*☘கார்த்திகை மாத சிறப்புக்கள்☘*

கார்த்திகை மாத சிறப்புக்கள் பல உள்ளன. கார்த்திகை மாதம் என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது கார்த்திகை தீபம் தான்.
ஐப்பசி கார்த்திகை அடைமழை என்பது பழமொழி. கார்த்திகை மாதம் கருமையான மேகங்களைக் கொண்டு அதிகளவு மழைபொழியும் கார் காலம் ஆகும். 🙏🇮🇳1
காந்தள் பூக்கள் அதிகம் மலரும் மாதம் ஆதலால் இம்மாதம் கார்த்திகை எனப் பெயர் பெற்றது.

கார்த்திகையில் நம்முடைய உடல் மற்றும் உள்ளத்தின் இயக்கம் சீராக இருக்கும். எனவே இம்மாதத்தின் முதல் நாள் அன்று தர்ம சாஸ்தாவாகிய ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் மேற்கொள்ளப்படுகிறது.

🙏🇮🇳2
ஐயப்பனை வேண்டி சபரிமலை பயணம் செய்ய இருமுடி கட்டுதல்

இம்மாதத்தில் திருமணங்கள் அதிகம் நடத்தப்பெறுவதால் இது திருமண மாதம் என்று சிறப்பிக்கப்படுகிறது.
திருமால் துளசியை இம்மாத வளர்பிறை துவாதசியில் திருமணம் செய்து கொண்டார். 🙏🇮🇳3
எனவே இம்மாதம் முழுவதும் துளசித் தளங்களால் அர்ச்சனை செய்தால் ஒவ்வொரு துளசித் தளத்துக்கும் ஒவ்வொரு அஸ்வமேத யாகம் செய்த பலன் கிட்டும்.
கார்த்திகை மாதத்தில் கார்த்திகை தீபம், சோமாவார விரதம், உமாமகேஸ்வர விரதம், கார்த்திகை ஞாயிறு விரதம், கார்த்திகை விரதம், விநாயகர் சஷ்டி விரதம், 🙏🇮🇳4
முடவன் முழுக்கு, கார்த்திகை மாத வளர்பிறை துவாதசி, ப்ரமோதினி ஏகாதசி, ரமா ஏகாதசி போன்ற வழிபாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

🙏🇮🇳5
*கார்த்திகை_தீபம்*

கார்த்திகை தீபம் தமிழர்களின் பராம்பரிய திருவிழாவாகும். கார்த்திகை தீபம் கார்த்திகை மாதத்தில் வரும் பௌர்ணமியோடு கூடிய கார்த்திகை நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. இவ்விழா திருக்கார்த்திகை என்றும் தீபத்திருவிழா என்றும் சிறப்பிக்கப்படுகிறது.
🙏🇮🇳6
கார்த்திகை தீப வழிபாடு பற்றி சங்கநூலான புறநானூற்றில் கூறப்பட்டுள்ளது. ஒளவையார் மற்றும் திருஞானசம்பந்தர் கார்த்திகை தீப வழிபாடு பற்றி தமது பாடல்களில் குறிப்பிட்டுள்ளனர்.

🙏🇮🇳7
சிவபெருமான் ஜோதிப்பிழம்பாக திருமால், நான்முகன் உள்ளிட்ட உலக உயிர்களுக்கு காட்சியருளிய நாளாகக் கருதப்படுகிறது.
முருகப்பெருமானை வளர்த்த கார்த்திகைப் பெண்களின் நினைவாகவும் இவ்விழா கொண்டாடப்படுகிறது.

🙏🇮🇳8
மகாபலிச் சக்கரவர்த்தி ஆணவத்தால் உடலில் பெற்ற புண்கள் குணமாக நெய் தீபம் ஏற்றி வந்தார். கார்த்திகை தீபத்தன்று நெய் தீபம் ஏற்றியபோது மாபலியின் புண்கள் குணமாகின. அது முதல் திருகார்த்திகை அன்று தீபம் ஏற்றும் வழக்கம் ஏற்பட்டதாகவும் கருதப்படுகிறது.

🙏🇮🇳9
திருக்கார்த்திகை அன்று எல்லா இடங்களிலும் தீபங்கள் ஏற்றப்படுகின்றன. அன்றைய தினம் விரதமுறை பின்பற்றப்படுகிறது.
வழிபாட்டில் பொரி உருண்டை அல்லது கார்த்திகைப் பொரி இடம் பெறுகிறது.
இன்றைய தினம் சிவாலயங்களில் சொக்கப்பனை ஏற்றும் வழக்கம் உள்ளது.

🙏🇮🇳10
*☘சொக்கப்பனை_ஏற்றும்_காட்சி☘*

திருவண்ணாமலையில் கார்த்திகைத் தீபத்திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது. திருக்கார்த்திகையில் தீபம் ஏற்றி வழிபட கண்நோய் தீரும். மனக்கவலைகள் நீங்கும். எல்லா நன்மைகளும் கிடைக்கும்.

🙏🇮🇳11
#சோமாவார_விரதம்

#சிவன்

சோமாவார விரதம் என்பது கார்த்திகை திங்கள் கிழமைகளில் சிவபெருமானை நினைத்து கடைப்பிடிக்கும் விரத முறையாகும்.
தனது மனைவியர்களிடம் பராபட்சமற்ற அன்பு காட்ட தவறிய சந்திரனை தட்சன் ஒளி இழக்குமாறு சபித்தான். 🙏🇮🇳12
ஒளி இழந்த சந்திரன் சோமாவார விரதமுறையைப் பின்பற்றி இறைவனின் திருவருளால் தேய்ந்து வளரும் நிலையைப் பெற்றான்.
மேலும் பிறைச்சந்திரனாக சிவபெருமானின் திருமுடியை அலங்கரிக்கும் பாக்கியத்தையும் கார்த்திகை சோமாவாரத்தில் பெற்றான். 🙏🇮🇳13
சந்திரனை சூடிய சிவபெருமான் சந்திரசேகரன் என்று அழைக்கப்படுகிறார்.
இவ்விரத முறையில் பகலில் உண்ணாமல் காலை மற்றும் மாலையில் சிவாலயம் சென்று வழிபட்டு இரவில் உண்ண வேண்டும். இவ்விரத முறையைப் பின்பற்றுவதால் திருமணம் ஆகாதவர்கள் நல்ல வாழ்க்கைத் துணையோடு வளமான வாழ்வு பெறுவர்.
🙏🇮🇳14
திருமணம் ஆனவர்கள் நல்ல வாழ்க்கை கிடைக்கப் பெறுவர். இவ்விரத முறையில் கணவன் மனைவி இருவரும் இணைந்து சிவாலயம் சென்று வருவது சிறப்பான பலனைத் தரும்.

🙏🇮🇳15
#உமாமகேஸ்வர_விரதம்

கடுமையான விரதம் மேற்கொண்டே உமையம்மை கார்த்திகை பௌர்ணமி அன்று இறைவனின் இடப்பாகத்தைப் பெற்றார். அவ்வாறாக அம்மையும் அப்பனும் இணைந்து உமையொரு பாகனாக அர்த்தநாரீஸ்வராக காட்சியருளிய தலம் திருவண்ணாமலை என்று அருணாசல புராணம் குறிப்பிடுகிறது.

🙏🇮🇳16
எனவே கார்த்திகை பௌர்ணமி அன்று அம்மை மற்றும் அப்பனை நினைத்து விரதமுறை மேற்கொள்ளும் இவ்விரத முறை உமாகமேஸ்வர விரதம் என்று அழைக்கப்படுகிறது.

🙏🇮🇳17
இவ்விரத்தில் காலையில் மட்டும் உண்ணா நோன்பு மேற்கொள்ளப்படுகிறது. இவ்விரத முறை மேற்கொள்ளுவதால் குடும்ப ஒற்றுமை ஏற்படும். கணவன் மனைவி சண்டை சச்சரவுகள் தீரும்.

🙏🇮🇳18
#கார்த்திகை_ஞாயிறு_விரதம்

இவ்விரத முறை கார்த்திகை முதல் ஞாயிறு அன்று தொடங்கப்பட்டு தொடர்ந்து பன்னிரெண்டு வாரங்கள் கடைப்பிடிக்கப்படுகிறது. நவகிரகங்கள் இவ்விரதத்தை மேற்கொண்டே வரம் பெற்றனர்.

🙏🇮🇳19
எனவே இவ்விரதமுறையை கடைப்பிடிப்பதால் நவகிரகப் பாதிப்புகள் நீங்கி அம்மை, அப்பரின் பேரருள் கிடைக்கும்.
#ஸ்ரீவாஞ்சியம் என்னும் இடத்தில் சிவபெருமானை வணங்கி திருமால் தன்னைப் பிரிந்த திருமகளுடன் மீண்டும் சேர்ந்தார். 🙏🇮🇳20
இங்குள்ள #குப்தகங்கை_தீர்த்தத்தில் கார்த்திகை நீராடல் மிகவும் சிறப்பு வாய்ந்தது.
கார்த்திகை ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் உமையோடு இறைவன் குப்தகங்கையின் கிழக்கு கரையில் ஆசிவழங்குவதாக் கருதப்படுகிறது.

🙏🇮🇳21
எனவே கார்த்திகை ஞாயிற்றுக் கிழமைகளில் குப்த கங்கையில் நீராடினால் பிரம்மஹத்தி தோசம், பாவங்கள் நீங்கும்.

🙏🇮🇳22
#கார்த்திகை_விரதம்

முருகன்

கார்த்திகை விரதம் என்பது முருகப்பெருமானைக் குறித்து கார்த்திகை மாத கார்த்திகை நட்சத்திரம் தொடங்கி ஒவ்வொரு மாதமும் கார்த்திகை நட்சத்திரத்திலும் கடைப்பிடிக்கப்
படுகிறது.
இவ்விரதம் தொடர்ந்து 12 ஆண்டுகள் கடைப்பிடிக்கப்படுகிறது. 🙏🇮🇳23
இவ்விரத முறையில் பகலில் உணவு உண்ணாமல் இறைவழிபாடு செய்து விரதம் கடைப்பிடிக்கப்
படுகிறது.
இவ்விரத முறையை மேற்கொள்வதால் வாழ்வின் பதினாறு செல்வங்கள் கிடைக்கும். தொடர்ந்து 12 ஆண்டுகள் இவ்விரத முறையை பின்பற்றுவதால் வாழ்வின் பெரும்பேறும், முக்தியும் கிடைக்கும்.

🙏🇮🇳24
#விநாயகர்_சஷ்டி_விரதம்

மருதமலை விநாயகர்

இவ்விரதமுறை விநாயகப் பெருமானை நினைத்து மேற்கொள்ளப்படுகிறது. இவ்விரதம் கார்த்திகை மாதம் தேய்பிறை பிரதமை முதல் மார்கழி மாதம் வளர்பிறை சஷ்டி வரை மொத்தம் 21 நாட்கள் கடைப்பிடிக்கப்
படுகிறது.

🙏🇮🇳25
இவ்விரத முறையில் 21 இழைகளால் ஆன நோன்பு கயிற்றினை ஆண்கள் வலது கையிலும் பெண்கள் இடது கையிலும் கட்டிக் கொள்கின்றனர். முதல் 20 நாளும் ஒருபொழுது மட்டும் சாப்பிட்டும், கடைசி நாள் முழுமையாக உபவாசம் மேற்கொள்கின்றனர்.

🙏🇮🇳26
இவ்விரத முறையினை மேற்கொள்வதால் சிறந்த வாழ்க்கைத் துணை, புத்திசாலியான புத்திரர்கள் கிடைப்பர். வாழ்வின் எல்லாப் பேறுகளும் கிடைக்கும். எடுத்த நல்ல காரியங்கள் வெற்றியாகும்.

🙏🇮🇳27
#முடவன்_முழுக்கு

காவிரி ஆறு

முடவன் முழுக்கு என்பது கார்த்திகை முதல் நாள் காவிரியில் நீராடுவதைக் குறிக்கும்.
முடவன் ஒருவன் மயிலாடுதுறைக்கு அருகில் வசித்து வந்தான். ஐப்பசியில் காவிரியில் நீராடுவதற்காக மயிலாடுதுறைக்கு செல்ல தீர்மானித்து பயணத்தைத் துவங்கினான்.

🙏🇮🇳28
மயிலாடுதுறையில் காவிரியை நீராட அணுகியபோது கார்த்திகை மாதம் முதல்நாள் வந்துவிட்டது.
துலா மாதத்தில் நீராட முடியாததை நினைத்து முடவன் வருந்தி இறைவனிடம் பிரார்த்தித்தான்.
இறைவனும் “இன்றைய தினம் கார்த்திகை முதல் தேதி ஆனாலும் பரவாயில்லை, காவிரியில் நீராடு.

🙏🇮🇳29
உனக்கு முழுமையான துலா ஸ்நான பலன் கிட்டும்.”
“இனி யார் கார்த்திகை முதல் தேதி அன்று காவிரியில் நீராடினாலும், ஐப்பசி மாத முழுவதும் நீராடிய பலன் கிடைக்கும்” என்று அருளினார்.

🙏🇮🇳30
இந்நிகழ்வே முடவன் முழுக்கு என்று அழைக்கப்படுகிறது.
இன்றைக்கும் காவிரியில் கார்த்திகை மாதம் முதல் நாளன்று நீராடல் சிறப்பாக நடைபெறுகிறது.

🙏🇮🇳31
#கார்த்திகை_மாத_வளர்பிறை_துவாதசி

துளசி

கார்த்திகை மாத வளர்பிறை துவாதச நாளில் திருமால் துளசியை திருமணம் செய்து கொண்டார். எனவே கார்த்திகை மாதம் முழுவதும் திருமாலை துளசி தளத்தால் அர்ச்சனை செய்ய ஒவ்வொரு துளசி தளத்துக்கும் ஒவ்வொரு அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும்.

🙏🇮🇳32
கார்த்திகை மாத துவாதசி நாளில் ஏழைகளுக்கு அன்னதானம் செய்தால் கங்கைக்கரையில் ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்த பலன் கிடைக்கும்.
இம்மாதத்தில் திருமாலை கஸ்தூரியால் அலங்கரித்து தாமரை மலர்களால் வழிபட பெரும் பாக்கியத்தைப் பெறலாம்.

🙏🇮🇳33
#ப்ரமோதினி_ஏகாதசி

பெருமாள்

கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசி ப்ரமோதினி என வழங்கப்படுகிறது. இது கைசிக ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது. இவ்விரதமுறையைப் பின்பற்றுவதால் உயர்ந்த நன்மைகள் கிடைக்கும். பூலோகத்தில் சொர்க்க வாழ்வு கிடைக்கும்.

🙏🇮🇳34
#ரமா_ஏகாதசி

கார்த்திகை மாத தேய்பிறை ஏகாதசி ரமா ஏகாதசி எனப்படும். இவ்விரதமுறையைப் பின்பற்றுவதால் உயர்ந்த பதவிகள் கிடைக்கும். இருபத்தியோரு தான பலன்களைக் கொடுக்கும்.

🙏🇮🇳35
#கார்த்திகை_மாதத்தினை_சிறப்பு_செய்தவர்கள்

கார்த்திகை மாதத்தில் மெய்ப்பொருள் நாயனார், ஆனாய நாயனார், மூர்க்க நாயனார், சிறப்புலி நாயனார், கணம்புல்ல நாயனார் ஆகிய நாயன்மார்களின் குருபூஜை நடைபெறுகிறது.

🙏🇮🇳36
சிறப்புகள் வாய்ந்த கார்த்திகை மாதத்தில் விரதமுறையைக் கடைப்பிடித்து வழிபாடுகள் மேற்கொண்டு வாழ்வின் கவலைகள் நீங்கி உயர் வாழ்வு வாழ்வோம்.

வாழ்க பாரதம் 🇮🇳
வளர்க பாரதம் 🇮🇳🙏🇮🇳

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳

Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Raamraaj3

19 Nov
40ஆண்டு கடந்து தமிழகம் வரும் சாமி சிலைகள்..!
மயிலாடுதுறை மாவட்டம் அனந்தமங்கலம் ராஜகோபாலசுவாமி கோயிலில் இருந்து 40ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்ட ஐம்பொன்னாலான ராமர், லட்சுமணர், சீதை சிலைகள் லண்டனில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. டெல்லி வந்து சேர்ந்த மூன்று சிலைகளையும் தமிழக அதிகாரிகள் பெற்றுக் கொண்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் அனந்தமங்கலத்தில் உள்ள ராஜகோபாலசுவாமி கோவிலில் இருந்த, 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ராமர், லட்சுமணர், சீதை மற்றும் ஆஞ்சநேயர் வெண்கலச் சிலைகளை 1978ஆம் ஆண்டு மர்மநபர்கள் திருடிச் சென்றனர்.
Read 6 tweets
19 Nov
பெங்களூரு கலவர வழக்கில் தலைமறைவாக இருந்த முன்னாள் மேயர் ச‌ம்பத் ராஜ் இன்று கைது செய்யப்பட்டார்.

பெங்களூருவில் கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி புலிக்கேசி நகர் காங்கிரஸ் எம்எல்ஏ அகண்ட சீனிவாச மூர்த்தியின் உறவினர் நவீன்,
முகநூலில் முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டிருந்தார். இதற்கு இஸ்லாமிய அமைப்பினர் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், அன்றிரவு டி.ஜே.ஹள்ளி, கே.ஜி.ஹள்ளி காவல் நிலையங்கள், அகண்ட சீனிவாச மூர்த்தியின் வீடு ஆகியவை தாக்கப்பட்டன.
200க்கும் மேற்பட்ட வாகனங்களுக்குத் தீவைக்கப்பட்ட நிலையில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலியாகினர்.

இவ்வழக்கில் எஸ்டிபிஐ, பிடிபி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 350க்கும் மேற்பட்டோரை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
Read 7 tweets
19 Nov
லடாக் வரைபட விவகாரம்: மன்னிப்பு கோரியது டுவிட்டர்

புதுடில்லி : லடாக் பகுதி சீனாவில் இருப்பதாக வரைபடம் வெளியிட்ட அமெரிக்காவை சேர்ந்த 'டுவிட்டர்' சமூகவலைதள நிறுவனம் பார்லிமென்ட் குழுவிடம் எழுத்துபூர்வமாக மன்னிப்பு கோரியது.
அமெரிக்காவை சேர்ந்த 'டுவிட்டர்' சமூகவலைதள நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட இந்திய வரைபடத்தில் லடாக் யூனியன் பிரதேசம் சீனாவில் உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.'இது நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது' என மத்திய அரசு கண்டனம் தெரிவித்தது.
இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 'டுவிட்டர்' தலைமை செயல் அதிகாரி ஜாக் டார்சிக்கு மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை செயலர் அஜய் சாஹ்னி கடந்த மாதம் 22ல் கடிதம் எழுதினார்.
Read 6 tweets
18 Nov
*கார்த்திகை மாதம் பற்றிய 51 சிறப்பு தகவல்கள்*

*1. கார்த்திகை மாதம் கருமையான மேகங்களைக் கொண்டு அதிகளவு மழைபொழியும் கார் காலம் ஆகும். காந்தள் பூக்கள் அதிகம் மலரும் மாதம். ஆதலால் இம்மாதம் கார்த்திகை எனப் பெயர் பெற்றது.*

🇮🇳1
*2. கார்த்திகை மாதத்தில் சிவலிங்கத்தை நெய்யினால் அபிஷேகம் செய்து வில்வம் மற்றும் மரிக்கொழுந்தால் அர்ச்சனை செய்து வழிபட்டால் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.*

🇮🇳2
*3. விருச்சிக ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் இம்மாதத்தில் மனசேர்க்கை, உடல் சேர்க்கை, கர்ப்பதானம் ஆகிய இவற்றில் பிரச்சினைகள் வராது. எனவே, கார்த்திகை மாதத்தைத் திருமண மாதம் என்று இந்து சாஸ்திரம் கூறுகிறது.*

🇮🇳3
Read 48 tweets
18 Nov
ஸ்வாமிமலை ஸ்வாமிநாத ஸ்வாமியை
தெரியும் அதேபோல்ராமநாதபுரம் குண்டுக்கரை பதினோறு முகம் கொண்ட
ஸ்ரீஸ்வாமிநாதனை தெரிந்துகொள்ளுங்கள்.
ஏகாதச ருத்ரனின் வடிவமாக
11 முகம் கொண்ட அதிசய முருகன்

அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில், குண்டுக்கரை, இராமநாதபுரம்

🇮🇳🙏1 Image
சூரபத்மனை வதம் செய்வதற்கு முன்பே முருகன் இத்தலத்துக்கு வந்ததாக கூறப்படுகிறது. அப்போது முருகனுக்கு 11 தலை 22 கைகள் இருந்ததாக தல வரலாறு சொல்கிறது. அதே வடிவில், விஸ்வரூபம் எடுத்த நிலையில் முருகன் தரிசனம் தருகிறார். 🇮🇳🙏2
மற்ற கோயில்களில் எல்லாம், பிரணவ மந்திரத்தின் பொருள் கூற, முருகன் சிவனின் மடியில் அமர்ந்திருப்பது போல சிலை இருக்கும். ஆனால், இத்தலத்தில் தகப்பன் சுவாமியான முருகன் குன்றின் மீது அமர்ந்து பிரணவ மந்திரத்திற்கு பொருள் சொல்ல, சிவன் அதை நின்று கேட்கும் நிலையில் அமைந்துள்ளது. 🇮🇳🙏3
Read 9 tweets
18 Nov
வேத சப்தத்தை உச்சாரணம் பண்ணுவது எப்படி தபஸோ அப்படியே கேட்பதும்

வேதம் சொன்னால் புரியாது

புரியாத வேதத்தைக் கேட்க வேண்டும் என்ற எண்ணம் வருவதே பெரிய ஏற்றம்.வேத சப்தம் நம்மை கேட்கப் பண்ணுகிறது.
அதர்வண வேதம் சொல்கிறது :

இங்கிருந்து ஒருவர் கோவிலுக்குப் போய் பகவானைச் சேவிக்கிறார். பகவான் இவரைப் பார்த்தாரா என்று எப்படி தெரிந்து கொள்வது❓

பகவான் இவரை அனுக்ரஹித்தானா என்பதற்கு வேதம் ஒரு அளவுகோல் சொல்கிறது.
ஓரிடத்தில் வேத பாராயணம் நடக்கிறது.வேத சப்தத்தைக்​ கேட்டு அங்கே போய் அவர் உட்கார்ந்து கண்ணை மூடிக் கொண்டு கேட்கிறார்

வேதம் சொல்கிறது எப்போது வேதத்தைக் கேட்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டு வேத பாராயணத்தைக் கேட்கிறாறோ அப்போது பகவான் அவரைப் பார்த்து விட்டான் என அர்த்தம்
Read 12 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!