Intellectual Terrorism: அறிவுலக தீவிரவாதம். அறிவிருக்கும் இடத்தில் எப்படி தீவிரவாதம் இருக்க முடியும் என்று நீங்கள் சிந்தித்தால், மேலே படியுங்கள். வரலாற்றில் எங்கெல்லாம் பாசிச தீவிரவாதம் தலைத்தோங்கி இருக்கிதோ, அங்கெல்லாம், அதற்கு முன்னர் ஒரு அறிவுலக தீவிரவாதம் நடந்திருக்கும்.
இதற்கு வரலாற்றில் பல எடுத்துக்காட்டுகளை சொல்ல முடியும். ஆரிய இன தூய்மைவாதத்தை நியாயப்படுத்தி மக்களை நம்ப வைத்தப்பின் தான், ஹிட்லர் பல்லாயிரக்கணக்கான யூதர்களை கொன்றான்.
காந்தி இறந்து 70 ஆண்டுகளுக்கு பிறகும், அவரது உருவ பொம்மையை சுட்டு இரத்தம் பார்க்கும் வெறி சங்கிகளுக்கு இருக்கிறது என்றால், அதற்கு பின்னால் நூறாண்டு அறிவுத்தீவிரவாதம் இருக்கிறது.
ஏன் பாஜகவின் தொடர்ச்சியான இரண்டு இமாலய தேர்தல் வெற்றிக்கு பின்னால் இருப்பதும் அறிவுத்தீவிரவாதம் தானே?
இணையத்தில் நேருவைக்குறித்தோ, காங்கிரஸ் கட்சி குறித்தோ தேடிப்பாருங்கள். நேருவும் காங்கிரசும் தான் இந்தியாவின் சீரழிவுக்கு காரணம் என்கிற தொடர்ச்சியான பரப்புரையும் பாஜகவின் இமாலய வெற்றிக்கு காரணம். இதை அப்படியே நம்பி ஆதரித்தவர்கள் ஏராளம்.
தமிழ்நாட்டில் திராவிட இயக்கத்தை குறித்தும் இந்த அறிவுலக தீவிரவாதிகள் பல ஆண்டுகளாக அவதூறுகளை சொல்லிக்கொண்டு தான் வந்தார்கள். 2009 க்கு பிறகு அந்த அவதூறுகள் அடுத்தக்கட்டத்திற்கு சென்றது.

ஹிட்லரின் அறிவுலக தீவிரவாதத்திற்கு பெயர் ஆரிய நாசிசம்.
இந்தியாவில் அறிவுலக தீவிரவாதத்திற்கு பெயர் பார்ப்பனியம். ஆரிய நாசிசம் பேசியது இனத்தூய்மைவாதம் என்றால், பார்ப்பனியம் செய்தது மிக நுட்பமான வேலை. எந்த ஒரு விசயத்தையும் அதனால் திரிக்க முடியும்.
சங்க காலத்திலேயே தமிழர்கள் சிறந்த பண்பாடோடு வாழ்ந்தார்கள் என்பதற்கு பல்வேறு இலக்கிய சான்றுகளை தந்தால், சங்க இலக்கியத்தில் மகாபாரத போரை திணிப்பார்கள். அதையே தமிழ்தேசியம் என்ற பெயரில் “மகாபாரதம் தமிழ்நாட்டில் நடந்தது” என்று பேச வைப்பார்கள்.

நிற்க!
முத்தையா முரளிதரன் வாழ்க்கை படத்திலிருந்து விஜய் சேதுபதி விலக வேண்டும் என்று நடந்த விவகாரம் உண்மையில் கவலையளிக்கிறது. முரளிதரனின் வாழ்க்கை உண்மையில் 90 சதவிகித தமிழ்நாட்டு தமிழர்களுக்கு தெரியாது. அவர் தமிழ் பேசும் தமிழர் என்பதும், சிறந்த கிரிக்கெட் வீரர் என்பதை தாண்டி
எதுவும் பலருக்கு தெரியாது. ஆனால், அவரது அரசியல் கருத்துக்களை வைத்து அவரை இனத்துரோகி என பட்டம் கொடுத்து, இப்போது அவரே அந்த படத்தில் இருந்து விஜய் சேதுபதியை விலக சொல்லிவிட்டார். விஜய் சேதுபதியும் நன்றி வணக்கம் என்று முடித்துக்கொண்டார்.
ஒருவரின் அரசியல் கருத்துக்களை வைத்து அவரது படத்தை எதிர்க்க வேண்டுமென்றால், தமிழ்நாட்டில் ரஜினி சூப்பர் ஸ்டாராக இருக்க முடியுமா? அவரது படத்தை தமிழ்நாட்டில் யாராவது ரிலீஸ் ஆவதற்கு முன்பே எதிர்த்திருக்கிறார்களா? இதை என்னிடம் கேட்டவர் ஒரு இலங்கை தமிழர்.
இதை ஏன் நான் அறிவுலக தீவிரவாதத்துடன் இணைக்கிறேன் என்றால், நான் அறிவாளிகள் என்று நினைத்தவர்கள் சிலர் கூட இந்த விசயத்தில் விஜய் சேதுபதிக்கு எதிராக இருந்தார்கள் என்பதால் தான்.

நம் மண்ணின் மிகப்பெரிய போராளி தந்தை பெரியார். இந்திய அளவில் மிகப்பெரிய போராளி அண்ணல் அம்பேத்கர்.
இந்த இருவரையும் ஆசான்களாக ஏற்பவர்கள், எப்படி பாசிசத்தை ஆதரிக்க முடியும்? இந்த இருவர் தங்களின் நெடிய போராட்டத்தில், பாசிசத்தின் பக்கம் நின்றிருக்கிறார்களா? மாற்று கருத்தை வரவேற்றார்களா? அல்லது, மாற்றுக்கருத்தே இருக்கக்கூடாது என்று நினைத்தார்களா?
அம்பேத்கர், பெரியார் பெயரை சொல்லிக்கொண்டு அறிவுலக தீவிரவாதத்தை ஆதரிப்பவர்களை பார்த்தால் தமிழகத்தின் எதிர்காலம் குறித்து உண்மையில் பயமாக இருக்கிறது. கடைசியாக ஒன்று, யாரை வேண்டுமானாலும் படிங்க. பின்பற்றுங்கள். ஆனால், எது நம் மண்ணுக்கான அரசியல் என்பதை சிந்திந்து செயல்படுங்கள்.🖤❤️🙏
யார் சொல்லியிருந்தாலும் எங்கு படித்திருந்தாலும் நானே சொன்னாலும் உனது புத்திக்கும் பொது அறிவுக்கும் பொருந்தாத எதையும் நம்பாதே

- இரண்டாயிரம் ஆண்டுக்கு முன் புத்தர் பிறகு பெரியார் ஈ.வெ.ரா சொன்னது.

நன்றி... வணக்கம்!

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Rajarajan RJ

Rajarajan RJ Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @RajarajanRj

19 Oct
வாரயிறுதியில் வெகுநாள் கழித்து இலங்கை நண்பர் ஒருவர் அழைத்திருந்தார். சிறிது நேரம் பேசியபின், முரளிதரன் - விஜய் சேதுபதி குறித்து பேச்சு சென்றது. எனக்கு முரளிதரன் மிகவும் பிடிக்கும். விஜய் சேதுபதி இந்த படத்திலிருந்து விலகக்கூடாது என்று அவரது விருப்பத்தை தெரிவித்தார்.
நான் அது சந்தேகம் தான் என்றேன். அதன் பிறகு, பல்வேறு அரசியல் விசயங்களை விவாதித்தோம். பேச்சு வாக்கில், இங்கே முரண் என்னத்தெரியுமா? ஈழம் என்பது இலங்கையின் அரசியல். ஆனால், இங்கிருக்கும் யாழ்ப்பாணத்து அரசியல்வாதிகள் கூட இப்போது அதைக்குறித்து பேசுவதில்லை.
அனைவரும் இங்கிருக்கும் முரண்பாடுகளை களைவதிலும், கொள்கை மாறுதல்கள் குறித்தும் கவனம் செலுத்துகிறார்கள். வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் இலங்கை எப்படி இயங்குகிறது என்பதைக்கூட புரிந்துக்கொள்வதில்லை. அவர்கள் தாங்கள் பாட்டுக்கு செய்வது, இங்கிருக்கும் மக்களைத்தான் பாதிக்கிறது என்றார்.
Read 7 tweets
18 Oct
திராவிடம் பேசும் சமூகநீதி பேசும் யாவரும் அறிந்துக்கொள்ள வேண்டிய ஒரு வாழ்க்கை பகுத்தறிவு பண்பாளர் சின்னக்குத்தூசி அவர்களுடையது. அவரது வாழ்க்கை வரலாறை கவிஞர் தெய்வசிலை அழகாக 100 சிறு கட்டுரைகளாக தொகுத்து எழுதி இருக்கிறார். அதை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
வாசிக்கும் போது, இப்படி ஒரு அதிசய மனிதர் நம்முடன் வாழ்ந்தாரா என்னும் வியப்பே அதிகம் ஏற்பட்டது. சின்னக்குத்தூசி அவர்களின் வாழ்வில் இருந்து நாம் கற்க நிறைய இருக்கிறது. ஒரு துறவி போல அவர் வாழ்ந்தாலும், அவர் தொட்டுச்சென்ற பணிகள், மனிதர்கள் எண்ணற்றவை.
கலைஞரின் சின்னக்குத்தூசி குறித்த இந்த ஒரு வரி சொல்லும் ஆழமான வரலாறை நம்மால் உணர்ந்துக்கொள்ள முடியும்.

"காற்றில் மிதக்கும் தூசு ஒன்று
என் மீது பட்டாலே
ஆற்றொண்ணா துயர் கொண்டு
அதனை விரட்டுவதில் அன்னையாய் வாய்ந்தவர்!"
Read 8 tweets
13 Sep
நான் ஏன் திமுகவை எந்த நிபந்தனையில்லாமல் ஆதரிக்கிறேன்?

நேற்று ஒருநாளை எடுத்துக்கொள்வோம். உலக வரலாற்றில் இல்லாத வகையில், ஒரு திணிக்கப்பட்ட அநீதியான தேர்வினால், மூன்று பிஞ்சுகள் கொலை செய்யப்பட்ட நாள். தமிழ்நாட்டு சமூகநீதி கல்வியால் பயன்பெற்ற எந்த ஒரு தமிழனும் பதறியதை பார்த்தோம்.
இதை மனநிலையை அப்படியே பிரதிபலித்தவர்கள் திமுகவின் தலைவர்களாக இருந்தார்கள். அவர்களின் குரல்களில் தெரிந்த பதற்றம், அறச்சீற்றம், ஆற்றாமையில் உண்மை இருந்தது. சமூக அடுக்கில் எங்கே இருந்தாலும், அனைத்து மக்களுக்கான பிரச்சனைகளை குறித்து சிந்திக்கும் கட்சியாக திமுக இருக்கிறது.
அண்ணா-பெரியார் விதைத்த சிந்தனை மரபு அப்படியே இருக்கிறது. அதனால் தான் கலைஞர் சொன்ன அதே “எளியமக்களுக்கு நடக்கும் அநீதியை”, இன்றைய திமுக தலைவர் மு.க.ஸ்டாலினில் இருந்து தயாநிதி மாறன், பிடிஆர் பழனிவேல் ராஜன் என அனைவரும் வெளிப்படுத்தினார்கள்.
Read 8 tweets
4 Sep
100 ஆண்டுகளுக்கு அண்ணல் அம்பேத்கருக்கு நடந்தது தான் இயக்குனர் வெற்றிமாறனுக்கு நடந்ததும். காலங்கள் மாறி இருக்கிறது. ஆதிக்கம் அப்படியே இருக்கிறது.

அமெரிக்கா, லண்டன் வரை சென்று இந்தியாவிலேயே மிகப்பெரிய படிப்பை படித்துவிட்டு பரோடா சமஸ்தானத்தின் பாரிஸ்டராக வேலைப்பார்க்கும்
அண்ணல் அம்பேத்கரை, படிக்காத, ஏழையான ஒரு சாதாரன குதிரை ஓட்டி வண்டியில் ஏற்றமாட்டார். சாதிய மனநிலையை அவ்வளவு எளிதாக விளக்கி இருப்பார் அண்ணல் அம்பேத்கர். ஒரு படிக்காத, ஏழை சாதி இந்து, ஒரு மெத்த படித்த பாரிஸ்டரை சாதியால் தனக்கு கீழானவர் என்று தான் எண்ணுகிறார் என்று.
இந்த சாதிய உளவியலை புரியாதவர்கள் தான் ஏழை பிராமணனுக்கு நீதிக்கேட்டு போராடிக்கொண்டிருப்பார்கள். சாதியை பொருளாதாராம் கொண்டு அளவிட முடியாது. நிற்க!

அண்ணல் அம்பேத்கரை எப்படி ஒரு குதிரை ஓட்டி வண்டியில் ஏற்றமாட்டேன் என்று சொன்னாரோ, அதேப்போல தேசிய விருது பெற்ற,
Read 6 tweets
8 Jul
இன்று அரக்கர் டிவியில் இடம் பெற்ற முன்னாள் சென்னை மேயர் அண்ணன். மா.சுப்பிரமணியன் MLA அவர்களின் பேட்டி முக்கியமானது. ஒவ்வொரு சென்னைவாசியும் கட்டாயம் பார்க்க வேண்டியது.

அந்த பேட்டியில் கலைஞருடனான தனது அனுபவங்களை பகிர்ந்தார். அதில் ஒன்று முக்கியமான அரசியல் பாடம் என்றார்.
அவர் மேயராக இருந்த போது, கலைஞர் தமிழக முதல்வர். கலைஞர் அதிகாலையில் எழுந்து அன்றைய செய்தித்தாள்களை வாசித்து, இவருக்கு அழைத்து இந்த தெருவில் தெருவிளக்கு எறியவில்லையாம் போய் பார் என்று அளவுக்கு சொல்வாராம். அப்படி ஒரு நாள், அண்ணன் மா.சு அவர்களுக்கு கலைஞர் அழைக்கிறார்.
மா.சு அவர்கள் காலை ஐந்து மணிக்கு எழக்கூடியவர். பிறகு உடற்பயிற்சி செய்யக்கூடியவர்.

முதல்வர் கலைஞர்: என்ன மேயர் என்ன செஞ்சிட்டு இருக்கீங்க?
மா.சு: உடற்பயிற்சி செய்றேன் அய்யா!
மு.க: செய்தித்தாள் வாசிச்சீங்களா?
மா.சு: வாசிச்சிட்டேன் அய்யா.
மு.க: என்ன பாத்தீங்க?
Read 8 tweets
23 Jun
என்னுடன் பணிபுரியும் பிலிப்பினோ நண்பருடன் ஒரு அலுவலகப்பணிக்கு சென்று இருந்தேன். மதிய உணவிற்கு இருவரும் அங்கிருக்கும் உணவகத்தில் சாப்பிட சென்றோம். அவர் மீனும் சோறும் கொண்ட ஒரு வெஜ் சாப்பாட்டை வாங்க (இங்க எல்லாம் மீன் வெஜ் தான்).. நான் "Black Pepper Chicken with Spaghetti" என்ற
வெஸ்டர்ன் உணவை வாங்கினேன். நான் சாப்பிட ஆரம்பிக்கும் முன் என் தட்டை பார்த்து, பரவாயில்லையே நீ எல்லா உணவையும் சாப்பிடுகிறாயே என்றார்.

ஆமாம், நான் எல்லா உணவையும் சாப்பிடுவேன் என்றேன். அதன் பிறகு எங்களுக்குள் நடந்த விவாதம் இப்படிச்சென்றது.
அவர்: ஏன் நம் அலுவலகத்தில் சிலர் வெஜ் மட்டும் சாப்பிடுகிறார்கள். நீ எல்லாமே சாப்பிடுகிறாய். நீ இந்து இல்லையா?

நான்: நான் இந்து தான். இந்துக்களிலேயே பல பிரிவுகள் இருக்கிறது. வெஜ் மட்டும் சாப்பிடுபவர்கள். நான் வெஜ்ஜில் மாட்டுக்கறி சாப்பிடாத இந்துக்கள், மாட்டுக்கறி சாப்பிடும்
Read 25 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!