தன் வீட்டில் வேலைக்காரி கழுவிய பாத்திரங்களை மஞ்சள் தண்ணீர் தெளித்து எடுப்பதும்,
பால்காரிக்கு வைத்த சொம்பிலிருந்து, ஒரு துணியை வைத்து பாலை மட்டும் வேறு பாத்திரத்தில் மாற்றி, அந்த சொம்பை வெளியில் தனியாக வைத்திருப்பதும்,
வேலைக்காரி வீடு பெருக்கிச் சென்றதும், ஒரு முறை ஈர Mop-ல்
வீட்டைத் துடைப்பதும் கண்ணால் கண்டேன். ஏனென அவரைக் கேட்டால்,
“என்ன ஆனாலும், என்னளவுக்கு சுத்தமா இருப்பாங்களா தெரியாது. அவங்க வீட்டையே சுத்தமா வச்சிருக்க மாட்டாங்க. மாத்திக்கவும் மாட்டாங்க... எனக்கு பிடிக்காதுப்பா இப்படி இருந்தா...” என்கிறார்.
இதில் இரண்டு விஷயம் உள்ளது.
ஒன்று, அவரது குலம் மற்றும் பணம் காரணமாக ஒருவரைத் தீண்டாதவராகப் பார்ப்பது.
இரண்டு, அவரது பழக்க வழக்கங்களால் அப்படிப் பார்ப்பது.
இதில் முதல் விஷயம் தவறானது, கண்டிக்கத் தக்கது. இதில் எந்தவித மாற்றமும் இல்லை.
அடுத்து, அவர் பழக்க வழக்கங்களால் வருவது.
இதில் நாம் இருவரையும் குறை சொல்ல முடியுமா? என்றால் அது விடையிலா கேள்வியே!
நம் வீட்டிலேயே சுத்தமின்றி இருப்பது, எச்சில் செய்வது போன்றவற்றை நாம் கண்டிப்போம். இதைப் பிறரிடம் இன்னொருவர் ஏற்க வேண்டும் என நினைக்க முடியாது.
இதில் நாம் ஒப்புக் கொண்டே ஆக வேண்டிய உண்மை...
பலர் இன்றும் தங்களை அந்த விஷயத்தில் பெரிதும் மாற்றிக் கொள்ளவில்லை என்பதுதான்.
இதில் ஜாதி என்று இல்லை... யார் அப்படி இருந்தாலும் அது தவறே.
அதிலும் மனதில் ஊறியிருக்கும் ஜாதி என்பது, அவ்வளவு எளிதாக மனதை விட்டுப் போகாது. அப்படியிருக்க, இன்னும் மாறாமல் இருப்பவர்களைக் கண்டால்,
எல்லாரும் மாறவில்லை எனும் எண்ணத்தைக் கொள்கின்றனர். இதுவே பலரின் ஏற்காமைக்குக் காரணம்.
இதில் சரி, தப்பு என்பதை விட, ஒருவரைக் குறை சொல்வதை விட, ”இன்னொருவர் ஏன் மாற மறுக்கிறார்?” என்பதை ஏன் நாம் கேட்க மறுக்கிறோம்?
சில உண்மைகள் கண்டிப்பாக வலிக்கும். ஆனால், அதனை மாற்றிக் கொண்டால்
நமக்கு நன்மை அதிகம் என்கையில், மாறுவதில் என்ன ப்ரச்சனை அப்படி இருப்பவர்களுகு?
இங்கும் நான் எல்லோரையும் குறிப்பிடவில்லை. அவ்வாறு இருப்பவர்களைப் பற்றி மட்டுமே பேசுகிறேன்.
அதுவும், இவை யாவும் என் சொந்த கருத்தில்லை. வெளியில் மேடையில் முழங்குவோர் வீட்டில் எப்படி இருக்கின்றனர், ஏன்,
என்பதை அவர்கள் பலரிடம் பேசி, தெரிந்து கொண்டேன். பலரின் பதில் இதுவாகத்தான் இருந்தது.
சிலர் படித்து, நாகரீகமாக உடுத்தினாலும், மனதளவில் அழுக்காகத்தான் இருக்கின்றனர். அவர்களையும் சேர்த்தே சொல்கிறேன். மாறினால் என்ன?
தீண்டாமையை ஒழிக்க, இருபுறமும் நடவடிக்கை தேவை. ஒரு சார்பாக மட்டும்
பேசி, ஒருசாராரை எதிர்ப்பது முற்றிலும் தவறு. இவர்களை முழுதும் மாறச்சொல்ல ஏன் உங்கள் நாக்கு மறுக்கிறது?
எல்லோரும் அர்ச்சகர் ஆக வேண்டும் எனக் கூப்பாடு போடுவோர், முதலில் அவர்கள் அதற்கான வாழ்வு முறையில் தங்களை முழுவதுமாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதை ஏன் பேசுவதில்லை?
வேத மந்த்ரங்கள் படித்தால் மட்டும் போதாது, அதற்கான அடிப்படை வாழ்க்கை முறையைக் கூட பின்பற்றுவதில்லை என்றால், அவர்களை எப்படி ஏற்பார்கள்?
நாமும் முதல்படி எடுத்துவைக்க வேண்டும். நம் வாழ்க்கை முறையை மாற்றிக்கொண்டு, நாம் ஆத்மார்த்தமாக வாழ்ந்தால் ஒதுங்குவோர் கூட ஒரு நாளில் அரவனைப்பார்.
அதை செய்ய எல்லாரும் முன்வர வேண்டும். இதில் ஒழுங்கீனத்துடன், சுத்தபத்தமின்றி இருப்பது மற்றோர் உயர்ஜாதி மனிதன் என்றாலும், அவனும் கண்டிக்கப்பட வேண்டியவன்தான். ஜாதி பெயரால் அவன் விலக்கடையக் கூடாது.
கோயில், பூஜை என வாழ்ந்து, அசைவமும், மதுவும் இன்னபிறவும் தவிர்த்து, நேர்மறை எண்ணங்களை
வளர்க்கும் த்யான, யோக, ஹோம, சாஸ்த்ரங்கள் பழக்கி வாழ்வோர்க்கு, இவற்றைப் பெரிதாகக் கொள்ளாதவர்களுடன் ஒட்டி உறவாடுவது கஷ்டம்தான்.
அசைவத்திலேயே மீன் மட்டும் உண்ணும் ஒரு குடும்பத்தில், அவர் மாமியார் வீட்டில் உணவுண்ண மாட்டார். கேட்டால் அவர்கள் எல்லாம் உண்பர், வீடு நாறும் என்றார்.
இவர்களுக்குள்ளேயே வித்யாசம் உள்ளது. தினம் மதுவருந்தும் மனிதர்கள் பலர். அவர்கள் குடும்பத்திற்கு அவ்வாடை பழகியிருக்கலாம். எல்லாரும் ஏற்கவேண்டும் என ஆர்ப்பரிப்பது சரியா?
ஆனால், மது, அசைவம் இவற்றைத் தவிர்த்தல் நலம் என தற்போது மருத்துவர்கள் பலர் பரிந்துரைக்க ஆரம்பித்து விட்டார்கள்.
எனவே அவர்களை மாறச்சொல்லிக் கூற, ஏன் முடியவில்லை யாராலும்?
உண்மை என்னவென்றால், ப்ராமணர்கள் எந்தளவிற்குச் சுத்தம் பார்க்கிறார்களோ, அந்தளவிற்கு மாறுவோரை விரைவில் ஏற்கின்றனர்.
அதுதாண்டி, இறை பக்தி, தேச பக்தி என வந்தால் அவர்கள் அதுவும் பார்ப்பதில்லை.
இதையெல்லாம் சொன்னால்,
அவர்கள் மலம் அள்ளுவார்களா? எனக் கேள்வி கேட்டுக் கொண்டு வந்துவிடுவார்கள்...
கேட்பவனை நான் கேட்கிறேன்...
ஒரு மாதத்திர்கு நீ அதைச் செய்து, உன் குடும்பத்தில் இயல்பாக வாழ்ந்துவிட்டு, பிறருக்கு உதாரண புருஷனாக இருந்துவிட்டு, பிறகு வந்து கேள்வி கேட்க உன்னால் முடியுமா? அதை முதலில் சொல்.
காசு இல்லாதவன் மட்டும்தான் படிக்க மாட்டன் என்பது நீ சொல்லும் பொய். எல்லோரும் படிக்க வேண்டும் என எத்தனையோ பள்ளிகள் கட்டி, சத்துணவு தந்து, சீருடை தந்து, இலவச புத்தகம், கல்வி இலவசம், படிக்க Laptop, போய்வர Cycle, செருப்பு இல்லாமல் இருக்கக் கூடாது குழந்தைகள் என Leather Buckles என்று
இன்று எத்தனையோ முன்னேற்றம் வந்துவிட்டது. ஆனால், இன்றும் படிப்பில் நாட்டமின்மை, சிறு வயதில் கெட்ட பழக்கம், தன்னை நல்ல பழக்க வழக்கங்களில் முன்னேற்றிக் கொள்ளாமை ஆகியவற்றால் தன் வாழ்வைத் தானே அழித்துக் கொள்ளும் மனிதன், எந்த ஜாதி ஆனாலும் சரி, அவன் பின்னாளில் இம்மாதிரியான பிழைப்புதான்
பிழைக்க வேண்டி வருகிறது. முதலில் ஒழுங்காகப் படித்து, முறையாக வளராத யாரும் பின்னாளில் கஷ்டப்பட்டால் அதற்கு காரணம் அவர்களே... நான் உட்படவே சொல்கிறேன்.
இதில் தீய பழக்கங்களும் சேர்ந்து விட்டபின், அவர்களைத் திருத்த முதலில் முயற்சி பண்ணாமல், பிறரை மட்டுமே குற்றம் சொல்வதும் தவறேதான்.
உலகில் எல்லாரும் சாதாரண மனிதர்கள்தானே? குறைநிறை எல்லாருக்கும் உண்டு. இதில் ஜாதி பேதமின்றி, தவறான வழியில் செல்பவர்களையும், படிக்காதவர்களையும் திருத்துவது தான் முதலில் அரசு செய்ய வேண்டும்.
ஆனால், அதுவே Liquor Factory நடத்துமாம், Tasmac திறக்குமாம், அசைவம் தமிழர் உணவு என்று
உளறுமாம்... எல்லா தவறையும் அதுவே செய்துவிட்டு ஒரு குறிப்பிட்ட இனத்தை மட்டும் டார்கெட் செய்யுமாம்....
”டேய்.... என்னாங்கடா உங்க அரசியல்?”
எனக் கேட்க வைப்பது இந்த தீண்டாமை ப்ரச்சாரம்.
ஒன்று, அவரவர் அவரவராக வாழட்டும். உனக்கு வேண்டாத பார்ப்பணன் தொடவேண்டும் என எதிர்பார்க்காதே.
அவன் செய்கையை விமர்சனம் செய்யாதே.
இல்லையெனில், எல்லோரும் வாழ்க்கையில் முன்னேற தொண்டு செய். எல்லார் வாழ்க்கை முறையயும் முன்னேற்று.
சும்மா ஓட்டுக்கும் அரசியலுக்கும் வேஷம் போடாதே. எல்லாரும் தீயவை ஒழித்து, நல்ல வழியில் தனை முன்னேற்றிக் கொள்ளும்வரை இந்த ஜாதி என்பது யார் மனதிலும்
அழியாது. அதுவரை தீண்டாமை குறையலாமே தவிர, ஒழியாது.
இவை தவிர பிறர் பேச்சு எல்லாம் அவரின் முகமூடியே தவிர உண்மை முகம் இல்லை...
இப்படி உடைத்து எழுதுவது சிலருக்கு வலிக்கலாம், கோபம் தரலாம். ஆனால், உண்மை யோசித்துப் பார்த்து எல்லாரும் நம்மை மேம்படுத்தி வாழ்வோம்.
அமிர்தம் எடுக்க பாற்கடலைக் கடைந்த போது வந்ததால், மஹாலக்ஷ்மிக்கு அலைமகள் என்று பெயர். பாற்கடலிலிருந்து தோன்றிய ஸ்ரீதேவியான மஹாலக்ஷ்மியை மஹாவிஷ்ணு ஆட்கொண்டருளுகிறார்.
தாயாருக்கு இன்று பச்சரிசி மாவில் மஞ்சள் கலந்து மனைக்கோலம் இட்டு, அதில் அக்ஷதை தூவவேண்டும்.
ஜாதிமல்லிப் பூவால் மாலையிட்டு, கதிர்பச்சை எனும் இதழால் அர்ச்சனை பண்ண வேண்டும். கஸ்தூரி மஞ்சள், முத்து போன்றவற்றாலும் மாலையிட்டு அலங்கரிக்கலாம்.
கொய்யாப்பழம் வைத்து, தயிர் சாதம், அவல் கேசரி, பால் பாயாசம், கற்கண்டு பொங்கல், கதம்ப சாதம், உளுந்துவடை, போன்றவற்றில் எவை கொண்டும் நைவேத்யம் பண்ணலாம்.
நமது காங்கேயம் காளைகளுக்கு மட்டுமல்ல, அதை வாகனமாக்கிய ஈஸ்வரன் புகழையும் ஜொலிக்கச் செய்வது.
ஆனால் அந்த ஒளிரழகு என்னவென நம்மில் எத்தனை பேர் அறிவோம்?
இதோ - அதனருகே உள்ள நத்தக் காடையூர் எனும் அதிசய கோயில் பற்றிக் காண்போம்...
காங்கேயத்தின் சென்னிமலை - பெருந்துறை சாலையிலிருந்து 3Km அருகே உள்ளது நத்தக் காடையூர். இத்தலத்தில் உள்ள சிவபெருமான் திருமேனி சதுர ஆவுடையாருடன் லிங்கத்திருமேனியாக வடிக்கப்பட்டுள்ளது.
இது அப்பர் பிரானால் பாடப்பட்ட வைப்புத்தலம் எனும் புண்ணியம் பெற்றது. இது பரன்பள்ளி, பரஞ்சேர்பள்ளி,
நட்டூர், மத்யபுரி எனப் பல பெயருடன் அழைக்கப் படுகின்றது.
பரன் - ஈசன். பள்ளி - கோயில். எனவே, பரன்பள்ளி(ஈசன்பள்ளி), பரஞ்சேர்பள்ளி(ஈசனைச்சேரும் பள்ளி) போன்ற காரணப் பெயர்களுடனும்,
ஸமஸ்க்ருதத்தில் மத்யபுரி என்பது நடுவான ஊர் எனும் அர்த்தம் தருவதால், தமிழில் அது நடுவூர், நட்டூர் எனும்
🌳 பாண்டவர்களின் பன்னிரண்டு ஆண்டுகால வனவாசம் முடியும் காலம்... அப்போது ஒருநாள் வனத்தில் கடுமையாக
அலைந்து திரிந்த பாண்டவர்களுக்கு கடும் வறட்சி ஏற்பட்டது. குடிக்க தண்ணீர் வேண்டியிருந்தது.
அருகில் எங்காவது ஓடையோ, குளமோ தென்பட்டால் நீர் கொண்டுவர வயதில் இளையவனான சகாதேவனை அனுப்பினார் தருமபுத்திரர். தண்ணீர் பிடிக்கச் சென்ற சகாதேவன் நெடுநேரமாகியும் வராது போகவே, நகுலனை அனுப்பினார்.
நகுலனும் நெடுநேரமாகியும் வரவில்லை. இப்படியே அர்ஜுனன், பீமன் ஆகியோரை அனுப்பியும் எவருமே திரும்பிவரவில்லை.
மாலை நேரமாகியும் தம்பிகள் திரும்பவில்லையே என்கிற ஆதங்கத்தில் பதட்டத்தோடு தருமர் தேடிச்செல்ல, வழியில் ஒரு குளம் தென்பட்டது. குளக்கரையில் பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன்