காரணம் 1984'ல் உச்சநீதிமன்றம் Dr. Pradeep Jain Vs Union of India வழக்கில்,ஒரு உத்தரவு போட்டாங்க,இந்த மாதிரி AIQ'க்கு சில Seats நீங்க கொடுக்க வேண்டும் என!
இப்போ இந்த UG,PG Medical Seats நம்ம கிட்ட இருந்து, AIQ'க்கு கொடுக்காம இருந்தா என்ன நடந்து இருக்கும் என பார்ப்போம்!
நம்ம தமிழ்நாடு இட ஒதுக்கீடு படி நாம இங்க பிரிச்சி கொடுத்து இருப்போம்! அது எப்படி?
BC-30 %
MBC-20 %
SC-18 %
ST-1 %
இப்படி நாம பிரிச்சி கொடுத்து இருப்போம்.
ஆனா இந்த AIQ'க்கு நாம UG,PG Medical Seats,பிரிச்சி கொடுப்பதால்,மத்திய அரசு நம்ம தமிழ்நாடு இடஒதுக்கீடு (69%) முறைப்படி பிரிச்சி கொடுக்காம இருக்குறாங்க.
OBC Reservation'க்கு குறைந்தது அவங்க முறைபடியும் கூட,கொடுக்கவில்லை இது தான் சிக்கல்!
நம்ம இட ஒதுக்கீடு முறை 69% (High) ,அப்படி அவங்க கொடுக்க முடிவெடுத்தாலும்
இப்போ சரியா இந்த OBC Reservation'ல் என்ன சிக்கல்?
மேல சொன்ன மாதிரி OBC-பிரிவுக்கு மத்திய அரசு AIQ'ல் இட ஒதுக்கீடு செய்யவில்லை என்பது தான் சிக்கல்.
SC,ST பிரிவுக்கு இட ஒதுக்கீட்டை
SC-15 %
ST- 7.5 %
என AIQ'ல் இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என அதே உச்சநீதிமன்றம் உத்தரவு கொடுத்துவிட்டது.அப்போவும் OBC Reservation கொடுக்கவில்லை.இப்போவும் OBC Reservation இல்லை.
MCI-Medical Council of India நீதிமன்றத்தில் என்ன சொல்லி இருக்காங்கனா.
எப்படி 2005'ல் உச்சநீதிமன்றம் SC/ST பிரிவுக்கு முறையே 15% மற்றும் 7.5 % AIQ'ல் இட ஒதுக்கீடு கொடுங்க என உச்சநீதிமன்றம் சொல்லி இருக்காங்களோ
மத்திய அரசு இந்த விவகாரத்தில் என்ன சொல்றாங்க?
நாங்க கொடுத்துவிடுகிறோம் என தான் சொல்றாங்க.ஆனா இங்க ஒரு சிக்கல் உச்சநீதிமன்றம் இட ஒதுக்கீடு 50 % தாண்ட கூடாது என சொல்லி இருக்கிறது.ஆக நாங்க இட ஒதுக்கீடு கொடுத்தால்
அவங்க கணக்கு படி பார்த்தா,
OBC-27%
SC-15%
ST-7.5%
EWS-10%
என போய் முடியும்.
(EWS-சேர்த்தா அவங்க கணக்கு படி கூட 50 % தாண்ட தான் செய்யும்!)
திமுக என கேட்குறாங்கனா 50% OBC Reservation'க்கு மட்டும் வேணும் என கேட்குறாங்க!
இதுல Take Away என்பது என்ன?
OBC Reservation என்பது இன்னைக்கு வந்து யாரும் AIQ'ல் இருந்து பிடிங்கி கொண்டது அல்ல.இதுவரை கொடுக்கப்பட்டு வரவில்லை.