திமுகவின் போலி முகத்தை காட்ட வேல் யாத்திரை: கடலூரில் பாஜக மாநில தலைவர் முருகன் தகவல்
தமிழக பாஜகவினர் கடந்த 6-ம் தேதி திருத்தணியில் தொடங்கிய வேல் யாத்திரையை தொடர்ந்து மாவட்டந் தோறும் தடையை மீறி நடத்தி, கைதாகி வருகின்றனர்.
நேற்று கடலூரில் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தலைமையில் வேல் யாத்திரை நடத்த திட்டமிடப்பட்டது.
முன்னதாக நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பாஜக மாநிலத்தலைவர் முருகன் பேசியது: வேல் யாத்திரை அத்தியாவசியமானது. கந்த சஷ்டி கவசத்தை கருப்பர் கூட்டம் கொச்சைப்படுத்தியிருக்கிறது.
அந்த கருப்பர் கூட்டத்துக்கு பின்னால் திமுகவும், அதன் கூட்டணிக் கட்சியினரும் இருக்கின்றனர். அவர்களுடைய போலி முகத்தை மக்களுக்கு காட்டவே இந்த யாத்திரை நடக்கிறது.
மொழியின் பெயரால், இனத்தின் பெயரால், மதத்தின் பெயரால் மக்களைப் பிரிக்க முடியாது. தமிழக மக்கள் ஒற்றுமையாக இருக்கின்றனர்.
தமிழக மக்களுக்கு நீங்கள் செய்த துரோகத்துக்கு அவர்கள் சரியான பாடம் கற்பிப்பதற்காக நேரம் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அதற்கான நேரம் வந்து கொண்டிருக்கிறது.
ஸ்டாலின் காணும் கனவு நிச்சயமாக நிறைவேறாது. அவரது கனவு கனவாகவே போய்விடும். தமிழக மக்கள் தக்கப் பாடத்தை புகட்டுவார்கள்.
வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக சுட்டிக்காட்டுபவரே கோட்டையில் முதல்வராக அமர முடியும் என்றார்.
இக்கூட்டத்தில் பங்கேற்ற நடிகை குஷ்பு பேசியதாவது: பாஜகவுக்காக இந்த வேல் யாத்திரை நடக்கவில்லை. இந்தியாவில் உள்ள 130 கோடி மக்களுக்காக நடக்கிறது. எந்தத் தடை வந்தாலும் வேல் யாத்திரை தொடரும்.
வரும் தேர்தலில் தமிழகத்தில் பெரிய திருப்புமுனை ஏற்படப் போகிறது. நாம் அனைவரும் அதை பார்க்க போகிறோம். தமிழகத்தில் 2021-ம் தேர்லில் மிகப் பெரிய வெற்றியை பாஜக பெறும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்தக் கூட்டத்தில் பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை, பொதுச் செயலாளர் ராகவன், மாவட்ட தலைவர்கள் இளஞ்செழியன், மணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்துக்குப் பிறகு வேல் யாத்திரை செல்ல முயன்ற எல். முருகன், அண்ணாமலை, நடிகை குஷ்பு உள்ளிட்ட 789 பேர் கைது செய்யப்பட்டனர்.
பாஜகவினரின் வெற்றிவேல் யாத்திரையையொட்டி கடலூர் முழுவதும் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
இந்து
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
சில நாடுகளின் லாபத்திற்காக உலகம் பாதிக்கப்படக்கூடாது
புதுடில்லி : தென் சீனக் கடலில் சீனாவின் ஆக்கிரமிப்பு முயற்சியை மறைமுகமாக கண்டித்து பன்னாட்டு இணைய கருத்தரங்கில் 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது:
இந்திய - பசிபிக் கடல் பிராந்தியக் கொள்கை என்பது எதிர்காலத்திற்கானது; அதை முந்தைய காலகட்டத்திற்கு தள்ளக் கூடாது.
பனிப் போரை விரும்பும் நாடுகள் தான் அத்தகைய பிற்போக்கான எண்ணத்தை விரும்பும். சமீப காலத்தில் இந்திய - பசிபிக் மற்றும் 'ஆசியான்' அமைப்புகள் குறிப்பிடத்தக்க வரவேற்பையும் முன்னேற்றத்தையும் அடைந்து வருகின்றன.
அதிமுக - திமுக.,வுக்கு போட்டியாக உருவெடுத்த பா.ஜ.,: தமிழக உளவுத்துறை உஷார்
சென்னை: வேல் யாத்திரைக்கு கூடும் கூட்டத்தால் தமிழகத்தில் தி.மு.க. - அ.தி.மு.க.வுக்கு போட்டியாக பா.ஜ.வுக்கு மக்களிடையே வரவேற்பு அதிகரித்துள்ளதாக மாநில உளவுத்துறை அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளது.
தமிழகத்தில் வேல் யாத்திரையை பா.ஜ. மாநில தலைவர் முருகன் கடந்த 6ல் திருத்தணியில் துவங்கிய நிலையில் கைது செய்யப்பட்டார். இதை கண்டித்து தமிழகம் முழுதும் பா.ஜ.வினர் சாலை மறியலில் ஈடுபட்டு கைதாகினர்.
வழக்கமாக தமிழகம் முழுதும் பா.ஜ.வினர் செல்வாக்கு பெற்ற மாவட்டங்களை தவிர பிற இடங்களில் 100க்கும் குறைவானவர்களே கைதாவர்.
வேல் யாத்திரை விவகாரத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கைது எண்ணிக்கை 100ஐ தாண்டியது.
திருநெல்வேலி ரயில்வே ஜங்ஷனுக்கு அருகில் உள்ளது சாலைக் குமார சுவாமி கோயில். ரயில்வே ஸ்டேஷனுக்கு அருகில் இரட்டைப் பாலம் உள்ளது. இந்த இரட்டைப் பாலத்துக்குக் கீழே உள்ள பகுதியில் உள்ளது சாலைகுமார சுவாமி கோயில்.
ஆலயம் சிறியதுதான். ஆனால் கீர்த்தி மிக்க திருத்தலம். 🙏🇮🇳1
மிகச்சிறிய கோயில் என்றாலும் திருநெல்வேலி என்றில்லாமல் சுற்றுவட்டார ஊர்களைச் சேர்ந்த பக்தர்களும் இங்கு வந்து முத்துக்குமார சுவாமியை தரிசித்துச் செல்கின்றனர்.
மூலவர் முருகக் கடவுள், கிழக்கு நோக்கியபடி அருள்பாலிக்கிறார். 🙏🇮🇳2
ஆறுமுகங்களும் பனிரெண்டு திருக்கரங்களும் கொண்டு, அழகு முருகனாக, அழகன் முருகனாக, மயிலின் மீது அமர்ந்து ஒய்யாரமாகக் காட்சி தருகிறார்.
திருச்செந்தூர் திருத்தலத்துக்கு இணையான தலம் என்று கொண்டாடுகின்றனர் பக்தர்கள். 🙏🇮🇳3