வணக்கம்.
சிலப்பதிகாரம் என்பது கற்பனைக் கதையல்ல!
வரலாற்று நிகழ்வு என்பதனை உலகிற்குஉணர்த்தியவர்,தஞ்சாவூர் கரந்தை தமிழ்ச் சங்கத்தின்,கரந்தை புலவர் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிய,மறைந்த மரியாதைக்குரிய ஆய்வறிஞர் பேராசிரியர் சி.கோவிந்தராசனார் அவர்கள்.

wix.to/sECdBxk
சிலப்பதிகாரம்-2/15
சிலப்பதிகாரத்தைத் திறம்பட கற்றவர், சிலப்பதிகாரத்தில் ஊறித் திளைத்தவர். அவரி்ன் மனதில் நீண்ட நாட்களாகவே ஒர் ஆசை,ஏக்கம்,கனவு.சிலப்பதிகாரத்தில் கண்ணகி பயணம் செய்த பாதை வழியாகவே ஒரு பயணம் செய்தால் என்ன என்ற தணியாத தாகம்.எண்ணி துணிந்து இறங்கினார்.
சிலப்பதிகாரம்-3/15
1945 ஆண்டில் கண்ணகி பயணித்த பாதை வழியாகவே இவரும் நடந்தே சென்றார்.தன் ஊதியத்தைச் செலவிட்டு நடந்தார்.பின் தன் உடமைகள் ஒவ்வொன்றையும் விற்று காசாக்கிக் கொண்டே 17 ஆண்டுகள் நடந்து முடிவில் சிலப்பதிகாரம் கற்பனைக் கதையல்ல வரலாற்று நிகழ்வு என்பதை உலகிற்கு உணர்த்தினார்.
சிலப்பதிகாரம்-4/15
1945 ம் ஆண்டு மயிலாடுதுறை அருகில் கடற்கரையில் மீனவர்களின் ஒரு சில குடிசைகளுடன் மணற் பரப்பும்,மணல் மேடுகளும்,கள்ளியுடன் காரைச் செடிகளும் செறிந்த புதர்களும்,சவுக்கு தோப்புகளும்,புனங்காடுகளும் சூழ்ந்திருந்த பட்டணம் என்று,அன்று அழைக்கப்பட்ட பகுதியே,
சிலப்பதிகாரம்-5/15
பண்டைய புகார் நகரம் இருந்த இடம் என்பதைக் கண்டு பிடித்தார்.கடலடி ஆய்வு செய்து கடற்கோளினால் அளிந்து கடலடியில் மறைந்து நிற்கும் நிலப்பரப்பே,காவேரிப் பூம்பட்டிணம் கண்ணகி பிறந்த இடம் என்பதை உறுதி செய்தார்.
1945 ஆம் ஆண்டு பூம்புகாரில் ஆய்வினைத் தொடங்கிய இவருக்கு,
சிலப்பதிகாரம்-6/15
கால் நடையாக ஆராய்ந்து,ஆராய்ந்து, நடந்து,நடந்து,மதுரை வரை செல்வதற்கே பன்னிரண்டு ஆண்டுகள் தேவைப்பட்டன.
மதுரையில் கோவலனை இழந்த கண்ணகி,சேரநாடு நோக்கிச் சென்ற வழியில்,இளங்கோ அடிகள் தந்த குறிப்புகளின் உதவியுடன் நகரத் தொடங்கினார்.
1945 ஆம் ஆண்டு தொடங்கிய பயணம்..
சிலப்பதிகாரம்-7/15
1963 ஆம் ஆண்டு நவம்பர் 17 ஆம் நாள் மலையினுள் மறைந்து கிடந்த கோயிலைக் காணும் அந்த இனிய நிகழ்வில் நெகிழ்ந்துள்ளார்.
கடந்த 2012 டிசம்பரில் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி தொல்காப்பியர் விருது வழங்கி சிறப்பித்தார்.
கண்ணகி கோட்டத்தைக் கண்டுபிடித்தது எவ்வாறு?
சிலப்பதிகாரம்-8/15
என்பது குறித்து தினமணி நாளிதழுக்கு சில வருடங்களுக்கு முன் திரு.கோவிந்தராசனார் அளித்த பேட்டி..
’’சிலப்பதிகாரத்தை முழுமையாகப் படித்தேன். அதில் எல்லாம் தெளிவாக கூறப்பட்டுள்ளது. சோழ நாட்டின் தலைநகரமான பூம்புகாரில் இருந்து கோவலனும் கண்ணகியும் நடந்து சென்ற பாதையாக ..
சிலப்பதிகாரம்-9/15
அதில் கூறப்பட்டுள்ள இடங்களுக்கெல்லாம் நடந்தே சென்றேன். மதுரையில் கண்ணகி பாண்டிய மன்னனிடம் நீதி கேட்டு அது கிடைக்காததால் நகரை எரித்துவிட்டு தலைவிரி கோலமாய் மேற்கு நோக்கிச் செல்கிறாள். சேர நாட்டின் மலைப் பகுதியான முருகவேல் குன்றத்துக்கு (இன்றைய மங்களதேவி மலை)..
சிலப்பதிகாரம்-10/15
சென்று அங்கு வானுலகில் இருந்து ரதத்தில் வந்திறங்கிய கோவலனுடன் இணைந்து கண்ணகி விண்ணுலகம் சென்றதாக சிலப்பதிகாரம் கூறுகிறது.
கண்ணகி நடந்து சென்றதாக கூறப்பட்ட பாதை வழியாக நானும் இரவு, பகல் பாராமல் நடந்தேன். மதுரையில் இருந்து 90 மைல் தொலைவில் உள்ள..
சிலப்பதிகாரம்-11/15
மங்களதேவி மலையை அடைந்தேன். 40 மைல் சுற்றளவில் கண்ணகி கோட்டத்தை தேடி அலைந்தேன். இறுதியில் அந்த கோட்டத்தைக் கண்டுபிடித்தேன்.’’
கண்ணகி கோட்டத்திற்கு அப்படி என்ன சிறப்பு?"வானுலகில் இருந்து ரதத்தில் இறங்கி வந்த கோவலனுடன் கண்ணகியும் விண்ணுலகம் சென்றதை நேரில்..
சிலப்பதிகாரம்-12/15
கண்ட மலைவாழ் மக்கள் அந்த செய்தியை மன்னன் சேரன் செங்குட்டுவனிடம் கூறுகிறார்கள். மன்னனின் மனைவி அந்த இடத்தில் பத்தினித் தெய்வமான கண்ணகிக்கு ஒரு கோயில் கட்ட வேண்டும் என எண்ணுகிறாள். அதன் பின்பு வடபுலத்து அரசர்களை வெற்றி கண்டு இமயமலையில் கல்லெடுத்து..
சிலப்பதிகாரம்-13/15
அதை கங்கையில் நீராட்டி தலைச்சுமையாக இங்கு கொண்டு வந்து அந்தக் கல்லில் கண்ணகிக்கு சிலை வடித்து முருகவேல் குன்றத்தில் நிறுவி நாள்தோறும் வழிபாடும், விழாக்களும் நடத்தி வந்தான் மன்னன். அத்தகைய சிறப்பு மிக்க கண்ணகி கோட்டம் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு..
சிலப்பதிகாரம்-14/15
கட்டப்பட்டதாக குறிப்புகள் உள்ளன.’’
அது கண்ணகி கோட்டம்தான் என்பதை எப்படி உறுதி செய்தீர்கள்?
’’மண்டிக்கிடந்த புதருக்குள் சிறிய கோட்டைச் சுவர் போன்ற கல் கட்டடத்திற்குள் கண்ணகி சிலை இருந்தது. அந்த கற்களில் தமிழ் வட்டெழுத்தும், முற்கால பாண்டியர் காலத்து தமிழ் ..
சிலப்பதிகாரம்-15/15
எழுத்துகளும் காணப்பட்டன. அங்கு சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ள பழங்கால மலைவாழ் மக்கள் மட்டும் இல்லையே தவிர, எஞ்சிய வன விலங்குகள், இயற்கை காட்சிகள், வேங்கை மரங்கள் என அத்தனை அடையாளங்களும் ஒருங்கே காணப்பட்டன.
மேலும், அங்கிருந்த கண்ணகி சிலை, இமயமலை கல்லில்
சிலப்பதிகாரம்-16/15
செதுக்கப்பட்டது என்பதால், அந்த கல்லை ஆய்வுக்கு உட்படுத்தினேன். அது மாதிரியான கல் அருகில் உள்ள மலைகளிலோ அல்லது தமிழ்நாட்டில் உள்ள மலைகளிலோ இல்லை. இறுதியில் இமயமலை கல்லுடன் ஒப்பிட்டுப் பார்த்து உறுதி செய்தேன். தலையில் சுமந்து வரும் எடையளவில் இருந்த..
சிலப்பதிகாரம்-17/15
கல்லில் செதுக்கப்பட்டுள்ளது கண்ணகி சிலை. அந்தச் சிலையைப் பாதுகாக்கும் வகையில் எனது வீட்டில் வைத்திருந்தேன். தகவலை அறிந்த அப்போதைய தமிழக முதல்வர் மு. கருணாநிதி என்னை அழைத்து கண்ணகி சிலையைக் கேட்டார். அவர் கேட்டபடி அரசிடம் ஒப்படைத்து விட்டேன்.
சிலப்பதிகாரம்-18/15
தமிழர்களின் வரலாற்றை செப்பம் செய்ய வேண்டும் என்ற நோக்கில் 50 ஆண்டுகளுக்கு முன்னர் கண்ணகி கோட்டம் கண்டேன். அதற்காக உழைத்தேன். பேர், புகழ், பதவி, பட்டம், விருது வரும் என நினைத்ததில்லை;
சிலப்பதிகாரம்-19/15

ஆனால் அதெல்லாம்தான் இப்போது நடக்கிறது.’’
குறிப்பு; அய்யா அவர்கள் விண்ணுலகு அடைந்து விட்டார்கள்.

wix.to/sECdBxk

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Mathavan Venugopal

Mathavan Venugopal Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @MVenukopal

23 Oct
வணக்கம்.
ஈழத்தில் போராளிகளால் உருவாக்கப்பட்ட குற்றிலகு வானூர்தி (micro light aircraft)! இவ்வானூர்தி கைப்பற்றப்பட்ட இடம் பார்ப்பதற்கு வானூர்தி பழுதுபார்க்கும் பட்டறை போன்று இருந்தது என்கிறது சிங்களம். அது தொடக்கநிலையிடமாக இருந்தாலும்,

wix.to/H8AjDEQ ImageImageImageImage
ஈழத்தில்-2/5
அங்குள்ள கட்டுமானங்களானவை புலிகள் தமது சொந்த சரக்குகளை உருவாக்க, பராமரிக்க மற்றும் செயல்படுத்துவதற்காகப் பயன்படுத்தினர் என்பதைக் குறிக்கிறது. கைப்பற்றப்பட்ட பொருட்களில் பரவலான அறிவியல் இதழ் மற்றும் பல வானூர்தியியல் பொறியியல் புத்தகங்கள் அங்கு இருந்தன. ImageImageImageImage
ஈழத்தில்-3/5
இவற்றுடன் அங்கு எளிய ‘நீரே செய்யும் (do it yourself)’ புத்தகங்கமும் இருந்துள்ளது. இப்புத்தகத்தில் உள்ள வழிகாட்டலின்படி பெருவங்க விங்களம் (aluminum alloy) / உலோகத் தாள்களைக் (metal sheet) கோத்திணைக்க(fabricate) கடைசல் எந்திரம்(lathe) உட்பட பல எந்திரங்கள் இருந்தன. ImageImageImageImage
Read 5 tweets
23 Oct
வணக்கம்.
பூகம்பம் வந்தால் கூட தஞ்சை பெரிய கேவிலுக்கு எந்தவொரு சேதமும் ஏற்படுத்தாத சோழர்களின் கட்டிட அமைப்பு!ஏன்?எப்படி?ஏழு உலக அதிசயங்கள் கூட இடிந்து விழலாம்!ஆனால்,எந்த யுகத்திலும்,பூமி உள்ளவரை அசையாமல் நம் வரலாற்றை பறை சாற்றப் போகும் தஞ்சை பெரிய கோவில்!
wix.to/PsD5DEM ImageImageImageImage
பூகம்பம்-2/15
ஆயிரம் ஆண்டுகளாக தஞ்சையில் தமிழரின் பெருமையை பறை சாற்றி கொண்டு உயர்ந்து நிற்கிறது தஞ்சை பெரிய கோயில்.10 ஆம் நூற்றாண்டில்,சோழப் பேரரசு அதன் உச்ச நிலையிலிருந்த போது,இராஜராஜ சோழ மன்னனால் கட்டப்பட்டது.இந்த பிரம்மாண்டமான கோயிலை சுமார் 7 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது. Image
பூகம்பம்-3/15
இது எப்படி சாத்தியமானது? கோயில் எப்படி கட்டப்பட்டது? அதற்கான பதிலை இப்போது தெரிந்து கொள்ளலாம்.2010-ம் ஆண்டு நடந்த பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டு விழாவின்போது கருவறையில் இருந்து சுமார் 100 அடி தொலைவில் ஆழ்துளைக் கிணறு தோண்டப்பட்டது.

wix.to/PsD5DEM ImageImage
Read 12 tweets
22 Oct
வணக்கம்.
ஒரு நண்பர் என்னிடம் கேட்டார்,பதினெட்டாம் நூற்றாண்டில் யாழ்ப்பாணம் எப்படி இருந்திருக்கும்?மேரி லீட்ச் எழுதிய "சிலோனில் ஏழு ஆண்டுகள்"என்ற இப் புத்தகம் 1890ஆம்ஆண்டில்வெளியிடப்பட்டது!அதில்,அன்றைய யாழ்ப்பாணத்தை படம் பிடித்து காட்டியிருந்தது!இதோ..
wix.to/JEB-Bxo ImageImageImageImage
ஒரு நண்பர்-2/5

18-ம் நூற்றாண்டில் யாழ்ப்பாணம். ImageImageImageImage
ஒரு நண்பர்-3/5

18-ம் நூற்றாண்டில் யாழ்ப்பாணம். ImageImageImageImage
Read 6 tweets
21 Oct
வணக்கம்.
இங்கிலாந்தில் விடுதலை புலிகளுக்கு எதிரான தடை நீங்குகிறது!விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான இங்கிலாந்தின் தடை தவறானது என்று அந்த நாட்டின் தடை செய்யப்பட்ட அமைப்புக்கள் தொடர்பான சிறப்பு ஆணையம் அதிரடி தீர்ப்பை வழங்கி உள்ளது.
wix.to/j0BqBxk
இங்கிலாந்தில்-2/5
இங்கிலாந்தில் விடுதலைப் புலிகள் இயக்கம்தடை செய்யப்பட்டுள்ளது.இந்த தடைக்கு எதிராக 2018-ல் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கடிதம் அனுப்பியது.உள்துறை செயலாளர் சஜித் ஜாவித் எம்.பி.க்கு இந்த கடிதம் அனுப்பப்பட்டது. இக்கடிதத்தை 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் அவர் நிராகரித்தார்
இங்கிலாந்தில்-3/5
இதனையடுத்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்,விடுதலைப்புலிகள் மீதான தடைக்கு எதிராக மேல்முறையீட்டுவழக்கைதொடர்ந்தது. இங்கிலாந்தில் தடை செய்யப்பட்ட அமைப்புகள் தொடர்பான சிறப்பு ஆணையத்தில் -Proscribed Organisations Appeal Commission இந்த மேல்முறையீட்டு வழக்கு தொடரப்பட்டது
Read 6 tweets
20 Oct
வணக்கம்.
நன்றி-வணக்கம் என்பதற்கு அர்த்தம் இதுதான்;விஜய்சேதுபதி!எல்லாம் முடிந்து விட்டது என்பதை"சிம்பிளிக்கா"கூறிவிட்டார்!இது,அவருக்கு தேவைதானா?!!
முத்தையா முரளிதரன் அறிக்கையை ட்விட்டரில் பகிர்ந்த விஜய் சேதுபதி நன்றி வணக்கம் என ட்வீட் செய்து தனது நிலைப்பாட்டைதெளிவுபடுத்தியுள்ளார்.
நன்றி-வணக்கம்-2/8
இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என ரசிகர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலர் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர்.800’ படத்தின் தயாரிப்பு நிறுவனம் இந்தப் படம் அரசியல் படமல்ல என்று விளக்கமளித்தது.
நன்றி-வணக்கம்-3/8
அதேபோல் முத்தையா முரளிதரனும் தன் மீதான சர்ச்சைகளுக்கு விளக்கமளித்திருந்தார்.எனினும் தொடர்ந்தும் எதிர்ப்புக்கள் கிளம்பியவண்ணமே இருந்தது.
இந்நிலையில் இன்று அறிக்கை வெளியிட்ட முத்தையா முரளிதரன், “என் மீதுள்ள தவறான புரிதலால் 800 படத்தில் இருந்து விலக வேண்டும் என்று
Read 7 tweets
20 Oct
வணக்கம்
தனுஷ்கோடியில் இருந்து பார்த்தால் இலங்கை தெரியுமா அல்லது இலங்கையில் இருந்து பார்த்தால் தனுஷ்கோடி தெரியுமா?தனுஷ்கோடியில் இருந்து இலங்கை தெரியாது ஏனெனில் நமது பார்வைக்கு புலப்படும் அதிகபட்ச தொலைவு 4-4.5 கிலோமீட்டர்.
wix.to/jkDjBxY
தனுஷ்கோடி-2/5
பூமி வட்ட வடிவில் இருப்பதால் அதற்கு மேல் உள்ள தொலைவு நமது பார்வையில் இருந்து மறைக்கப்படும்.ஆனால் ஒரு 5-10 அடுக்கு மாடி கட்டிடத்தில்இருந்து கண்டிப்பாக ஒரு பகுதி இலங்கையை காண முடியும். தனுஷ்கோடியில் உள்ள அரிச்சல் முனை (இந்தியாவின் கடைசி மேற்கு எல்லை) பகுதியில் இருந்து
தனுஷ்கோடி-3/5
காண முடியாது, ஆனால், இலங்கை விமானப் பயணம் செய்தால் ஆகாய விமானத்தில் இருந்து இரண்டு நாட்டின் ஓரங்களையும் காண முடியும். அது வியப்பூட்டும் அனுபவமாக இருக்கும்.
ஒருவேளை அரிச்சல் முனையில் ஒரு காட்சி கோபுரம் அமைக்கப்பட்டால் அதன் உயரம் 30-40 மீட்டர் இருந்தால்..
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!