ரிஷிகள் முழுமையாக்கினர். இது தான் மத்ஸ்ய அவதாரக் கதை.

அதில் ஹயக்ரீவன் என்பவன், குதிரை முகத்தில் இருக்கும் அரக்கன் என வர்ணிக்கப் பட்டுள்ளது. அவனை அழித்ததால் தான் ஹயக்ரீவர் என பகவான் வனங்கப்படுகிறார்.
இதில் ஹயக்ரீவ அசுரன் என்பது, *கடல் குதிரை*யாகவும் இருக்கலாம்... ஆனால் வேதம், புராணம், ப்ராமணம் ஆகியவற்றின் பல இடங்களில் குதிரை முகத்துடனான ஒருவர் அதர்வன் மகன் என வருணிக்கப் படுகின்றார்.

அது பற்றிய கதைகள் பல இடங்களில் வேதங்களிலும் வருகின்றது. ஆனால், தற்போதைய யுகத்தில் இருக்கும்
ப்ராமணர்களுக்கும் சரி, அல்லது ஆய்வாளர்களுக்கும் சரி, அது பற்றிய நிஸ்சயமான முடிவுக்கருத்து இன்னும் தெரியவில்லை….

Hayagreeva from Khmer (Cambodia), 10th century CE
Source : ரிக் வேதம் – 1 : 84 : 16 ; 1 : 116 : 12 ; 1 : 117 : 22 ; 10 : 48 : 8
ஸதபத ப்ராமணம் – 14 : 4 : 5: 13
ப்ருஹதாரண்யக உபநிஷத் – 2 : 5
ஸ்ரீமத் பாகவதம் அத்யாயம் – 6 – 10

Horse faced Vajimuka in Guimet Museum, France.
Mathsya Avathar of Lord Vishnu in Srirangam Temple Mandapam – Thiruvarangam.
இங்கே ப்ரும்மா தூங்கினார், வேதங்களைத் தவற விட்டார் என்றெல்லாம் முன்னோர் கூறியிருப்பது எதன் தாத்பர்யம் என்பது, அடியேன் அறிந்து கொள்ள இயன்ற வரை என்னவென்பது புரியவில்லை.

இதில் மத்ஸ்யாவதாரம், ஸத்ய யுகத்தின் முதல் அவதாரம். எனவே அறியாத *அவதார தாத்பர்யம்* பற்றி எழுதாமல்,
இத்தோடு முடித்துக் கொள்ளலாம்.

🐢கூர்ம அவதாரம்🐢

இது பகவானின் இரண்டாவது அவதாரத்தின் விவரத்தைக் கொண்டது. ஸ்ரீமத் பாகவதம் கூறும் புராணத்தின் படி, கஸ்யப புத்திரர்களான அஸுரர் (கஸ்யப முனிவரின் மகன்களுக்கும்) தேவர்களுக்கும் தொடர்ந்து சண்டை நடக்கிறது.
இதில் அஸுரர் யார் மாண்டாலும், குலகுரு ஸுக்ராச்சார்யார் அவர்களைத் தனது தபோ பலத்தால் உயிர்ப்பித்து, மீண்டும் எழுப்பி விடுகின்றார்.

இதனால் அன்று (*ஆப்யாள்* என்பவர்கள் தேவர்களாக இருந்தனர்) இருந்த தேவர்கள் மாண்டு வருகின்றனர். அவர்கள் இறவாது இருக்க, பாற்கடலிலிருந்து
அமுதத்தைப் பெற வேண்டும் என ரிஷிகள் கூறினார்கள். இது தேவர்களால் மட்டும் முடிகின்ற காரியம் இல்லை என்பதால், அஸுரர்களைத் துணைக்கு அழைக்க, அன்றைய தேவேந்த்ரன் மந்த்ரதுர்மன், அஸுரர் தலைவனிடம் எளிமையாகச் சென்று உதவி கேட்கிறான்.

அவர்களும் ஒப்புக் கொள்ள, மேருகிரியை (மேரு மலை) மத்தாகவும்,
வாஸுகியைக் கயிறாகவும் கொண்டு பாற்கடலைக் கடையத் துவங்கையில், மலை நீரடியில் அமிழ்கிறது. எனவே பகவான் கூர்ம (ஆமை) அவதாரம் கொண்டு, தன் முதுகில் மலையைத் தாங்குகிறார்.

Kuurma Avathaaram at Vittalaa Temple, Hampi. 15th Centrury sculpture.
இறுதியில் அமிர்த கலசம் வருகின்றது. அதை அஸுரர்கள் பறித்து ஓடும்போது, பகவான் மோகினி அவதாரம் கொண்டு, அஸுரர்களை மயக்கத்தில் வைத்து, அமிர்தம் அனைத்தும் தேவர்களுக்குத் தந்துவிடுகின்றார்.

Mohini, a form Vishnu took after Samudramanthan. Chennakesava Temple, Belur, Karnataka
இது கூர்ம புராணம் என்னும் புராணத்தில் வருகின்றது. இது 17,000 ஸ்லோகங்களைக் கொண்டது.

இதன்படி, நீரில் பல நேரம் இருக்கும் கூர்மமானது நிலத்திலும் சில நேரம் வாழும். இதுவும் ஸத்ய யுகத்தின் இரண்டாவது அவதாரம் என்றே கூறப்பட்டுள்ளது.
🐗வராஹ அவதாரம்🐗

பூமி முழுதும் நீரில் மூழ்கி இருந்த வேளையில், நிலத்திலும் படைப்புகளைக் கொண்டுவர, பகவான் காட்டுப் பன்றியின் அவதாரம் எடுத்து, நிலத்தை கடலின் அடியில் இருந்து மேலெடுத்து வந்தார் என்று ஸ்ரீமத் பாகவத புராணம் கூறுகின்றது.

அதாவது , கஸ்யப முனிவரின் புத்ரன் ஹிரண்யக்ஷன்
பூமியை முழுதும் ஆக்ரமித்து, அதீத கொடுமைகள் புரிந்தான். பூமியைக் கடலின் அடியில் மறைத்து வைத்தான்.

எனவே பூமியைக் காக்க, பகவான் வராஹ அவதாரம் எடுத்து, கடலின் அடியில் அவனுடன் ஆயிரம் ஆண்டுகள் போரிட்டு, இறுதியில் அவனை வென்றார். பூமியை தனது இரு கொம்புகளுக்கு இடையே வைத்து,
நீரின் அடியில் இருந்து வெளியில் எடுத்து வந்தார்.

5th century Udhayagiri Caves – Vaidheesha – Madhya Pradesh
6th century Vishnu avatar Varaha lifting goddess earth (Bhudevi) in Cave 3, Badami Hindu cave temple Karnataka
இதன் மூலம் பூமி உருண்டை என்பதை அன்றே முன்னோர்கள் சொல்லி விட்டனர். காட்டுப் பன்றி, நீரில் இருக்க முடியும்…. ஆனால் நிலத்தில் தான் வாழும். இந்த அவதாரமும் ஸத்ய யுகத்தில் தான் எடுத்தார் பகவான்.

☘️தொடரும்☘️

🍁வாஸவி நாராயணன்🍁
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Enjoying this thread?

Keep Current with Vasavi Narayanan

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!