நிவா 🦋 Profile picture
Sep 28, 2020 26 tweets 8 min read Read on X
#Home_Theatre & #Sound_Bar 😊
(Purchasing Tips)

OTT தளங்களின் பயன்பாடு அதிகமான பிறகு இப்போது நம்மில் பலர் நமது TV ஐ 40" + திரைகொண்ட Full HD அல்லது 4K TV ஆக Update செய்திருப்போம்.!
எல்லாம் ஒரு நல்ல Movie Watching Experience கிடைக்க வேண்டும் என்பதற்காக தான்.!

#Shopping #Gadgets
ஒரு முழுமையான Movie Watching Experience என்பது பெரிய திரையில் படம் பார்ப்பது மட்டும் அல்ல அதை நல்லஒலி அனுபவத்துடன் கேட்டு ரசிப்பதும் ஆகும்.
இந்த நல்லஒலி அனுபவத்தை நமக்கு தரவல்லது தான்,
🔥 Sound Bar
🔥 Home Theater
சரி இந்த ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்ன்னு முதல்ல பார்ப்போம்.😊
#Sound_Experience #ஒலி_அனுபவம்
சின்ன பிசிறு கூட இல்லாத முழுமையான ஒலி.!
#இசைஞானி யின் பாடல்களில் தவழும் Bass Guitar,
#ARR ன் பாடல்களில் இழையோடும் Beats இப்படி குண்டுசி விழும் சத்தம் முதல் டைனோசர் கத்தும் அலறல் வரை எல்லாம் அதன் அளவுகளில் மிகச்சரியாக தெளிவாக இருக்கவேண்டும்.😊
#Sound_Bar
இது,
ஒலியின் அளவையும் (Volume)
ஒலியின் தரத்தையும் (Audio Quality)
மேம்படுத்தி தருகிறது‌.

இது எளிமையான ஒரு கருவி..!
இதை பயன்படுத்துவதும் மற்றும் இதை TV, Player, Computer, GameStation போன்ற பிற சாதனங்களுடன் Connect செய்து கொள்வதும் மிக எளிது..!
Sound Barல்
🔥Main Speaker,
🔥Aux Speakers,
🔥Tweeter Speakers,
🔥Inbuild Subwoofer
(சில Model களில் Woofer தனியாகவும் வருகிறது)

இது எல்லாமே ஒரே Bar லையே இருக்கும்..!
இதனால் நல்ல ஒலி அனுபவத்தை இது தருகிறது..!
Woofer inbuild ஆக இருக்கும் பட்சத்தில் Deep Bass என்பது
நாம் எதிர்பார்க்கும் அளவிற்கு இருக்காது..!
அது போல Surround Sound Experienceம் முழுமையாக இருக்காது.
பெரும்பாலும் Bluetooth, USB plug & Play, Remote உடன் தான் வருகிறது.
இன்னும் சில Modelல் FM வசதியும் உள்ளது.
📜என்னுடைய அறை சிறியது,
📜ரொம்ப எல்லாம் Sound வைக்க மாட்டேன்,
📜Compact ஆக இருக்கனும்,
📜எளிதில் எடுத்து செல்ல கூடியதாக இருக்கனும்.

இப்படின்னு எல்லாம் நினச்சிங்கன்னா Sound Bar தான் உங்களுக்கான Best Choice..!😊
#Home_Theatre
நல்ல ஒலி அனுபவம் Ok தான்.
ஆன சிறந்த ஒலி அனுபவம் வேணும் அப்படின்னு நினைக்கிறீங்களா அப்படின்னா Home Theatre தான் அதற்கான சிறந்த ஆப்ஷன்.

உங்க கிட்ட
43" + திரை கொண்ட FHD TVயும்,
வீட்ல 10 க்கு 14 அடி Room ம் (குறைந்தபட்சம்) இருந்தால் போதும்,
ஒரு Home Theatre வாங்கி
மாட்டினிங்கன்னா
(Except Bigger Screen Size) உங்களுக்கு 80% க்கு மேல நிறைவான Theatre Experience கிடைக்கும்..! 😊

இது
ஒலியின் அளவை மேம்படுத்துவது மட்டும் அல்லாமல், அதை Frequency க்கு ஏற்றவாறு பிரித்து அதன் வெவ்வேறு Channels (Speakers) வழியாக தருகிறது..!
இதுல 5.1, 7.1 ன்னு சொல்றது
📜5 Speakers + 1 Subwoofer - 6 Channel Surround Audio System
📜7 Speakers + 1 Subwoofer - 8 Channel Surround Audio Sytem
இதை தான் குறிப்பிடுது..!

அதாவது 5.1 ன்னா
5 Normal Speakers ஒரே மாதிரியானது
(இவை எல்லா Frequency க்கும் ஆனது)
ஒரு Subwoofer இது Low frequency Audio (Deep Bass) க்கானது..!

Home Theatre ஐ வாங்கிய பின் அதை Company Staff மூலமாக Install செய்து கொள்வது நல்லது. (Speaker Connections&Demo)

HDMI Cable முலம் HomeTheatreஐ நமது TV, Set TopBox, PlayStations உடன் எளிதாக Connectசெய்து கொள்ள முடியும்.
ஒலியானது வெவ்வேறு Channels வழியாக பிரித்து கொடுக்கபடுவதால் Surround Sound மற்றும் Deep Bass Audio Experience சிறப்பாக இருக்கும்..!

இது
🔥DTS
🔥Dolby Digital
🔥Dolby Pro Logic
🔥THX
போன்ற பிரபலாமான தொழில்நுட்பங்களில் உள்ள திரைப்படங்களை முழுமையாக ரசிக்க உதவுகிறது...!😊
📜நா நல்லா Sound வச்சு படம் பார்ப்பதை தான் விரும்புவேன்.!
📜எனக்கு நல்லா Enjoy பண்ணி பாட்டு கேட்பது ரொம்ப பிடிக்கும்.!
📜 Best Audio Experience is my Priority

இப்படிலாம் நெனச்சிங்கனா Home Theatre தான் Best Option.!😊
🤔வாங்கும்போது கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்.

🔥Sound Bar ஒரு Compact Device. அதனால இத நீங்க Show Room லையோ அல்லது Online லையோ கூட வாங்கலாம். நல்ல Branded Sound Bar ஏ 5000 க்குள்ள கிடைக்குது..!

🔥Inbuild ஆ இல்லாமல் External Sub woofer ஆ இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
🔥 Sound Bars கூட Online ல வாங்கலாம். ஏன்னா Simple Gadget. ஆனா Home Theatre ஐ Show Room ல போய் வாங்குங்க..! ( என் தனிப்பட்ட கருத்து)
🔥வாங்கும் போது Low Sound & Max Sound Check பண்ணுங்க. இத Check பண்ணும் போது Show Room ல் உள்ள மத்த Audio எல்லாம் Mute ல போட்டு பண்ணுங்க..!
🔥High Bass Check பண்ணுவதற்கு 'தாண்டியா ஆட்டமும் ஆட" பாட்ட நா Suggest பண்ணுவேன். பெரும்பாலும் Woofer ல Volume ஏத்தும் போது சில Modelsம் & எல்லா Local Setsம் இதுல பல்ல காட்டிரும்.
(Sony, Yamaha நல்லாவே Perform பண்றான்)
USB ய விட DVDல பாட்டு இருந்தா அதுல போட்டு Check பண்றது Best.
🔥Woofer Stability பாருங்க. சில Woofers Hi Volume ல அதிரும். இல்ல லேசா நகரும். இது இருக்க கூடாது.
🔥Woofer மட்டும் High Volume ல போட்டு மத்த Channels ஆ Mute பண்ணிடுங்க. அந்த 'கும் கும்' மட்டும் நல்லா Feel ஆகனும் இரைச்சலோ கரகரப்போ இருக்க கூடாது.
🔥இப்போ Mildஆ மத்த Channels ஸோட
Volume Rise பண்ணி Maximum போங்க., இப்பவும் woofer ல இரைச்சலோ கரகரப்போ இருக்க கூடாது..!
🔥 அப்புறம் Individual ஆ ஒவ்வொரு Speaker ஆ Volume ஏத்தி இறக்கி Check பண்ணுங்க. எல்லாம் ஒரே மாதிரி இருக்கனும்.
🔥அப்புறம் Connectivity Check பண்ணுங்க. Bluetooth Option இருந்தா அத உங்க Mobileல
Connect பண்ணி Check பண்ணுங்க.
சில நேரம் Bluetooth Connectivity issues இருக்கும்.(அதுக்கு தான் நம்ம Mobile லையே Check பண்ணனும்ங்கறது)
🔥 Connecting Ports & Cables எல்லாம் சரியா இருக்கான்னு பார்த்துக்கோங்க. சில சமயம் Ports ல Issues வரலாம்.
🔥FM இருந்தா அதையும் Check பண்ணிடுங்க..!
இதெல்லாம் எப்படி Check பண்றதுன்னு யோசிக்கிறீங்களா..
Sales Man கிட்ட சொல்லுங்க போதும். அவரே ஒரு பத்து நிமிஷத்துல இதெல்லாம் Check பண்ணி காட்டிடுவார்.

🔥 Sound Output அதிகம் வேணும் ன்னு காச Waste பண்ண வேண்டாம்.
Practicalஆ நம்ம ஹோம் தியேட்டர்ஐ Full Volume ல பயன்படுத்த மாட்டோம்.
பக்கத்து வீட்ல படிக்கிற பசங்க, Patients க்கு இது இடையூறாக இருக்கும்.

(300 W Speaker Output ல் 80 % Volume வச்சாலே நல்ல அதிகமான அளவுக்கு Soundஆ இருக்கும்.)

🔥நீங்க Choose பண்ண Model லையே வேற New Updates இருக்கான்னு பாருங்க..! இருந்தா அத வாங்குங்க.
அந்த New Updates ல ஒன்னும் பெருசா நமக்கு பயன் இல்லைன்னா பழசே வாங்கலாம். ஆனா Price Bargain பண்ணுங்க. விலை குறைவாக கிடைக்க வாய்ப்புகள் அதிகம்.

🔥 இவ்வளவு தூரம் பார்த்து பார்த்து வாங்குனதுக்கு அப்பறம் Installation செய்யும் போது Extra Cable தேவைப்பட்டால் நல்ல
தரமான Audio Cable மட்டுமே பயன்படுத்துங்கள்..!
🔥TV ல இருந்து Home Theatre க்கு Connect பண்ணும் போது TVல உள்ள HDMI ARC Port (Audio Return Channel) வழியாக HDMI Cable மூலமாக மட்டுமே Connect பண்ணுங்க..!
இது தான் சிறந்த மற்றும் முழுமையான ஆடியோ எக்ஸ்பீரியன்ஸை கொடுக்கும்.
(நிறைய பேர், TV ல உள்ள 3.5 mm Audio Jack வழியாக Connect பண்ணிட்டு Sound Quality, Bass & Surround Effect சரியில்லைன்னு சொல்றாங்க..!)🤔
🔥 Install பண்ண வர்றவங்க கிட்ட Room Size க்கு ஏற்ற மாதிரி Settings Options ல உள்ள Speaker Settingஐ வச்சு தர சொல்லுங்க.!
இதை நம்மளும் பண்ணலாம்.
என்ன நம்மளா பண்ணா நமக்கு Time கொஞ்சம் இல்ல நிறையவே அதிகமாகும்.!🤔

இதுல விட்டு போயிருந்தது ஏதாவது இருந்தா சொல்லுங்க தெரிஞ்சிக்கலாம்..!😊

ஏதாவது சந்தேகம் இருந்தாலும் கேளுங்க தெரிஞ்சா சொல்றேன்..!

நன்றி மக்களே.!
🙏🙏🙏

#NivaThreads #NivaShopping

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with நிவா 🦋

நிவா 🦋 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @theroyalindian

Oct 2, 2021
Mobile Phone வாங்க போறீங்களா..!
4G or 5G எது வாங்கலாம் ங்கற குழப்பம் நம்மில் நிறைய பேருக்கு இருக்கும்...!
நான்காம் தலைமுறை (4G) அலைக்கற்றை சேவையிலிருந்து ஐந்தாம் தலைமுறை (5G) அலைக்கற்றை சேவைக்கு நம்முடைய அலைபேசியை மாற்றுவதற்கு முன்பு அதற்கான தொழில்நுட்ப சாத்தியக்கூறுகளை சற்று பார்க்கலாம்..!
#Network_Availability
இந்தியாவில் 2012 ம் ஆண்டில் Airtel நிறுவனம் 4G சேவைகளை சில குறிப்பிட்ட நகரங்களில் துவங்கியது. அது 2015-2016 களில் Jio வின் வருகைக்கு பிறகு தான் தான் ஓரளவு எல்ல முழுமையாக நகரங்களையும் சென்றடைந்தது. பின்பு அது கிராமங்களை சென்றடைய மேலும் இரு ஆண்டுகள் வரை ஆனது.!
Read 11 tweets
Apr 1, 2021
#நியுக்ளியர்_டைமண்ட்_பேட்டரி
#Nuclear_Diamond_Battery

பாட்டரிகள் - இதற்கும் மனிதனின் அன்றாட வாழ்க்கைக்கும் இடையே ஒரு நெடிய தொடர்பு உள்ளது. நாம் காலையில் எழுந்தவுடன் பார்க்கும் கைபேசி முதல் அலுவலகம் செல்லும் வாகனங்கள்,

#அறிவோம்_டெக்னாலஜி
வாட்ச்,
ப்ளுடூத் ஹெட் செட்,
ரிமோட்கள்,
சேவிங் ரேசர்,
இன்வெர்ட்டர்,
கேமிரா,
டார்ச் லைட் 😊
என பெரும்பாலான மின்/மின்னணு மற்றும் பல இயந்திரவியல் சாதனங்களில் நீக்கமற நிறைந்திருப்பவை இந்த பாட்டரிகள்.

(Photo credit : Electrical 4 U)
சரி, நம்ம கதைக்கு வருவோம்:

உலகை பயமுறுத்தும் அணுகழிவுகளை என்ன செய்யலாம் என ஆளாளுக்கு தலையினை பிய்த்து கொண்டிருந்த நிலையில் விஞ்ஞானம் அதற்கான தீர்வை அநேகமாக எட்டிவிட்டது எனலாம்.!
Read 16 tweets
Mar 2, 2021
#ஹோன்ஜாக் 🙋
#Honjok 😊

இது என்ன கொரியன் பட டைட்டில் மாதிரி இருக்கேன்னு யோசிக்கிறீங்களா..! 🤔

சரி அதுக்கும் இங்க கீழே இருக்கிற புகைப்படத்திற்கும் என்ன சம்பந்தம் என்று யோசிக்கிறீங்களா..! 🤔

அப்படின்னா சரி வாங்க ஜாலியாக பயணிக்கலாம்..! 🧞

#Niva #Thread
மனித நாகரிகம் தோன்றிய காலம் முதல் மனிதர்கள் கூட்டம் கூட்டமாக தான் வாழ்ந்தார்கள்.

பிறகு அந்த கூட்டம்
பெரிய, பெரிய குழுக்களாகவும், பிற்காலத்தில் சிறிய சிறிய குழுக்களாகவும் பிரிந்து வாழ ஆரம்பித்தது.

இதெல்லாம் பல நூற்றாண்டுகளாக மனித சமூகத்தில் ஏற்பட்ட மாற்றங்கள்..!
மனிதன் இப்படி கூட்டமாகவும், குழுக்களாகவும் வாழ்ந்ததற்கு முக்கிய காரணம் அவனுக்குள் இருந்த ஒருவித அச்ச உணர்வு தான்..!

மேலும் இவ்வாறு வாழும் போது வேலைகளும் பொறுப்புகளும் பகிர்ந்து அளிக்கப்பட்டது.!

இதையெல்லாம் வழிநடத்த, கண்காணிக்க அந்த குழுவிற்கு ஒரு தலைவன்/தலைவி இருந்தார்கள்.!
Read 17 tweets
Oct 18, 2020
#உஷார்_அய்யா_உஷாரு 😊
#Online_Offers_உஷாரு 😊

ஆன்லைன் ஷாப்பிங் வலை தளங்களான #Amazon #Flipkart இவற்றில் Offer களை அள்ளி கொடுக்கிறார்களே உண்மையான மார்க்கெட் கள நிலவரம் தான் என்ன.!

அது பற்றிய #இழை #Thread
வாங்க ஜாலியா Shopping பண்ணலாம்..!🧞

#MarketSurvey #OnlineShopping #Offers
எனக்கும் நண்பருக்கும் சில எலக்ட்ரானிக்ஸ் & வீட்டு உபயோக பொருட்கள் வாங்க வேண்டி இருந்ததால், தற்சமயம்
#Amazon & #Flipkart இவற்றில் Offer களை அள்ளி கொடுக்கிறார்களே..
எனவே, Online ல் Order செய்யலாமா அல்லது கடைகளிலேயே சென்று வாங்கலாமா என்பதை அறிய ஒரு Mini Market Survey செய்தோம்.!😊
திருச்சியில்,
🔥Home Appliances கடைகள் உள்ள சாலை ரோடு,
🔥பர்னிச்சர் & எலக்ட்ரிக்கல் கடைகள் உள்ள மதுரை ரோடு,
🔥திருச்சியின் Commercial Hubஆன NSB Road & Super Bazarல் உள்ள கடைகள்
🔥 மொபைல் ஷோரூம்கள்,

என, இவற்றில் அவர்கள் தரும் ஆஃபர்கள் மற்றும் விலை நிலவரங்களை கேட்டறிந்தோம்..!😊
Read 26 tweets
Oct 17, 2020
#Sales
இதுல முக்கியமான இன்னொரு விஷயம்..! 😊
பொதுவா எல்லா பொண்ணுங்களுக்குமே அண்ணன் அல்லது அண்ணன் முறையில ஒருத்தரு இருப்பாரு. அவரு அந்த பொண்ணு மேல ஏகத்துக்கும் பாசம் வச்சிருப்பாரு..!
அவரை இந்த சமூகம்,
பாடி கார்ட்,
நலம் விரும்பி,
பாசமலர் ன்னு
எப்படி வேணும்னாலும் சொல்லலாம்..!😊

ஆனா, அந்தப் பொண்ணு மட்டும் அவரு சொல்றத தான் தட்டாம கேட்பாங்க.! அவ்ளோ பாசம் & நம்பிக்கை..! Image
பெரும்பாலும் அவருதான் வில்லன் ரோல் ப்ளே பண்ணுவாரு.
அவருக்கே நம்மள புடிச்சு போச்சுன்னா அப்புறம் பெருசா குறுக்கீடுகள் ஏதும் இருக்காது..!
நம்மளா.. சொந்த செலவுல ஏதாச்சும் சூனியம் வச்சிகிட்டா தான் உண்டு, மத்தபடி 99% சக்சஸ் & சுபம் தான்..!😊 Image
Read 9 tweets
Oct 14, 2020
#Android_Security 😊
#ஆண்ட்ராய்டு_பாதுக்கப்பு

நமது ஆண்ட்ராய்டு சாதனங்களில கடைபிடிக்க வேண்டிய சில முக்கியமான பாதுகாப்பு அம்சங்கள்..!🤔

அது பற்றிய #Thread #இழை
வாங்க ஜாலியா Secure பண்ணலாம்..!🧞

உதாரணத்துக்கு "நாம ஒரு வெளியூர் Trip போறோம். ஒரு 10 நாள் ஊருல இருக்க மாட்டோம்..!"
வீட்ல என்னெல்லாம் பண்ணுவோம்..!🙋
🔥வெறுமனே Main Doorஐயும், Gate ஐயும் பூட்டிட்டு பொய்டுவோமா, இல்ல,
🔥தண்ணி எல்லாம் Pipe எல்லாம் Closeல இருக்கா,
🔥Gas Regulatorஅ Off பண்ணிட்டோமா,
🔥எல்லா Electrical சாதனங்களையும் Switch off பண்ணியாச்சா,
🔥ஜன்னல் எல்லாம் சாத்தியாச்சா,
🔥Back Door அ சரியா Lock பண்ணிட்டோமா,
🔥பீரோ key எல்லாம் பத்திரப்படுத்திட்டமா

இப்படி எல்லாம் முடிச்சு கடைசியாக தானே Main Doorஐயும் Gateஐயும் பூட்டுவோம்.!🔐

ஒரு 10 நாள் ஊருக்கு போறதுக்கே இந்த அக்கப்போர்ன்னா,😂
Minimum ரெண்டு மூனு வருஷமாச்சும் Use பண்ற Mobileக்கு என்ன பண்ணனும்.!
Read 26 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us!

:(