அசுணம் பற்றிய சங்ககால ஈழத்துப் புலவரின் பாடல்!அசுணமா? மாசுணமா? விலங்கினமா? பறவையினமா? பாம்பினமா?
சங்கத் தமிழ் இலக்கியத்தில் ஒரு அதிசய விடயம் இருக்கிறது. அசுணம் என்னும் ஒரு அதிசய மிருகம் பற்றிய தகவலே அது.நீண்ட பதிவு!Link பயன்படுத்தவும்....
அசுணம்-2/20
கற்பனை ஓவியங்களில் மட்டுமே காணக்கிடைக்கும் அழிந்துப் போன விலங்குகள் எவ்வளவோ உள்ளன. தொல்விலங்கியல் (Paleontolgy or Paleo zoology) என்னும் துறை இது போன்ற விலங்குகளின் எலும்புக்கூடுகள் ,படிம அச்சுக்கள் (Fossils) ஆகியவற்றை சேகரித்து வைத்துள்ளன. ஆனால் தமிழ் இலக்கியத்தில்..
அசுணம்-3/20
குறிப்பிடப்பட்டுள்ள அசுணம் பற்றிய எந்தவொரு தடயமும் அவர்களுக்கு கிடைக்கவில்லை. இதனை பற்றி சங்க இலக்கியங்களில் ஈழத்துப் புலவர் பூதந்தேவனாரும் தனது பாடலில் குறிப்பிட்டுள்ளார். இதோ அந்த அதிசய அசுணம் பற்றி சங்க இலக்கியங்கள் கூறும் விபரங்கள்:
அசுணம்-5/20
யார் பூதந்தேவனார்?
மேலே உள்ள பாடலானது அகநானூறு களிற்றியானை நிரை -88 ஆகும். இதை எழுதியவர் பூதந்தேவனார்.இவரைப் பற்றி பேச என்ன இருக்கிறது என்கிறீர்களா?சங்க இலக்கியத்தில் ஈழக் கவிஞர்களின் பாடல்கள் இடம்பெற்றிருக்கிறது என்றால் அது இவருடைய பாடல்கள் மட்டும்தான்என்பது விசேடம்.
அசுணம்-6/20
மதுரைக் கடைச் சங்கப் புலவர்களுள் ஒருவரான பூதந்தேவனார் ஈழ நாட்டிலிருந்து பாண்டியநாடு சென்று மதுரைச் சங்கத்தில் புலவராய் நிலவினார். இவர் தனது தந்தை பூதனோடு மதுரை சென்று கற்று புலவரானார் என்று கூறப்படுகின்றது. wix.to/vEBSBwM
அசுணம்-7/20
ஈழத்து பூதந்தேவனார் என்று இவரின் பெயர் நற்றிணையிலுங் குறுந்தொகையிலும் செய்யுள் முகப்பில் வரையப்பட்டுள்ளது. சங்க நூல்களில் இவர் எழுதிய ஏழு பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இவரது பாடல்கள் அகநானூறு 88, 231, 307, குறுந்தொகை 189, 343, 360, நற்றிணை 366 ஆகியனவாகும்.
அசுணம்-8/20
இப்பொழுது அவரின் பாடலின் பொருளை பார்ப்போம்."புலியை கொல்லும் பெரிய கையுடைய யானையின் கண்களில் இருந்து வடியும் மத நீரைவண்டுகளில் கூட்டம் மொய்க்கும்.அதன் ரீங்காரத்தை யாழின் ஒளிதான் என்று எண்ணி பெரிய குகைகளில் வாழும் அசுணப் பறவைகள் உற்றுக் கேட்கும். wix.to/vEBSBwM
அசுணம்-9/20
அத்தகைய காட்டில் பாம்புகள் இறந்த போகும் அளவுக்கு கரடிகள் புற்றுகளைத் தோண்டும். இப்படிப்பட்ட கடினமான பாதை வழியேதான் என் காதலன் சென்றானோ?" என்று காதலனின் வரவை எண்ணி வாடுகிறாள் காதலி.
அசுணம் என்றால் என்ன ?
அகநானூறு பாடலில் வரும் அசுணம் எனும் விலங்கை அல்லது பறவையை ...
அசுணம்-10/20
சங்ககாலப் பாடல்களின் பல இடங்கிங்களில்"அசுணமா" என்றே அறியப்படுகின்து.இசையை அறியக்கூடிய அல்லது கேட்ககூடிய ஒரு உயிரிணமாம் இந்த அசுணமா.இந்தவிலங்கினம் அடர்ந்த காடுகளில் வாழ்ந்து வந்ததாக சொல்லப்படுகின்றது. இதன் சிறப்பம்சம்,இசையை உணர வல்லது. இசைக்கு மயங்கும் தன்மை கொண்டது.
அசுணம்-11/20
ஆனால் மிகவும் பலமானது. எனவே இதை எதிர்த்து நின்று வேட்டையாடுவது என்பது கடினம்.
இதை உணர்ந்த வேடுவர்கள் இந்த விலங்கை வேட்டையாட, மனதை மயக்கும் அழகிய இசையை, இசைகருவிகள் கொண்டு மீட்டுவர். அந்த இசைக்கு மயங்கி, அசுணமா இசை கேட்கும் திசை நோக்கி நகர்ந்து வரும்.
அசுணம்-12/20
இசை மயக்கத்தில் அருகில் நெருங்கி வந்ததும்,காதைக் கிழிக்கும் அளவுக்கு சத்தமான ஒலியை பறை போன்ற இசைக்கருவிகளால் ஏற்படுத்துவர். அந்த சப்தத்தைக் கேட்டு தாங்க முடியாது, காதுகளில் வலிவந்து மிரண்டுவிடும் சூழ்நிலையில் ஆயுதங்களால் தாக்கி கொன்றுவிடுவர். wix.to/vEBSBwM
அசுணம்-13/20
அழகான இசை மீட்டி ஏமாற்றி வரவழைத்து, மிக அதிகமான சத்தம் உண்டாக்கி துடிக்கவிட்டு அசந்த நேரம் பார்த்து ஆயுதங்களால் தாக்கி வஞ்சகமாக கொன்றுவிடுவர் என்று சொல்கிறார்கள்.இலக்கியங்களில் அசுணம் இடம்பெற்ற பாடல் வரிகள்
நற்றிணைப் பாடல் 304 - பாடியவர் மாறோக்கத்து நப்பசலையார்..
அசுணம்-14/20
"மணிமிடை பொன்னின் மாமை சாய, என்
அணிநலம் சிதைக்குமார் பசலை; அதனால்
அசுணம் கொல்பவர் கைபோல், நன்றும்"
இதன் பொருள் - குளிர்ந்த மணம் கமழும் மாலை அணிந்த என் காதலனின் மார்பு அசுணம் என்னும் விலங்கைக் கொல்பவர் கை போன்றது. அதாவது இன்பம் தந்து பின்னர் துன்பத்தைக் கொடுக்கும் என
அசுணம்-15/20
அசுணத்தின் இயல்புக்கு உவமிக்கிறார்.
நான்மணிக்கடிகை பிற்கால பதினென் கீழ்க்கணக்கு
"பறைபட வாழா அசுணமா..." - இதன் பொருள் பறையின் ஒலி செவியில் விழுந்தால் ‘அசுணமா’க்கள் உயிர் வாழாது.
சரி இந்த உயிரினம் உண்மையில் இருந்ததா அல்லது கற்பனையா என்பது குறித்த விரிவான விளக்கங்கள்...
அசுணம்-16/20
எங்கும் காணோம். ஆனாலும் வரலாற்றில் கற்பனை உயிரினங்கள் பல இருக்கின்றன. உதாரணத்திற்கு பீனிக்ஸ் பறவை, சீனாவின் ட்ரகன், கொம்புள்ள குதிரை, ஐந்து தலை நாய், இருதலைப்புள் (கண்டபேருண்டப் பறவை),கோழிப்பாம்பு, இசுபிங்சு, கடற்கன்னி, கிறிப்பன், யாளி என்று இன்னும் பல..
அசுணம்-17/20
இந்த வரிசையில் வரும் அசுணமாவின் விசேடம் என்னவென்றால் அது எமது தமிழ் இலக்கியத்தோடு சேர்ந்திருப்பதுதான்.
மாசுணம் தான் அசுணமா?
சங்க இலக்கியத்தில் மலைப்பாம்பை 'மாசுணம்' என்று சங்கப்புலவர்கள் பெயரிடுகின்றனர். அசுணமா தொடர்பான வடிவங்களும், செய்திகளும் 'மாசுணம்' என்னும்..
அசுணம்-18/20
மலைப்பாம்பைக் குறிப்பதாக இருப்பதாகவும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். மலைப்பாம்பின் இயல்பு நீளமாக இருத்தல் ,வளைந்து செல்லுதல், உடலில் அழகிய வடிவமிருத்தல், பெரிய வடிவில் இருத்தல் ஆகியனவாகும். அசுணமாவை வளைந்து செல்லும் , நீளமான அழகிய தேமலை உடைய பெரிய உயிரினமாக இலக்கியங்கள்
அசுணம்-19/20
குறிப்பிடுகின்றன. இந்த மாசுணமானது மிகவும் பெரிய பாம்புகளைக் குறிக்கின்றது. நாம் இப்போது வியக்கும் அனகொண்டா பாம்புகளை விடவும் பெரிய மலைப்பாம்புகளை மாசுணம் என்று அழைக்கின்றார்.
அசுணம் ,மாசுணம் எனவரும் இரு சொற்களும் சொல்,பொருள் என இரு நிலைகளிலும் ஒன்றென்பது..
அசுணம்-20/20
இக்கருத்துக்களால் புலனாகிறது. பாம்புகளுக்கு கேட்கும் திறன் இல்லை என்கின்றது விஞ்ஞானம். ஆனால் உணரும் திறன் இருக்கின்றதாம். பாம்பாட்டி ஊதும் மகுடிக்கு ஆடுவதைவிட பாம்பாட்டி காலை தட்டித் தட்டி எழும்பும் அதிர்வுக்கு ஆடுவதுதான் பாம்பாட்டம் என்றும் சொல்லப்படுகின்றது.
அசுணம்-21/20
அந்தவகையில்பார்த்தாலும் ஒலியை இந்த உயிரினம் உணரலாம் என்றும் எடுத்துக்கொள்ள முடியும்.ஆக இது அசுணமா? மாசுணமா? விலங்கினமா? பறவையினமா? பாம்பினமா? இப்படி ஒன்று இருந்ததா? அல்லது கற்பனையா என்றெல்லாம் ஒரு முடிவுக்கு இந்தக் கட்டுரையினால் வந்துவிட முடியாது.
அசுணம்-22/20
ஆனால் இப்படியொரு உயிரனத்தைப் பற்றிய குறிப்புகள் தமிழ் சங்க இலக்கியங்களில் உள்ளன. அதனை ஈழத்து கவிஞர்களும் உரைத்திருக்கிறார்கள் என்பதுதான் இதன் சிறப்பேயாகும்.
வணக்கம்.
முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் என சோழர் காலக் கல்வெட்டுகள் கூறுகின்றன!!
இதில் முந்நீர் என்பது கடலைக்குறிக்கும் .அதுமட்டுமா தமிழர் கடலுடன் உறவாடிக்குலாவிகொண்டு இருந்தனர் என்பதற்கு கடலுக்கு தமிழில் இருக்கும் அதிகப்படியான சொற்களே சான்று ! .அவைகள்.. wix.to/lkDqBwI
முந்நீர் பழந்தீவு-3/10
போன்ற இவைகளில் பல தமிழ்ச் சொற்கள் அல்ல. கடல் மூன்று வழி நீரால் ஆனது என்பதாலேயே முந்நீர் எனப்பட்டது. கடலில், அதனடியில் சுரக்கும் ஊற்று நீர், மலைகளில் பொழிந்த மழை நீர் வழிந்தோடி ஆறாக உருவாகி ஓடி வந்து கலக்கும் ஆற்று நீர் மேகங்கள் கருவுற்று நேரடியாகக்..
வணக்கம்.
தலைமைத்துவத்திற்காக நீங்கள் யாரை மிகவும் மதிக்கிறீர்கள், ஏன் (குறிப்பிட்டு கூறுங்கள்)?
இதை பார்க்கும் பொழுது என்ன தோன்றுகிறது? ஓநாய் பொதிகளாக நகர்கிறது. ஆம் நானும் அப்படி தான் நினைத்தேன். ஆனால் அதற்கு பின்னால் ஒரு மிக பெரும் தலைமை பண்பு ஒளிந்திருக்கிறதென்று.
தலைமைத்துவம்-2/5
இந்த பொதிகளில் செல்லும் முதல் மூன்று ஓநாய்கள் அந்த கூட்டத்திலேயே வயது முதிர்ந்தவைகள். அதை பின்னால் விட்டால் பின் தங்கிவிடும் எனவே அதன் வேகத்திற்கு தான் அனைத்து ஓநாய்களும் நகரும். வயது முதிர்ந்தவர்களை விட யார் சிறப்பாக வழிநடத்திட முடியும்?
தலைமைத்துவம்-3/5
அடுத்து செல்லும் 5 ஓநாய்கள் மிகவும் பலசாலிகள்.அது முன் வரிசை பலசாலிகள்.அது முன்னாள் செல்லும் முதியவர்களை எதிரிகளிடமிருந்து பாதுகாக்கும் விதத்தில் செல்கிறது.நடுவில் வருபவர்கள் குட்டிகள்,பெண்கள்,பலம் குன்றியவர்கள்.
அதன் பின் வரும் 5 ஓநாய்களும் பின் வரிசை பலசாலிகள்.
திருப்பூர் அருகே அஸ்திவாரம் இல்லாமல் தரையில் நிற்கும் கல்மண்டபம் தமிழர்களின் பாரம்பரிய கட்டிட கலை பாதுகாக்கப்படுமா?
திருப்பூர் அருகே அஸ்திவாரம் இல்லாமல் தரையில் நிற்கும் கற்தூண்கள் கொண்ட சாவடி அமைக்கப்பட்டு உள்ளது. wix.to/v0CkBv8
திருப்பூர்-2/15
தமிழர்களின் பாரம்பரியமிக்க இந்த கட்டிட கலை பாதுகாக்கப்படுமா? என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.எந்திரத்தனமாக மாறிப்போன மனித வாழ்க்கையில் இன்றைய நாகரிக உலகில் அக்கம் பக்கத்தினரை கூட நாம் அறிந்து வைத்திருக்கவில்லை. முன்னோர் வகுத்த வாழ்வியல் முறைகளை..
திருப்பூர்-3/15
அலட்சியம் செய்வது வருந்தத்தக்க விஷயம் தான். நம் முன்னோர் கூட்டு வாழ்க்கை, உணவே மருந்து, ஒழுக்கம், சுயகட்டுப்பாடு உள்ளிட்ட நற்பண்புகளை நமக்காக விட்டுச்சென்றனர்.அதுமட்டுமின்றி காலத்தால் அழியாத பல கட்டுமானங்களையும் விட்டுச் சென்றுள்ளனர்.
வணக்கம்
தமிழக அகழாய்வுகளில் இதுவே பிரமாண்டம் கீழடியில் 32 அடுக்கு உறைகிணறு! கீழடியில் ஆறாம் கட்ட அகழாய்வு பணிகள் கடந்த பிப். 19ம் தேதி துவங்கி செப். 30ம் தேதியுடன் நிறைவு பெற்றன. கீழடி, கொந்தகையில் மட்டும் பொருட்களை ஆவணப்படுத்தும் பணி மழையினால் தாமதமாக நடந்து வருகிறது.
தமிழக அகழாய்வில்-2/5
கீழடியில் தோண்டப்பட்ட 20வது குழியில் கடந்த 14ம் தேதி இரண்டு அடுக்கு உறைகிணறு கண்டறியப்பட்டது. 30ம் தேதியுடன் நடந்த அகழாய்வு முடிவில் 16 அடுக்குகள் வரை கண்டறியப்பட்டது. தொடர்ந்து பணிகள் நடந்து வந்த நிலையில் 32 அடுக்குகள் கொண்ட உறைகிணறு வெளிப்பட்டுள்ளது.
தமிழக அகழாய்வில்-3/5
ஒவ்வொரு அடுக்கும் சுமார் 20 முதல் 25 செமீ உயரம் உள்ளன. ஒரு சில அடுக்குகள் சேதமடைந்துள்ளன.கீழடியில் நடந்த அகழாய்வில் 8 முதல் 12 அடுக்குகள் வரையிலான உறைகிணறுகள் மட்டுமே கண்டறியப்பட்டன. 6ம் கட்ட அகழாய்வில் அகரத்தில் 26 அடுக்குகள் கொண்ட உறைகிணறு கண்டறியப்பட்டது.
வணக்கம்.
தமிழக வரலாற்றில் மிக பிரமான்டமாய் சித்தரித்த இடங்களை நேரில் பார்க்கும் போது பிரமிப்பு ஏற்படவில்லையே, எகா: கங்கைகொன்ட சோழபுரம் இந்த ஊர் மற்றும் இதனை சுற்றி பெரிய ஊர்கள் ஏதுமில்லைஎப்படி இந்த கிராமத்தை தேர்வு செய்து ராஜேந்திர சோழன் கோவிலை கட்டினான்? wix.to/SECWBvw
தமிழக வரலாற்றில்-2/10
அழியாப் புகழ்பெற்ற மாமன்னன் ராஜேந்திர சோழன் கங்கைகொண்ட சோழபுரத்தை கட்டுவதற்கு முன்பு சோழர் தலைநகரை தஞ்சையிலிருந்து ஜெயங்கொண்ட சோழபுரம் அருகில் மாளிகைமேடு என்ற புதிய நகரத்தில் நிர்மாணித்தார் .மாளிகைமேடு அதிகார மையம் கங்கைகொண்டசோழபுரம் கலாச்சார மையம்.
தமிழக வராற்றில்-3/10
வரலாற்று சூழ்நிலையின் அடிப்படையில் ராஜேந்திர சோழர் தலைநகரை மாற்றி அமைப்பதற்கும் காரணங்கள் பின்வருமாறு கூறப்படுகின்றது
மாமன்னர் ராஜராஜ சோழர் காலத்திலிருந்து சோழப் பேரரசிற்கு வடக்கே சாளுக்கியர் மூலம் அச்சுறுத்தல் இருந்து வந்துள்ளது அதனை ராஜராஜ சோழன் தன் மகள்
வணக்கம்
ஆதித்ய கரிகாலன் கொலைக்கு காரணமான பாண்டிய ஆபத்துதவிகளுக்கு தண்டனை கொடுத்தது உத்தம சோழனா அல்லது ராஜராஜனா?பிற்காலச் சோழர் வம்சத்தில் இன்று வரை விளக்க முடியாத புதிராக இருப்பது, பார்த்திவேந்திர கரிகாலன் என்ற 2 ஆம் ஆதித்தனுடைய படுகொலை ஆகும்!
ஆதீத்திய-2/15
இவன் ராஜ ராஜ சோழனின் அண்ணன்.
இவனது படுகொலையைப் பற்றி ' திருவேலங்காட்டு செப்பேடு மற்றும் உடையார் குடி கல்வெட்டுகளும் குறிப்பிடுகின்றன
சோழ மன்னன் கண்டராதித்தன் ஓராண்டு ஆட்சியில் இருந்து விட்டு பதவி விலகினார்.இவரது மகன் உத்தமச் சோழன் சிறுவன் எனவே ,
ஆதீத்திய-3/15
இவரது தம்பி அரிஞ்சயன் பட்டம் சூட்டப்பட்டார். இவர் ஓர் ஆண்டு ஆட்சி செய்துவிட்டு 'ஆற்றூர்' என்ற இடத்தில் ராஷ்டிரஹூடர்களுடன் நடந்த போரில் மரணம் அடையவே இவரது மகன் இரண்டாம் பராந்தகன் என்றழைக்கப்படும் சுந்தரச்சோழர் ஆட்சிக்கு வந்தார்.(படங்களை அழுத்தி பார்த்து படிக்கவும்)