வேத சப்தத்தை உச்சாரணம் பண்ணுவது எப்படி தபஸோ அப்படியே கேட்பதும்
வேதம் சொன்னால் புரியாது
புரியாத வேதத்தைக் கேட்க வேண்டும் என்ற எண்ணம் வருவதே பெரிய ஏற்றம்.வேத சப்தம் நம்மை கேட்கப் பண்ணுகிறது.
அதர்வண வேதம் சொல்கிறது :
இங்கிருந்து ஒருவர் கோவிலுக்குப் போய் பகவானைச் சேவிக்கிறார். பகவான் இவரைப் பார்த்தாரா என்று எப்படி தெரிந்து கொள்வது❓
பகவான் இவரை அனுக்ரஹித்தானா என்பதற்கு வேதம் ஒரு அளவுகோல் சொல்கிறது.
ஓரிடத்தில் வேத பாராயணம் நடக்கிறது.வேத சப்தத்தைக் கேட்டு அங்கே போய் அவர் உட்கார்ந்து கண்ணை மூடிக் கொண்டு கேட்கிறார்
வேதம் சொல்கிறது எப்போது வேதத்தைக் கேட்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டு வேத பாராயணத்தைக் கேட்கிறாறோ அப்போது பகவான் அவரைப் பார்த்து விட்டான் என அர்த்தம்
பகவான் பார்த்தான் என்பதற்கு அளவுகோல் எது❓
வேதத்தைக் கேட்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுதல்
வேதத்தைக் கேட்க ஒருத்தருக்குப் பிடிக்கவில்லை என்றால் இன்னும் பகவானின் கடாக்ஷம் அவனுக்கு கிடைக்கவில்லை என்று அர்த்தம்
பகவானிடத்தில் த்வேஷம் இருந்தால் கூட அவன் பொறுத்துக்கொள்வான்.வேதத்தின் மீது த்வேஷம் இருந்தால் ஒத்துக் கொள்ள மாட்டான்.
நாம் வேதத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும்.
ந்ருஸிம்ஹ அவதாரத்தின் முன்பு பகவான் சொன்னான் 'யதா வேதேஷூ' என்று எவன் வேதத்தை நிந்திக்கிறானோ அவன் சீக்கிரம் நாசத்தை அடைவான் என்றான்
அர்த்தம் தெரியா விட்டாலும் வேதத்தைக் கேட்க வேண்டும்.கேட்க வேண்டும் என்ற அபிப்பிராயம் நமக்கு வேண்டும்
அர்த்தமே தெரியா விட்டாலும் பரவாயில்லை.இது எப்படி சரியாகும் என்று கேள்வி
வேத மந்திரங்களுக்கு அர்த்தம் தெரியாமல் ஒருவர் ஹோமம் பண்ணுகிறார்.அப்போது பலன் சித்திக்குமா என்றால் சித்திக்கும் என்கிறது வேதம்
ப்ரம்மச்சாரி உபநயனத்தின் போது பிக்ஷாடணம் பிச்சை எடுக்கக் கற்றுக் கொள்கிறான்.அதற்கு அவனுக்குச் சொல்லிக் கொடுக்கப் படுகிறது. ஒவ்வொரு வீட்டின் முன்பும் 'பவதி பிஷாந்தேஹி' என்கிறான்
இவனுக்கு சமஸ்கிருத பாடம் ஆரம்பிக்கவில்லை.ராம சப்தம் கூட தெரியாது.'தாங்கள் பிச்சை இடுங்கள்' என்ற அர்த்தமும் தெரியாது
ஆனால் அதை சொல்லக் கற்றுக் கொண்டுள்ளான். அவனுக்கு என்ன தெரியும்❓
'பவதி பிஷாந்தேஹி' என்று கூக்குரலிட்டால் பாத்திரம் நிறையும். வீட்டுக் கதவைத் திறந்து வந்து அந்த வீட்டுப் பெண்மணி பாத்திரத்தில் அரிசியை இடுகிறாள்.பாத்திரம் நிறைகிறது
ப்ரம்மச்சாரி அர்த்தம் தெரியாமல் சொல்கிறான்.ஆனாலும் பாத்திரம் எப்படி நிறைகிறது என்றால், இவனுக்குத் தெரியாமல் போனாலும் வீட்டில் உள்ளவர்களுக்குத் தெரியும்
அது போல், வேத மந்திரத்திற்கு நமக்கு அர்த்தம் தெரியாவிட்டாலும் தேவதைகளுக்குத் தெரியுமாதலினால் அவர்கள் ஓடி வந்து நாம் கொடுப்பதை ஸ்வீகரித்து நம்முடைய அபீஷ்டத்தை பூர்த்தி பண்ணுவார்கள்.
பகிர்வு 🙏🇮🇳
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
அதிமுக - திமுக.,வுக்கு போட்டியாக உருவெடுத்த பா.ஜ.,: தமிழக உளவுத்துறை உஷார்
சென்னை: வேல் யாத்திரைக்கு கூடும் கூட்டத்தால் தமிழகத்தில் தி.மு.க. - அ.தி.மு.க.வுக்கு போட்டியாக பா.ஜ.வுக்கு மக்களிடையே வரவேற்பு அதிகரித்துள்ளதாக மாநில உளவுத்துறை அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளது.
தமிழகத்தில் வேல் யாத்திரையை பா.ஜ. மாநில தலைவர் முருகன் கடந்த 6ல் திருத்தணியில் துவங்கிய நிலையில் கைது செய்யப்பட்டார். இதை கண்டித்து தமிழகம் முழுதும் பா.ஜ.வினர் சாலை மறியலில் ஈடுபட்டு கைதாகினர்.
வழக்கமாக தமிழகம் முழுதும் பா.ஜ.வினர் செல்வாக்கு பெற்ற மாவட்டங்களை தவிர பிற இடங்களில் 100க்கும் குறைவானவர்களே கைதாவர்.
வேல் யாத்திரை விவகாரத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கைது எண்ணிக்கை 100ஐ தாண்டியது.
திருநெல்வேலி ரயில்வே ஜங்ஷனுக்கு அருகில் உள்ளது சாலைக் குமார சுவாமி கோயில். ரயில்வே ஸ்டேஷனுக்கு அருகில் இரட்டைப் பாலம் உள்ளது. இந்த இரட்டைப் பாலத்துக்குக் கீழே உள்ள பகுதியில் உள்ளது சாலைகுமார சுவாமி கோயில்.
ஆலயம் சிறியதுதான். ஆனால் கீர்த்தி மிக்க திருத்தலம். 🙏🇮🇳1
மிகச்சிறிய கோயில் என்றாலும் திருநெல்வேலி என்றில்லாமல் சுற்றுவட்டார ஊர்களைச் சேர்ந்த பக்தர்களும் இங்கு வந்து முத்துக்குமார சுவாமியை தரிசித்துச் செல்கின்றனர்.
மூலவர் முருகக் கடவுள், கிழக்கு நோக்கியபடி அருள்பாலிக்கிறார். 🙏🇮🇳2
ஆறுமுகங்களும் பனிரெண்டு திருக்கரங்களும் கொண்டு, அழகு முருகனாக, அழகன் முருகனாக, மயிலின் மீது அமர்ந்து ஒய்யாரமாகக் காட்சி தருகிறார்.
திருச்செந்தூர் திருத்தலத்துக்கு இணையான தலம் என்று கொண்டாடுகின்றனர் பக்தர்கள். 🙏🇮🇳3
கோ பேக் மோடி தி.மு.க., வினருக்கு அண்ணாமலை எச்சரிக்கை
கரூர்: 'கோ பேக் மோடி' என்ற விளம்பரத்தை தி.மு.க., வினர் அழிக்கவில்லை எனில் பா.ஜ. வினர் அதை அழிப்பர்' என பா.ஜ. மாநில துணைத்தலைவர் அண்ணாமலை, மாஜி அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மத்திய பா.ஜ. அரசை கடுமையாக தி.மு.க. விமர்சனம் செய்து வருகிறது. நவ.,10ல் கரூர் திருக்காம்புலியூர் ரவுண்டானா அருகில் சேலம்- மதுரை புறவழிச்சாலை மேம்பால சுவற்றில் 'கோ பேக் மோடி' என தி.மு.க. சார்பில் விளம்பரம் எழுதப்பட்டது.
மேலும் ஈரோடு சாலை, வெங்கமேடு உட்பட பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
இதுகுறித்து நவ.,11ல் மாவட்ட பா.ஜ. தலைவர் சிவசாமி சார்பில் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
திமுகவின் போலி முகத்தை காட்ட வேல் யாத்திரை: கடலூரில் பாஜக மாநில தலைவர் முருகன் தகவல்
தமிழக பாஜகவினர் கடந்த 6-ம் தேதி திருத்தணியில் தொடங்கிய வேல் யாத்திரையை தொடர்ந்து மாவட்டந் தோறும் தடையை மீறி நடத்தி, கைதாகி வருகின்றனர்.
நேற்று கடலூரில் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தலைமையில் வேல் யாத்திரை நடத்த திட்டமிடப்பட்டது.
முன்னதாக நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பாஜக மாநிலத்தலைவர் முருகன் பேசியது: வேல் யாத்திரை அத்தியாவசியமானது. கந்த சஷ்டி கவசத்தை கருப்பர் கூட்டம் கொச்சைப்படுத்தியிருக்கிறது.
அந்த கருப்பர் கூட்டத்துக்கு பின்னால் திமுகவும், அதன் கூட்டணிக் கட்சியினரும் இருக்கின்றனர். அவர்களுடைய போலி முகத்தை மக்களுக்கு காட்டவே இந்த யாத்திரை நடக்கிறது.
மொழியின் பெயரால், இனத்தின் பெயரால், மதத்தின் பெயரால் மக்களைப் பிரிக்க முடியாது. தமிழக மக்கள் ஒற்றுமையாக இருக்கின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் அனந்தமங்கலம் ராஜகோபாலசுவாமி கோயிலில் இருந்து 40ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்ட ஐம்பொன்னாலான ராமர், லட்சுமணர், சீதை சிலைகள் லண்டனில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. டெல்லி வந்து சேர்ந்த மூன்று சிலைகளையும் தமிழக அதிகாரிகள் பெற்றுக் கொண்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் அனந்தமங்கலத்தில் உள்ள ராஜகோபாலசுவாமி கோவிலில் இருந்த, 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ராமர், லட்சுமணர், சீதை மற்றும் ஆஞ்சநேயர் வெண்கலச் சிலைகளை 1978ஆம் ஆண்டு மர்மநபர்கள் திருடிச் சென்றனர்.