தண்ணீர் தீண்டாமை:
சென்னையில், 80களின் ஆரம்பத்தில் சரியான தண்ணீர் பஞ்சம். திருவல்லிக்கேணியில், வெங்கட்ரங்கம் தெருக்கு கிழக்கில் சேரி, மாட்டாங் குப்பம் & அயோத்தி குப்பம். வெங்கட்ரங்கம் தெருக்கு மேற்கில் TP கோயில் தெரு, பார்த்தசாரதி குளம் & கோவில், பெரிய தெரு – பார்ப்பனர்கள் ஏரியா
பெரிய தெருக்கு மேற்கில் பாய்ங்க ஏரியா.
திகேணியில் pumping station ஐஸ்அவுசில் உள்ளது. அங்கிருந்து தண்ணீர் பைப் லைன், TP கோவில், ஈஸ்வரதாஸ் லாலா தெரு வழியாக கோஷாஸ்பத்திரி (கஸ்தூரிபாய் காந்தி மருத்துவமனை)க்கு போகும். இது மருத்துவமனை தண்ணிர் லைன் என்பதால் எப்போது தண்ணீர் வரும்.
தண்ணீ பஞ்சம் காலத்தில் இந்த இரண்டு தெருக்கள் (TP கோவில், ஈஸ்வரதாஸ் லாலா தெரு) தவிர்த்து வேறு எங்கும் குடிநீர் வராது. அந்த காலத்தில் RO & கேன் நீர் கிடையாது. இந்த தெருவில் இருப்பவர்கள் ஜாதி/ வர்ணம் பார்த்து தான் தங்கள் வீட்டின் அடி பம்பில் தண்ணீர் எடுக்க அனுமதிப்பார்கள்.
ஈஸ்வரதாஸ் லாலா தெருவில் ராமர் பஜனை மடத்தில் பார்ப்பனர்கள் பகுதியில் வசிக்கும் சூத்திரர்களுக்கு 2 குடம் தண்ணீர் எடுக்க அனுமதிப்பார்கள். சூத்திரன்கள் தண்ணிர் அடித்தவுடன், ஒரு குடம் நீர் பம்பின் மீது ஊற்றி கழுவுவார்கள்.
பக்கத்தில் பார்ப்பனர் யாராவது இருந்தால் அவரும் ஒரு குடம் தண்ணீரை தலையில் ஊற்றிக்கொள்வார். குடி நீர் பஞ்சம் காலத்தில் தீட்டுக்காக நீரை வீணாக்குவார்கள்.
அந்த காலத்தில் போர் போடனும் ன்னா குறைந்தபட்சம் 50 ஆயிரம் செலவாகும். இப்போது மாதிரி PVC பைப் கிடையாது. இரும்பு பைப் இறக்கனும் & மோட்டாரும் விலை அதிகம். தண்ணீக்கு தெருக்கு வந்தே ஆகவேண்டும்.
சிங்காரச்சாரியார் தெரு & தேரடித்தெரு வில் வெங்கடேஸ்வரா ஓட்டலுக்கு அருகே உள்ள ஜெட் பம்பில் தண்ணீர் வரும். ஜெட் பம்ப் ன்னு சொன்னாலும் கையால் நீர் இறைக்கும் பம்புகள். இவற்றில் எடுக்கப்படும் நீர் பாத்திரம், துவைக்க, குளிக்க பயன்படும். இங்கேயும் சூத்திரன் அடிச்சபின் பம்பை கழுவுவார்கள்
எங்கள் வீட்டில் 20 அடி கிணறு + 50 அடிக்கு போர் இருந்தது. அந்த காலத்தில் RO கிடையாது. குடி நீருக்காக ஈஸ்வரதாஸ் லாலா தெருவில் பஜனை மடத்தில் தண்ணீர் எடுப்போம்.
Drilling technology, PVC pipes, Hose, Efficient Motors & Pumps, RO தண்ணீர் தீண்டாமையையில் இருந்து மக்களை காப்பாற்றியது

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with வாழ்வழித்தான்

வாழ்வழித்தான் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @moodanmani20

4 Aug
Pre-Owned Car
புதுக்கார் வாங்கினால் அதிக செலவாகும், எனவே இருக்கும் பணத்திற்கேட்ப Pre-Owned Car/ Used Car வாங்க நினைப்பவர்களுக்கு சில டிப்ஸ்.
பெட்ரோல் கார்கள் எளிமையானவை, பராமரிப்பு செலவு டீசல் கார்களை விட குறைவாக இருக்கும்.
Used car யில் மாருதி சுசூகி, ஹோண்டா, டோயாடா கார்கள் வாங்கவும். Ford, ஸ்கோடா, VW கார்கள் மலிவு விலையில் கிடைத்தாலும் பராமரிப்பது சிரமம். Used காரை தெரிந்தவர்களிடம் வாங்க வேண்டும். பொதுவாக மருத்துவர்கள், அரசு உயர் அலுவலர்கள் கார்கள் நல்ல நிலையில் இருக்கும்.
Used car dealers, இணையம், Authorised car dealers (True Value) etc., வாங்கும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவர்களிடம் எப்படி கார் வாங்குவது என்பதை பார்ப்போம்.
Read 16 tweets
30 Jun
பழைய தஞ்சை ஜில்லா வில் பெரு நிலக்கிழாராக இருந்தவர்கள் கருப்பையா மூப்பனார்: திருவையாறு, பாபநாசம், கும்பகோணம் பகுதியில் நிலங்கள் இருந்தன, துளசிய்யா வாண்டையார்: தஞ்சாவூர், பூண்டி பகுதியில் பகுதியில் நிலங்கள் இருந்தன
வலிவலம் தேசிகர்: நாகப்பட்டினம் கீவளூர் பகுதியில் பகுதியில் நிலங்கள் இருந்தன, குன்னியூர் சாம்பசிவ ஐயர்: மன்னார்குடி பகுதியில் பகுதியில் நிலங்கள் இருந்தன, உக்கடை தேவர், வடபாதி மங்கலத்தார் etc.,
இவர்களின் பண்ணையில் விவசாய கூலிகளுக்கு பல விதமான தண்டனைகள் அளிக்கப்படும் அதில் முதன்மையானது.
சாணிப்பால்: மாட்டுக்கு மருந்து புகட்டும் மூங்கில் குழலில், சாணத்தைக் கரைத்து குடிக்கச் செய்வார்கள்.
சவுக்கடி: சாட்டையின் பிரிகளுக்கு நடுவில் கூழாங்கல்லை வைத்து ரத்தம் சொட்ட அடிப்பார்கள்
Read 12 tweets
1 Jun
கச்சா எண்ணெய் என்றவுடன் எல்லோரும் அமெரிக்கா, ஈராக், ஈரான், சவுதின்னு நினைக்கிற மாதிரி நமது மூளை டியூன் ஆகிவிட்டது. இந்தியாவில் எப்படி, எப்போது யாரால் கச்சா எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது. ONGC, IOCL, BHEL, எப்படி உருவாக்கப்பட்டது என பார்ப்போம்.
1860 களில் அசாமில் உள்ள திப்ரூகாட் யில் இருந்து மார்கரீட்டா நிலக்கரி சுரங்கம் இடையே ரயில்பாதை அமைக்கும் போது நிலத்தின் மேற்பகுதியில் கச்சா எண்ணெய் ஊறுவதை அங்கு பணியில் இருந்த பொறியாளர்கள் பார்த்தனர்.
1867 யில் முதல் ஆயில் கிணறு மாக்கமில் தோண்டப்பட்டது. 1859 யில் LP டிரேக் முதல் ஆயில் கிணற்றை அமெரிக்காவில் நிறுவினார். சரியாக 7 ஆண்டுகளுக்கு பின் அசாமில் முதல் ஆயில் கிணறு தோண்டப்பட்டது குறிப்பிடதக்கது.
Read 22 tweets
16 May
GST மாநிலரசின் வரிவருவாயை பாதித்துவிட்டது. GST யில் தமிழகத்தின் பங்கை மோடியரசு கொடுக்கவில்லை.
GST யால் மாநிலரசு வரிச்சலுகை கொடுத்து புதிய முதலீடு, தொழிற்சாலைகளை ஈர்க்க முடியாது
மின்கட்டணம் வசூலும் மத்தியரசின் கைகளுக்கு போகிறது.
சரக்கு வாகனங்களுக்கு மாநில அரசு வாங்கிக் கொண்டிருந்த சாலை வரியை இப்போது மத்தியரசு வசூல் செய்கிறது.
தனியார்(white board) வாகனங்களுக்கான சாலை வரியை one India one road tax என மத்தியரசு ஆட்டைய போடப்போகிறது.
நிலம்/கட்டிட பதிவு மூலம் மாநிலரசின் வருவாயை திருட புதியதிட்டம் போடுகிறார்கள்
நிலப்பதிவு மத்தியசிடம் சென்றால் ஊழல்/ லஞ்சம் இருக்காது என சொன்னால் மூளையற்ற மத்தியவர்கம் மத்தியரசிற்கு ஆதரவாகும்.

மின்கட்டணம், சாலைவரி, RTO, வசூல் 6 மாதத்திற்குள் மதியரசிற்கு போகும். 1-2 ஆண்டுகளில் பத்திரப்பதிவுக்கான கட்டணத்தை மோடியரசு வசூல் செய்யும்
Read 4 tweets
15 May
புதிய மின் மசோதா பகுதி-1

புதிய மின் மசோதா பகுதி-2
புதிய மின் மசோதா மூலம் தமிழ்நாட்டுக்கு ஏற்படும் பாதிப்புகள்.
உபி, தமிழ்நாட்டை விட 3 மடங்கு பெரிய மாநிலம். தமிழ்நாட்டின் installed power generation capacity 30,000 MW உபியை யின் 25,000MW விட அதிகம்.
தமிழ்நாட்டின் electricity consumption 83 936.070 GWh. உபியின் electricity consumption 81,06 8.210 GWh (2017).
தமிழ்நாட்டின் per capita electricity consumption 1350 யூனிட். உபியின் per capita electricity consumption 317 யூனிட். தமிழ்நாட்டை விட உபி 3 மடங்கு பெரிய மாநிலம், 4 மடங்கு அதிக மத்திய நிதியை பெற்றாலும் electricity consumption யில் தமிழகத்தை 4 மடங்கு பின்தங்கிய நிலையில் உபி உள்ளது
Read 8 tweets
7 May
மோடியின் புதிய ஆப்பு மின்மசோதா 2020
பாஜக அரசை பொருத்தவரை இந்தியாவில் மாநிலங்கள் இல்லை. ஒரே நாடு அதில் 900 மாவட்டங்கள் உள்ளன. மாநில அரசின் உரிமைகள் கல்வி, வரிவசூல், நீர் வளம் பறிபோன நிலையில் இப்போது மின்சாரத்தின் மீதும் மோடி அரசு ஆப்பை சொறுகியுள்ளது.
Electricity Contract Enforcement Authority (ECEA) உருவாக்கப்படும். இந்த அமைப்பு மூலம் மின் உற்பத்தி, பகிர்மானம் & மின்கட்டணத்தை மத்திய அரசு வசூல் செய்யும்
இந்தியா முழுமைக்கும் ஒரே மின் கட்டணம். குஜராத்தில் 1 யூனிட் 7Rs. Slab கிடையாது. தமிழகமும் இதே கட்டணத்தை செலுத்த வேண்டி வரும்
தமிழ்நாட்டில் முதல் 100 யூனிட்டுகள் இலவசம். இந்த இலவசங்கள் இனி கிடையாது. விவசாயத்திற்கு இலவச மின்சாரம் கிடையாது.
Read 9 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!