அவரின் முகத்தில் ஸ்ரீதேவியின் அழகு தெரிகிறது. அது கண்ட அசுரர்கள்,
”சற்று முன்பு இதில் தோன்றிய பெண்ணல்லவோ இவள்?” என ரஸிக்கும்படி, தாயார் மோகினி மேனியிலும் முகத்திலும் அலங்காரமாய்த் தவழ்ந்தார்.
இன்றைய தினம் லக்ஷம் அர்ச்சனை, அல்லது காசுகள் கொண்டு, ஸ்ரீதேவியை வழிபடுவர். இந்த பக்தியால் தாயார் நமக்கு தன, தானியத்தை அள்ளித்தருவாள்.
இன்று பறவைக் கோலமிட்டு, பாரிஜாதம் எனும் பவளமல்லியில் தாயாருக்கு மாலையிட்டு, நறுமணப் புஷ்பங்களால் அலங்காரம் செய்து பூஜிக்க வேண்டும்.
திராக்ஷை முந்திரி கலந்த க்ஷீராமுது (பால்பாயஸம்), தஹியண்ணம், புளியோதரை, உளுந்தண்ணம் போன்றவற்றை வைத்து நைவேத்யம் பண்ண வேண்டும்.
இன்று சுமங்கலிகளுக்கு புடவை, மங்கலப் பொருட்கள், குங்குமம் ஆகியவை தந்து நலங்கிட்டு ஸேவித்தால் விசேஷம். மேலும் பெண்குழந்தைக்கு பட்டுப் பாவாடை அளிக்கலாம்.
இது நமக்கும் நம் பின் வரும் ஸந்ததிக்கும் நல்ல மாங்கல்ய பாக்யம் தந்தருளும். இன்று ஸ்ரீதேவியை, பிற நாட்களை விட ஒன்பது மடங்கு
அதிகமாக பூஜித்தால் செல்வமருளி நம்மை எந்நிலையிலும் ரக்ஷிப்பாள்.
தன் வீட்டில் வேலைக்காரி கழுவிய பாத்திரங்களை மஞ்சள் தண்ணீர் தெளித்து எடுப்பதும்,
பால்காரிக்கு வைத்த சொம்பிலிருந்து, ஒரு துணியை வைத்து பாலை மட்டும் வேறு பாத்திரத்தில் மாற்றி, அந்த சொம்பை வெளியில் தனியாக வைத்திருப்பதும்,
வேலைக்காரி வீடு பெருக்கிச் சென்றதும், ஒரு முறை ஈர Mop-ல்
வீட்டைத் துடைப்பதும் கண்ணால் கண்டேன். ஏனென அவரைக் கேட்டால்,
“என்ன ஆனாலும், என்னளவுக்கு சுத்தமா இருப்பாங்களா தெரியாது. அவங்க வீட்டையே சுத்தமா வச்சிருக்க மாட்டாங்க. மாத்திக்கவும் மாட்டாங்க... எனக்கு பிடிக்காதுப்பா இப்படி இருந்தா...” என்கிறார்.
அமிர்தம் எடுக்க பாற்கடலைக் கடைந்த போது வந்ததால், மஹாலக்ஷ்மிக்கு அலைமகள் என்று பெயர். பாற்கடலிலிருந்து தோன்றிய ஸ்ரீதேவியான மஹாலக்ஷ்மியை மஹாவிஷ்ணு ஆட்கொண்டருளுகிறார்.
தாயாருக்கு இன்று பச்சரிசி மாவில் மஞ்சள் கலந்து மனைக்கோலம் இட்டு, அதில் அக்ஷதை தூவவேண்டும்.
ஜாதிமல்லிப் பூவால் மாலையிட்டு, கதிர்பச்சை எனும் இதழால் அர்ச்சனை பண்ண வேண்டும். கஸ்தூரி மஞ்சள், முத்து போன்றவற்றாலும் மாலையிட்டு அலங்கரிக்கலாம்.
கொய்யாப்பழம் வைத்து, தயிர் சாதம், அவல் கேசரி, பால் பாயாசம், கற்கண்டு பொங்கல், கதம்ப சாதம், உளுந்துவடை, போன்றவற்றில் எவை கொண்டும் நைவேத்யம் பண்ணலாம்.
நமது காங்கேயம் காளைகளுக்கு மட்டுமல்ல, அதை வாகனமாக்கிய ஈஸ்வரன் புகழையும் ஜொலிக்கச் செய்வது.
ஆனால் அந்த ஒளிரழகு என்னவென நம்மில் எத்தனை பேர் அறிவோம்?
இதோ - அதனருகே உள்ள நத்தக் காடையூர் எனும் அதிசய கோயில் பற்றிக் காண்போம்...
காங்கேயத்தின் சென்னிமலை - பெருந்துறை சாலையிலிருந்து 3Km அருகே உள்ளது நத்தக் காடையூர். இத்தலத்தில் உள்ள சிவபெருமான் திருமேனி சதுர ஆவுடையாருடன் லிங்கத்திருமேனியாக வடிக்கப்பட்டுள்ளது.
இது அப்பர் பிரானால் பாடப்பட்ட வைப்புத்தலம் எனும் புண்ணியம் பெற்றது. இது பரன்பள்ளி, பரஞ்சேர்பள்ளி,
நட்டூர், மத்யபுரி எனப் பல பெயருடன் அழைக்கப் படுகின்றது.
பரன் - ஈசன். பள்ளி - கோயில். எனவே, பரன்பள்ளி(ஈசன்பள்ளி), பரஞ்சேர்பள்ளி(ஈசனைச்சேரும் பள்ளி) போன்ற காரணப் பெயர்களுடனும்,
ஸமஸ்க்ருதத்தில் மத்யபுரி என்பது நடுவான ஊர் எனும் அர்த்தம் தருவதால், தமிழில் அது நடுவூர், நட்டூர் எனும்
🌳 பாண்டவர்களின் பன்னிரண்டு ஆண்டுகால வனவாசம் முடியும் காலம்... அப்போது ஒருநாள் வனத்தில் கடுமையாக
அலைந்து திரிந்த பாண்டவர்களுக்கு கடும் வறட்சி ஏற்பட்டது. குடிக்க தண்ணீர் வேண்டியிருந்தது.
அருகில் எங்காவது ஓடையோ, குளமோ தென்பட்டால் நீர் கொண்டுவர வயதில் இளையவனான சகாதேவனை அனுப்பினார் தருமபுத்திரர். தண்ணீர் பிடிக்கச் சென்ற சகாதேவன் நெடுநேரமாகியும் வராது போகவே, நகுலனை அனுப்பினார்.
நகுலனும் நெடுநேரமாகியும் வரவில்லை. இப்படியே அர்ஜுனன், பீமன் ஆகியோரை அனுப்பியும் எவருமே திரும்பிவரவில்லை.
மாலை நேரமாகியும் தம்பிகள் திரும்பவில்லையே என்கிற ஆதங்கத்தில் பதட்டத்தோடு தருமர் தேடிச்செல்ல, வழியில் ஒரு குளம் தென்பட்டது. குளக்கரையில் பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன்