வணக்கம்.
என் தேடலில் கிடைத்த மற்றுமொரு பொக்கிசம்!இராஜேந்திர சோழன் ஏன் தலைநகரை கங்கைகொண்ட சோழபுரத்திற்கு இடம் பெயர்ந்தான்?தொடர்ச்சியான துரஷ்டமான மரணங்கள் காரணமா?மேற்காட்டிய தகவலைப் பாருங்கள்.என் ஆய்வில் கிடைத்த இது முக்கியமான தகவல். wix.to/-sDsDEU
என் தேடலில்-2/10
ஒரு வெளி நாட்டவரின் கட்டுரையையும் படிக்க நேரிட்டது. அவர் இதனை எழுதுமுன் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாகத் தஞ்சாவூரில் பரம்பரையாக வாழ்ந்த மக்களிடம் தான் இந்தத் தகவல்களைப் பெற்றுக்கொண்டதாகக் கூறுகிறார். அவை நம்பக்கூடிய விதத்தில் அமைந்திருப்பதாக் கூறுகிறார்.
என் தேடலில்-3/10
இலங்கை மன்னனின் பெயரைக்கூடியச் சரியாகப் பதிவுசெய்கிறார். இங்கே காட்டப்படும் ஏனைய தகவல்கள் நம்பகமாக இருக்கும் பட்சத்தில் கங்கை கொண்ட சோழபுரம் பற்றியும் அவர் கூறுவதை நம்பலாம்...
என் தேடலில்-4/10
பெருவுடையார் கோவில் முடிக்கப்படாத நிலையில் இராஜராஜன் இறந்ததினால் அது அபசகுனம் என்று எண்ணிய இராஜேந்திரனும் அவனுக்கு வேண்டியவர்களும் கங்கைகொண்டசோழபுரம் என்று தலை நகரையும் அமைத்துக் கோவிலையும் அங்கு அமைத்து அங்கு இடம் பெயர்ந்திருக்கலாம். wix.to/-sDsDEU
என் தேடலில்-5/10
தஞ்சாவூரின் துரதிர்ஷ்டம் இராஜஇராஜனின் மரணம் மட்டும் தான் என்றில்லை. அவனுடைய தமையனான ஆதித்யகரிகாலன் அகால மரணமடைந்திருக்கிறான். பராந்தக சோழனின் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என்று இந்த துரதிர்ஷ்டம் இதற்கு முன்னரும் நிறையவே இருந்திருக்கிறது.
என் தேடலில்-6/10
இந்தச் சங்கிலித் தொடரான மரணங்கள் தான் இராஜஇராஜனையும் இராஜேந்திரனையும் சரித்திரத்துக்கே அறிமுகமாக்குகிறது. இதனை நாம் நம்பினாலும் விட்டாலும் அவனுக்கு இது ஒரு சுமையாக இருந்திருக்கலாம்.
இராஜந்திரனுக்கு தந்தையுடன் ஒரு போட்டியும்,அவர்மீது ஒரு பொறாமையும் இருந்தது உண்மை,
என் தேடலில்-7/10
ஆனால் அதற்காக ஏற்கெனவெ அமைக்கப்பட்ட புத்தம்புதுக் கோவிலையும் தஞ்சாவூர் போன்ற அழகிய நகரையும் துடைத்தெறிந்துவிட்டுப் புதிதாக எல்லாவற்றையும் அமைக்க முயன்றிருக்க மாட்டான். குறிப்பாகக் கங்கை கொண்டசோழபுரம் இரு முயற்சிகளிலும் பெருவுடையார் கோவிலுக்கோ அல்லது..
என் தேடலில்-8/10
தஞ்சாவூருக்கோ இணையாகவில்லை என்பதனால் நாம் இந்த அபசகுனக் கதையை நீக்கிப்பார்த்தால் இராஜேந்திரன் தன்னுடைய பரம்பரைத் தலை நகரிலயே தன்னுடைய கோவிலையும் அமைத்திருந்தால் ஏதோ ஒரு செலவு மிஞ்சியிருக்கும். கோவிலையாவது பெருவுடையார் கோவிலை விடப்பெரிதாக அமைத்திருக்கலாம்..
என் தேடலில்-9/10
என்று தான் எண்னத் தோன்றுகிறது.
இராஜந்திரன் இலங்கை, மாலைதீவு, பிலிப்பீன்ஸ் என்று அனைத்து இடங்களுக்கும் அலைந்து திரிந்தபோதே தஞ்சாவூருடன் ஒழுங்கான நிருவாகத் தொடர்புகளை வைத்துக்கொண்ட ஒரு சிறந்த இராணுவத் தளபதி என்கிற வகையில்...
என் தேடலில்-10/10
90 மைல்கள் மட்டும்நகர்வதால் நாட்டின் மீதான தன்பிடி இறுகும் என்று எண்ணியிருக்க மாட்டான். இராஜந்திரன் பெயர்ந்தநேரம் அவன் வெறும் சோழநாட்டின் மன்னல்ல.அவன்பென்னாம் பெரியதொரு ஏகாதிபத்தியத்தின் சக்கரவர்த்தி. படை நகர்த்தல்களை ஒரு பொருட்டாக அவன் எண்ணீயிருக்கவே முடியாது.
என் தேடலில்-11/10
எனவே அவனுடைய தலைநகர்ப் பெயர்ச்சியை ஒரு LOGISTICAL MOVE என்று எடுத்துக்கொள்ள முடியாது. மேலும் படைநகர்த்த முயலும் மன்னனுக்குத் தலைநகர்ப்பெயர்ச்சி ஒரு அநாவசியமான கவனத்திருப்புகை (Distraction) என்று தான் எடுத்டுக்கொள்ளவேண்டும்.
என் தேடலில்-12/10
அவனும் நிறைந்த அனுபவங்களைக் கொண்டவன் என்ற வகையில் அவன் தஞ்சாவூரை விட்டுப் பெயர்ந்தமைக்கு நாம்ஒரு காரணம் தான் காட்டலாம். அது தஞ்சாவூர் மக்களிடையே நிலவிவரும் கதைபோல ஊரின் துரதிர்ஷ்த்தைத் தொடர்ந்தும் காவ விரும்பாத மனநிலையாக இருக்கலாம்.
நன்றி wix.to/-sDsDEU
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
வணக்கம்.
பிரம்மாண்டம் எப்படி இருக்கும் என்று உணர்த்த முடியுமா?
கண்ணால் காணும் பிரமாண்டமான காட்சிகள் உலகில் ஏராளமாக இருக்கின்றன. அதன் வழியே பிரமாண்டம் எப்படி இருக்கும் என்று தரிசிக்கலாம்.
இதோ, உலகையே ஒரு குடையின் கீழ் அடக்கி ஆண்ட ஆங்கிலேயர் அரசகுடும்பம் காட்டும் பிரமாண்டம்.
பிரமாண்டம்-2/4
பிரிட்டிஷ் மகாராணி வழங்கும் விருந்து உபசாரம் எப்படி இருக்கும்?
பக்கிங்ஹாம் அரண்மனை!பல ஆண்டு காலமாக பொதுமக்கள் பார்வையில் காட்டப்படாத பிரமாண்ட விருந்து உபசார மண்டபங்கள் -
இது வரை உலகின் பல்வேறு நாடுகளின் ஆட்சி தலைவர்களால் மட்டுமே நேரில் பார்க்க முடிந்தது.
பிரமாண்டம்-3/5
சமீபத்தில் ராணியின் ஆணை படி பொது மக்கள் யாவரும் காண அனுமதி அளிக்கப்பட்டது.
இங்கிலாந்து அரசியும் அரசரும். அங்கு எப்போதும் ராணிக்கு தான் முதல் இடம்.
வணக்கம்.
ஸ்ரீலங்கா வந்தடைந்துள்ள அமெரிக்க உயர் இராணுவ அதிகாரிகள்!சதுரங்க விளையாட்டு ஆரம்பம்!!இலங்கை,சைனாவின் பக்கம்!20 சட்ட திருத்தம்!தமிழர்களை மீண்டும் இன சுத்திகரிப்பை ஏற்படுத்த திட்டம்! பிரிட்டன் புலிகள் தடை நீக்கம்!நான் ஏற்கனவே,கூறியது போல...
ஸ்ரீலங்கா-2/5
இலங்கை்கு இறுதி எச்சரிக்கையாக அமெரிக்காவின் இராஐாங்க செயலாளர் இலங்கை பயணம்!அமெரிக்காவும் புலிள் தடை விரைவில் நீக்கம்!அமெரிக்க உயர் இராணுவ அதிகாரிகள் உள்ளடங்கிய குழுவினர் நாட்டிற்கு வந்தடைந்துள்ளனர் என விமான நிலைய குடிவரவு திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா-3/5
அமெரிக்க உயர் இராணுவ அதிகாரிகள் 16 பேர் உள்ளடங்கிய குழுவினர் கட்டார் விமான சேவைக்கு சொந்தமான விமானமூடாக கடந்த 21 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்தனர்.
அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ ஸ்ரீலங்கா வருகை தரவுள்ள நிலையிலேயே...
வணக்கம்.
ஈழத்தில் போராளிகளால் உருவாக்கப்பட்ட குற்றிலகு வானூர்தி (micro light aircraft)! இவ்வானூர்தி கைப்பற்றப்பட்ட இடம் பார்ப்பதற்கு வானூர்தி பழுதுபார்க்கும் பட்டறை போன்று இருந்தது என்கிறது சிங்களம். அது தொடக்கநிலையிடமாக இருந்தாலும்,
ஈழத்தில்-2/5
அங்குள்ள கட்டுமானங்களானவை புலிகள் தமது சொந்த சரக்குகளை உருவாக்க, பராமரிக்க மற்றும் செயல்படுத்துவதற்காகப் பயன்படுத்தினர் என்பதைக் குறிக்கிறது. கைப்பற்றப்பட்ட பொருட்களில் பரவலான அறிவியல் இதழ் மற்றும் பல வானூர்தியியல் பொறியியல் புத்தகங்கள் அங்கு இருந்தன.
ஈழத்தில்-3/5
இவற்றுடன் அங்கு எளிய ‘நீரே செய்யும் (do it yourself)’ புத்தகங்கமும் இருந்துள்ளது. இப்புத்தகத்தில் உள்ள வழிகாட்டலின்படி பெருவங்க விங்களம் (aluminum alloy) / உலோகத் தாள்களைக் (metal sheet) கோத்திணைக்க(fabricate) கடைசல் எந்திரம்(lathe) உட்பட பல எந்திரங்கள் இருந்தன.
வணக்கம்.
பூகம்பம் வந்தால் கூட தஞ்சை பெரிய கேவிலுக்கு எந்தவொரு சேதமும் ஏற்படுத்தாத சோழர்களின் கட்டிட அமைப்பு!ஏன்?எப்படி?ஏழு உலக அதிசயங்கள் கூட இடிந்து விழலாம்!ஆனால்,எந்த யுகத்திலும்,பூமி உள்ளவரை அசையாமல் நம் வரலாற்றை பறை சாற்றப் போகும் தஞ்சை பெரிய கோவில்! wix.to/PsD5DEM
பூகம்பம்-2/15
ஆயிரம் ஆண்டுகளாக தஞ்சையில் தமிழரின் பெருமையை பறை சாற்றி கொண்டு உயர்ந்து நிற்கிறது தஞ்சை பெரிய கோயில்.10 ஆம் நூற்றாண்டில்,சோழப் பேரரசு அதன் உச்ச நிலையிலிருந்த போது,இராஜராஜ சோழ மன்னனால் கட்டப்பட்டது.இந்த பிரம்மாண்டமான கோயிலை சுமார் 7 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது.
பூகம்பம்-3/15
இது எப்படி சாத்தியமானது? கோயில் எப்படி கட்டப்பட்டது? அதற்கான பதிலை இப்போது தெரிந்து கொள்ளலாம்.2010-ம் ஆண்டு நடந்த பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டு விழாவின்போது கருவறையில் இருந்து சுமார் 100 அடி தொலைவில் ஆழ்துளைக் கிணறு தோண்டப்பட்டது.
வணக்கம்.
ஒரு நண்பர் என்னிடம் கேட்டார்,பதினெட்டாம் நூற்றாண்டில் யாழ்ப்பாணம் எப்படி இருந்திருக்கும்?மேரி லீட்ச் எழுதிய "சிலோனில் ஏழு ஆண்டுகள்"என்ற இப் புத்தகம் 1890ஆம்ஆண்டில்வெளியிடப்பட்டது!அதில்,அன்றைய யாழ்ப்பாணத்தை படம் பிடித்து காட்டியிருந்தது!இதோ.. wix.to/JEB-Bxo
வணக்கம்.
சிலப்பதிகாரம் என்பது கற்பனைக் கதையல்ல!
வரலாற்று நிகழ்வு என்பதனை உலகிற்குஉணர்த்தியவர்,தஞ்சாவூர் கரந்தை தமிழ்ச் சங்கத்தின்,கரந்தை புலவர் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிய,மறைந்த மரியாதைக்குரிய ஆய்வறிஞர் பேராசிரியர் சி.கோவிந்தராசனார் அவர்கள்.
சிலப்பதிகாரம்-2/15
சிலப்பதிகாரத்தைத் திறம்பட கற்றவர், சிலப்பதிகாரத்தில் ஊறித் திளைத்தவர். அவரி்ன் மனதில் நீண்ட நாட்களாகவே ஒர் ஆசை,ஏக்கம்,கனவு.சிலப்பதிகாரத்தில் கண்ணகி பயணம் செய்த பாதை வழியாகவே ஒரு பயணம் செய்தால் என்ன என்ற தணியாத தாகம்.எண்ணி துணிந்து இறங்கினார்.
சிலப்பதிகாரம்-3/15
1945 ஆண்டில் கண்ணகி பயணித்த பாதை வழியாகவே இவரும் நடந்தே சென்றார்.தன் ஊதியத்தைச் செலவிட்டு நடந்தார்.பின் தன் உடமைகள் ஒவ்வொன்றையும் விற்று காசாக்கிக் கொண்டே 17 ஆண்டுகள் நடந்து முடிவில் சிலப்பதிகாரம் கற்பனைக் கதையல்ல வரலாற்று நிகழ்வு என்பதை உலகிற்கு உணர்த்தினார்.