செறு வினை மகளிர் மலிந்த வெக்கை
பரூஉப் பகடு உதிர்த்த மென் செந்நெல்லின்
அம்பண அளவை உறை குவிந்தாங்கு
-(பதிற்றுப்பத்து 71 : 3 - 5
அரிசில் கிழார்)




மகளிர் - தொகுப்பதாகிய அறுவடைத்தொழில் செய்யும் உழவர்
மகளிர் ; மெலிந்த வெக்கை - நெருங்கியுள்ள நெற்களத்தின் கண் ;
பரூஉப் பகடு உதிர்த்த - பருத்த எருமைகள் கடா விடப்படுதலால்
மிதித்துதிர்த்த ; மென் செந்நெல்லின் - மெல்லிய செந்நெல்லின் கண்
;
நெற்குவையில் செருகி வைத்ததுபோல