வரி விதிப்பின் அடிப்படை குறித்த ஒரு திரி இது.,
வரிகளின் (Taxation) வகைகள்.,
சொத்து வரி : இது உள்ளாட்சிக்கு சொத்து வைத்திருப்பவர்கள் செலுத்த வேண்டிய வரி.
வாகன வரி : வாகனங்கள் சாலையைப் பயன்படுத்த செலுத்த வேண்டிய வரி.
எக்சைஸ் வரி : ஏற்றுமதி, இறக்குமதியாளர்கள் செலுத்தும் வரி.
வருமான வரி : தனிநபர், நிறுவனங்களின் ஆண்டு வருமானத்துக்கான வரி.,
கலால் வரி : மதுபான உற்பத்தி, வியாபாரத்துக்கான வரி.
ஜி.எஸ்.டி : இது பொருட்களின் உற்பத்தி, விற்பனை, சர்வீஸ்களுக்கான வரி.,
இவை போக professional tax, capital gain tax, gift tax, entertainment tax, library tax, நில வரி,
ஆயத்தீர்வை வரி, என நம்மைச் சுற்றி வரிக் குதிரைகள் போல வரிகள் பின்னிப் பிணைக்கப்பட்டுள்ளது. (பிச்சைக்காரர்கள் மட்டும்தான் இதுவரை எஸ்கேப் ஆனவர்கள். விரைவில் அவர்களையும் நிர்மலா மேடம் வரி வலைக்குள் கொண்டு வருவார் என நம்புவோம்.)
சரி! இன்றைக்கு சூப்பர் ஸ்டார் விலக்கு கேட்ட
சொத்துவரி குறித்து பார்ப்போம். சொத்துவரி எதற்காக? நமது அசையா சொத்து வீடாகவோ, கடையாகவோ, தியேட்டர், மண்டபம், கல்வி நிறுவனங்களாக அமைந்திருக்கும் உள்ளாட்சி / நகராட்சி / மாநகராட்சிகளுக்கு உரிமையாளர்கள் செலுத்தும் சொத்து வரி மூலம்தான் அந்தப் பகுதியில் சாலை, மின்விளக்கு, குடிநீர்,
கழிவுநீர் வடிகால் வசதிகள் செய்யப்படும்.
ஊரடங்கின் போது 6 மாத காலம் எந்த டூரிஸ்ட் வாகனங்களும், பேருந்து, லாரிகளும் சாலையில் ஓட அனுமதிக்கப்படவில்லை. ஆனாலும் ஆயிரக்கணக்கான டூரிஸ்ட் கார் உரிமையாளர்களிடம் இருந்து ஓடாத வாகனங்களுக்கு கூட சாலை வரி , இன்சூரன்ஸ் வசூலிக்கப்பட்டது.
மூடி வைக்கப்பட்டிருந்த திருமண மண்டபத்துக்கு சொத்து வரி எப்படி கட்ட முடியும் சூப்பர் ஸ்டார் கேட்டார். மூடியிருந்தாலும் அதற்கான சாலை, மின் விளக்கு, குடிநீர், கழிவுநீர் வசதிகளை நாங்கள் துண்டிக்க வில்லையே என்றுதான் அரசு பதில் அளிக்கும்.
சாலையில் ஓடாத (ஓட அனுமதிக்கப்படாத) வண்டிகளுக்கு
வரி வசூலிக்கும் அரசாங்கம் வேறென்ன சொல்லும்!
ஆயிரக்கணக்கான single owners பயன்படுத்தாத காலத்துக்கு சாலைவரி விலக்கு கேட்டது உரிமை. திருமண மண்டப உரிமையாளரான ரஜினி கேட்டது சலுகை.
உரிமை வேற! சலுகை வேற! ரஜினியின் ஆலோசகர்களுக்கு இது புரியலை. பல ஆயிரம் மக்கள் பேரிடர் காலத்திலும் கூட
அரசுக்கான வரியை செலுத்தும்போது, முன்னுதாரணமாக இருக்க வேண்டிய நாம் வரிவிலக்கு கோருவது எந்த மாதிரியான எதிர்வினையை உருவாக்கும் என ரஜினியாவது சிந்தித்திருக்க வேண்டும்! தனக்காக மட்டுமன்றி, அனைவருக்கும்,அனைத்து வரிகளில் இருந்தும் விலக்கு கேட்டிருந்தால் மரியாதை காப்பாற்றப்பட்டிருக்கும்.
இப்போதும் தனது கோரிக்கையில் நியாயம் இருப்பதாக சூப்பர் ஸ்டார் கருதினால், பேரிடர் காலத்துக்கான அனைத்து வரிகளையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என முதல்வரிடம் வலியுறுத்த வேண்டும். அரசு தள்ளுபடி செய்யவில்லை எனில் வெற்றிடத்தை நிரப்பும்போது, வரிகளும் தள்ளுபடி ஆகும் என உறுதி அளிக்க வேண்டும்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#SPbalasubramanyam
அமெரிக்க ஜனாதிபதி இந்தியாவுக்கு வருகிறார்! ஒபாமா என நினைவு. குடியரசுத் தலைவர் மாளிகையில் விருந்து. அதற்கு அழைக்கப்பட்ட எஸ்பிபியை நமது குடியரசுத்தலைவர் அமெரிக்க ஜனாதிபதிக்கு அறிமுகப்படுத்துகிறார்..
“இவர் எஸ்பிபி., எங்க நாட்டின் புகழ் வாய்ந்த பாடகர்.,
35000 பாடல்கள் பாடியிருக்கார்”
அமெரிக்க பிரசிடெண்ட் தலையாட்டி கை குலுக்கிட்டு நகர்ந்து விடுகிறார். பிறகு நடந்தது எஸ்பிபி இப்படி சொன்னார்..,
“அந்த அறிமுகத்தின் பிறகு, பிரசிடெண்ட் யாரையோ தேடிக் கொண்டே இருந்ததைப் பார்த்தேன்., என் பக்கம் வரும்போதெல்லாம் நான் விலகிக் கொண்டே இருந்தேன்.
இறுதியாக என்னை அவர் தோள் பிடித்து நிறுத்திவிட்டார். என்னைத்தான் தேடினார் என்பதையே அப்போதுதான் நான் உணர்ந்தேன். என் கையில் இருந்த காலிக் கோப்பையை எங்கே வைப்பது என தடுமாறிய அந்தக் கணத்தில் அவரே அதை வாங்கி, அருகிருந்த ஒரு டிரேயில் வைத்து விட்டு, Mister Singer! Is that true?
Post Covid Care : thread.,
உயர் பொறுப்பில் உள்ள ஓர் அரசு மருத்துவரிடம் நேற்று பேசினேன். நுரையீரல் துறை நிபுணர் அவர். அவர் சொன்ன சில எச்சரிக்கைகளை இங்கே பகிர்கிறேன். 1. முதலில் நமது சுகாதாரத் துறைச் செயலாளர் பெண்மணி குறிப்பிட்டதைப் போல கோவிட் வைரஸ் ஒரு எளிய ஃப்ளூ ஜுரம் அல்ல.
2. மிக வேகமாக தனது தன்மையை மாற்றிக் கொள்ளும் வகையாக உள்ளது. எனவே, தடுப்பூசி வந்தாலும் அதிலும் எல்லோருக்குமான நிரந்தர தீர்வாக அமையுமா என்பது ஐயமே! 3. ஒரு முறை கரோனா பாசிட்டிவ் வந்து குணமாகி கரோனா நெகட்டிவ் ஆனவுடன், அந்த நோய் 'முற்றிலுமாக' நீங்கி, இனி அபாயமில்லை என பொருள் அல்ல.
4. கரோனா வைரஸ் விலகும்போது சிலருக்கு அவரவர் உடல்தன்மையை வைத்து பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திச் செல்கின்றன. இதை கவனித்து முன்கூட்டியே கண்டுபிடிக்க நம்மிடம் வழிமுறையும் இல்லை. அதற்கான வசதிகளும் இல்லை. 5. கடந்த வாரத்தில் அவரிடம் வந்த நுரையீரல் தொற்று கேஸ்களில் 7ல் 5 கரோனா குணம்
ஆன்லைன் வகுப்பு : துவக்கத்தில் இது புதிய முறையாக இருந்ததால், ஆசிரியர்கள், மாணவர்கள் இருவருமே சுவாரஸ்யமாக பங்கெடுத்தனர். சில நாட்களிலேயே, லாக் இன் பண்ணிட்டு டிவிட்டர்லே குடும்பம் நடத்தும் டெக்னிக் போல சிலதை மாணவர்களுக்கும் கத்துகிட்டாங்க. அதை முறியடிக்கும் விதமாக ஆசிரியர்கள்
ஸ்பாட் கேள்விகள், உடனடி பதில்கள் என புதிய யுத்தியை கையாண்டனர். இப்படியான திருடன் - போலீஸ் விளையாட்டின் போதுதான், முதல்வரின் அந்த ‘ஆல் பாஸ்’ அறிவிப்பு வந்து மாணவர்கள் வாயில் ஐஸ்கிரீமாகவும், ஆசிரியர்கள் தலையில் கேஸ் சிலிண்டர் விலையாகவும் வந்து இறங்கியது. அந்தக் கணம் முதல் நாமும்
ஆல் பாஸ்தான் என்பதை பசங்க ஹெவியா நம்ப ஆரம்பிச்சுட்டாங்க. மனிதக் கடவுள் எடப்பாடியார் நம்மைக் கைவிட மாட்டார்னும், அப்படியே கைவிட்டாலும் ஸ்டாலின் அங்கிளுக்கு குரூப் மெஸேஜ் போட்டா போதும்னு வாட்ஸ்சப்லே பேசிகிட்டு உற்சாகமா இருந்தாங்க. இந்தக் கதையில் திடீர் திருப்பமா ஏ.ஐ.சி.டி மெயில்
#திரெட்
2025 ல் வாழ்க்கை எப்படி இருக்கும்னு ஒரு கற்பனை.
யாருக்கும் சம்பளம் பணமா தர மாட்டாங்க. பதிலா மாசத்துக்கு ரெண்டு கார்டு தந்துடுவாங்க. ஒண்ணு அம்பானி கார்டு. அதை வச்சு ரிலையன்ஸ் சூப்பர் மார்க்கெட்லே மளிகை, காய்கறி, பால், முட்டை, கறி எல்லாம் வாங்கிக்கலாம். ரேஷன் கடைகள் இருந்த
இடங்களில் எல்லாம் ரிலையன்ஸ் ஃப்ரஷ் இருக்கும். ஜியோ Jio Net லே WFH பண்ணிக்கலாம். பிள்ளைங்க Jio TV, Tab லே ஆன்லைன் க்ளாஸ் படிச்சுக்குவாங்க. Jio Tutorials மாலை நேரத்துலே ஹோம்வொர்க் சொல்லித் தருவாங்க. சமையல் ரொம்ப ஈஸி ஆகிடும். சமையலறையில் Jio TV இருக்கும். அதிலே என்ன தேவைன்னு சொன்னா
அமிதாப் பச்சன் குடும்பம் போல வி.ஐ.பிங்க சமைக்க சொல்லித் தரும் சானல் ஓடும். மேல்படிப்புக்கு Jio university இருக்கும். அதாவது இருக்கும்., ஆனா இருக்காது. பட் ஃபீஸ்லாம் அந்த அம்பானி படம் போட்ட கார்டுலே கட்டிக்கலாம். மருத்துவம் தேவைன்னா ரிலையன்ஸ் ஹாஸ்பிடல் இருக்கும். அங்கேயும் அம்பானி
#இருவர் திரைப்படம் மீண்டும் பார்த்தேன். 23 ஆண்டு இடைவெளியில் பற்பல புரிதல் மாற்றங்களைத் தாண்டி அந்தப் படத்தின் திரைமொழியும், உடை,கலை, நிறம் போன்ற டெக்னிகல் மெனக்கெடல்களும் பிரமிக்க வைத்தன. ஓர் இயக்குநராக மணிரத்னம் வானுயர்ந்து நிற்கிறார். மோகன்லால், ப்ரகாஷ்ராஜ் இருவருமே
மகா கலைஞர்கள் என்பது தெளிவு. படத்தின் கதையை முன்னகர்த்தி செல்வதில் பாடல்களுக்கு மிக முக்கிய பங்குண்டு. ஏ.ஆர்.ரஹமான் பின்னியெடுத்துள்ளார். ‘நறுமுகையே’ பாடல் காலம் தாண்டி நிற்கும். பின்னணி இசையில்தான், காட்சிகளின் கனம் தாளாமல் சில நேரம் திகைத்துப் போய் நின்றதாகக் கருதுகிறேன்.
இத்தனை இருந்தும், திரைப்படமாக முழுமை பெறாமல் போனது கதையின் நிறைவின்மைதான் என கருதுகிறேன். கலைஞர்-எம்ஜிஆர் கதைதான் இது எனக் கொண்டால், அபாரமான துவக்கம் காணும் எம்ஜிஆரின் கதாப்பாத்திரம் போகப் போக தட்டையாக ஆகிவிடுகிறது. முதல்வர் ஆனவுடனே தன்னை ஒரு
நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் :
பறவை மனிதன் பால்பாண்டி.
பாப்பா., அங்கே பார்! அதுதான் கூழைக்கிடா..pelican., இதுக்கு பேர் பாம்புதாரா ..இங்கிலீஷ்லே.. என பைனாகுலரை மகளிடம் தந்து கொண்டே யோசிச்சேன்.
Darters சார் என்றது ஒரு குரல்.
திரும்பினால் வெள்ளந்திச் சிரிப்போட மெலிதாக ஒருவர்.,
ஐ! எவ்ளோ பேர்ட்ஸ்! வெளிநாட்டுப்பறவைகள் எல்லாம் எவ்ளோ அழகா இருக்குல்லே என்றான் மகன்.
தம்பி, இங்கே இருக்கும் பறவைகள் எல்லாம் அவங்க அம்மா இங்கேயே முட்டை போட்டு, இங்கேயே குஞ்சா பொறிஞ்சு, இங்கேயே உணவூட்டப்பட்டு, இங்கேயே பறக்கக் கத்துகிட்டு, வருடத்துக்கு எட்டு மாசம் இங்கேயே இருப்பவை..
ரஷ்யாவிலே, யூரோப்லே, வட ஆப்பிரிக்காவிலே பனி உருகி ஏரி,குளம்லாம் தெரியும்போது உள்ளே நிறைய மீன்கள் கிடைக்கும். அதை சாப்பிட வருஷத்துக்கு நாலு மாசம் அங்கே போயிட்டு, முட்டை போட திரும்ப இதே கூந்தன்குளத்துக்கு வந்துரும். இப்போ சொல்லுங்க! இதுங்களுக்கு சொந்த ஊர் எது? வருஷத்துக்கு எட்டு