இதெல்லாம் பார்க்குறதுக்கு, Cake மேல இருக்குற Cream & Topings மாதிரி நல்லா Attractive ஆ இருக்கும்.😋
அனா இதுங்க எல்லாமே நம்ம செலவு செய்யனும்ங்கற ஆசையை தூண்டக்கூடியது.அதுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டது..!
#Reward_Points
பதிவா Recharge பண்ணிவிடுற காதலனுக்கு சாக்லேட் தந்து Encourage பண்ற காதலி மாதிரி, இது நீங்க செய்யும் செலவுகளுக்கேற்ப Rewards Points தந்து "Very Good இன்னும் நிறையசெலவு பண்ணுங்க"ன்னு Encourage பண்றதுக்கு தான்.😊
இந்த RewardPointல குறிப்பா சிலவற்றை தெரிஞ்சிருக்கனும்
அது என்னன்னா,
📜Equivalent Money Value .
(இணையான பண மதிப்பு)
📜Redemption Charges
📜Points Expiry Period.
Equivalent Money Value:
உதாரணமா
😊Card:1
இதுல 100ரூ செலவு பண்ணா ஒரு Point கிடைக்குதுன்னு வச்சிக்குவோம்.
10 Pointக்கு 1ரூ வீதம் Redemption ன்னா ஒரு Pointன் மதிப்பு 10 Paise.
இதை1000ரூ செலவு பண்ணா 1ரூ கிடைக்கும் என எடுத்துக்கொள்ளலாம்.
(100x10)/1 =1000
😊Card:2
200ரூ செலவு பண்ணா ஒரு Point கிடைக்குதுன்னு வச்சிக்குவோம்.
10 Point க்கு 1 ரூ வீதம் Redemption ன்னா ஒரு Pointன் மதிப்பு 10 Paise.
ஆனா இங்க 2000ரூ செலவு பண்ணா தான் 1ரூ கிடைக்கும்.
(200x10)/1=2000
😊Card:3
இதுலையும் மேல சொன்ன மாதிரி 200ரூ செலவு பண்ணா ஒரு Point கிடைக்குதுன்னு வச்சிக்குவோம்.
ஆன இதுல வித்தியாசம்.
இங்க 5 Point க்கு 2ரூ வீதம் Redemption. இதனால ஒரு Pointன் மதிப்பு 40 Paise.
இப்போ பாருங்க இதுல 500ரூ செலவு பண்ணாலே 1ரூ கிடைக்கும்.
(200x5)/2=500
(தலை சுத்துதா😂)
இத அப்படியே
1ரூ Equivalent க்கு பாருங்க..!
அதாவது நமக்கு 1ரூ கிடைக்க
நீங்க
Card 1 வச்சிருந்தா 1000ரூபாயும்
Card 2 வச்சிருந்தா 2000ரூபாயும்
Card 3 வச்சிருந்தா 500ரூபாயும்
செலவழித்து இருக்க வேண்டும்.😊
இத புரிஞ்சிக்கிறதெல்லாம் பெரிய விஷயமே இல்ல.எல்லாம் நம்ம அஞ்சாங் கிளாஸ்ல படிச்ச
கணக்கு தான்.
இதுல இந்த 2x ங்கறது சாதாரணமாக கிடைக்கும் புள்ளிகளின் இருமடங்கு, அதுவே
5x ங்கறது ஐந்து மடங்கு.
(Redemption என்பது நம் Reward Points ஐ பணமாகவோ அல்லது பொருளாகவோ மாற்றுக்கொள்ளும் ஒரு செயல்)
Redemption Charges:
இப்படி நீங்க கஷ்டப்பட்டு, செலவழிச்சு, சேகரித்து வைத்துள்ள
Rewards Points ஐ காசாக மாற்றலாம் ன்னு நினைச்சு Redeem பண்ணலாம்னு போனா குறைந்த பட்சம் இவ்வளவு அல்லது நீங்க Redeem செஞ்சு கிடைக்கிற பணத்துல இவ்வளவு சதவீதம் ன்னு கணக்கு போட்டு புடிச்சிட்டு தான் குடுப்பான்..!
(காதலி நமக்கு தர்ற Choclateல அவளே பாதி கடிச்சிட்டு மிச்சத்த தர்ற மாதிரி!)
Points Expiry Period.
சில Card ல இந்த Reward Points ஐ ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் Redeem செய்யனும். இல்லையெனில் அது Expiry ஆகிவிடும்.
(பிறகு -அவ்வளவு தான் போச்சு 😂)
காதலி Choclate தந்தா உடனே சாப்பிட்ரனும், கொஞ்சம் நேரம் கழிச்சு சாப்பிடலாம்ன்னு இருந்தா, "உனக்கு நா குடுத்த...
Choclateஅ விட மத்ததுதான் முக்கியமா போச்சுல.உனக்கு போய்.."
ன்னு சொல்லி காதலியே கொடுத்த சாக்லேட்டை திரும்ப புடுங்கிக்கிற மாதிரி😂
இந்த Reward Pointsல
😊Joining BonusReward Points
😊Birthday Reward Points
😊ஒரு சில Partner Sites or Storesல வாங்குன 2x, 5x ன்னு Accelerated Pointsன்னு
நம்மள இன்னும் இன்னும் Purchase பண்ண தூண்டுற மாதிரி ஏகப்பட்ட விதத்துல வித்தை காட்டுவாங்க..!
#Cash_Back & #Discount
நம்ம எல்லாம் அதிகமா ஆசைப்பட்டு Credit Card உள்ள போறதுக்கு ஒரு முக்கிய காரணம் இந்த CashBack ம் Discount ம் தான்.
அதுவும் இந்த Shopping Sites ல 10%, 15% Discount & Cash Back ன்னு
பார்க்கும் போதே,
"மனசினுள்ளில் ஆசே வந்நல்லோ, வந்நல்லோ" ன்னு ஆட்டோகிராஃப் பாட்டு ஒலிக்கும்..!
இந்த ரெண்டுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்னும் கிடையாது.
Discount ங்கறது போர்த்திட்டு படுக்கறது., Cash Back ங்கறது
படுத்துட்டு போர்த்தறது..!😂
உதாரணமாக
ஒரு பொருளோட விலை 100 ரூ.
இதுல Discount 15 % ன்னா,
அதை வாங்கும் போது (100-15) தள்ளுபடி போக 85 ரூ குடுத்தா போதும்.
இதே Cash Back 15 % ன்னா,வாங்கும் போது 100ரூ கொடுத்து தான் வாங்கனும்.ஆன வாங்கின பிறகு உங்களுக்கு 15ரூ திரும்ப கிடைக்கும்.🙄
இந்த Cash Back ல முக்கியமா கவனிக்க வேண்டியது,
எவ்வளவு நாட்களில் உங்களுக்கு Cash back கிடைக்கும் என்பதை தான்.
ஒரு சில Online Stores ல Instant Cash Back ன்னு Transactions முடிஞ்ச உடனே குடுத்துறுவான். சிலயிது ஆறு மாசம் வரை இழுத்துட்டு போகும். எனவே கவனம்.
இந்த ரெண்டுலையுமே பொதுவா சில T&C விஷயங்கள் இருக்குது. அத வச்சு தான் Discount or Cash Back
எப்படிங்கறத முழுசா புரிஞ்சிக்க முடியும்.
ஒரு ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்டில் ஒரு குறிப்பிட்ட வங்கியின் கடன் அட்டைக்கு 10% Discount ன்னு போட்டு கூவுறான்.
உடனே 200ரூ க்கு Tiffin Box வாங்குனா
20ரூ Discount கிடைக்குமா, அல்லது 50000ரூ க்கு TV வாங்குனா 5000ரூ ன்னு Discount கிடைக்குமா ன்னு கேட்டா... பெரும்பாலும் கிடைக்காது என்பதே உண்மை.காரணம் இதுல
சில Factors இருக்கு
📜 Minimum Purchase Value
அதாவது குறைந்தபட்சம் இவ்வளவு Amount க்கு Purchase பண்ணியிருக்கனும்.அப்படி பண்ணா
தான் தள்ளுபடி கிடைக்கும்.
இப்போ T&C ல Min Purchase Value 3000ரூ ன்னு இருந்தா நீங்க 2999 க்கு வாங்கியிருந்தாலும் உங்களுக்கு Discount இல்லை. ஆனா 3000 க்கு வாங்கி இருந்தா 300ரூ Discount கிடைக்கும்.
📜Maximum Discount per card
இது இந்த Card மூலமா Purchase செய்தா அந்த Offer Period ல
நமக்கு அதிகபட்சமாக கிடைக்க கூடிய தள்ளுபடி எவ்வளவு என்பதை குறிக்கும். இப்போ ஒரு Card க்கு Max Discount Value 1500ரூ ன்னு வச்சிக்குவோம்.
நாம் 15000 க்கு Purchase பண்ணா 1500ரூ Discount கிடைக்கும். (10%)
ஆனா இதே நீங்க 15001ரூ ல இருந்து மேற்கொண்டு எவ்வளவுக்கு Purchase பண்ணாலும்
உங்களுக்கு கிடைக்கிற அதிகபட்சமான தள்ளுபடி இதே 1500ரூ தான்.!😂
📜 Discount Period.
இந்த தள்ளுபடி வருஷம் முழுசும் இருக்காது.ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டும் இருக்கும்.
இந்த காலகட்டம்தான் Discount Period.இந்த குறிப்பிட்ட காலத்திற்குள் வாங்கினால் மட்டும் தான் தள்ளுபடி கிடைக்கும்
இவை அனைத்தும் Discount க்கு மட்டும் அல்லாமல் Cash Back கிற்கும் சேர்த்தே பொருந்தும்.!😊
#Offers
திருச்சி பஸ்டாண்ட் க்கு நைட் 10 மணிக்கு போய்ட்டா போதும். நம்ம யாரு, என்ன Condition ல வந்திருக்கோம்.. இப்படி எதுவுவே கேட்காமா
"Sir, Chennai போனுமா.. Sleeper, AC Bus 600ரூ தான்,வாங்க.."
ன்னு நம்ம கூடவே வந்து இம்சைய கூட்டுவானுக.!
இதையே தான் Offer ங்கற பேருல இந்த Card Companies ம் , நமக்கு SMS, Mail, Push Notifications, மூலமா பண்றாங்க..!
"Birthday offer : 50% Discounts on your Dinner Bills at Favourite Restaurant"
உள்ள போய் படிச்சு பார்த்தா அந்த Hotel சென்னை ல
இருக்கும்.இதுக்குன்னு திருநெல்வேலி ல இருந்து Bus புடிச்சு போயா சாப்பிட முடியும்.!😂
அடுத்து,
"Branded Watches at 75%off Exclusive for you. Only Limited Sale. Hurry.!"
ன்னு Mail அனுப்புறது.!
Open பண்ணி பார்த்தா அப்படி ஒரு Brand Name ஐ வாழ்க்கையிலேயே கேள்விப்பட்டிருக்க மாட்டோம்🙄
பெரும்பாலும் நமக்கு இவங்க தர ஆஃபர்ஸ் எல்லாமே தேவையில்லாத ஆணி தான்.!
ரொம்ப நாள் பயன்படுத்தாமலோ அல்லது அரிதாகவோ நீங்க Cardஐ பயன்படுத்தி இருந்தீங்கன்னா,
இந்த Offers லாம் Just நம்மள Credit Card ஐ பயன்படுத்த வைக்க வேண்டி Tempt பண்ற விசயங்கள்.
"Offerங்கறது வேடன் பறவைக்கு போடுற தீனி"🤔
#No_Cost_EMI
இந்த வட்டியில்லா தவணை முறை உண்ணமையிலேயே பயனுள்ளது தான்.
இது எப்படி வேலை செய்து..
2013 ஆம் ஆண்டு RBI உத்தரவின் படி நிதி நிறுவனங்கள் வட்டியில்லாமல் கடன் வழங்கக்கூடாது. அப்புறம் எப்படி இது சாத்தியம் ன்னா அந்த வட்டிய உங்களுக்கு பதிலாக வியாபார நிறுவனங்கள் கட்டுவாங்க.!😊
இது எப்படி சாத்தியமாகும்..
ஒரு பொருளை விற்க கூடிய Seller,
விற்க பாலமாக இருக்கும் ஆன்லைன் ஷாப்பிங் பிளாட்பார்ம்,
அப்புறம் கடன் அட்டை வழங்கும் நிதி நிறுவனம்..
இவர்கள் 3 பேரும் சேர்ந்து தான் இதை சாத்தியமாக்குகிறார்கள்
இதில் பெரும்பாலும் வட்டியை அந்த பெருளை விறக்க கூடிய நிறுவனங்கள் தான் கட்டுகின்றன.
உதாரணமாக ஒரு மொபைல் 15 ஆயிரம் ரூபாய் அதன் மூன்றுமாத EMI வட்டி 600ரூ எனில் நீங்கள் வாங்கும் போது
(15000-600) அதாவது 14400 க்கு தான் Bill போடுவார்கள். இந்த 600 என்ற வட்டி தொகையை
விலை குறைப்பாக பொருளை விற்கக்கூடிய Sellers முதலிலையே வழங்குவார்கள். பிறகு நாம் அசல் 14400 + வட்டி 600 என
இதை மூன்று மாதங்களில் மாதம் 5000ரூ வீதம் திருப்பி செலுத்துவோம்.
உண்மையிலேயே நாம் வட்டி செலுத்துகிறோம் ஆனால் அந்த வட்டி நமக்கு முதலிலேயே தள்ளுபடி ஆகிவிடுகிறது
இப்படித்தான் இந்த No Cost EMI செயல்படுகிறது..! இது பெரும்பாலும் 3 EMI முதல் 6 EMI வரை தான் இருக்கும். ஏனென்றால் அதற்கு மேல் போனால் வட்டி அதிகமாக இருக்கும். விற்பனை செய்யும் நிறுவனங்கள் அதற்கு மேல் தள்ளுபடி தந்தால் Company க்கு கட்டுபடியாகது என்பதால்..!😂
இதை நல்ல முறையில் பயன்படுத்தி பொருள் வாங்கினால், நமக்கும் மொத்தமாக பணம் செலவாவது மிச்சமாகும். அதேநேரம் EMI தொகையை குறித்த நேரத்தில் சரியாக திருப்பி செலுத்தினால் உங்கள் Cibil Score உயரவும் வாய்ப்புகள் அதிகம்..!😊
"Credit Card பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள்..போன்ற தகவல்களுடன்
இந்த Credit Card தொடரின் கடைசி EMI உடன் உங்களை மீண்டும் சந்திக்கிறேன்..!😂
நன்றி மக்களே..!
🙏🙏🙏
Mobile Phone வாங்க போறீங்களா..!
4G or 5G எது வாங்கலாம் ங்கற குழப்பம் நம்மில் நிறைய பேருக்கு இருக்கும்...!
நான்காம் தலைமுறை (4G) அலைக்கற்றை சேவையிலிருந்து ஐந்தாம் தலைமுறை (5G) அலைக்கற்றை சேவைக்கு நம்முடைய அலைபேசியை மாற்றுவதற்கு முன்பு அதற்கான தொழில்நுட்ப சாத்தியக்கூறுகளை சற்று பார்க்கலாம்..!
#Network_Availability
இந்தியாவில் 2012 ம் ஆண்டில் Airtel நிறுவனம் 4G சேவைகளை சில குறிப்பிட்ட நகரங்களில் துவங்கியது. அது 2015-2016 களில் Jio வின் வருகைக்கு பிறகு தான் தான் ஓரளவு எல்ல முழுமையாக நகரங்களையும் சென்றடைந்தது. பின்பு அது கிராமங்களை சென்றடைய மேலும் இரு ஆண்டுகள் வரை ஆனது.!
பாட்டரிகள் - இதற்கும் மனிதனின் அன்றாட வாழ்க்கைக்கும் இடையே ஒரு நெடிய தொடர்பு உள்ளது. நாம் காலையில் எழுந்தவுடன் பார்க்கும் கைபேசி முதல் அலுவலகம் செல்லும் வாகனங்கள்,
வாட்ச்,
ப்ளுடூத் ஹெட் செட்,
ரிமோட்கள்,
சேவிங் ரேசர்,
இன்வெர்ட்டர்,
கேமிரா,
டார்ச் லைட் 😊
என பெரும்பாலான மின்/மின்னணு மற்றும் பல இயந்திரவியல் சாதனங்களில் நீக்கமற நிறைந்திருப்பவை இந்த பாட்டரிகள்.
(Photo credit : Electrical 4 U)
சரி, நம்ம கதைக்கு வருவோம்:
உலகை பயமுறுத்தும் அணுகழிவுகளை என்ன செய்யலாம் என ஆளாளுக்கு தலையினை பிய்த்து கொண்டிருந்த நிலையில் விஞ்ஞானம் அதற்கான தீர்வை அநேகமாக எட்டிவிட்டது எனலாம்.!
எனக்கும் நண்பருக்கும் சில எலக்ட்ரானிக்ஸ் & வீட்டு உபயோக பொருட்கள் வாங்க வேண்டி இருந்ததால், தற்சமயம் #Amazon & #Flipkart இவற்றில் Offer களை அள்ளி கொடுக்கிறார்களே..
எனவே, Online ல் Order செய்யலாமா அல்லது கடைகளிலேயே சென்று வாங்கலாமா என்பதை அறிய ஒரு Mini Market Survey செய்தோம்.!😊
திருச்சியில்,
🔥Home Appliances கடைகள் உள்ள சாலை ரோடு,
🔥பர்னிச்சர் & எலக்ட்ரிக்கல் கடைகள் உள்ள மதுரை ரோடு,
🔥திருச்சியின் Commercial Hubஆன NSB Road & Super Bazarல் உள்ள கடைகள்
🔥 மொபைல் ஷோரூம்கள்,
என, இவற்றில் அவர்கள் தரும் ஆஃபர்கள் மற்றும் விலை நிலவரங்களை கேட்டறிந்தோம்..!😊
#Sales
இதுல முக்கியமான இன்னொரு விஷயம்..! 😊
பொதுவா எல்லா பொண்ணுங்களுக்குமே அண்ணன் அல்லது அண்ணன் முறையில ஒருத்தரு இருப்பாரு. அவரு அந்த பொண்ணு மேல ஏகத்துக்கும் பாசம் வச்சிருப்பாரு..!
நமது ஆண்ட்ராய்டு சாதனங்களில கடைபிடிக்க வேண்டிய சில முக்கியமான பாதுகாப்பு அம்சங்கள்..!🤔
அது பற்றிய #Thread#இழை
வாங்க ஜாலியா Secure பண்ணலாம்..!🧞
உதாரணத்துக்கு "நாம ஒரு வெளியூர் Trip போறோம். ஒரு 10 நாள் ஊருல இருக்க மாட்டோம்..!"
வீட்ல என்னெல்லாம் பண்ணுவோம்..!🙋
🔥வெறுமனே Main Doorஐயும், Gate ஐயும் பூட்டிட்டு பொய்டுவோமா, இல்ல,
🔥தண்ணி எல்லாம் Pipe எல்லாம் Closeல இருக்கா,
🔥Gas Regulatorஅ Off பண்ணிட்டோமா,
🔥எல்லா Electrical சாதனங்களையும் Switch off பண்ணியாச்சா,
🔥ஜன்னல் எல்லாம் சாத்தியாச்சா,
🔥Back Door அ சரியா Lock பண்ணிட்டோமா,
🔥பீரோ key எல்லாம் பத்திரப்படுத்திட்டமா
இப்படி எல்லாம் முடிச்சு கடைசியாக தானே Main Doorஐயும் Gateஐயும் பூட்டுவோம்.!🔐
ஒரு 10 நாள் ஊருக்கு போறதுக்கே இந்த அக்கப்போர்ன்னா,😂
Minimum ரெண்டு மூனு வருஷமாச்சும் Use பண்ற Mobileக்கு என்ன பண்ணனும்.!