My Authors
Read all threads
🌺Bharatha Varsham and Sanadhana Dharmam🌺

#BharathVruksh

ந்ருஸிம்ம அவதாரம்

ஸ்ரீமத் பாகவத புராணம் ந்ருஸிம்ம அவதாரம் பற்றிக் கூறுகின்றது. ஹிரண்யாக்ஷனின் தமையனான ஹிரன்யகசிபு, அண்ணனைப் போலவே தானும் அனைத்து உலகையும் அடிமை கொண்டான்.

அவனது மகன் ப்ரஹலாதன் எப்போதும் ஸ்ரீஹரியின்
நாமமே சொல்லிக் கொண்டிருந்தான். ஏற்கனவே தமையன் ஹிரண்யாக்ஷனை பகவான் கொன்றதனால், ஸ்ரீமந் நாராயணர் மீது ஏற்கனவே கோபத்தில் இருந்தான்.

அவரைக் கொல்ல வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்தான். தன் நாட்டிலுள்ள அனைவரையும் “ஓம் நமோ நாராயணாய நம:” என்று சொல்லக்கூடாது; “ஓம் நமோ ஹிரண்யாய நம:”
என்று சொல்ல வேண்டும் என ஆணை பிறப்பித்தான். அதை மீறி, தன் மகன் ஹரிநாமம் சொல்வதைக் கேட்டு, மிகவும் கோபமுற்று இருந்தான்.

Prahalaadha Sculptue at Somnathpur Kesava Temple – 13th Century.
ப்ரஹலாதனுக்குப் பலமுறை எடுத்துக் கூறியும், அவன் ஸ்ரீஹரி நாமத்தையே ஜபித்து வந்தான். இறுதியில் ப்ரஹலாதனைக் கொல்ல, பல வழிகளில் முயன்றும், ப்ரஹலாதன் ஸ்ரீஹரி நாமம் சொல்லி ஒவ்வொன்றிலும் பிழைத்து வந்தான்.

Prahaladhan Sculpture at Hoysaleswara Temple wall – Hampi.
இதைக் கேட்டு கோபத்தின் உச்சிக்கே சென்ற ஹிரண்யகசிபு, தானே ப்ரஹலாதனை நோக்கிச் சென்றான்.

”இல்லாத ஸ்ரீஹரியின் நாமத்தைச் சொல்கிறாயே…. எங்கேடா இருக்கிறான் உன் ஸ்ரீஹரி??” எனக் கத்தினான்.

“அவர் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார்” என்று பதிலளித்தான் ப்ரஹலாதன்.
“இதோ…இங்கே இருப்பானா…. இந்தத் தூணில் இருப்பானா… காட்டு…. நானும் அவனைப் பார்க்க வேண்டும்….”

என கர்ஜித்துக் கொண்டே அங்கிருந்த தூணில் வேகமாகத் தனது கதையால் தாக்கினான். அதிலிருந்து பகவான் ந்ருஸிம்ஹ அவதாரம் எடுத்து வந்தார்... ஏன்??
Part of Dhwaja Sthambam from which Lord Nrusimha Came out – Mela Ahobilam
Nrusimhar Sculpted at Madhura – 2nd Century.
*ஸ்ரீ விஷ்ணு புராணம்*, "க்ருத யுகத்தில் த்யான மார்க்கத்தில் பகவான் அனுக்ரஹம் பெற ஈடுபட்டார்கள்" என்பதைக் கூறுகின்றது. அவ்வாறு ஹிரண்ய கசிபுவும் தவம் இருந்து,

“நான் ஸூர்யன் உதித்த பின்போ, மறைந்த பின்போ; வீட்டின் உள்ளேயோ, வீட்டின் வெளியிலோ; வானிலோ, நிலத்திலோ;
மனிதனாலோ, மிருகத்தாலோ; ஆயுதத்தாலோ; உயிருள்ள ஜீவனாலோ, உயிரற்ற பொருளாலோ எதனாலும் இறக்கக் கூடாது” என்னும் வரம் பெற்றான்… அதன்படியே பகவான்,

ஸூர்யன் உதயம், மறைவு இரண்டுக்கும் இடைப்பட்ட ஸந்தி (அந்தி) வேளையில்; வீட்டின் உள்ளோ வெளியோ இல்லாது வாயிற்படியில்;
வானிலோ நிலத்திலோ இல்லாது தனது மடியில்; மனிதனோ மிருகமோ அற்ற ந்ருஸிம்ம ரூபத்தில்; ஆயுதமுமில்லாத, உயிருள்ள உடலில் வளரும், ஆனால் உயிரற்ற நகத்தால்.... அவனது வயிற்றைக் கிழித்து ஸம்ஹாரம் செய்கின்றார்.

Narasimha In Ancient Cave Germany 38,000 BCE
க்ருத யுகம் நடந்த 17,28,000 வருஷங்களில், முன்பே பார்த்தது போல பரிணாம வளர்ச்சி உருவாகி, பக்தி என்பதை ஒருவர் உணர ஆரம்பித்து விட்டார். அவரையே ப்ரஹலாதன் எனக் காட்டினார்கள் முன்னோர்கள்.

வேதங்களும் தோன்றி விட்டன. எனவே, வாழ்வின் முறைகளைச் சொல்லும் வேதத்தின் வாக்கியங்களை “வேத வாக்கு”
என்று மக்கள் கூறினர். அத்தகைய வேத வாக்குகளையே, வாழ்க்கைக்குத் தேவையான பொதுவான சட்டங்களாக நம் பாரத வாசிகள் எடுத்துக் கொண்டனர்.

மனிதன் தன் அறிவால் முழுதும் மிருகமாக இருந்ததை உணர்த்த சிங்கத் தலையுடன் ந்ருஸிம்ம அவதாரம் வந்தாகி விட்டது.
The oldest sculpture (Nrusimhar) in the world made by wood.
According to a 2011 report by Der Spiegel, the fragments of the mammoth-ivory figurine were discovered by geologist Otto Völzing in August 1939.

Currently it is displayed in Ulm Museum, Germany. According to the museum,
the lion-man is from the Upper Palaeolithic period from 40,000 years ago.

Reference : i0.wp.com/www.altnews.in…
வாமன அவதாரம்

*ஸ்ரீ விஷ்ணு புராண*த்தில் கூறியது போல, மஹாபலிச் சக்ரவர்த்தி, அசுர குரு ஸுக்ராச்சார்யாரிடத்தில் த்யானம் கற்று, த்யானத்தின் மூலமாக அதீத சக்திகள் பெற்றிருக்கிறார்.

தேவர்களுடனான சண்டையில் அவரைத் தனது தபோ வலிமையால் காப்பாற்றி வருகிறார் குலகுரு ஸுக்ராச்சார்யார்.
தேவர்களும் இந்திரனும் தேவலோகத்தைக் காப்பற்றும்படி, விஷ்ணுவிடம் சென்று முறையிடுகின்றார்கள். விஷ்ணு மஹாபலியை பலியிட வாமன அவதாரம் எடுக்க முடிவெடுக்கின்றார். (திருமால் அவதாரத்தில் வாமன அவதாரம் ஐந்தாம் அவதாரம்).

இந்திரனின் தாயான அதிதிக்கும் தந்தையான கஸ்யபருக்கும் வாமனன் என்ற பெயரில்
மகனாக அவதரிக்கின்றார். புரட்டாசி மாதம், சுக்ல பக்ஷசம், திருவோண (ஸ்ரவண) நக்ஷத்ரத்தில், முதல் அம்சமான அபிஜித் பாதத்தில், ஸூர்யன் நடுப்பகலில் பிரகாசிக்கும் பொழுது, வாமனன் இப்பூமியில் அவதரித்தார்.

இந்நாளுக்கு, *விஜய த்வாதசி* என்று பெரியோர்கள் பெயரிட்டனர்.
குள்ளமான உயரம், உபநயனம் முடிந்து, தலையில் அரைக்குடுமி, மார்பில் பூணூல், கையில் சிறு நாணற்குடை, ஒரு கமண்டலம் ஆகியவற்றுடன் மஹாபலியை வதம் பண்ணக் கிளம்புகின்றார்.

Sculpture depicted Vaamanar – Orissa Temple.
அந்த சமயம் மஹாபலி, ஒரு மாபெரும் யாகத்தைச் செய்ய ஏற்பாடு செய்து கொண்டிருக்கின்றார். வாமனர் நேராக அங்கே செல்கிறார்.

யாகம் நடக்கும் இடத்தில் பிராமணனுக்கு மரியாதை செய்வது வழக்கம். அந்த முறையில் மஹாபலிச் சக்கரவர்த்தி, வாமனரை அழைத்து, தீர்த்தத்தால் அவரது கால்களை அலம்பி விட்டு,
ஸுத்தம் செய்து, தனது வஸ்த்ரத்தால் துடைத்து, மலர் தூவி மரியாதை செய்வித்து,

“தங்களுக்கு என்ன வேண்டுமோ சொல்லுங்கள், தருகின்றேன்”

எனக்கூறி வணங்கி நிற்கின்றான். அந்தக் கட்டத்தில், வந்திருப்பது சாதாரண ப்ராமணன் இல்லை என ஸுக்ராச்சாரியாருக்குச் சந்தேகம் வந்து விட்டது.
அவர் மஹாபலியை அழைத்து,

“அந்தக் குள்ளனை நம்பாதே! அவனுக்கு நீ எதையும் தானம் தரவேண்டாம்….”

என எச்சரித்தார். ஆனால், முன்பே வாமனரிடம் வேண்டியதைத் தருகிறேன் என்று மஹாபலி கூறிவிட்டான். கொடுத்த வாக்கை மீறக்கூடாது என்ற காரணத்தால், மஹாபலி குருவின் எச்சரிக்கையை ஏற்க மறுக்கின்றான்.
மஹாபலி, தன் கையில் உள்ள கமண்டலத்திலிருந்து நீரை வார்த்து, வாமனர் கேட்டதைத் தருவதற்காகக் கமண்டலத்தைக் கையில் எடுக்க முனையும் போது, குரு ஸுக்ராச்சார்யார் ஒரு வண்டாக மாறி, அந்தக் கமண்டலத்தின் நீர் வரும் வழியை அடைத்துக் கொள்கின்றார்.

வாமனர் தன் குடையிலிருந்து ஒரு நாணல் புல்லை
உருவி எடுத்து, கமண்டலத்தின் வாய்ப் பகுதியில் குத்த, அடைப்பு நீங்கி நீர் வருகின்றது. வண்டாக வந்த ஸுக்ராச்சார்யாருக்கு, நாணல் புல் குத்தியதால் ஒரு கண் பார்வையும் போய்விட்டது.

இப்போது தங்களுக்கு வேண்டியதைக் கேளுங்கள் என்று மஹாபலி கூறியவுடன், வாமனரும்
“மன்னா! எனக்கு எனது காலால் மூன்றடி மண் தருவாயாக…”

எனக் கூறுகின்றார். இவரது குள்ள உருவத்திற்கு மூன்றடி என்ன? எத்தனை அடி வேண்டுமானாலும் தரலாம் என நினைத்த மஹாபலி,

’’ததாஸ்து” (ததா: + அஸ்து = அப்படியே ஆகட்டும்)

எனக் கூறி கமண்டலத்திலிருந்து நீரினை ஊற்றி அர்க்யம் செய்கிறான்.
அவ்வளவுதான்… அந்த குள்ள வாமனன் விஸ்வரூபம் எடுத்து விடுகின்றான். ஊரார் ப்ரமிக்க, ரிஷிகளும் ஞானிகளும் பயபக்தியுடன் நோக்க, விஸ்வரூபியான பகவான், ஓரடியால் பூமியை முழுவதுமாக அளந்து விட்டார்,

Thrivikraman – Ulagalandha Perumaal – Mamallapuram.
இரண்டாவது அடியால் ஆகாயத்தையும் அண்ட ஸராஸரத்தையும் முழுவதுமாக அளந்து விடுகின்றார். பின்னர் மஹாபலியிடம், தனது மூன்றாவது அடியை எங்கே வைப்பது எனக் கேட்கின்கிறார். தனது வாக்கினை காப்பாற்றுவதற்காக,

“மூன்றாவது அடியினை எனது தலையில் வையுங்கள்”

என்று கூறி, மகுடத்தை இறக்கி வைத்து,
பகவான் முன் மண்டியிட்டு, தலை வணங்குகின்றான் மஹாபலி. மூன்றாவது அடியை மகாபலியின் தலையில் வைத்து, அப்படியே அவனை பாதாளத்தில் அழுத்தி ஸம்ஹாரம் செய்கின்றார்.

பகவான், மஹாபலி தலையில் தனது கால் வைத்து பூமியில் அழுத்தி, அவரை மோக்ஷத்துக்கு அனுப்பினார்.
இதிலிருந்து தான்,

”கள்ளனை நம்பினாலும் குள்ளனை நம்பாதே…”

என்னும் வாக்யம் தோன்றியது.

வாமனனாக வந்த விஷ்ணு பகவானை அது முதல், *ஓங்கி உலகலந்த பெருமான் / த்ரிவிக்ரமன்* என்று போற்றுகின்றோம். திருப்பாவையிலும் கோதையாகிய ஆண்டாள்,
“ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாமும் நம்பாவைக்குச் சாற்றிநீ ராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரிபெய்து
ஓங்குபெருஞ் செந்நெல் ஊடு கயலுகளப்

பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக் குடம்நிறக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்”

என்று பாடுகின்றார்.
பகவான் கால் பட்டதும் மஹாபலியின் ஆணவம் நீங்கியது. அந்தச் சமயத்தில்,

“பகவானே, ஒரு வரம் வேண்டும்” என்றான் மஹாபலி.

”என்ன வரம் வேண்டும்?” என்று பகவான் கேட்க,

“பிரபுவே, நான் பாதாளத்தில் அழுத்தப்படும் இந்த நாள் போற்றப்பட வேண்டும்.
இதே நாளில் நான் மீண்டும் என் நாட்டு மக்களைக் காண வேண்டும்”

என்றான். அந்த வரத்தை அருளி,

“ஏழு சிரஞ்சீவிகளுள் நீயும் ஒருவனாக இடம் பெறுவாய்”

என்ற வரத்தையும் தருகின்றார் பகவான் விஷ்ணு. பகவானிடம் மஹாபலி வாங்கிய வரத்தின்படி, ஆவணி மாதம் திருவோண நக்ஷத்ரத்தில் தன் மக்களைக் காண,
கேரள நாட்டிற்கு மஹாபலிச் சக்ரவர்த்தி வருவதாக இன்றும் நம்பப்படுகின்றது. ஆகவே அந்நாளில் கேரளாவில் ஓணம் பண்டிகையாக இந்நிகழ்ச்சி கொண்டாடப்படுகின்றது.

Trivikrama Vishnu, c. 2nd century CE. Government Museum, Mathura. Photo courtesy of the American Institute of Indian Studies.
இதில் மஹாபலிச் சக்ரவர்த்தி என்பவர், *ப்ரஹலாதனின் பேரன்*; அதாவது *ப்ரஹலாதனின் மகன் விரோசனனின் மகன்* ஆவார். அவருக்கு, ப்ரஹலாதனிடம் இருந்தது போல, த்யானம் மற்றும் நேர்மறை எண்ணங்கள் இருந்த போதும், மூதாதையர்களின் அசுர குணமும் இருந்தது.

அதுவே அவரை அந்த நேர்மறை எண்ணங்கள் மூலம்
கிடைக்கும் சக்தியை தவறாகப் பயண்படுத்தி, தேவர்களை அடிபணியச் செய்ய வைத்தது. எனவே, அதர்மம் அப்போதிருந்தே மெதுவாக ஆரம்பித்ததை இது காட்டுகின்றது.

மேலும், வாமன அவதாரத்தின் மூலம் தான், ஒரு மனிதன் என்பவன், தர்ம நெறியில் நடக்க ஆரம்பித்து விட்டான் என்பதும் விளங்குகின்றது.
Trivikrama Vishnu, c. 2nd century CE. Government Museum, Mathura. Photo courtesy of the American Institute of Indian Studies.
இறுதியாக, வாமன அவதாரத்தில் முழு மனிதன் தோன்றி விட்டான். அதோடு, ஸத்ய யுகம் என்னும் க்ருத யுகமும் அதன் பரிணாம வளர்ச்சியும் முடிந்து விட்டது.

☘️தொடரும்☘️

🍁வாஸவி நாராயணன்🍁
சிறு திருத்தம்.... தட்டச்சுப் பிழை... பொறுத்தருள வேண்டும்...

”நாங்கள் நம்பாவைக்குச் சாற்றிநீ ராடினால்”

என திருத்திப் படிக்க வேண்டுகிறேன்.

நன்றி🙏🙏🙏
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Enjoying this thread?

Keep Current with Vasavi Narayanan

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!