கடந்த 2009 ஆம் ஆண்டு இன அழிவிற்கு பிறகு தமிழக அரசியல் பரப்பில் கருத்தியல் தளத்தில் எத்தனையோ கட்சிகள், இயக்கங்கள் தோன்றி இருக்கின்றன. மறைந்த மாவீரன் முத்துக்குமார் பெயரில் கூட எண்ணற்ற இயக்கங்கள் ஊருக்கு ஊர் முளைத்தன. அதுவரை திராவிடம்- தமிழ் தேசியம் என்ற +
இரண்டு சொற்களுக்கான முரண்கள் குறித்து வெகுமக்கள் தளத்தில் புரிந்து கொள்ளும் போதாமை இருந்து வந்தது.
ஆனால் தமிழர்களின் மற்றொரு தாய் நிலமான ஈழப் பெரு நிலத்தில் ஒன்றரை லட்சம் மக்கள் தங்கள் உயிரை கொடுத்து "திராவிடம் என்பது பகை கருத்தியல்..தமிழ்த் தேசியமே மண்ணின் மைந்தர்களான +
விடுதலைக் கருத்தியல்" என்கிற புரிதலை இந்த மண்ணில் உண்டாக்கினார்கள். மக்களிடையே ஏற்பட்ட புரிதல் சார்ந்தும் எழுச்சி சார்ந்தும் பல்வேறு இயக்கங்கள் தோன்றின.
இதில் காலப்போக்கில் பல இயக்கங்கள் மறைந்தன. தோன்றிய 'முக்கிய இயக்கங்கள்' சில திமுக கம்பெனியின் கிளை நிறுவனங்களாக செயல்பட்டு +
வருகின்றன. இதில் சமரசம் ஆகாமல் திராவிடத்தை எதிர்த்தும், இந்திய தேசியக் கட்சிகளை எதிர்த்தும் தனித்து தமிழர் என்கின்ற தேசிய இனத்திற்காக இந்த நொடி வரை உறுதியாக நாம் தமிழர் மட்டுமே களத்தில் நிற்கிறது.
கடந்த 2010 ஆம் ஆண்டு நாம் தமிழர் கட்சி மதுரையிலே தொடங்கப்பட்டபோது அந்த +
மேடையிலேயே இனி ஒருபோதும் திராவிட கட்சிகளுடனும், தேசிய கட்சிகளுடனும் கூட்டணி இல்லை என்கிற தனது அரசியல் நிலைப்பாட்டை அண்ணன் சீமான் அறிவித்தார். அந்த நொடி முதல், இந்த நொடி வரை அவர் அந்த நிலைப்பாட்டிலிருந்து துளியும் பிசகாமல் உறுதியாக இருந்து வருகிறார்.அதனால் அவர் அடையும் +
தோல்விகளைப் பற்றியோ பின்னடைவுகளை பற்றியோ அவர் பொருட்படுத்துவதே இல்லை. அதை கம்பீரமானது என அவர் கருதுகிறார். சொல்லப்போனால் சமரசம் ஆகாமல் இருப்பதுதான் தனது அடையாளம் என அவர் சாதிக்கிறார். இன்னும் சுருக்கமாக சொன்னால் அதுவே அவரது வெற்றி.
ஆனால் ஒரு இன அழிவின் துயரத்திலிருந்து +
இயக்கங்களாக பரிணமித்த "சிலர்" எந்த திராவிடம் இன அழிவிற்கு துணை போனதோ அந்த திராவிடத்திற்கு வக்காலத்து வாங்கிக்கொண்டு செயல்பட்டு வருவது குறித்து நமக்கு எந்தக் கருத்தும் இல்லை.
அது அவர்களது பிழைப்பு குறித்தான அவர்களது பாடு.
ஆனால் அவர்களது பிழைப்பிற்காக.. தங்கள் கொள்கையில் +
உறுதியாக நிற்பவர்களை பற்றி தொடர்ச்சியாக அவதூறுகளைப் பரப்பி வருவதை நாம் கவனித்து வருகிறோம். பல அவதூறுகளுக்கு நாம் பதில் சொல்வதில்லை. நம் அண்ணன் நமக்கு கற்பிப்பது போல அது நம் வேலையும் இல்லை. ஆனால் பதில் சொல்லாமல் நாம் இருப்பதை பயன்படுத்திக் கொண்டு அதையே வரலாறாக பதிவு செய்வதை +
எதனாலும் அனுமதிக்க முடியாது.
பத்தாண்டுகள் கழிந்து விட்டது. இனத்தின் அழிவை கடந்து போகச் சொல்லும் பத்தாம் பசலிகள் சொற்களை
வரலாறாக பதிய முடியாது. கருணாநிதி மகன் ஸ்டாலினை முதலமைச்சர் ஆக்கியே தீருவேன் என்று கங்கணம் கட்டியவர்களோடு இனத்திற்கான அரசியல் பேசுவதாக சொல்பவர்கள் இணைந்து +
செயல்பட முடியாது. அவ்வாறு இணைந்து செயல்படும் பட்சத்தில் அது இனத்திற்கான அரசியல் அல்ல. அது #கருணாநிதி குடும்பத்திற்கான சேவை.
அப்படி சேவை செய்ய துணிந்தவர்கள் அதை தாராளமாக பரவசமாக செய்துவிட்டுப் போகட்டும். அதில் நமக்கு துளியும் கருத்தில்லை. +
ஆனால் நாங்கள் பேசுவது தான் தமிழ்த் தேசியம், மற்றதெல்லாம் நஞ்சு.. பஞ்சு என்றெல்லாம் பொதுத்தளத்தில் கருத்துக்களை பதிவு செய்யும்போது மிகுந்த கவனத்தோடு பதிவு செய்ய வேண்டும்.
உண்மையாக நிற்பவர்களை பற்றி அவதூற்றுக் கற்பிதங்கள் உருவாக்குவதற்காக கைக்கூலி வாங்கிக்கொண்டு +
உளறி தொலைப்பதை எல்லாம் அறிவுஜீவித்தனம் என காட்டவும் கூடாது.
அதேபோல் யாரை அறிவுஜீவிகள் என அடையாளம் காட்டுவதிலும் கவனம் தேவை.
கேட்கிற எல்லா கேள்விகளுக்கும் தக்க பதில் இருக்கிறது. எங்கே பதிலளித்தால் பொறாமையினாலும், பிழைப்புத்தனத்தினாலும் கேள்விகள் போன்று எழுந்து +
வருகிற சில்லறைத் தனங்களுக்கு எங்கே முகவரி கிடைத்து விடுமோ என்கிற கவனத்தில் பதில் சொல்லாமல் கடந்து போகிறோம்.
இதில் ஒரு முக்கியமான செய்தி இருக்கிறது.
பதில் சொல்லாமல் இருப்பதாலேயே அவதூறுகள் உண்மையாகி விடாது. அதுவே வரலாறாகவும் மாறிவிடாது.
கவனம் தேவை.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
பிர்லா, கோயங்கா, மித்தல், கன்ஷியாம்தாஸ், ஓஸ்வால், சிங்கானியா, சேத், டால்மியா, பஜாஜ், பொத்தார், பிரமல், ஜுன்ஜுன்வாலா என பல பெயர்களில் உள்ள மார்வாடிகளின் ஆதிக்கத்தில் தான் இந்திய வணிகம் முழுவதும் உள்ளது எனச் சொல்லலாம்.
மார்வார் எனும் கிழக்கு ராஜஸ்தான் பகுதியிலிருந்து வந்தவர்கள் மார்வாரிகள்.
இவர்கள்தான் மார்வாடிகள் என அழைக்கப்படுகின்றனர். வறண்ட பாலைவனப் பகுதியானதால் வளங்களை சிக்கனமாகத் சேமித்து வாழத்தெரிந்த சமூகம் அது.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் மெல்ல மெல்ல பஞ்சாப், உத்தரப் பிரதேசம், வங்காளம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா என பரந்து விரிந்து, முதலாம் உலகப்போரின்போது கிட்டத்தட்ட வட இந்தியா முழுவதும் வணிக உலகில் விஸ்வரூபம் எடுத்தவர்கள் மார்வாடிகள்.
1) #குமரித்தமிழன் ஜீவா. ஆம் குமரி மாவட்டத்தில் பூதப்பாண்டி என்னும் ஊரில் பிறந்தவர் ஜீவா.
2) தனது 14 வயதில் சுசீந்திரம் கோவில் ஆலய நுழைவுப் போராட்டம் நடத்தி வெற்றி கண்ட பகுத்தறிவுவாதி.
3) 22 வயதில் காந்திக்கு நேராக நின்று "நீங்கள் ஏன் வர்ணாஸ்ரம தர்மத்தை ஆதரிக்கிறீர்கள்" என்று விமர்சித்தவர் பதில் அற்றவராக காந்தி நிற்க!! அன்று தொடங்கி காந்தியை விமர்சிக்கத் தொடங்கியவர்.
3) பகத்சிங்கின் அரும்கொடையான புத்தகம் Why I am a atheist
என்கிற புத்தகத்தை தமிழில் "நான் ஏன் நாத்திகன்" என்று மொழிபெயர்த்து மக்கள் மனதில் விடுதலைக்காக முழக்கமிட வைத்தவர்.
1.லிபியாவில் மின்சார கட்டணம் கிடையாது, மின்சாரம் இலவசம்.
2. வங்கிகளில் வழங்கப்படும் கடன்களுக்கு வட்டி கிடையாது.
3. வீடு, மனை என்பது லிபியாவில் மனித உரிமைகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.
லிபியாவில் வாழும் அனைத்து மக்களும் வீடுகள் பெறுகின்றவரை தனக்கோ, தனது பெற்றோருக்கோ வீடு கட்டமாட்டேன் என்று #கடாபி சபதம் பூண்டிருந்ததால்!!
அவரது பெற்றோர்கள் இறக்கும்வரை வீடுகள் இல்லாமல் கூடாரங்களிலேயே இறந்தனர்.
4. அந்த நாட்டில் மணம் முடிக்கும் ஒவ்வொரு புதுமணத் தம்பதியினர்களுக்கும் அந்நாட்டின் அரசு 60,000 தினார், அதாவது அமெரிக்க பணம் 50,000 டாலர் அதாவது இந்திய பணம் சுமார் 28,00,000 ரூபாய் பணத்தை இலவசமாக வழங்கியது.