கொக்கென்று நினைத்தாயோ!
( கொச்சகக் கலிப்பா)

மருதநில உழவரெல்லாம்
மழைகண்டு இன்பமுற
எருவதனை நிலத்திலிட்டு
ஏரோட்டி விதைவிதைக்க
மருதநிலச் சிறுவரெலாம்
வரப்பினிலே கூடிவர
அருள்வளரும் வேளாண்மை
மகிழ்வோடு நடந்ததுவே!
உளைவாழ்ந்த நண்டொன்று
குடுகுடென்று ஓடிவர
வளைபாந்தில் ஏதுமற்று
எலிஉணவு தேடிவர
அளைபோந்த அரவமதும்
ஆசையுடன் ஊர்ந்துவர
கிளைதாண்டி மயிலதுவும்
குதித்தோடி வந்ததுவே!

குழிநண்டைக் கண்டஎலி
கூர்பல்லால் கவ்விவர
வழிகண்டு கட்செவியும்
எலியதனை வவ்விவர
விழிகொண்டு பார்த்தமயில்
உரகமதைக் கொத்தியெழ
பழிகொண்டு வேளானும்
மயில்கல் எறிந்தனனே!

தலைநேரே வந்தஇடர்
தோகையொடு போனதென
நிலைமாறிப் பாம்பதனை
பறக்கையிலே விட்டுவிட
பொத்தென்று விழுந்ததுவே
பாம்புசிறு வன்தலையில்
நச்சென்று நண்டுவிழ ...
நச்சென்று நண்டுவிழ
எலிவிழுந்த தொருதலையில்!

திண்ணென்று சிறுவருமே
திடுக்கிட்டு ஓடைவிழ
கண்தூக்கம் கலைந்திட்ட
கருமேதி நீரில் எழ
வன்முதுகின் மேலிருந்த
கொக்கதுவும் பறந்துஎழ
கண்மயில்தான் சென்றவழி
வெண்கொக்கும் பறந்ததுவே!

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with நெல்லை.க.சித்திக்

நெல்லை.க.சித்திக் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @nellaikaycee

18 Oct
பிச்ச்ச்சை எடுத்து படிக்க வைத்தோம் - சபரிமாலா.

பணம் இருந்தால்தான் வெற்றிபெற முடியும். கசபாபான உண்மை. யாருமே.. எவருமே இதை விரும்பவில்லை.

பின் ஏன் ஒருசாரார் மட்டும் நீட்டுக்கு ஆதரவு. அதுதான் சமூகச் சூழ்நிலை. உயர்ந்த சமுகத்தினரின் வெற்றி எண்ணிக்கையைப் பாருங்கள். புரியும்.
அந்த எண்ணிக்கையைத் தக்க வைக்கவே இவ்வளவு மாய்மாலப் பேச்சுகள். தங்களது எண்ணிக்கையில் ஒன்றுகூடக் குறைந்துவிடக் கூடாது என்ற பேராசை.

அதுபோக 'தகுதி'யான மருத்துவன் என்பதெல்லாம் வஞ்சனைப் பேச்சு. பணத்தால், பதவியால், குறுக்கு வழியால் 'தேர்வு' என்றாகியபின் தகுதி எங்கேயிருந்து வரும்?
தங்கச் சுரங்கமாகவே இருந்தாலும், மொத்த மண்ணையும் அள்ளிச் சலித்தால்தான் தங்கம் கிடைக்கும். உழக்கில் மண்ணெடுத்துச் சலித்தால் மண்தான் மிஞ்சும்.

அதுபோல, இந்தியாவின் ஒட்டு மொத்த மாணவருக்கும் சீரான வாய்ப்பு கொடுத்துத் தேர்ந்தெடுத்தால்தான் 'தரம்' உயர்ந்த மருத்துவர் கிடைப்பர்.
Read 4 tweets
13 Oct
#தமிழ்_வளமை 1
பயனில சொல்லாமை

‘எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே’ என்பார் தொல்காப்பியர்.

சொல் எதுவும் பொருளற்றதில்லை என்பது தொல்காப்பியர் தரும் தெளிவு. பொருட்தெளிவு என்பது கண்டவுடன் அறிதல், ஆழ்ந்து ஆய்ந்து அறிதல் எனும் இரு வகைத்தாம்.
சில தமிழ்ச் சொற்கள் கண்டவுடன் பொருள் தருமாறு தோன்றினாலும் ஆயுங்கால் ஆழ்ந்த பொருள் தரும் என்பது தமிழின் சிறப்பு.

எடுத்துக்காட்டாக,
பலன், பயன் – இரண்டும் ஒத்த சொற்களாகத் தோன்றினாலும்,
மக்கள் வாழ்வில் கொள்ளும் ‘பயன்’ மற்றை உயிரிகளின் வாழ்வில் ‘பலன்’ எனப்படுகிறது.
பலன் இல்லா நெல்லும்
பயன் இல்லாச் சொல்லும்’ என்பது வழக்கு.

'பயனில் சொல் பாராட்டுவானை மகனெனல்
மக்கட் பதடி எனல்' எனும் குறள் மிக எளிமையான பொருள் தருவதாம்.

ஆயினும், சொல், பதடி எனும் ஆளுமையை ஒரே குறளில் வைத்ததை நோக்கும்போது அது தமிழின் சிறப்பு என்பதால் ஆம்!

- தொடர்வோம்
Read 6 tweets
8 Oct
#தொல்கல்வெட்டெழுத்துகள்
#தஞ்சைப்பெருவுடையார்கோயில்
பாடம் 8

தஞ்சைப் பெருவுடையார் கோவிலின் சிறப்புகள் பல. கல்வெட்டுக் குறிப்புகளும் அவற்றுள் ஒன்று. கல்வெட்டுகள் மூலம் கோயிலைப் பற்றிய பல தகவல்களை நாம் அறிந்துகொள்ளமுடிகிறது.

குறிப்பாக, நாம் காணவிருக்கும்
கல்வெட்டானது மண்டபத்தின் வடசுவற்றில் உள்ள பல கல்வெட்டுகளுள் ஒன்று. இவற்றை ‘தளிச்சேரி கல்வெட்டுகள்’ என்பர்.

இக்கோயிலின் மூலவரை ‘ஆடவல்லான்’ என்றே அழைக்கிறது இக் கல்வெட்டு. ஆடவல்லான் திருமுன் ஓயாது நடனம் நடைபெற வேண்டும் என்ற எண்ணத்தில், 400 நடனமங்கையர் இக்கோயிலுக்காக
வரவழைக்கப்பட்டனர் என்று வேறு ஒரு அக்கல்வெட்டு கூறுகிறது.

கோயிலின் அமைப்பு, கட்டுமானப் பணி விவரங்கள், குடமுழுக்கு நடத்தப்பட்ட நாள், பணியில் ஈடுபடுத்தப் பட்டவர்கள் என முழுமையானதொரு ஆவணத்தையே நமக்கு இராசராச சோழன் விட்டுச் சென்றிருக்கிறார் எனக் கூறலாம்.
Read 17 tweets
19 Sep
#தமிழ்க்கல்வெட்டெழுத்துகள்

பாடம் 3 :
#பள்ளன்கோயில் செப்பேடு

பல்லவர்கள் வடநாட்டினர் என்பதால் பிராகிருதம், சமற்கிருதம் ஆகிய இரு மொழிகளில் கல்வெட்டிலும் செப்பேட்டிலும் தொடக்கத்தில் எழுதிவந்தனர்.
பல்லவர்களின் தோற்றமாகக் கருதப்படும் குண்டூர்ப் பகுதியில் (1/9 )
மிகப் பரவலாக அறியப்படும் ‘பட்டிப்புரோலு’ புத்த தூபக் கல்வெட்டு உள்ளது. அது பிராகிருதமொழியில் ‘அசோகபிராமி அல்லாத எழுத்தில்’ உள்ளதையும் நாம் பின்னர் காண்போம்.

சோழர்களுக்கு முன்னரே பல்லவர்கள் தங்களது கல்வெட்டுகளைத் தமிழ் எழுத்துகளில் பொறிக்கத் தொடங்கிவிட்டனர். (2/9)
தமிழகத்தில் கிடைத்த காலத்தால் முந்திய தமிழ் எழுத்து 'பள்ளன்கோயில் செப்பேடு' எனச் சொல்லப்படுகிறது.

இச் செப்பேடு, பல்லவ அரசன் மூன்றாம் சிம்மவர்மன் தன் 6-ஆம் ஆட்சியாண்டில் (கி.பி. 550) பருத்திக்குன்றில் வாழ்ந்த வஜ்ரநந்திக் குரவர்க்குப் பள்ளிச்சந்தமாக அமண்சேர்க்கை என்னும்

(3/9)
Read 8 tweets
22 Feb
அறுபது ஆண்டுகள் கொண்ட வட்டத்தை உருவாக்கியவர் யாவர்? எப்போது உருவாக்கப்பட்டது? உருவாக்கியதன் பின்னணி என்ன?

60 ஆண்டு வட்டம் (அ) வியாழ வட்டத்தை உருவாக்கியோர் தமிழர். உருவாக்கிய காலம் கலிகாலத்தின் தொடக்கம் எனக் கொள்ளலாம்.

கலிகாலத்தின் தொடக்கம் கிமு 3102 என்பதை மனதில் கொள்க.
இரவும் பகலும் நாள் ஆகியது. நிலவின் தேய்தலும் பெருகலும் மாதங்கள் ஆயின.

அதனைப் 12ஆல் பெருக்க ஆண்டுக் கணக்கின் நெருங்கிய நாட்கணக்கு தெரிந்தது. அதனைச் சரிசெய்ய பதினொரு நாட்கள் கூட்டி 365 ஆனது. அதிலும் ஒரு குறை, ¼ நாள். அதற்கு ஒரு தாண்டாண்டு (Leap) தேவைப்பட்டது.
இன்னும் மிகச்சரியாக ஆண்டுக் கணக்கைக் கண்டறிய முடியுமா என்ற கேள்விக்கு விடைதான் வியாழவட்டம். தமிழ் வள்ளுவக் கணியர்களின் கண்டுபிடிப்பு!

வியாழ வட்டத்திலும் 1 ஆண்டில் 14 நாழிகை, 53 விநாழிகள் குறைவு உண்டு. அதனால், 4 ஆண்டுக்கு ஒருமுறை சுறவம் (தை) மாதத்தில் ஒரு நாள் சேர்த்தனர். 12
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!