புதுடில்லி : லடாக் பகுதி சீனாவில் இருப்பதாக வரைபடம் வெளியிட்ட அமெரிக்காவை சேர்ந்த 'டுவிட்டர்' சமூகவலைதள நிறுவனம் பார்லிமென்ட் குழுவிடம் எழுத்துபூர்வமாக மன்னிப்பு கோரியது.
அமெரிக்காவை சேர்ந்த 'டுவிட்டர்' சமூகவலைதள நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட இந்திய வரைபடத்தில் லடாக் யூனியன் பிரதேசம் சீனாவில் உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.'இது நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது' என மத்திய அரசு கண்டனம் தெரிவித்தது.
இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 'டுவிட்டர்' தலைமை செயல் அதிகாரி ஜாக் டார்சிக்கு மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை செயலர் அஜய் சாஹ்னி கடந்த மாதம் 22ல் கடிதம் எழுதினார்.
இதற்கு பார்லிமென்ட் குழு கடும் கண்டனம் தெரிவித்தது. 'டுவிட்டர்' இந்தியா நிறுவன நிர்வாகிகள் பார்லிமென்ட் குழு தலைவர் மீனாட்சி லேஹி முன் ஆஜராகி மன்னிப்பு கோரினர்.'இது தேச துரோக செயலாக கருதப்படும்'
என தெரிவித்த மீனாட்சி லேஹி அமெரிக்காவை சேர்ந்த 'டுவிட்டர்' நிறுவன நிர்வாகிகள் எழுத்து வாயிலாக மன்னிப்பு கோர வலியுறுத்தினார்.
இதையடுத்து 'டுவிட்டர்' அமெரிக்காவின் தனியுரிமை பிரிவின் தலைமை அதிகாரி டேமியன் கேரின் மன்னிப்பு கோரி கடிதம் எழுதியுள்ளார்.
அதில் இந்தியாவின் உணர்வுகளை புண்படுத்தியதற்கு மன்னிப்பு கோரப்பட்டுள்ளது. மேலும் அந்த தவறு இம்மாதம் 30ம் தேதிக்குள் திருத்தப்பட்டுவிடும் என்றும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
தினமலர்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
அதிமுக - திமுக.,வுக்கு போட்டியாக உருவெடுத்த பா.ஜ.,: தமிழக உளவுத்துறை உஷார்
சென்னை: வேல் யாத்திரைக்கு கூடும் கூட்டத்தால் தமிழகத்தில் தி.மு.க. - அ.தி.மு.க.வுக்கு போட்டியாக பா.ஜ.வுக்கு மக்களிடையே வரவேற்பு அதிகரித்துள்ளதாக மாநில உளவுத்துறை அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளது.
தமிழகத்தில் வேல் யாத்திரையை பா.ஜ. மாநில தலைவர் முருகன் கடந்த 6ல் திருத்தணியில் துவங்கிய நிலையில் கைது செய்யப்பட்டார். இதை கண்டித்து தமிழகம் முழுதும் பா.ஜ.வினர் சாலை மறியலில் ஈடுபட்டு கைதாகினர்.
வழக்கமாக தமிழகம் முழுதும் பா.ஜ.வினர் செல்வாக்கு பெற்ற மாவட்டங்களை தவிர பிற இடங்களில் 100க்கும் குறைவானவர்களே கைதாவர்.
வேல் யாத்திரை விவகாரத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கைது எண்ணிக்கை 100ஐ தாண்டியது.
திருநெல்வேலி ரயில்வே ஜங்ஷனுக்கு அருகில் உள்ளது சாலைக் குமார சுவாமி கோயில். ரயில்வே ஸ்டேஷனுக்கு அருகில் இரட்டைப் பாலம் உள்ளது. இந்த இரட்டைப் பாலத்துக்குக் கீழே உள்ள பகுதியில் உள்ளது சாலைகுமார சுவாமி கோயில்.
ஆலயம் சிறியதுதான். ஆனால் கீர்த்தி மிக்க திருத்தலம். 🙏🇮🇳1
மிகச்சிறிய கோயில் என்றாலும் திருநெல்வேலி என்றில்லாமல் சுற்றுவட்டார ஊர்களைச் சேர்ந்த பக்தர்களும் இங்கு வந்து முத்துக்குமார சுவாமியை தரிசித்துச் செல்கின்றனர்.
மூலவர் முருகக் கடவுள், கிழக்கு நோக்கியபடி அருள்பாலிக்கிறார். 🙏🇮🇳2
ஆறுமுகங்களும் பனிரெண்டு திருக்கரங்களும் கொண்டு, அழகு முருகனாக, அழகன் முருகனாக, மயிலின் மீது அமர்ந்து ஒய்யாரமாகக் காட்சி தருகிறார்.
திருச்செந்தூர் திருத்தலத்துக்கு இணையான தலம் என்று கொண்டாடுகின்றனர் பக்தர்கள். 🙏🇮🇳3
கோ பேக் மோடி தி.மு.க., வினருக்கு அண்ணாமலை எச்சரிக்கை
கரூர்: 'கோ பேக் மோடி' என்ற விளம்பரத்தை தி.மு.க., வினர் அழிக்கவில்லை எனில் பா.ஜ. வினர் அதை அழிப்பர்' என பா.ஜ. மாநில துணைத்தலைவர் அண்ணாமலை, மாஜி அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மத்திய பா.ஜ. அரசை கடுமையாக தி.மு.க. விமர்சனம் செய்து வருகிறது. நவ.,10ல் கரூர் திருக்காம்புலியூர் ரவுண்டானா அருகில் சேலம்- மதுரை புறவழிச்சாலை மேம்பால சுவற்றில் 'கோ பேக் மோடி' என தி.மு.க. சார்பில் விளம்பரம் எழுதப்பட்டது.
மேலும் ஈரோடு சாலை, வெங்கமேடு உட்பட பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
இதுகுறித்து நவ.,11ல் மாவட்ட பா.ஜ. தலைவர் சிவசாமி சார்பில் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
திமுகவின் போலி முகத்தை காட்ட வேல் யாத்திரை: கடலூரில் பாஜக மாநில தலைவர் முருகன் தகவல்
தமிழக பாஜகவினர் கடந்த 6-ம் தேதி திருத்தணியில் தொடங்கிய வேல் யாத்திரையை தொடர்ந்து மாவட்டந் தோறும் தடையை மீறி நடத்தி, கைதாகி வருகின்றனர்.
நேற்று கடலூரில் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தலைமையில் வேல் யாத்திரை நடத்த திட்டமிடப்பட்டது.
முன்னதாக நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பாஜக மாநிலத்தலைவர் முருகன் பேசியது: வேல் யாத்திரை அத்தியாவசியமானது. கந்த சஷ்டி கவசத்தை கருப்பர் கூட்டம் கொச்சைப்படுத்தியிருக்கிறது.
அந்த கருப்பர் கூட்டத்துக்கு பின்னால் திமுகவும், அதன் கூட்டணிக் கட்சியினரும் இருக்கின்றனர். அவர்களுடைய போலி முகத்தை மக்களுக்கு காட்டவே இந்த யாத்திரை நடக்கிறது.
மொழியின் பெயரால், இனத்தின் பெயரால், மதத்தின் பெயரால் மக்களைப் பிரிக்க முடியாது. தமிழக மக்கள் ஒற்றுமையாக இருக்கின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் அனந்தமங்கலம் ராஜகோபாலசுவாமி கோயிலில் இருந்து 40ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்ட ஐம்பொன்னாலான ராமர், லட்சுமணர், சீதை சிலைகள் லண்டனில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. டெல்லி வந்து சேர்ந்த மூன்று சிலைகளையும் தமிழக அதிகாரிகள் பெற்றுக் கொண்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் அனந்தமங்கலத்தில் உள்ள ராஜகோபாலசுவாமி கோவிலில் இருந்த, 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ராமர், லட்சுமணர், சீதை மற்றும் ஆஞ்சநேயர் வெண்கலச் சிலைகளை 1978ஆம் ஆண்டு மர்மநபர்கள் திருடிச் சென்றனர்.