கலம்செய் கோவே : கலம்செய் கோவே!
அச்சுடைச் சாகாட்டு ஆரம் பொருந்திய
சிறுவெண் பல்லி போலத் தன்னொடு
சுரம்பல வந்த எமக்கும் அருளி,
வியன்மலர் அகன்பொழில் ஈமத் தாழி
அகலிது ஆக வனைமோ
நனந்தலை மூதூர்க் கலம்செய் கோவே!
-(புறநானூறு 256,
பாடியவர்: பெயர் தெரிந்திலது)
1. கோ = குயவன். 2. சாகாடு = வண்டி; ஆரம் = ஆர்க்கால். 4. சுரம் = வழி. 5. வியன் = பெரிய; மலர்தல் = விரிதல்; பொழில் = நிலம். 6. வனைதல் = செய்தல்.
போரில் கணவனை இழந்த பெண், இறந்தாரை அடக்கம் செய்யும் தாழி செய்யும் குயவனை நோக்கி, “தாழி செய்யும் குயவனே! நான் வண்டியின் உருளையில் உள்ள ஆர்க்காலைப் பற்றிக்கொண்டு வந்த பல்லிபோல் என் கணவனுடன் இங்கு வந்தேன். வந்த இவ்விடத்தில் அவன் போரில் இறந்தான்.