'உண்ணுங்கள் , பருகுங்கள், வீண் விரயம் செய்யாதீர்கள்‌' இதனை இறை வாக்கென நம்புவர்களும்‌ சரி இயற்கையே இறை என்பவரும் சரி அனைவரும் இதைப் பேண வேண்டும்.
'அன்னத்தை முன் படைத்து அகமது நபியைப் பின் படைத்தான் இறைவன்' என்று என் அம்மா கூறுவார்கள். பூமியில் புல் பூண்டுகள் முளைத்த பின்னரே
மற்ற உயிரினங்கள் ஒன்றுக்கொன்று உணவாக படைக்கப் பட்டுள்ளன. பச்சை உணவுகளைத் தின்ற ஆதி மனிதன் நெருப்பில் சுட்டவற்றின் சுவையறிந்த பின் புதுப்புது சுவையில் கிடைத்த உணவைச் சமைத்து இன்று வரை உண்கிறான். உண்டு கொழுப்பவரும் பட்டினியில் சுருண்டு விழுபவரும் பாரினில் சரிசமமாய் உண்டு.
பாலில் குளிப்பவர் பாலுக்கழுபவருக்கு மனமுவந்துத் தரலாம். பல பழைய ஆங்கிலப் படத்திலும் கதையிலும் ரொட்டியைத் திருடியவர் கதையின் நாயகனாயிருப்பார். ரொட்டிக்கானப் ( உணவு) போராட்டம் புரட்சியைத் தோற்றுவித்துள்ளது. அதனால்தான் அன்னதானம் தான் உயர்தானம் எனக் கொள்கிறோம். அந்த உணவை மிதிப்பதோ
கொட்டுவதோ வீசியெறிவதோ வீண் செய்வதோ தகாது . அடாது. ஒருவர் விரும்பியு ண்ணும் உணவைப் பார்த்து "சீ" என்பது அதைவிடத் தகாது. கோடிக் கணக்கில் கையிலும் வங்கியிலும்‌ பணமிருந்தாலும் இயற்கைப் பேரிடர் நேரங்களில் ஒரு வாய் சோற்றுக்கு ஆலாய்ப் பறக்கிறோம். சாதி மதம்‌ பாராது யாரிடமும் வாங்கி
உண்கிறோம். இந்த ஊரடங்கு காலத்தில் உண்ணும் உணவுத் தேடலே முதன்மையாக இருந்தது. கிடைத்ததை உண்டோம். மீண்டும் தேவையானது கிடைத்தவுடன் பாய்ந்து பாய்ந்து வாங்கினோம். நாவின்பம் variety variety food ல் தான் இருக்கிறது என்று இன்றைய சூழல் தீர்மானித்து விட்டது. அன்று பெரும் செல்வந்தர்களும்
நீராகாரம் குடித்து பழைய சோறு சாப்பிட்டு தங்கள் வேலைகளைப் பார்ப்பார்கள். இன்று நகர்புறத்து எளிய மக்கள் வீடுகளில் கூட பழைய சோற்றை கொட்டி விடுகிறார்கள். ஏன் பழையதே இருப்பதில்லை. ஒரு பானைச் சோறு பொங்கி ஒரு சட்டி குழம்பு வைத்திருக்கும் கிராமப்புற வீடுகளுக்கு எப்போது சென்றாலும்
சோறிருக்கும். வயிராற சுடுசோறோ பழையதோ உண்ணலாம். ஆழாக்கு அரிசியை குக்கரில் பொங்கி மூன்று பேர் உண்ணும் வீட்டில் பழையது எப்படி வரும்?

இன்றும் சில வீடுகளில் இரவில் வெந்நிப் பழையதுடன் காரச்சேவு/சீவல் வைத்து உண்ணும் பழக்கம் உள்ளது. கிடைத்ததை மனநிறைவுடன் உண்டு பழகினால் எதுவும்
வீணாகாது. ஊண் உணவு முன்னரே உண்டு. எண்ணையில் குளித்து முழுகும் பண்டங்கள் இன்று அதிகம். அதன் சுண்டியிழுக்கும் மணமும் சுவையும் நாவை அடிமையாக்கும். அது உண்டும் உடல் நலமாயிருப்பவர் நன்றாக உண்ணட்டும்.

முன்னர் விருந்தினருக்குச் சமைக்கப்படும் கோழியில் பொரித்தத்துண்டு ஒன்றுதான் தருவர்
இப்போதோ பக்கோடா போல chicken 65. Mutton fry...முன்பு கலர் சோறு எனப்படும் பிரியாணி அரிது. இன்றோ தொட்டதற்கெல்லாம் பிரியாணி விருந்து. வெளிநாடுகளில் சான்ட்விச் எனப்படும் உணவுதான் தினப்படி உணவாம். குழந்தைகளும் கூட சூடாக்காமலே உண்பராம். சைவம் என்றால் அதற்குள் இரண்டு இலை கொஞ்சம்
காய்கறி, அதன்மேல் சாஸ் - இனிப்பும் புளிப்புமாய். இரண்டு வித கேக். கடுங்குளிரிலும் ஜில் அல்ல 'chilled' தண்ணீரில் ice cubes உடைத்துப் போட்டு நறநறவென்று கடித்துக் குடிப்பார்களாம். எப்படி என்று மகளிடம் கேட்டேன். "நீங்க உச்சி வெயிலில் சுடச்சுடத் தேநீர் குடிக்கிறீங்க. கொதிக்கக்
கொதிக்க சோறு சாப்டீறீங்க . அதுபோல்தான்‌" என்றாள். ஆனால் அவள் இட்லி தோசை பொங்கல் பூரி என்றுதான் சமைக்கிறாள்.

அங்கங்கு கிடைக்கும் பொருட்களைப் பொறுத்து ஒவ்வொருவருக்கும் ஒரு உணவுப் பழக்கம். அதில் புதுப் புதுச் சுவையை உருவாக்குவது மனிதன் வழக்கம். உண்போம். மகிழ்வோம். வாழ்வோம்.
food combinations சில.
புட்டுடன் பயறு பப்படம் பழம் சீனி/ மீன் குழம்பு/ கடலைக்கறி
மரச்சீனிக் கிழங்குடன் தாளிப்பும் தேங்காயும்/மசித்த கிழங்குடன் மீன் கறி உப்பு மட்டும் போட்ட கிழங்குடன் கஞ்சி
சிறுபயறு தேங்காய் சேர்த்த கஞ்சி
நெய்ச்சோறுடன் கறிக் குழம்பு பருப்பு புளிக்கறி
அப்பளம்.
தேங்காய்ச்சோறுடன்‌‌ மீன் குழம்பு

ஓணம் சாப்பாட்டில் அவியல் துவரனுடன் சாம்பார் ரசத்துடன் எரிசேரி, ஓலன் தயிர்ப்‌பச்சடி ,இஞ்சிப் பச்சடி, நாரத்தைப்‌ பச்சடி மாங்காய் பச்சடி பழப்பச்சடி, தயிரிஞ்சிப் பச்சடி , பூசனிக்கூட்டு , மாம்பழம் போட்ட மோர்க்குழம்பு( புளிசேரி)
மூன்று வகைப்‌ பாயாசம்.
பார்த்தாலே கண் நிறைந்து‌விடும். சுவை பிடித்தால் வயிறும் நிறையும்.

நிறையவோ குறையவோ
எதுவானாலும் பகிர்ந்து உண்போம். பூமி மாதாவை செருப்பினால் மிதிக்க அஞ்சும் உழவர் விளைவிக்கும் உணவுப் பொருளை வீணாக்கா திருப்போம்.

நனறி

#உலக_உணவு_தினம்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Mansura Beebi

Mansura Beebi Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @BeebiMansura

10 Oct
இன்றைய இளையோருக்கு அஞ்சல் துறையுடன் இணைந்திருந்த தந்தித் துறையைப் பற்றியும் அது காணாமல் போன வரலாறு பற்றியும் தெரிய வாய்ப்பில்லை. அதில் பணியாற்றி ஓய்வு பெற்ற எனது நினைவலைகளில் சில . .
பதினோராம் வகுப்புத் தேர்வின் மதிப்பெண் அடிப்படையில் வேலைக்கு விண்ணப்பித்தேன். செலவு ரூ5/
நேர் காணலுக்கு ஆங்கிலத்தில் ஒரு கட்டுரையை அதிகாரி வாசித்தார். தவறின்றி எழுதினேன் . அவ்வளவுதான். வேலை கிடைத்து விட்டது. சென்னையில் ஒன்பது மாதப் பயிற்சி. சிட்டுக் குருவிகள் போல் ஆணும் பெண்ணுமாய் தொண்ணூறு‌ பேர். மோர்ஸ் கோட் எனும் தந்தி மொழி, டெலிபிரிண்டர் எனும் தட்டச்சுக் கருவி.
இவற்றில் தேர்ந்து நாகர்கோவிலில் 1980ம் வருடம் பணியில் சேர்ந்தேன். பெரிய நகரங்கள் டெலிபிரிண்டருடன், சிறு ஊர்கள் அஞ்சல் அலுவலகத்தில் மோர்ஸ் கருவியுடன் இணைந்திருக்கும். என்னை அறிந்த மக்கள் தந்தி கொடுக்கவோ தொலைபேசவோ வரும்போது பெருமையாயிருக்கும். அந்நாளில் தொலைபேசுபவர்கள் தந்தி
Read 9 tweets
24 May
பிறை பாத்தாச்சு...

ஊரடங்கு இன்னும் முடியவில்லை. நாளை பெருநாளா நாளைக்கழிச்சுப் பெருநாளா தெரியவில்லை.

மாலை ஆறு மணிக்கு வீட்டிலுள்ள பிள்ளைகள் மொட்டை‌ மாடியேறி பிறை‌ தெரிகிறதா எனப் பார்த்தார்கள். இது‌வரை‌‌ தெரியவில்லை. நோன்பு இருபத்தி ஒன்பது முடிந்து விட்டது.
பெரியவர்களும் பிள்ளைகளும் எங்காவது பிறை தென்படுகிறதா என்று மேற்குப்‌ பக்கம் நின்று கழுத்தைத் திருப்பியும் அண்ணாந்தும் பார்த்துக்கொண்டு நின்றனர்.
அந்த சிற்றூரின் ஐந்தாவது தெருவிலுள்ள மூன்றாவது வீட்டின் பாரூக் மட்டும் இன்று பிறை தெரியக்கூடாது என்று துவா செய்து கொண்டிருந்தான்.
'மோனே பாரூக்கு' என உம்மா கீழிருந்து விளித்தாள். அது பக்கத்து தட்டில் நின்றிருந்த மம்மதுக்கு கேட்டது . இவன் காதில் விழவில்லை. 'அல்லா .பெற நாளைக்குத் தெரியட்டும். அப்பதான் அன்சருக்குப்‌ பெருநா கொண்டாட முடியும். அல்லா
என் துவாவைக் கேளு'. என்று மனத்தினுள் வேண்டிக் கொண்டிருந்தான்‌.
Read 46 tweets
10 May
உம்மா

அது நடந்து ஐம்பத்தைந்து வருடம் ஆகி விட்டது. ஒரு இளங்காலை நேரம். நாகர்கோவில் நகரின் முதன்மையான ஒரு தெருவில் வசிக்கும் பெண்கள் தங்களுக்குள் ஏதோ பேசிக் கொண்டிருந்தனர். தண்ணீரெடுக்க தெருமுக்கிற்கு வர வேண்டும்.
அந்த‌ நீண்ட குறுகிய தெருவின்‌கடைசியில்‌ இடப்பக்கம்‌ ஒரு வளவு.
பத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இருந்த வளவு.
அந்த வளசலிலிருந்து வந்த பெண்ணிடம் ஒருத்தி கேட்டாள்.
'ஏட்டி தாணம்ம ..
மாமி எப்படியிருக்கா?'
'மாமிக்கென்ன நல்லாத்தான் இருக்கா. உங்கம்ம அதத் தந்தாளா இந்தத் தந்தாளான்னு வந்ததிலயிருந்து ஒரே நொச்சரிப்பு:
போட்டி சவமே ஒங்கத்தையையா கேட்டேன்.
ஒங்க பக்கத்து வீட்டு மாமி .. அதான் அந்த சாய்ப்பு மாமா பொண்டாட்டி; அவளத்தான்..
ஒன் வீட்டு தொட்டடுத்த வீடுல்லா. அதாம்ட்டிக் கேட்டேன்'
'மாமிக்கு என்னக்கா ஆச்சிது? ராசம்மக்கா நீதான் சொல்லேன்.'
'ஓங்கத்த ஒண்ணும் சொல்லலியா?‌'
வெறும் குடத்தை இடுப்பிலிருந்து கையில் பிடித்தவாறு இல்லக்கா.
Read 27 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!