மயிலாடுதுறை மாவட்டம் அனந்தமங்கலம் ராஜகோபாலசுவாமி கோயிலில் இருந்து 40ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்ட ஐம்பொன்னாலான ராமர், லட்சுமணர், சீதை சிலைகள் லண்டனில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. டெல்லி வந்து சேர்ந்த மூன்று சிலைகளையும் தமிழக அதிகாரிகள் பெற்றுக் கொண்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் அனந்தமங்கலத்தில் உள்ள ராஜகோபாலசுவாமி கோவிலில் இருந்த, 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ராமர், லட்சுமணர், சீதை மற்றும் ஆஞ்சநேயர் வெண்கலச் சிலைகளை 1978ஆம் ஆண்டு மர்மநபர்கள் திருடிச் சென்றனர்.
1988ல் சிபிசிஐடி விசாரணைக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டபின், நாச்சியார்கோயிலைச் சேர்ந்த மூவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். இதன்பின்னர் சிலையை தேடும் பணி தொடர்ந்து கொண்டே இருந்தது.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன், லண்டனைச் சேர்ந்த டீலர் ஒருவர் சிலைகள் விற்பனைக்கு உள்ளதாக இணையத்தில் படங்களை வெளியிட்டிருந்தார்.
இதில் தமிழக கோவிலைச் சேர்ந்த சிலைகள் இருப்பதை அறிந்த சிலை மீட்பு பணிக்குழு என்ற அமைப்பை நடத்திவரும் சிங்கப்பூரில் வசிக்கும் விஜயகுமார் அந்தப் படங்களை தமிழக சிலை தடுப்பு பிரிவு போலீசாருக்கு அனுப்பி வைத்தார்.
பாலிமர்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
சில நாடுகளின் லாபத்திற்காக உலகம் பாதிக்கப்படக்கூடாது
புதுடில்லி : தென் சீனக் கடலில் சீனாவின் ஆக்கிரமிப்பு முயற்சியை மறைமுகமாக கண்டித்து பன்னாட்டு இணைய கருத்தரங்கில் 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது:
இந்திய - பசிபிக் கடல் பிராந்தியக் கொள்கை என்பது எதிர்காலத்திற்கானது; அதை முந்தைய காலகட்டத்திற்கு தள்ளக் கூடாது.
பனிப் போரை விரும்பும் நாடுகள் தான் அத்தகைய பிற்போக்கான எண்ணத்தை விரும்பும். சமீப காலத்தில் இந்திய - பசிபிக் மற்றும் 'ஆசியான்' அமைப்புகள் குறிப்பிடத்தக்க வரவேற்பையும் முன்னேற்றத்தையும் அடைந்து வருகின்றன.
அதிமுக - திமுக.,வுக்கு போட்டியாக உருவெடுத்த பா.ஜ.,: தமிழக உளவுத்துறை உஷார்
சென்னை: வேல் யாத்திரைக்கு கூடும் கூட்டத்தால் தமிழகத்தில் தி.மு.க. - அ.தி.மு.க.வுக்கு போட்டியாக பா.ஜ.வுக்கு மக்களிடையே வரவேற்பு அதிகரித்துள்ளதாக மாநில உளவுத்துறை அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளது.
தமிழகத்தில் வேல் யாத்திரையை பா.ஜ. மாநில தலைவர் முருகன் கடந்த 6ல் திருத்தணியில் துவங்கிய நிலையில் கைது செய்யப்பட்டார். இதை கண்டித்து தமிழகம் முழுதும் பா.ஜ.வினர் சாலை மறியலில் ஈடுபட்டு கைதாகினர்.
வழக்கமாக தமிழகம் முழுதும் பா.ஜ.வினர் செல்வாக்கு பெற்ற மாவட்டங்களை தவிர பிற இடங்களில் 100க்கும் குறைவானவர்களே கைதாவர்.
வேல் யாத்திரை விவகாரத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கைது எண்ணிக்கை 100ஐ தாண்டியது.
திருநெல்வேலி ரயில்வே ஜங்ஷனுக்கு அருகில் உள்ளது சாலைக் குமார சுவாமி கோயில். ரயில்வே ஸ்டேஷனுக்கு அருகில் இரட்டைப் பாலம் உள்ளது. இந்த இரட்டைப் பாலத்துக்குக் கீழே உள்ள பகுதியில் உள்ளது சாலைகுமார சுவாமி கோயில்.
ஆலயம் சிறியதுதான். ஆனால் கீர்த்தி மிக்க திருத்தலம். 🙏🇮🇳1
மிகச்சிறிய கோயில் என்றாலும் திருநெல்வேலி என்றில்லாமல் சுற்றுவட்டார ஊர்களைச் சேர்ந்த பக்தர்களும் இங்கு வந்து முத்துக்குமார சுவாமியை தரிசித்துச் செல்கின்றனர்.
மூலவர் முருகக் கடவுள், கிழக்கு நோக்கியபடி அருள்பாலிக்கிறார். 🙏🇮🇳2
ஆறுமுகங்களும் பனிரெண்டு திருக்கரங்களும் கொண்டு, அழகு முருகனாக, அழகன் முருகனாக, மயிலின் மீது அமர்ந்து ஒய்யாரமாகக் காட்சி தருகிறார்.
திருச்செந்தூர் திருத்தலத்துக்கு இணையான தலம் என்று கொண்டாடுகின்றனர் பக்தர்கள். 🙏🇮🇳3