படித்ததில் பிடித்தது

அப்பா என்றொரு ஆசான்

அப்பாவுக்கு தெரியாது, நான் வண்டி ஓட்டி பழகிவிட்டேன் என்று..
வா, driving கற்றுத்தரேன் என்று ஒரு நாள் கூப்பிட்டார்.
ஓட்டுவேன் அப்பா என்றேன்..
ஒரு மாதிரியாக பார்த்துவிட்டு,
எங்கே வண்டியை எடு என்றார்..

குஷியாக முன் கதவை திறந்து நான்
ஏறப்போக, steering பிடிக்கிறது தான் ஓட்டறதுனு நெனச்சியா?
மொதல்ல tyre check pannu...

செரிங்கப்பா

ம்ம், டீசல் அளவு பார்த்தியா, temperature எவ்ளோ இருக்கு, என்ஜின் ஆயில் அளவு என்ன, லைட் check பண்ணு, ஹார்ன் அடிச்சு பாரு, உடனே போகாதே.. இப்போவே பிரேக் பாரு..
(உஷ் அப்பா ) செரிங்க அப்பா

Clutch அ மெல்ல விடு, stearing ஏன் இப்படி ஆட்டுறே, சைடு mirror ஒழுங்கா தெரியுதா..

கண்ணாடி அட்ஜஸ்ட் பண்றது, முதுகு சொரியறமாதிரி, அடுத்தவன் பண்ணினா செரியா வராது.. நீயே பார்க்கணும்,

gradual ஆ பிரேக் poodu, indicator என்ன உங்கப்பனா போடுவான்,
ஓவர்
டேக் பண்றவனுக்கு வழி விடு
U turn எடுக்க வெயிட் பண்றவனுக்கு விட்டு கொடு
அவன் எப்படி கிராஸ் பண்ணுவான், slow பண்ணு,

High beam ல ஏன் போற? எதிர்ல வரவன் குழில விழாவா? டிம் பண்ணு

Rpm ரைஸ் பண்ணாத,
Turn எடுக்க எங்க இருந்து திரும்பணும்
நடு ரோட்டுல reverse எடுப்பியா,
திடீர்னு
பிரேக் போட்டா, பின்னால வரவனுக்கு எப்படி தெரியும்..
ஏன், horn வேலை செய்யலையா

ஸ்டெப்னிய check பண்ணியா
டூல் kit எங்க, Tyre மாத்த பழகு
Reverse தெரியலைனா வண்டி ஏன் எடுக்குறே,

Turning ல overtake பண்ணுவியா
பாலத்துல overtake பண்ண எவன் சொன்னான்?
Dotted line, continious line,
டபுள் line, yellow line, என்ன சொல்லு
மைல் கல் கலர் பார்த்து சொல்லு
போகிற திசை சொல்லு

பார்க்கிங் போர்டு பார்த்தியா
Speed பிரேக்கர் சைன் கவனிக்கலை?
ஸ்கூல் zone, கவனமா போ
Gear ல போ, break வேண்டாம்
தண்ணியில இப்படி ஓட்டு
மலையில இப்படி ஓட்டு

Steering புடிச்சவன் எல்லாம்
டிரைவர் ஆகமுடியாது, common sense வேணும்

வண்டிய எப்போவும் ஆம்புலன்ஸ் கண்டிஷன் ல நிறுத்தணும்..
reverse ல park பண்ணு..
தொடச்சு வைக்க வக்கிலைனா,
வண்டிய ஏன் தொடுறே?

Rc book எங்க? லைசென்ஸ் ரெனீவல் eppo? இன்சூரன்ஸ் பேப்பர் பார்த்தியா?

இன்னும் எத்தனை வசவு?
ஐயோ சாமி.. ஆளை விடுங்க அப்பா 🙏
உங்களோட வண்டி ஓட்ட, என்னால ஆகாது.. தொடர்ந்து நடந்த பாடங்களால் நொந்து போனேன். 😔

இப்போதெல்லாம், தானியாதான் வண்டில போகிறேன்..
ஆனால்.. ஒவ்வொரு சூழலிலும்,

அப்பா இடதுபுறம் அமர்ந்து கொண்டு பேசுவது
கேட்டு கொண்டே தான் இருக்கிறது.
அவருடைய போதனைகள்
என்னுடைய அருட்காப்பாய் 🙏👍

மாற்றி யோசி

போதிக்க பெரியோர் இருப்பது வரம் 😍
பேசுங்க அப்பா, கேட்கிறேன் 😃
இந்த அப்பா பற்றிய பதிவு பற்றி ஒரு சுவாரஸ்யமான தகவல்.

மூன்று ஆண்டுகளுக்கு முன், இந்த பதிவை என்னுடைய blogல் என் சொந்த அனுபவம் என்று எழுதியிருந்தேன்.

இந்த பதிவு எங்கெங்கோ உலவி இன்று #படித்ததில்_பிடித்தது என்ற தலைப்பில் அங்கங்கே smilies போடப்பட்டு எனக்கே whatsapp மூலமாக வந்தது.
இதனை இங்குள்ளோரும் படித்து விட்டு தங்கள் தந்தையுடனான தங்கள் அனுபவத்தை நினைந்து சிலாகிக்கும் போது ஒரு பாடம் கற்று கொண்டேன்.

ஒவ்வொருவரும் குருவை ஆசானை அவர் நம்முடனேயே இருப்பது தெரியாமலேயே வெளியே தேடுகிறோம்.

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகிறோம்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with srinivasan1904

srinivasan1904 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @srinivasan19041

27 Nov
நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று செய்யும்

போன வருடம் ஒரு sentimentally emotional அனுபவம் எனக்கு ஏற்பட்டது.

நான் இப்போல்லாம் பெரும்பாலும் ஆஃபீஸ்லேந்து வீட்டுக்கு போற போது (vice versa also)

#ஹரே_க்ருஷ்ண_ஹரே_க்ருஷ்ண
#க்ருஷ்ண_க்ருஷ்ண_ஹரே_ஹரே
#ஹரே_ராம_ஹரே_ராம
#ராம_ராம_ஹரே_ஹரே
என்று சொல்லி கொண்டே நடந்து செல்வது வழக்கம் (இது என் பெரிய அண்ணன் தீக்ஷை பெற்றவர் எனக்கு அறிவுறுத்தியது)

கொஞ்ச நாள் முன்னாடி அண்ணா ராமனின் அட்வைஸ் படி அந்த ஹரே க்ருஷ்ண மந்திரத்தை சொல்ல ஆரம்பிக்கும் முன் இந்த மந்திரத்தை இன்னாருக்கு dedicate பண்றேன்னு நினைச்சுண்டே சொல்லு.
அப்படி சொல்லும்போது நீ யாருக்கு டெடிகேட் பண்றயோ அவாளுக்கு அந்த புண்ணியம் போய் சேரும்.

இறந்தவர்களை நினைத்து சொன்னாலும் அந்த புண்ணியம் அந்த ஆத்மாவை போய் சேரும் என்று சொன்னான்.

அந்த மாதிரியே ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவரை நினைத்து அந்த ஹரே க்ருஷ்ண மந்திரத்தை சொல்லி அவர்களுக்கு
Read 8 tweets
27 Nov
I Won’t Go To The Temple Again...

Just modified the Naradha Bhakthi story to the contemporary scene

A daughter went to her father and said... “I won't be going to temple anymore..”

The father said: “may I ask why?”
She said: “when I go there All I see is people on their mobile phones during service & bhajan, some are gossiping, some just are not living with integrity, they are all just hypocrites...”
Father became silent, and then said: “OK... can I ask you to do something for me before you make your final decision?”

She said: “Yes.. what's that?”

He said: “Please take a glass of water and walk around the temple 2 times; but you mustn’t let any water fall out the glass.”
Read 6 tweets
26 Nov
பிடித்தமையால் பகிர்ந்தது

*தப்புக்கும் தவறுக்கும்...*

தப்புக்கும் தவறுக்கும் இருக்கும்
வேறுபாடு புரியாததால் தான்

தப்புக்கான தண்டனையை தவறுக்கும்

தவறுக்கான மன்னிப்பை தப்புக்கும்

தப்புத் தப்பாய்த் தந்து

நாட்டில் தப்புக்களை
தாறுமாறாய் வளரவிட்டுக் கொண்டிருக்கிறோமா ?
நகத்தால் செய்து முடிக்க வேண்டியதை
கோடாலி கொண்டு பெயர்த்துக் கொண்டும்

கோடாலி கொண்டு வெட்டிச் சாய்க்கவேண்டியதை
நகத்தால் கீறிக் கொண்டும் இருக்கிறோமா ?

அதன் காரணமாகவே
நச்சு மரங்கள்இன்னும்
செழித்து வளர உரமிட்டுக் கொண்டிருக்கிறோமா ?

இல்லையெனில்
எங்கோ எவனோ ஒரு கயவன்
செய்துதொலைக்கும்
கயமைக்கு
அவனுக்கு எதிராய் ஒன்றுதிரளாது

கயமைக்கு எதிராய் கொதித் தெழாது
ஜாதி மதப் பூச்சுப் பூசி
நாட்டின் இறையாண்மைக்கு
ஊறு விளைவிப்போமா ?

இல்லையெனில்
நம்மை கொதி நிலையிலேயே
அன்றாடம் நிற்க வைத்து

போராட்டக் களத்தில் குதிக்க வைத்து
Read 5 tweets
26 Nov
மரணத்தை எண்ணி கலங்கிடும்.....



நம் அனுபவங்களை (நல்லனுபவமாக இருந்தாலும் வேறு அனுபவமாக இருந்தாலும்) பகிர்ந்து கொள்ள பரிந்துரைக்கும் கதை

அந்தகால ரங்காராவ் போன்ற ஆஜானுபாகுவான உடற்கட்டும் பெரிய மீசையும் கிரீடமும் கையில் கதாயுதமும் கொண்டு மூன்று கதவுகளும்
இறுக்கமாகப் பூட்டி இருந்தும் உள்ளே வந்ததை வைத்தே எனக்கு புரிந்து போயிற்று இவர் *"எமதர்மன்தான்"* என்று

ஆமை புகுந்த வீடும் அமீனா புகுந்த வீடும் எமன் புகுந்த வீடும் உருப்பட்டதாக சரித்திரம் இல்லை.
இருந்தாலும் மரியாதை நிமித்தம் "வாங்க.... வாங்க... சௌக்யமா??? ... ஏன் இவ்வளவு லேட்??? ... நான் ரெடி போலாமா?" என்றேன்

எமன் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தார்

"எத்தனை எத்தனை யுகங்களா எவர் எவர் உயிரையோ எடுத்திருக்கிறேன். இதுவரை யாரும் உன்போல நான் ரெடி போலாமா என யாருமே சொன்னதில்லை.
Read 17 tweets
25 Nov
இது ஒரு அரசியல் கதை என்று நினைத்தால் அதற்கு நான் பொறுப்பில்லை

இன்னுமொரு #சுடலை கதை

#சுட்ட_சுடலை அதை #பார்த்த_சாரதி

ஒரு கூற்று இரண்டு பொருள் தருமாயின் அதி சிலேடை எனப் பெயர் கொண்டது....

சங்க காலத்திலே கம்பரைப் பார்த்து ஔவையால் "ஆரையடா சொன்னாய் அது" என விளிக்க விதி வகுத்ததும்
இந்த சிலேடையே....

ஆனால் இன்றைய சென்னைத் தமிழில் இதன் விளையாட்டைப் கொஞ்சம் பார்க்கலாம்.....

😀😀😀😀😀😀😀😀
அதிகாலை வேலை காவல் நிலைய தொலைபேசி மணி அழைக்க, காவலர் கந்தன் தொலைபேசியை எடுத்துக் பேசினார்.

ஹலோ V 7 போலீஸ் ஸ்டேஷன். சொல்லுங்க.

சார் இங்க ஒருத்தரச் சுட்டுட்டாங்க சார்.
சுட்டது யாருன்னு தெரியுமா?

தெரியும் சார்.

யார் சுட்டது?

#சுடலை சார்.

யோவ் சுட்டாங்களா இல்லையா?

சுட்டாங்க சார்.

யார் சுட்டது?

#சுடலை சார்.

காலங்காத்தால ஏங்க உசுர வாங்கறீங்க?! உங்கள் பேர் என்ன?

#சாரதி சார்.

(கோபத்துடன்) எந்த எடத்துல இருக்கீங்க

கொலை நடந்த இடத்தைக் கேட்டு
Read 8 tweets
3 Nov
@iamSri_Sri @naturaize @mkstalin @VasaviNarayanan @vanamadevi @ven74kani சுதந்திர போராட்ட களத்தில் (வெள்ளையனே வெளியேறு போராட்டம்) எனது தந்தை திரு.சுந்தரம் ஐயர் மன்னார்குடியில் "வந்தே மாதரம்" என்று முழக்கம் இட்டபோது பிரிட்டிஷ் போலீஸ் ஒருவரால் அவரது (என் தந்தை) இடதுகால் கட்டைவிரல் அருகில் கடப்பாரையால் குத்தப்பட்டு கிட்டத்தட்ட மூன்று மாதங்கள்
@iamSri_Sri @naturaize @mkstalin @VasaviNarayanan @vanamadevi @ven74kani படுக்கையில் இருக்க நேர்ந்தது.

அந்த நேரத்தில் திரு.தேவர் திருமகனார் தஞ்சையில் ஏதோ போராட்டத்திற்காக தங்கி இருந்திருக்கிறார். எனது தந்தையின் போராட்ட சாகசம் பற்றி கேள்விப்பட்டு என் தந்தையை நேரில் வந்து பார்த்து அவர் உடல்நிலையை பார்த்து அழுதே விட்டாராம் தேவர். இது என் பாட்டி
@iamSri_Sri @naturaize @mkstalin @VasaviNarayanan @vanamadevi @ven74kani என் சிறுவயதில் எங்களுக்கு சொன்னது.

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு 1950களில் ஒரு முறை என் தந்தை ஏதோ விஷயமாக மதுரை சென்றிருந்த போது அங்கே தேவரை சந்திக்க சென்றார்.

எனது தந்தையை பார்த்தவுடன்... ஒரு நாற்காலியில் அமர்ந்து இருந்த தேவர்... உடனே எழுந்து நின்று என் தந்தையை அந்த
Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!