குழப்பத்துல/கோவத்துல எழுதுனா தப்பாகிரும்ன்னு நைட் வரை வெய்ட் பண்ணேன். காலைல எனக்கும் ஒவைசி பிஜேபி டீம்ன்னுதான் தோனுச்சு. நாம தமிழ்நாடு என்கிற சேஃப் ஜோன்ல இருக்கோம். அதனால அங்குட்டு படிக்காத ஏழை முஸ்லீம் சமூகம் பட்ற பாட்டை நேரடியா ரியலைஸ் பண்ண முடியலன்னு நெனைக்கிறேன்.
1/9
வரப்போற காலங்கள்ல ஆயிரம் லெட்டர்பேட் கட்சிகள் இருந்தாலும் முஸ்லீம்களுக்கு ஒற்றை தேசியத்தலைமை அவசியம்ன்னு நினைக்கிறேன். அது இன்னைக்கு டெம்ப்ரவரியா ஜெயிக்கறதை விட ரொம்ப அவசியம். ஏன்னா பாஜக 2039 வரை பிரதமர் வேட்பாளர்களை முடிவு செய்து வைத்திருக்கிறது...
2/9
ஒவைசிக்கு தன் கட்சியை 20 கோடி முஸ்லீம்களின் தேசிய பிரதிநிதியாக மாற்றும் எண்ணமிருக்கிறது. அதனால்தான் எப்போதும் தனியாக நின்று செயல்பட விரும்புகிறார். தனிப்பெரும் கட்சியாக விரும்பும் எந்த ஒரு கட்சியும் யாருடனும் கூட்டு சேராது. இது வழக்கமான நடைமுறைதான்..
3/9
இப்படி தனியாக நின்றால் ஓட்டு பிரியாதான்னு கேட்டா....., பிரியும்தான்... அதற்கு என்ன செய்றது...?
சரி ஒரு பேச்சுக்கு சேர்ந்தே இருப்போம். என்ன நடக்கும்? இதுவரை என்னதான் நடந்திருக்கிறது? காலம் காலமாக கைவிடப்பட்ட சமூகமாகவே முஸ்லீம் சமூகம் (குறிப்பாக வட இந்தியா) இருந்திருக்கிறது.
4/9
இந்தமுறையும் அதுவே தொடரும். இப்போது பாஜக வென்றதால் கைவிடப்பட்ட இந்த சமூகம் கூடுதலாக ரெண்டு சாத்து வாங்கும். இவ்வளவுதான் வித்தியாசம்..
சரிங்க.. AIMIM 19 இடங்களில் போட்டியிட்டிருக்கிறது. அந்த 19லும் ஆர்.ஜே.டி கூட்டணி ஜெயிச்சதாக வச்சுக்கிட்டாலும் 110 + 19 = 129 தான் வரும்.
5/9
பெரும்பான்மைக்கு (122) கூடுதலாக 7 இடங்கள். 6 மாசம் ஆட்சி நீடிச்சுருக்குமா?? 6 மாச ஆட்சிக்காக எதுக்கு கூட்டணி வச்சு செல்வாக்கை இழக்கனும்? இப்ப 5 AIMIM MLAs உள்ள போறாங்க. இதைவிட முக்கியம் 2015ல 0 வாங்கி இந்தமுறை 19 ல போட்டியிட்டு வெறும் 1.25+% ஓட்டு வாங்கி 5 ல ஜெயிச்சுருக்கு.
6/9
எனக்கும் அவர்ட்ட ஒரு கேள்வி இருக்கு. எங்க ஊர்ல வைகோன்னு ஒருத்தர் இருக்கார். தமிழ் மக்கள் பிரச்சனைன்னா கவுனை தூக்கி மாட்டிகிட்டு கோர்ட்டுக்கு போயிருவார். பாரீஸ்டர் ஒவைசி ஏன் முஸ்லீம் பிரச்சனைக்காக கோர்ட் பக்கமே போறதில்லன்னு கேக்க நினைக்கிறேன்..
7/9
அபார்ட் ஃப்ரம் திஸ் அவர் பிஜேபி பி டீம் இல்ல. அவர் இலக்கு தேசிய கட்சியா தன் கட்சியை மாத்துறது மட்டும்தான்...
நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கனும்னா உடல்ல செலுத்தி சோதிச்சுதான் பாக்கணும். அய்யயோ, என்னமாவது ஆகிருமேன்னு பயந்துட்டே இருந்தா எப்பதான் மருந்து கண்டுபிடிக்கிறது...? மனுசன் எவ்வளவு நாள்தான் மூக்கை பொத்திக்கிட்டே திரியமுடியும்...?
9/9
--முஹம்மது இப்ராஹீம் ஸிராஜ்--
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
நிர்பயா ஞாபகம் இருக்கிறதா? அதுவும் கேங் ரேப் டு மரணம்தான்.
சப்தர்ஜங் ஆஸ்பிடலில் சேர்க்கப்பட்டார். ஆளும் கூட்டணியின் தலைவி போய் பார்த்தார். உறவினர்களுக்கு உறுதி அளித்தார்.
ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன. அவர்களையும் சந்தித்தார். போக்குவரத்து ஸ்தம்பித்தது. போலீஸ் தடை போடவில்லை.
1/4
அரசு ஆஸ்பத்திரி சிகிச்சை மீது சிலர் சந்தேகம் கிளப்பினர். அரசு அவர்களை மிரட்டவில்லை. நிர்பயாவை சிங்கப்பூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றது. என்றாலும் பலன் இல்லை.
சடலம் கொண்டுவரப்பட்டது. பிரதமரும் கூட்டணி தலைவியும் ஏர்போர்ட்டில் காத்திருந்து பெற்று, குடும்பத்திடம் ஒப்படைத்தனர்.
உற்றார் உறவினர்கள் இறுதி சடங்குகள் செய்ய முடிந்தது. டெல்லி முதல்வர் சுடுகாட்டுக்கு வந்து மரியாதை செலுத்தினார். மத்திய உள்துறை இணை அமைச்சரும் அங்கு இருந்தார். மாநில பிஜேபி தலைவர்கூட வந்திருந்தார்.
நேற்றிரவு Apple, Elon Musk, Bill Gates, Warren Buffett, Jeff Bezos, Mike Bloomberg, Barack Obama, Joe Biden, Kanye West, Kardashian, Benjamin Netanyahu ஆகியோரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்குகள் ஒரே நேரத்தில் ஹேக் செய்யப்பட்டன.
Thread
அதன் மூலம் ஒரே ஒரு ட்வீட் போடப்பட்டிருக்கிறது. நீங்கள் இந்த பிட்காயின் கணக்கில் $1000 போட்டால் நான் $2000 திரும்பத்தருவேன் எனபதே அந்த ட்வீட்.
சில நிமிடங்களில் இந்த ஹேக்கை ட்விட்டர் கண்டுபிடித்திருந்தாலும் அதற்குள்ளாக ஒரு லட்சம் டாலர்கள் ட்ரான்ஸ்பர் செய்யப்பட்டு விட்டன.
மக்களையும் குறை சொல்ல முடியாது. அதிகாரப்பூர்வ கணக்கில் வந்த ட்வீட் என்பதால் நம்பி விட்டனர். ட்விட்டர் தளம் இந்த ஹேக்கை சரி செய்து கொண்டிருப்பதாக அறிவித்திருக்கிறது.
இணைய பயன்பாட்டாளர்கள் அதிகம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.