இன்று காலை, ஜோ பைடன்-கமலா ஹாரிஸ் வெற்றிப்பேச்சை கேட்ட மாத்திரத்தில் தோன்றிய ஒரு உணர்வை பதிவு செய்ய வேண்டும். இந்த வெற்றியை அமெரிக்க கருப்பின மக்களின், சிறுபான்மை இன மக்களின் வெற்றியாக கொள்ள முடியுமாவென்றால், முடியாது என்பதே பதிலாக இருக்கிறது. (1/3)
இன்னமும்,பாதிக்கு பாதி அமெரிக்கர்கள் டிரம்பிற்கு வாக்களித்து இருப்பதே சான்று.இது ஒரு பாசிச கோமாளியின் ஆட்சி அகற்றம் என்றளவில் மகிழ்ச்சி கொள்ளலாமே தவிர,கறுப்பின மக்கள்,சிறுபான்மை மக்கள் மீதான வெறுப்பு இன்னமும் அப்படியே இருப்பதையும் உணரலாம்.இந்தப் போர்,இருந்துக்கொண்டே தானிருக்கும்.
ஜனநாயக சதுரங்க வெற்றிகள் மாறி மாறி வரும். ஒருமுறை வெள்ளைக்கு, ஒருமுறை கருப்புக்கு என.
இங்கு தேவை, மனநிலை மாற்றமே. ஒரு கூட்டுசமூகமாக சிந்திக்க தொடங்குவதும், சுதந்திரம்-சமத்துவம்-சகோதரத்துவத்தை அடிப்படையாக கொள்ளும் ஜனநாயக மனப்பான்மையே நீண்டகால பலனைத்தரும். அதைவிடுத்து,
US vs Them என்கிற பிரிவினைவாத அடையாள அரசியல்,மக்களின் மனநிலையை மாற்றாது.மாறாக,ஒரு வெறுப்புணர்வை அணையாமல் கட்டமைத்தே வைத்திருக்கும்.யாரது, வெறுப்புக்கு பலம் அதிகமோ,அவர்கள் வெல்வார்கள்.இப்படியே இந்த ஆட்டம் தொடர்ந்துக்கொண்டு இருக்கும்.
இதை அப்படியே நாம் இந்திய அரசியலுக்கும் பொருத்திப்பார்க்கலாம்!
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
Intellectual Terrorism: அறிவுலக தீவிரவாதம். அறிவிருக்கும் இடத்தில் எப்படி தீவிரவாதம் இருக்க முடியும் என்று நீங்கள் சிந்தித்தால், மேலே படியுங்கள். வரலாற்றில் எங்கெல்லாம் பாசிச தீவிரவாதம் தலைத்தோங்கி இருக்கிதோ, அங்கெல்லாம், அதற்கு முன்னர் ஒரு அறிவுலக தீவிரவாதம் நடந்திருக்கும்.
இதற்கு வரலாற்றில் பல எடுத்துக்காட்டுகளை சொல்ல முடியும். ஆரிய இன தூய்மைவாதத்தை நியாயப்படுத்தி மக்களை நம்ப வைத்தப்பின் தான், ஹிட்லர் பல்லாயிரக்கணக்கான யூதர்களை கொன்றான்.
காந்தி இறந்து 70 ஆண்டுகளுக்கு பிறகும், அவரது உருவ பொம்மையை சுட்டு இரத்தம் பார்க்கும் வெறி சங்கிகளுக்கு இருக்கிறது என்றால், அதற்கு பின்னால் நூறாண்டு அறிவுத்தீவிரவாதம் இருக்கிறது.
ஏன் பாஜகவின் தொடர்ச்சியான இரண்டு இமாலய தேர்தல் வெற்றிக்கு பின்னால் இருப்பதும் அறிவுத்தீவிரவாதம் தானே?
வாரயிறுதியில் வெகுநாள் கழித்து இலங்கை நண்பர் ஒருவர் அழைத்திருந்தார். சிறிது நேரம் பேசியபின், முரளிதரன் - விஜய் சேதுபதி குறித்து பேச்சு சென்றது. எனக்கு முரளிதரன் மிகவும் பிடிக்கும். விஜய் சேதுபதி இந்த படத்திலிருந்து விலகக்கூடாது என்று அவரது விருப்பத்தை தெரிவித்தார்.
நான் அது சந்தேகம் தான் என்றேன். அதன் பிறகு, பல்வேறு அரசியல் விசயங்களை விவாதித்தோம். பேச்சு வாக்கில், இங்கே முரண் என்னத்தெரியுமா? ஈழம் என்பது இலங்கையின் அரசியல். ஆனால், இங்கிருக்கும் யாழ்ப்பாணத்து அரசியல்வாதிகள் கூட இப்போது அதைக்குறித்து பேசுவதில்லை.
அனைவரும் இங்கிருக்கும் முரண்பாடுகளை களைவதிலும், கொள்கை மாறுதல்கள் குறித்தும் கவனம் செலுத்துகிறார்கள். வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் இலங்கை எப்படி இயங்குகிறது என்பதைக்கூட புரிந்துக்கொள்வதில்லை. அவர்கள் தாங்கள் பாட்டுக்கு செய்வது, இங்கிருக்கும் மக்களைத்தான் பாதிக்கிறது என்றார்.
திராவிடம் பேசும் சமூகநீதி பேசும் யாவரும் அறிந்துக்கொள்ள வேண்டிய ஒரு வாழ்க்கை பகுத்தறிவு பண்பாளர் சின்னக்குத்தூசி அவர்களுடையது. அவரது வாழ்க்கை வரலாறை கவிஞர் தெய்வசிலை அழகாக 100 சிறு கட்டுரைகளாக தொகுத்து எழுதி இருக்கிறார். அதை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
வாசிக்கும் போது, இப்படி ஒரு அதிசய மனிதர் நம்முடன் வாழ்ந்தாரா என்னும் வியப்பே அதிகம் ஏற்பட்டது. சின்னக்குத்தூசி அவர்களின் வாழ்வில் இருந்து நாம் கற்க நிறைய இருக்கிறது. ஒரு துறவி போல அவர் வாழ்ந்தாலும், அவர் தொட்டுச்சென்ற பணிகள், மனிதர்கள் எண்ணற்றவை.
கலைஞரின் சின்னக்குத்தூசி குறித்த இந்த ஒரு வரி சொல்லும் ஆழமான வரலாறை நம்மால் உணர்ந்துக்கொள்ள முடியும்.
"காற்றில் மிதக்கும் தூசு ஒன்று
என் மீது பட்டாலே
ஆற்றொண்ணா துயர் கொண்டு
அதனை விரட்டுவதில் அன்னையாய் வாய்ந்தவர்!"
நான் ஏன் திமுகவை எந்த நிபந்தனையில்லாமல் ஆதரிக்கிறேன்?
நேற்று ஒருநாளை எடுத்துக்கொள்வோம். உலக வரலாற்றில் இல்லாத வகையில், ஒரு திணிக்கப்பட்ட அநீதியான தேர்வினால், மூன்று பிஞ்சுகள் கொலை செய்யப்பட்ட நாள். தமிழ்நாட்டு சமூகநீதி கல்வியால் பயன்பெற்ற எந்த ஒரு தமிழனும் பதறியதை பார்த்தோம்.
இதை மனநிலையை அப்படியே பிரதிபலித்தவர்கள் திமுகவின் தலைவர்களாக இருந்தார்கள். அவர்களின் குரல்களில் தெரிந்த பதற்றம், அறச்சீற்றம், ஆற்றாமையில் உண்மை இருந்தது. சமூக அடுக்கில் எங்கே இருந்தாலும், அனைத்து மக்களுக்கான பிரச்சனைகளை குறித்து சிந்திக்கும் கட்சியாக திமுக இருக்கிறது.
அண்ணா-பெரியார் விதைத்த சிந்தனை மரபு அப்படியே இருக்கிறது. அதனால் தான் கலைஞர் சொன்ன அதே “எளியமக்களுக்கு நடக்கும் அநீதியை”, இன்றைய திமுக தலைவர் மு.க.ஸ்டாலினில் இருந்து தயாநிதி மாறன், பிடிஆர் பழனிவேல் ராஜன் என அனைவரும் வெளிப்படுத்தினார்கள்.
100 ஆண்டுகளுக்கு அண்ணல் அம்பேத்கருக்கு நடந்தது தான் இயக்குனர் வெற்றிமாறனுக்கு நடந்ததும். காலங்கள் மாறி இருக்கிறது. ஆதிக்கம் அப்படியே இருக்கிறது.
அமெரிக்கா, லண்டன் வரை சென்று இந்தியாவிலேயே மிகப்பெரிய படிப்பை படித்துவிட்டு பரோடா சமஸ்தானத்தின் பாரிஸ்டராக வேலைப்பார்க்கும்
அண்ணல் அம்பேத்கரை, படிக்காத, ஏழையான ஒரு சாதாரன குதிரை ஓட்டி வண்டியில் ஏற்றமாட்டார். சாதிய மனநிலையை அவ்வளவு எளிதாக விளக்கி இருப்பார் அண்ணல் அம்பேத்கர். ஒரு படிக்காத, ஏழை சாதி இந்து, ஒரு மெத்த படித்த பாரிஸ்டரை சாதியால் தனக்கு கீழானவர் என்று தான் எண்ணுகிறார் என்று.
இந்த சாதிய உளவியலை புரியாதவர்கள் தான் ஏழை பிராமணனுக்கு நீதிக்கேட்டு போராடிக்கொண்டிருப்பார்கள். சாதியை பொருளாதாராம் கொண்டு அளவிட முடியாது. நிற்க!
அண்ணல் அம்பேத்கரை எப்படி ஒரு குதிரை ஓட்டி வண்டியில் ஏற்றமாட்டேன் என்று சொன்னாரோ, அதேப்போல தேசிய விருது பெற்ற,