2020ம் ஆண்டு தொடங்கியது முதலே கொரோனாவைத் தவிர வேறெந்த பிரச்சினையும் கண்ணுக்குத் தெரியவில்லை. இந்நிலையில், நாம் கவனிக்காமல் விட்ட ஆபத்துகளில் ஒன்றாக சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020 இருக்கிறது 1/1
#TNRejectsEIA2020
சுரங்கம், தொழிற்சாலைகள், அணை போன்ற தொழில் வளர்ச்சித் திட்டங்களால், ஒரு நாட்டின் சூழலியல் வளங்கள் பலியாகிவிடக் கூடாது என்ற நோக்கத்தில் உருவாக்கப்படும் முன்னெச்சரிக்கை வழிகாட்டுதல் சூழலியல் தாக்க மதிப்பீடு (Environment Impact Assessment) ஆகும் 1/3
1994ம் ஆண்டு முதல் இந்தியாவில் இந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை, நடைமுறையில் இருக்கின்றது. தற்போது, ‘சூழலியல் தாக்க மதிப்பீடு 2006’ நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், இதன் மீதான மாறுதல்களுடன் கூடிய புதிய வரைவு கடந்த மார்ச் 12-ல் மத்திய அரசால் வெளியிடப்பட்டது 1/4
சூழலியல் தாக்க மதிப்பீட்டின் நோக்கம் சுற்றுச்சூழலுக்கான தீவினைகளை முன்பே கணித்து அதனைத் தடுப்பதுதான். அதற்கு மக்கள் கருத்து, நிபுணர் அறிக்கை, ஆய்வு என பல்வேறு வழிமுறைகளை உள்ளடக்கியுள்ளது இந்தச் சட்டம் 1/5
தகவல் திரட்டு 👉 M.Prasanth, Samayam tamil🙏🙏